.

Pages

Showing posts with label அதிரை திருமணம். Show all posts
Showing posts with label அதிரை திருமணம். Show all posts

Sunday, November 16, 2014

நூஹு இல்ல திருமணத்தில் எம்எல்ஏ பங்கேற்பு !

அதிரையை சேர்ந்தவர் நூஹு இவரது மகன் ஃபரோஸ்கான். இவருக்கு இன்று திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. என்ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ அவர்கள் கலந்துகொண்டு மணமகனை வாழ்த்தினார்.

முன்னதாக மணமகனின் தந்தை நூஹு மற்றும் இவரது மகன்கள் ஃபரோஸ்கான், பைசல் ஆகியோர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரையும் அன்புடன் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர்.

செய்தி மற்றும் படங்கள்:
நூவன்னா

Saturday, May 3, 2014

கல்யாண வீடா ? கொஞ்சம் இப்படி வாங்களேன்.


கல்யாணம் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார். என்று நம் முன்னோர்கள் அன்றே சொல்லிவிட்டுப் போனார்கள். ஏன் அப்படி சொன்னார்கள்? அதில் சிரமம் இருப்பதினால்தான் அப்படி சொன்னார்களோ.

விஷேசங்களிலேயே மிகவும் ஒரு விசேஷித்த விசேஷம் அது கல்யாணம் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இருக்க முடியாது. ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணும், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணும் என்று ஜோடியாக இணைவதை நான்கு பேருக்கு மத்தியில் தகுந்த சாட்சிகளோடு உண்டாக்கப்படும் ஒரு உடன்படிக்கையே கல்யாணமாகும், இதை திருமணம் என்றும் நிக்காஹ் என்றும் வாழ்க்கை உடன்படிக்கை என்றும் அழைப்பதுண்டு.

ஒவ்வொரு தேசங்களிலும், ஊர்களிலும், குடும்பங்களிலும் அந்தந்த மார்கங்களுக்கு ஏற்ப கல்யாணங்கள் நடப்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே, சில கல்யாணங்கள் வரவேற்ப்பு கொடுத்து முடிப்பார்கள்., சில கல்யாணங்கள் வரவேற்ப்புடன் உணவு விருந்தும் கொடுத்து முடிப்பார்கள், இதில் சில கூப்பிட மறந்து விடுவதும் உண்டு, விடுபட்டவர் பெயர் கடைசி நேரத்தில் ஞாபகம் வந்ததும் ஓடோடிப் போய் அவரைப் பார்த்து மறக்காமல் கல்யாணத்திற்கு வந்திடுங்கோ என்று கூப்பிட்டுவிட்டு அப்பாடா என்று ஒரு பெரு மூச்சுடன் வந்து அமருவதும் உண்டு.

புது உடுப்புகள் எடுத்து, ஆபரணங்கள், உணவு விருந்துக்கு தேவையான சமையல் சாமான்கள், வண்ணங்களிலும் அழகு பூக்களிலும் அலங்கரிக்கப்பட்ட மணவறை, மணப்பந்தல், அழகு ஜோடனைகள், அலங்கார மின் விளக்குகள், இன்னும் தேவையானது அனைத்தும் தயார் நிலையில் அந்த கல்யாண வரவேற்ப்பில் கோட்டை விடுவது அதாவது கல்யாணத்திற்கு வருகிறவர்களை வாங்க என்று கூப்பிட ஆள் இருக்காது. இது தற்போது நடந்து முடிந்த அனேக கல்யாணங்களில் நான் பார்த்ததுண்டு.

இன்னும் திருமண அழைப்பிதழ்களில் முறைப்படி பெயர்களை எழுதும் பழக்கம் இப்போது சுத்தமாக நின்று விட்டது. அவரு யாரு இன்ன பெயரா எழுது அவ்வளவுதான், அவருடைய விலாசம் என்ன, முறை என்ன போன்ற மரியாதை களெல்லாம் மாறிப் போச்சு. திருமண அழைப்பிதழ் எழுதும்போது பக்கத்தில் பெரியோர்களை வைத்துக் கொண்டு எழுதினால் இந்த தவறுகளை தவிர்க்கலாம்.

ஊர் விரிந்து விட்டது மூளை முடுக்கெல்லாம் வீடுகள் வந்து விட்டன, கூப்பாட்டுக்கு வரும் ஆண்களும் சரி, பெண்களும் சரி, நீங்கள் கூப்பிடும் வீடுகளில் அடுத்த வீடு யாருடையது என்று விசாரித்தால் ஒரு சமயம் உங்களுக்கு வேண்டப்பட்ட வீடாக கூட இருக்கலாம்.

முன்பெல்லாம் திருமண அழைப்பிழ்களை எழுதுவதற்கு முன், காலஞ்சென்ற நமதூர் தபால் காரர்களாகிய திரு. தியாகராஜன், திரு.சவுரிநாதன் இவர்களை அருகில் வைத்து கொண்டு எழுதவது வழக்கம், ஒரு வீடு பாக்கி இல்லாமல் அப்படியே சல்லடை போட்டமாதிரி இருக்கும்.

தற்போது எல்லாமே இரசாயனமயமாக போய்விட்டது. கல்யாணத்துக்கு போடும் பந்தலாவது இயற்கையிலான தென்னங்கீற்றினால் வேயப்பட்டதாக இருக்கட்டுமே, எதுக்கு அதையும் பிலாசிடிக்கால் போடவேண்டும்?  

எல்லோருக்கும் வேலை உண்டு, கூப்பிட்ட மரியாதைக்கு வருகின்றோம், அப்படி வருகின்ற எங்களை வாங்க என்று கூப்பிட அந்த பந்தலில் ஒரு ஆள் கூட இல்லையென்றால் எங்களுக்கு எப்படி இருக்கும்.

கல்யாண வீடுகளே, உங்களுக்கும் கடுமையான வேலைகள் இருக்கும், அந்த வேலைகளோடு எங்களையும் வாங்க என்று கூப்பிட மறந்து விடவேண்டாம்.

குறிப்பு:- நான் குறை கூற வில்லை, முறை என்று ஒன்று உள்ளதே அதை மறந்து விடவேண்டாம்.

இப்படிக்கு.
K.M.A.ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.