.

Pages

Showing posts with label அதிரை பொருட்காட்சி. Show all posts
Showing posts with label அதிரை பொருட்காட்சி. Show all posts

Saturday, July 18, 2015

கோட்டைப்பட்டினத்தில் பெருநாள் பொருட்காட்சி !

கோட்டைப்பட்டினம் தர்ஹா வளாகத்தில் பெருநாள் பொருட்காட்சி இன்று 18-07-2015 முதல் துவங்கி எதிர்வரும் 02-08-2015 வரை நடைபெற இருக்கிறது. தினமும் மாலை 4 மணிக்கு துவங்கும் பொருட்காட்சி இரவு 10 மணி வரை நீடிக்கிறது.

பொருட்காட்சியில் காணப்படும் ராட்டிணம், ஊஞ்சல், ரயில் சவாரி, குதிரை சவாரி, ராட்சஷ பலூன் ஆகியன சிறுவர் சிறுமிகளை பெரிதும் கவர்கின்றன. அதேபோல் அரங்கிற்குள் தாஜ்மஹால் போன்ற அமைக்கப்பட்டிருக்கும் வடிவம் பார்வையாளர்களை பெரிதும் கவர்கின்றன. அரங்கிற்குள் செல்ல கட்டணமாக ரூ20/- வசூல் செய்யப்படுகிறது. பொருட்காட்சியைக்காண ஏராளமானோர் வருகை தந்து பார்வையிடுகின்றனர்.

Saturday, May 24, 2014

அதிரை பொருட்காட்சி - நேரடி ரிப்போர்ட் !

அதிரை வர்த்தக மற்றும் கலாச்சார அமைப்பின் [ ATCO ] சார்பில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானத்தில்   பொருட்காட்சி நடைபெற்று வருகிறது.

கடந்த முறை பெரும் பரபரப்பாக பேசப்பட்ட பொருட்காட்சி இந்த முறை அமைதியாக நடைபெற்று வருகிறது. பொருட்காட்சியின் நுழைவாயில் ஈசிஆர் சாலையையொட்டி அமைக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் இலகுவாக வந்து செல்கின்றனர்.

பொருட்காட்சியில் காணப்படும் ராட்டிணம், ஊஞ்சல், ரயில் சவாரி, குதிரை சவாரி, ராட்சஷ பலூன் ஆகியன சிறுவர் சிறுமிகளை பெரிதும் கவர்கின்றன. அரங்கிற்குள் தினமும் நடைபெறும் மேஜிக் ஷோவை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டுகளிக்கின்றனர். அரங்கிற்குள் செல்ல கட்டணமாக ரூ10/- வசூல் செய்யப்படுகிறது. பொருட்காட்சியைக்காண ஏராளமானோர் தினமும் வருகை தந்து பார்வையிடுகின்றனர்.









Wednesday, May 14, 2014

அதிரை பொருட்காட்சிக்கு ஸ்டால் அமைக்கும் பணிகள் மும்முரம் !

வர்த்தக மற்றும் கலாச்சார அமைப்பின் [ ATCO ] சார்பில் அதிரையில் பொருட்காட்சி  நமதூர் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் விரைவில் துவங்க உள்ளது. இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே ஸ்டால் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அதிரை மற்றும் அதிரையை சுற்றி வசிக்கக்கூடிய மக்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக பயன்பாடுகளை மையமாக வைத்து நடைபெற இருப்பதாக கூறும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொருட்காட்சியில் பங்குபெற இருக்கிற வர்த்தக நிறுவனங்களுக்கு தேவைப்படும் அரங்குகளுக்கு முன்பதிவை துவக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.





Wednesday, April 30, 2014

அதிரையில் மே 11 முதல் வர்த்தக மற்றும் கலாச்சார பொருட்காட்சி !

வர்த்தக மற்றும் கலாச்சார அமைப்பின் சார்பில் கடந்த வருடத்தை போல் இந்த வருடமும் அதிரை மற்றும் அதிரையை சுற்றி வசிக்கக்கூடிய மக்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக பயன்பாடுகளை மையமாக வைத்து நடப்பு கல்வி ஆண்டின் விடுமுறை தினங்களில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பொருட்காட்சி நடைபெற இருக்கிறது.

இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிரை சாரா திருமண மஹாலில் கூட்டப்பட்ட சிறப்பு கூட்டத்தில் பொருட்காட்சியை ஏற்று நடத்த நிர்வாக கமிட்டி அமைக்கப்பட்டது. இதில் பொருட்காட்சி தொடர்பான ஆரம்பகட்ட பணிகளை விரைவாக மேற்கொள்வது எனவும், பொருட்காட்சியை எதிர்வரும் 11-05-2014 முதல் 25-05-2014 வரை நடத்தி முடிப்பது என தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து கமிட்டியாளர்களால் இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.





Sunday, May 12, 2013

அதிரைப் பொருட்காட்சியின் நிறைவு விழா !

அதிரையில் வர்த்தக மற்றும் கலாச்சார அமைப்பின் [ ATCO ] சார்பில் கடந்த [28-04-2013 ] அன்று முதல் பொருட்காட்சியை நடத்தி வருகின்றனர். இதில் அதிரை மற்றும் அதிரையை சுற்றி வசிக்கக்கூடிய பொதுமக்கள் குடும்பத்தினருடன் வருகைதந்து பார்வையிட்டுச் சென்றனர்.

கடந்த 15 நாட்களாக நடைபெற்ற பொருட்காட்சி இன்றைய இறுதி நாளன்று 3000 த்துக்கும் மேற்பட்டோர் பங்களிப்புடன் இனிதே நிறைவுபெற்றது. இந்த பொருட்காட்சி சிறப்பாக நடந்திட அனைத்து விதத்திலும் ஒத்துழைத்து ஆலோசனை வழங்கியோருக்கும் மற்றும் பொருட்காட்சியில் பங்கெடுத்துக் கொண்டோருக்கும் இதற்கும் மேலாக பொருட்காட்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்த ஏற்பாட்டாளருக்கும் என அனைவருக்கும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள் வழங்கி மேடையில் கெளரவிக்கப்பட்டது.