.

Pages

Showing posts with label அதிரை பாரூக். Show all posts
Showing posts with label அதிரை பாரூக். Show all posts

Monday, July 6, 2015

தமிழக அரசுக்கு அதிரை பாருக் வழங்கும் யோசனை !

தமிழக அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம், தமிழக அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது.

கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பத்தோடு வருமானச்சான்று, சாதிச்சான்று உள்ளிட்டவற்றை அரசு அலுவலர்களிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும். இதில் ஏற்படும் நிறை - குறைகளை அரசிற்கு சுட்டிக்காட்டி, மாதிரி சான்றிதழ்களை இணைத்து கடிதம் மூலம் யோசனை வழங்கிருக்கிறார் நமதூரை சேர்ந்த சமூக ஆர்வலர் அதிரை பாருக்.

இதுதொடர்பாக அரசிற்கு சமூக ஆர்வலர் அதிரை பாருக் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அனுப்புதல்:
A.பாரூக் ( வயது 59)
CELL NO : 9600304297
68, காலியார் தெரு
அதிராம்பட்டினம் அஞ்சல்,
பட்டுக்கோட்டை தாலுக்கா
தஞ்சாவூர் மாவட்டம் -614701

பெறுதல்:
மாண்பு மிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்கள்,
தமிழ் நாடு அரசு தலைமை செயலகம்,
சென்னை-9

மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு A. பாரூக் எழுதிய கடிதம்:
மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவி பெறுதல் தொடர்பாக ஜாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று மற்றும் முதல் பட்டதாரி சான்று பெறுவது தொடர்பாக ஒவ்வொரு கல்வி ஆண்டும் மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் கடும் கோடையில் சம்மந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகளை ( V.A.O, R.I, AND THASILDAR ) சந்தித்து தேவையான சான்றுகளை பெறும், பழைய முறைகளை மாற்றி இலகுவான புதிய விதி முறைகளை அமுல் படுத்தக்கோரி எனது இந்த புதிய ஆலோசனைகளை தமிழக அரசுக்கு அவசரமாக அனுப்புகின்றேன். இந்த புதிய முறைகளில் சான்று வழங்குவதில் உள்ள சாதகங்களை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அரசு உடனடியாக கலந்து ஆலோசித்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

சாதிச்சான்று ( COMMUNITY CERTIFICATE ):
1. ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் வெவ்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் நிலையில் ஒரு குடும்பத்தில் ஏதாவது ஒரு மாணவன் , அல்லது மாணவி ஏற்கனவே பெற்ற சாதிச்சான்று நகலை சுய விண்ணப்ப மனுவுடன் ஏற்று மற்ற பிள்ளைகளுக்கு உடனடியாக தாசில்தார் அவர்கள் சாதிச்சான்று வழங்கும் புதிய நடை முறையை அரசு அமல்படுத்தலாம்.

2. ஏற்கனவே இருக்கும் சாதியை விட்டு நீங்கி வேறு சாதியில் ஒருவர் சேர்ந்து இருந்தால் அது தொடர்பான AFFIDAVIT ஆதாரமாக பெற்று ( தாய், தந்தை அல்லது பிள்ளைகள் கூறும் உறுதி மொழியுடன் ) வட்டாட்சியர் அவர்கள் சான்று வழங்கலாம். சாதி சான்று அட்டையின் பின்புறம் ஒரே குடும்பத்தை சார்ந்த மற்ற பிள்ளைகளுக்கு வழங்கப் பட்ட சாதி சான்று விவரங்களையும் குறிப்பிடலாம்.

இருப்பிடச்சான்று ( NATIVITY CERTIFICATE ):
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலும் மற்றும் கல்லூரியில் 5-ஆண்டுகளும் (3+2) தொடர்ச்சியாக பயன் படுத்தும்  வகையில் கனமான  அட்டைகளில்  இருப்பிட சான்று வழங்கலாம்.,
குடும்ப அட்டையுடன் ஏதேனும் ஒரு வங்கி கணக்கு புத்தகத்தை ஆதாரமாக கொண்டு வட்டாட்சியர் அவர்கள் சான்றுகள் வழங்கலாம், முகவரி மாற்றம் இருப்பின் அதற்கான சான்றுகளை அதிகாரிகள் பெற்றுக் கொள்ளலாம்.

வருமானச் சான்று ( INCOME CERTIFICATE ):
வருமானச் சான்று 6 மாதங்கள் மட்டுமே செல்லு படியாகும்  என்ற விதிமுறை தொடர்ந்து அமுலில் உள்ளது. இருப்பிட சான்று வழங்கும் நடைமுறையைப் பின்பற்றி தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் (ஒரே அட்டை) கனமான அட்டையில் அந்தந்த கல்வி ஆண்டுகளை பதிவு செய்து வருமான சான்றுகளை வழங்கும், புதிய முறையை அரசு அமுல் படுத்தலாம். இந்த புதிய முறைகளை மாநில அரசுகளும், மத்திய அரசும் செயல் படுத்துவதன் மூலம் பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவியர்க்கு இது தொடர்பான அலைச்சல் குறைவதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பனிச்சுமை குறையும்.

மத்திய அரசு அறிவித்துள்ளது போல் ( கடந்த 29-06-2015 அன்று வெளியான ஆங்கில நாளிதழ் செய்தியின் அடிப்படையில்) சுய விவரங்களுடன் கூடிய விண்ணப்பங்களை பெற்று ( தேவை எனில் AFFIDAVIT பெற்றுக்கொண்டு ) அதன் அடிப்படையில் இந்த சான்றுகளை துரிதமாக வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆன்லைன் மூலமாக இந்த  பணிகள் மேற்கொள்ளப் பட்டாலும் அதுவும் மிகவும் காலதாமதமாவதாக பெற்றோர்களும் மாணவ, மாணவிகளும் குறை கூறுகின்றனர், எனவே இதில் நான் கூறியுள்ள புதிய நடைமுறைகளை அமல்படுத்துவது பயன் உள்ளதாக இருக்கும் என்று கருதியே இந்த புதிய ஆலோசனைகளை அரசுக்கு அனுப்பி உள்ளேன் .

வருமானச் சான்று: ( மாதிரி )
வருமானம் பெரும் பெற்றோரின் பெயர்
திரு/திருமதி: ................................S/O.W/O.--------------------
பணியின் விவரம்-----------------( 1. அரசு பணி 2. தனியார் நிறுவன பணி 3. சுயதொழில் )
வருவாய் ஆண்டு ---------------------------                  
சான்று வழங்கும் அலுவலரின் கையொப்பம்

ஆண்டு வருமானம் ------------------வேலை ---------------------

அந்தந்த மாணவ,மாணவியரின் படிப்பு காலத்திற்கு ஏற்ப தேவையான கூடுதல் கட்டங்களை பிரிண்ட் செய்து அதில் அவ்வப்போது சான்றுகளை எழுதி வழங்கலாம்.

சாதிச்சான்று: ( மாதிரி )
சாதிச் சான்றின் பின் புறம் கீழ்கண்ட விவரங்களையும் குறிப்பிடலாம் ஏற்கனவே சாதிச் சான்று பெற்ற மாணவன் /மாணவி பெயர்.
1. -----------------------------சாதி-----------------------சான்று எண், வருடம்----------------------
2. -----------------------------சாதி -----------------------சான்று எண், வருடம்-----------------------
3. -----------------------------சாதி -----------------------சான்று எண், வருடம்------------------------

பெற்றோர் அல்லது மாணவன், மாணவி வேறு சாதியில் இணைத்து இருப்பின் அதன் விவரங்கள்
திரு /திருமதி / குமாரி ------------------S/O.D/.O.W/O.-------------------------என்பவர் ---------------------ம் ஆண்டு முதல்----------------------சாதியை சார்ந்தவாராக இவ்வலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு எண் --------------------நாள் --- சாதிச் சான்று பெற்றவர்களில் இறந்தவர்கள் பற்றிய விவரங்கள்.
1. .---------------------S/O,D/O.--------------------------------இறந்த தேதி --------------------------
2. .---------------------S/O,D/O.--------------------------------இறந்த தேதி --------------------------  
3. .---------------------S/O,D/O.--------------------------------இறந்த தேதி --------------------------  

இதன் நகல் மாண்புமிகு பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அவர்களுக்கும் அனுப்பியுள்ளேன்.

இப்படிக்கு,
A. பாரூக்
சமூக ஆர்வலர்
அதிராம்பட்டினம்
04-07-2015

Wednesday, April 15, 2015

மத்திய அரசுக்கு அதிரை பாருக் வழங்கிய ஆலோசனைகள் ஏற்பு !?

அதிரையை சேர்ந்தவர் பாருக் ( வயது 59 ). சமூக ஆர்வலரான இவர் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திருவாரூர் - காரைக்குடி வரையிலான அகல ரயில் பாதை திட்டம் மற்றும் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் ரயில் பாதை பணிகளின் திட்டம் தொடர்பாக முக்கிய ஆலோசனைகளை ரயில்வே அமைச்சகத்துக்கு வழங்கி இருக்கிறார். குறிப்பாக ரயில்வே அமைச்சகத்துக்கு இவர் வழங்கிய இரயில்வே தொடர்பான ஆலோசனைகள் ஏற்கப்பட்டு செயல்படுத்தபட்டு வருவதாக ஆதாரத்துடன் நம்மிடம் கூறுகிறார். இவர் வழங்கிய ஆலோசனைகளில் ரயில்களில் வரத்தக விளம்பரம் குறிப்பிடத்தக்கது. அதே போல் பொருளாதரம் தொடர்பாக மத்திய அரசுக்கு அவ்வப்போது சிறந்த ஆலோசனைகளை கடிதங்கள் மூலம் வழங்கி வருகிறார்.

மிகவும் எளிமையாக காட்சியளிக்கும் இவர் தொடர்ந்து இந்திய பொருளாதாரம் தொடர்பான பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இவரை சிறந்த 'பொருளாதார நிபுணர்' என மகிழ்ச்சியுடன் அழைக்கின்றனர் இவரது ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டவர்கள்.

இதுதொடர்பாக அதிரை பாருக் வெளியிட்டுள்ள 5 பக்க கடிதத்தில் கூறியிருப்பதாவது...
எல்லா புகழும் இறைவனுக்கே!

ரயில்வே அமைச்சருக்கு நன்றி:
   
Thanks to Railway Minister            Date : 14.04.2015

கடந்த 08.02.2015 அன்று மத்திய ரயில்வே அமைச்சர் திரு .சுரேஷ் பிரபு ( shri Suresh prabhakar prabhu B.com.,ML.,CA-MP.,Maharashtra) அவர்களுக்கு திருவாரூர்-காரைக்குடி அகல ரயில் பாதைக்கும் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் புதிய ரயில் பாதைக்கும் தமிழகத்தில் செயல்படுத்தவுள்ள மற்ற ரயில் திட்டங்களைப்போல் இந்த 2  திட்டங்களுக்கும் இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் (26.02.2015) போதிய நிதி ஒதுக்கி துரிதமாக செயல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய எனது 2 பக்க ஈமெயில் கடிதத்தை(08.02.2015 அன்று அனுப்பியது ) தீவிரமாக பரிசீலித்து இந்த 2 திட்டங்களையும் புறக்கணிக்காமல் ok செய்த ரயில்வே அமைச்சர் அவர்களுக்கு என் சார்பாகவும் ரயில் பயணிகள் மற்றும் பொது மக்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் 20.02.2015 அன்று இது தொடர்பாக நான் வெளியிட்ட தகவல்களை உடனடியாக தமிழகம் மட்டும் அல்லாது வெளிநாடுகளில் உள்ள நமது நண்பர்கள் மற்றும் உறவினர்களும் பகிர்ந்து கொண்டு தங்கள் சார்பாகவும் ரயில்வே அமைச்சரையும் பிரதமர் அவர்களையும் தமிழக அரசையும், தமிழக MP க்களையும் தொடர்பு கொள்ளச் செய்த சமூக வலைதளங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த 03.02.2015 அன்று வெளியான ஒரு காலை நாளிதழில் வந்த செய்தி பொது மக்களை முகம் சுளிக்க வைத்தது. தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்கள் தொடர்பாக தமிழக MPக்களிடம் பேசவேண்டும் என 23.12.2014 அன்று ரயில்வே அமைச்சர் அழைத்தும் யாருமே வரவில்லையெனவும் கேரளா, ஆந்திரா, தெலுங்கான, கர்நாடகாவை சேர்ந்த MPக்கள் தான்  அமைச்சரை சந்தித்து தங்கள் சார்பாக கோரிக்கைகளை அளித்தனர் என்ற வருத்தமான செய்தியை படித்த பிறகுதான் ரயில்வே அமைச்சரை நான் உடனடியாக தொடர்பு கொள்ளும் சூழ்நிலை உருவானது, ஏற்கனவே நாங்கள் சொல்லிவிட்டோம் என்பதை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் ? ஏற்கனவே மத்தியில் இருந்த அரசு வேறு. 2014 மே முதல் மத்தியில் புதிய அரசு உள்ளது. காங்கிரஸ் ஆட்சியிலும் பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கும் கொஞ்சம் நிதி ஒதுக்கினர். ஆனால் ஆட்சியை தொடர முடியாததால் பழைய ரயில்வே திட்டங்கள் எல்லாம் பென்டிங் ஆனது. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு இடைக் கால பட்ஜெட்டிலும் இந்த 2 திட்டங்களும் இடம் பெறவில்லை.

கடந்த 08.02.2015 அன்று என்னிடம் இருந்து ரயில்வே அமைச்சருக்கு கடிதம் செல்வதையும் அதை அவர் தீவிரமாக பரிசீலிப்பார் என்பதையும் யாரும் எதிர்பார்க்கவில்லை.

RAILWAY FARE & FREIGHT COMMITTEE 1990-ல் கேட்டுக்கொண்டதன் பேரில் அப்போது என்னுடைய புதிய திட்டங்களை ஆலோசனைகளாக ரயில்வே அமைச்சகத்துக்கும் அப்போதைய குடியரசு தலைவர் அவர்களுக்கும் ( shri R.Venkataraman.BABL) கடிதம்  மூலமகாக (ஆங்கிலத்தில்) அனுப்பி இருந்தேன். ஜனாப் C.K JAFFER SHERIEF அவர்கள்தான் அப்போது ரயில்வே அமைச்சராக இருந்தார். அதற்கு என்னைப் பாராட்டி குடியரசுத்  தலைவர் அவர்களிடமிருந்தும் ரயில்வே செயலாளர் திரு. S.K நந்தா ( RAILWAY SECRETARY SHRI S.K. NANDHA –NEW DELHI ) அவர்களிடமிருந்தும் கடிதங்கள் வந்தன. உங்களுக்கு நேரம் இருந்தால் ( if time favorable to you ) 1990-ல் இந்திய ரயில்வே நிர்வாகத்திற்கு நான் அனுப்பிய புதிய திட்டங்களையும் பரிசீலினை செய்யுமாறு ரயில்வே அமைச்சருக்கு எழுதி இருந்தேன். டெல்லியில் இருந்து எனக்கு வந்த கடித விவரம் - P1-9921 DATED 10-SEP-1990, RASHTRAPATHI BHAWAN NEW DELHI. அந்த விவரங்களையும் மாண்புமிகு ரயில்வே அமைச்சர் பரிசீலனை செய்து இருப்பார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அப்போது நான் எழுதிய திட்டங்களில் ஒன்று நடை மேடை டிக்கட் ( platforrn ticket ) கட்டணத்தை புதிய கட்டுப்பாடுகளுடன் 3 ரூபாய்க்கு பதிலாக ,5 ருபாயாக உயர்த்த சொல்லி இருந்தேன். தவிர நடைமேடை டிக்கெட் பெறுவோர் அவர்களுக்கு அனுமதிக்கப் பட்ட நடைமேடையில் மட்டுமே இருக்க வேண்டும் ( பயணிகளை அந்த நடை மேடையில் இருந்து வழி அனுப்பவோ அல்லது வர வேற்கவோ – either  to send off or to receive the passengers) இதன் முக்கிய நோக்கம் ரயில் நிலையங்களில் தேவையில்லாத கூட்டங்களைக்  கட்டுபடுத்தி ரயில் நிலையங்களை சுத்தமாக வைத்திருப்பதற்காக. காரணம் இந்த டிக்கெட் கட்டண உயர்வால் ரயில்வே நிர்வாகம் பெரிதாக எதையும் சாதிக்கப் போவதில்லை நடைமேடை டிக்கெட் கட்டணத்தை 10 ரூபாயாக உயர்த்தும் திட்டம் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை அது சற்று தாமதமாக எடுத்த முடிவு. 01.04.2015  முதல் நான் ஏற்கனவே (1990-ல் ) எழுதி இருந்த கட்டுப்பாடுகளுடன் பிளாட்பார டிக்கெட் கட்டணம் 5 ரூபாயிலிருந்து 10 ருபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 5 ரூபாய்க்கு பச்சை மிளகாய் வாங்கலாம், கடலை வாங்கலாம்,. 10ரூபாய் சிகரெட் 10 வாங்கினால் 100 ரூபாய் வேஸ்ட்டாக செலவாகிறது. இந்த நிலையில் எப்போதாவது நாம் ரயில் நிலையங்கள் சென்று 10 ரூபாய்க்கு நடை மேடை டிக்கெட் வாங்குவதால் பெரிய நஷ்டம் வரப்போவதில்லை என்பதை நாம் உணர வேண்டும். இந்த கட்டண உயர்வை ரயில்வே நிர்வாகம் திரும்ப பெறாது. இதற்கான கண்டனங்கள்  எல்லாம்  தேவையில்லாதவை என்பதே என்னுடைய கருத்து.  சில தலைவர்களும் சில கட்சி பொறுப்பாளர்களும் ( எங்கள் கட்சி உட்பட ) கூட இந்த 10 ரூபாய் கட்டண உயர்வை எதிர்த்து கருத்து கூறியுள்ளனர்.

 நாடு முழுவதும் ரயில்வே திட்டங்களை செயல் படுத்த 8 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் தேவைபடுகிறது ரயில்வே திட்டங்களை மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து செயல்படுத்த வேண்டும் என்ற எனது கருத்தை பட்ஜெட் உரையிலேயே ரயில்வே அமைச்சர்  கூறினார் .அதன் பிறகும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். ரயில்வேயில்  விளம்பரம் செய்ய அனுமதிப்பதன் மூலம் பல ஆயிரம்  கோடி ரூபாய் வருவாய் வரும் என்று கடந்த ஆட்சியில் நான் அனுப்பிய  ஆலோசனைகள்  ஏற்றுக் கொள்ளப்பட்டு அதற்காக எனக்கு பதில் கடிதம் வந்த விபரங்களை 20.02.2015-ல் நான் வெளியிட்ட  தகவல்களில் படித்திருப்பீர்கள். அதாவது பாலியல் பலாத்காரத் குற்றங்களுக்கான தண்டனைகளை எழுதி அதன் கீழ் தனியார் கம்பெனிகள் , வர்த்தகர்கள் தங்கள் விளம்பரங்களை எழுத வேண்டும் ( ரயில் பெட்டிகளின் உள்ளேயும் வெளியேயும், ரயில்வே ஸ்டேஷன்களிலும் ) என்பதுதான் அந்த புதிய ஆலோசனை. இதையே மாநில  அரசுகளும் பேருந்துகளில் செயல்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டிருந்தேன். மாநில அரசுகளுக்கு  இது ஒரு புதிய வருவாயைக் கொடுக்கும் . திரு.D.K.மிட்டல் ( Shiri D.K.Mittal ) தலைமையிலான குழுவும் இதை செயல் படுத்தினால் 2015-16-ல் ரயில்வேக்கு 2000 கோடி ரூபாய் வருவாய் எனவும் 2019-ல் இது 8000 கோடியாக உயரும் எனவும் செய்தி  வெளியிட்டுள்ளார்.

ஒரு தனி நபரின் ஆலோசனையை ஏற்று எப்படி ரயில்வே அமைச்சர் நாம் கேட்காத 2 திட்டங்களையும் ( திருவாரூர் - காரைக்குடி, பட்டுக்கோட்டை,- தஞ்சாவூர் ரயில் திட்டங்கள் ) ok செய்தார்  என்பதுதான் பல்வேறு கட்சிகளிலும் இயக்கங்களிலும் செய்திகளாக ஓடின. இன்னமும் அது தொடர்கிறது. ஒரு தனி நபரின் ஆலோசனைகளை ஏற்றுதான் 2004-ல் மத்தியில் ஒரு புதிய அமைச்சகமே உருவானது.வெளிநாடு வாழ் இந்திய நல அமைச்சகம் – MINISTRY OF OVERSEAS INDIAN AFFAIRS என்ற புதிய அமைச்சகம்தான் அது . விசா மோசடிகளை ஆதாரங்களுடன் 2004-ல் மத்திய அரசுக்கு ( காங்கிரஸ் தலைமையிலான அரசு) நான் எழுதியதைத்  தொடர்ந்து வெளிவிவகாரத் துறை அமைச்சகம்  (MINISTRY OF  EXTERNAL AFFAIRS ) தனியாகவும் வெளிநாடு வாழ் இந்திய நல அமைச்சகம் தனியாகவும் செயல் படக்கூடிய புதிய உத்தரவை எனது கடிதம் சென்ற சில வாரங்களிலேயே அப்போதைய குடியரசுத் தலைவர் ஜனாப் A.P.J  அப்துல்கலாம் பிறப்பித்தார். இன்று வரை அது நடைமுறையில் உள்ளது . ஆனால் இப்போதுள்ள  மத்திய அரசு இந்த 2 துறைகளுக்கும் ஒரே அமைச்சரை ( திருமதி ,சுஷ்மா ஸ்வராஜ் – Smt.sushma swaraj - MP ) நியமித்துள்ளது வியப்பாக உள்ளது. ஜனாப் முக்தர் அப்பாஸ் ( MUKTHAR ABBAS NAQVI –MP )  அவர்களையோ ,அல்லது திருமதி மஹ்பூபா ( Smt.MAHABOOBA D/o. MUFTHI MOHAMED SAYMED- KASHMIR) அவர்களையோ வெளிநாடு வாழ் இந்திய நல அமைச்சகத்துக்கு புதிய அமைச்சராக ( கேபினெட் ) மத்திய அரசு நியமிக்க வேண்டும்.

நிதித்துறைக்கு ( Ministry of finance )  நான் அனுப்பிய ( 1990 முதல் 2014 வரை ) ஆலோசனைகள் எல்லாம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை. வங்கிகள் ( ரிசர்வ் வங்கி உள்பட ) மற்றும் சுங்கத்துறை ( CUSTOMS - AIRPORTS ) யில் இன்னமும்  எனது திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. முன்னாள் நிதி அமைச்சர்  திரு.ப.சிதம்பரம் அவர்களுக்கு நான் எழுதிய சில புள்ளி விவரங்களால் 2012-ல் தங்கத்தின் விலை  அதிரடியாகக் குறைந்து ஒரு பவுன் ரூபாய் 18000க்கு இறங்கியது. இப்போதும் தங்கத்தின் விலை தினசரி ஊஞ்சலாடிக் கொண்டிருப்பதற்கு ( ஒரு நாள் ரூபாய் 120 கூடும். (மறு நாள் ரூபாய் 240 குறையும்.) ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ( UNITED PROGRESSIVE ALLIANCE – U.P.A-.II ) அதிரடித் திட்டங்களே காரணம் என்பதை  சுட்டிக் காட்டட விரும்புகிறேன். தங்கத்தின் விலை கூடும் என்பதை இனி யாரும் எதிர் பார்க்க வேண்டாம். தங்கத்தின் விலை கூடுவதையோ. தங்கத்தின் மீதான முதலீடுகளையோ முந்தைய அரசைப் போல் இந்த அரசும் விரும்பாது. என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏதோ சில நிர்ப்பந்தங்கள் காரணமாக 26.02.2015 ரயில்வே பட்ஜெட்டில் திருவாரூர்- காரைக்குடி அகலப் பாதைதிட்டத்தையும், பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் , புதிய ரயில் பாதை திட்டத்தையும், இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்களையும் ரயில்வே அமைச்சர் அவர்களால் உடனடியாக சொல்ல முடியாத இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அதனால் தான் பட்ஜெட் அன்று ஒட்டு மொத்த திட்டங்களையும் பின்னர் அறிவிக்கப் படும், அதாவது பின்னர் என்பது பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவதற்குள் என்பதாகக் கூறி தனது உரையை முடித்தார். ஆரம்பம் முதல் இறுதி வரை அவரது ஆங்கில உரையை நான் கவனித்தேன். நான் இங்கே சொல்லி இருப்பது. உண்மைதான் ( நிர்ப்பந்தங்கள் தொடர்பாக ) என்பதை நிருபிக்கும் விதமாக 28.02.2015  அன்று வெளியான தினமணியில்; பக்கம் 9 ல் தமிழ் நாட்டிற்கான பல ரயில் திட்டங்களில் திருவாரூர்-  காரைக்குடிக்கு நிதி ஒதுக்கிய செய்தியும் வந்திருந்தது, அதற்கு பிறகு சில தினங்களில் பட்டுக்கோட்டை – தஞ்சாவூர் புதிய ரயில்  பாதை திட்டமும் ok ஆகி உள்ளதாகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பல நாளிதழ்களில் செய்திகள் வெளியானது. . பின்னர் என்பதற்கு பொருள் 24 மணி நேரமா ?  நமக்கு யோசனை இல்லையா ? 27-ம்  தேதி செய்தி சேகரித்தால்தான் 28-ந் தேதிக்கு செய்தி வெளியிட முடியும். ரயில்வே அமைச்சரை நான் நேரில் சந்திக்கும் போது ( டெல்லியில் அல்லது பம்பாயில் ) மேலும் பல புதிய திட்டங்கள் பற்றி அவருடன் ஆலோசிப்பேன். அந்த தகவல்களையும் எல்லோருக்கும் தெருவிப்பேன். ஏதோ ஆயிரக்கணக்கானோர் அல்லது லட்சக் கணக்கானோர் சமூக வலைதளங்களில் எனது செய்திகளை பார்க்க வேண்டும் என்பது மட்டும் எனது நோக்கம்  அல்ல.

 எனது கருத்துக்களை மற்றவர்களும் சம்மந்தப்பட்ட அரசு நிர்வாகங்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். அதன் மூலம் மக்களுக்கு எதாவது பலன் கிடைக்க  வேண்டும் என்பதே எனது நோக்கம்.  என்னுடைய கருத்துகளை சிலர் மறைமுகமாக விமர்சிப்பதையும் நான் கவனிக்காமல் இல்லை. அவைகளையெல்லாம் நாள் பொருட்படுத்துவதில்லை. மின்சார பல்பை கண்டுபிடித்த விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் ( THOMAS ALWA EDISON ) பற்றி சில ஆண்டுகளுக்கு முன் நான் வெளியிட்ட 4 பக்க நோட்டீசில் குறிப்பிட்டிருந்தேன். அவர் பற்றி மேலும் சில தகவல்களை குறிப்பிட விரும்புகிறேன் எடிசன் பிறவியிலேயே செவிட்டுத் தன்மை ( DEAF) உள்ளவராக இருந்தார். அவரது  ஆராய்ச்சியை அவரது பள்ளி ஆசிரியர்களும் சக மாணவர்களும் கிண்டல் செய்து அவரை பைத்தியம் என்று சொன்னதால் அவர் பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டு தன்னுடைய ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். பல நூறு முறை முயன்று இறுதியில் வெற்றி கண்டார். பல்பை எறிய விட்டு சாதனை படைத்தார். நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென மின்சாரம் தடைபடும் போது  நம்முடைய நிலை என்ன ? குழந்தைகள் அழ ஆரம்பிக்கும். நோயாளிகளுக்கு டென்சன் கூடும் . அப்போதுதான்   தாமஸ் ஆல்வா எடிசனை பைத்தியம் என்று சொன்னது எவ்வளவு  பெரிய முட்டாள்தனம் என்பதை நாமெல்லாம் உணர முடியும்.
ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி J.S. வர்மா (  JAGADISH SARAN VERMA –RTD  SUPREME COURT. JUDGE ) கமிட்டிக்கும் உஷா மெஹ்ரா கமிஷனுக்கும் (USHA MEHRA COMMISION ) நான் அனுப்பிய ஆலோசனைகளின் முக்கிய கருத்துக்களை ( 2012 –ல் டெல்லியில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் தொடர்பாக ஆலோசனை கேட்டதன் பேரில் ) இன்ஷா அல்லாஹ் சில தினங்களில் வெளியிட உள்ளேன் . இன்னமும் எனது கருத்துக்கள் நீதிபதிகளிடம் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. என்பதை எல்லோரும் புரிந்து கொள்வீர்கள்.
 
திருவாரூர்- காரைக்குடி அகல ரயில் பாதை பணிகளையும் பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் புதிய ரயில் பாதை பணிகளையும் விரைந்து செயல் படுத்துமாறு மாண்பு மிகு மத்திய ரயில்வே அமைச்சரை எல்லோரது சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன்.  

நன்றி !    

அன்புடன்,
A. FAROOK ( Indian National Cong.) A. பாருக் ( இந்திய தேசிய காங்கிரஸ்) 
S/O. ABDUL HAMEED ( LATE ) 68, காலியார் தெரு  
68. KALIYAR STREET                     அதிராம்பட்டினம்,-614701  
ADIRAMPATTINAM – 614701 பட்டுக்கோட்டை –வட்டம் 
PATTUKKOTTAI –TK,                      தஞ்சாவூர் – மாவட்டம் - தமிழ் நாடு  
THANJAVUR-DT-TAMIL NADU  
CELL : 9600304297, 
facebook – adirai farook