அதிராம்பட்டினம், டிச.02
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திங்கட்கிழமை நடைபெற்றது.
அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் எஸ்.கார்த்திகேயன் தலைமையில், டாக்டர் எஸ்.இர்ஷத் நஸ்ரின் உள்ளிட்ட மருத்துவமனையின் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலர்கள் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதி மொழியை ஏற்றனர்.
நிகழ்ச்சியையொட்டி, அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை (யுனானிப் பிரிவு) மருத்துவர் சி. ஷெரீன் பேகம், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகர் ஜெயபாரதி ஆகியோர் கலந்துகொண்டு, எய்ட்ஸ் குறித்து அதிராம்பட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.