![]() |
| சாதனையாளர் M.M.S சகாபுதின் |
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் எம்.எம்.எஸ் அபுல் ஹசன். இவரது மகன் எம்.எம்.எஸ் சகாபுதீன் (வயது60). வழக்குரைஞர்.
இந்நிலையில், தமிழ்நாடு தடகள சங்கத்தின் சார்பில், 36 ஆம் ஆண்டு மாநில அளவிலான நடைப் போட்டி, கரூரில் டிச.8, 9,10 ஆகிய தினங்களில் நடைபெற்றது. இதில், 5 கி.மீ. பிரிவில் பங்கேற்ற எம்.எம்.எஸ் சகாபுதீன் 34 நிமிடம், 11 விநாடிகளில் இலக்கை எட்டி, முதல் இடம் பிடித்து 'மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப்' பட்டத்தை தட்டிச்சென்றார்.
சாதனையாளர் எம்.எம்.எஸ் சகாபுதினுக்கு, தமிழ்நாடு தடகள சங்கத் தலைவர் தேவாரம், பதக்கம், பாராட்டுச் சான்றிதழ், நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து சாதனையாளர் எம்.எம்.எஸ் சகாபுதின் கூறியது;
'கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடை பயிற்சியில் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறேன். பட்டுக்கோட்டை நடை பயிற்சியாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். இச்சங்கம் சார்பில், கடந்த 2 ஆண்டுகளாக நடந்த போட்டிகளில் கலந்துகொண்டு முதலிடம் பெற்றேன். மாநில அளவில் கரூரில் நடந்த போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றது இதுதான் முதல் தடவை. வரும் ஆண்டு பெங்களூரில் நடைபெறும் தேசிய அளவிலான நடைப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெறுவதுதான் எனது அடுத்த இலக்கு' என்றார்.


வேக நடை போட்டியில் வெற்றி நடைபோட்ட எம்.எம்.எஸ் சகாபுதீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தடைகள் தகர்த்தெறிந்து மேலும் மாஸ்டர்ஸ் பெற வேண்டும் - ஊருக்கு பெருமை சேர்த்த மண்ணின் மைந்தன் வாழ்க.
ReplyDeleteThank you very much brother.
Delete