.

Pages

Showing posts with label அதிரை விருந்து. Show all posts
Showing posts with label அதிரை விருந்து. Show all posts

Sunday, December 27, 2015

அதிரையின் அசர வைக்கும் விருந்து உபசரிப்பு !

'பந்திக்கு முந்து படைக்கு பிந்து' என்ற பழமொழி எதற்கு கூறினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அதிரையரின் அசர வைக்கும் உணவு உபசரிப்பிற்காக பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளாத்தான் இவை இருக்கும் என நான் கருதியதுண்டு. அந்தளவிற்கு விருந்தோம்பலுக்கு பெயர்பெற்ற ஊர்களில் அதிரையும் ஒன்று. உற்றார் - உறவினர்கள் - நண்பர்கள் படைசூழ வந்திருந்த அனைவருக்கும் சகோதரத்துவ அன்பை வெளிப்படுத்தும் விதமாக அருகிலே நின்று விருந்து உபசரிக்கப்படும் பண்பு பிறரை மெய்சிலிர்க்க வைக்கும்.

அதிரையில் திருமண வலீமா விருந்து, நண்பர்களை அழைத்து விருந்து, உறவினர்களுக்கு விருந்து, புதிய வீடு கட்டி குடிபுகுதல், ஹஜ் பயணம், பெருநாள் விருந்து, குழந்தை பிறப்பையொட்டி உள்ளிட்ட நிகழ்வுகளின் போது விருந்துகள் உபசரிக்கப்படுகிறது.

லுஹர்த் தொழுகை முடித்தவுடன் வைபவங்கள் நடக்கும் வீட்டினிலோ அல்லது திருமண மண்டபத்திலோ நடைபெறும் விருந்து உபசரிப்பில் உற்றார்- உறவினர்- நண்பர்கள் என மகிழ்ச்சியுடன் கலந்துகொள்கின்றனர்.

ஊரிலே 'கலரி சாப்பாடு' என்றொரு பெயரிலும் இவற்றை அழைப்பதுண்டு.
இஸ்லாத்தின் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் ஏழை, பணக்காரான் எங்கள் பகுதியை சேர்ந்தவன் - எங்கள் குடும்பம் !, எங்களுக்கு வேண்டியவர் என்ற இன பாகுபாடுகள் இல்லாமல் தமிழகத்திலேயே சஹனில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடிய ஊர்களில் நமதூரும் ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரு சஹனிலும் தலா 3 பேர் அல்லது 4 பேர் வீதம் அமர்ந்து பரிமாறுவார்கள்.

'அஞ்சு கறி' என்ற பெயரில் அழைக்கப்படும் உணவை அதிரையர் அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். இவை சீராகச் சம்பா, துளசி பழசு, பாஸ்மதி போன்ற உயர்ரக அரிசியில் கம கம மணத்துடன் நெய்ச்சோறு தயாரிக்கப்படுகிறது. செம்மறி ஆட்டுக்கறியில் கூடுதல் ஆயில் ( ! ) இட்டு தயாரிக்கப்படுகிற இறைச்சி ஆணம், நாவிற்கு சுவையைக்கூட்ட நாட்டுக் கத்தரிக்காயில் பச்சடி, உருளையில் குருமா, செரிமானத்திற்கு என்று சொல்லியே ( ! ? ) அனைவரும் விரும்பி பருகக்கூடிய புளியானம் ( ரசம் ) இவைகள் ஒரு வகையாகவும்...

மற்றொறு வகை பிரியாணி ! அதிரைக்கு சிறப்பை சேர்க்கக்கூடிய உணவு. அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணக்கூடியது. இவை சீராகச்சம்பா, துளசி பழையது, பாஸ்மதி போன்ற உயர்ரக அரிசியில் சமமான அளவு செம்மறி ஆட்டுக்கறிச் சேர்த்து தயாரிக்கப்படுகிறப் பிரியாணி சுவையாகவும், நறுமண மிக்கதாகும் இருக்கும். பிற ஊர்களுக்கு சவால் விடக்கூடிய அளவிற்கு இதன் டேஸ்ட் இருக்கும். கூடுதல் இணைப்பாக துண்டுகளிட்ட பொரிச்சகோழி, வெங்காயத்தயிர் ஊறுகாய், எலுமிச்சை கலரி ஊறுகாய் போன்றவை இடம்பெற்றிருக்கும்.

தால்ச்சா !  இதன் ருசியே தனி, அஞ்சு கறி, பிரியாணி போன்ற உணவிற்கு கூடுதல் இணைப்பாக அதில் இடம்பெற்றிருக்கும். தால்ச்சா அதிரையில் மிகவும் பிரசித்திபெற்றது. அனைத்து தரப்பினரும் விரும்பக்கூடியது.

சாப்பிட்டதும் விருந்தில் இடம்பெற்றுள்ள இனிப்பை எடுத்துக்கொள்வார்கள் இதில் சேமியா பிர்னி, பீட்ரூட் சுவீட், மம்மி கோதுமை சுவீட், ரவா கேசரி,பேரிட்சை - தக்காளி பழம் சுவீட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று அஞ்சு கறி - பிரியாணி விருந்து உணவில் இடம்பெற்றிருக்கும்.

மறு சோறு போதும்... போதும்... எனச்சொல்லும் அளவுக்கு அனைவருக்கும் வழங்கி தங்களின் சகோதரத்துவ அன்பை வெளிப்படுத்துவார்கள்.

வாங்க காக்கா !
பேப்பரு தாங்க...
மூணு பேரா உட்காருங்க...
அங்கே ஒரு சஹன் வைய்ங்க !
எங்கே தால்ச்சா ?
இங்கே சோறு பத்தலே...
எங்கே மறுசோறு ?
இன்னொரு சுவீட் எடுத்துத் தாங்க !

என இதுபோன்ற பழக்கப்பட்ட குரல்கள் கலரிச் சாப்பாட்டில் ஆங்காங்கே ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்...

என்ன சகோதரர்களே !

உங்களுக்கும் அப்படி ஒலித்ததா என்ன !?

கவனத்தில் கொள்ள வேண்டியவை:
வைபவங்கள் நடக்கும் வீட்டில் நடைபெறும் விருந்து உபசரிப்புகளில் வீணாக உணவு விரையமாக்கப்படுவது மிகவும் வேதனைப்பட வேண்டிய ஒன்று மட்டுமல்ல சிந்திக்கபட வேண்டிய ஓன்று. உணவுப் பற்றாக்குறையுடன் ஏழைகள் பலர் நம்மிடையே வாழ்கிற இந்நாட்டில் உணவு வீண் விரையம் செய்வது மிகப்பெரிய சமூகக்குற்றமாக கருதப்படும். உணவை வீணாக்ககூடாது என்ற உணர்வை நம்மை சார்ந்தவர்கள் மற்றும் நம் பிள்ளைகள் மனதில் போட்டு வைப்போம். ஒரு பருக்கை கூட தட்டில் மிச்சம் வைக்காமல் உண்பதுதான் சிறந்த பண்பு என்பதை நாம் அனைவரும் உணருவோம்.

சேக்கனா நிஜாம்
இது ஒரு மீள்பதிவு !
[ கடந்த 2002 ஆம் ஆண்டு பதியப்பட்டது ]

Thursday, October 9, 2014

அதிரையின் அசர வைக்கும் விருந்து உபசரிப்பு !

'பந்திக்கு முந்து படைக்கு பிந்து' என்ற பழமொழி எதற்கு கூறினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அதிரையரின் உணவு உபசரிப்புக்காக மாத்திரம் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளாத்தான் இவை இருக்க வேண்டும் என நான் கருதியதுண்டு. அந்தளவிற்கு விருந்தோம்பலுக்கு பெயர்பெற்ற ஊர்களில் நமதூரும் ஒன்று. உற்றார் - உறவினர்- நண்பர்கள் படைசூழ வந்திருந்த அனைவருக்கும் சகோதரத்துவ அன்பை வெளிப்படுத்தும் விதமாக அருகிலே நின்று விருந்து உபசரிக்கப்படும் பண்பு பிறரை மெய்சிலிர்க்க வைக்கும். நல்ல நட்பு - ஒற்றுமை - மத நல்லிணக்கம் ஆகியவற்றை பலப்படுத்தும் விதமாக மாற்று மத அன்பர்களையும் அழைத்து இலை விருந்து உபசரிப்பது உண்டு.

நமதூரில் எவ்வாறெல்லாம் விருந்துகள் உபசரிக்கப்படுகின்றது ?
1. திருமண வலீமா விருந்து
2. புதிய வீடு கட்டி குடிபோகும்போது வைக்கப்படும் விருந்து
3. விருந்தாளிகளுக்கு வைக்கப்படும் விருந்து
4. நண்பர்களுக்கு வைக்கப்படும் விருந்து
5. ஹஜ் செல்லும்போதும் / முடித்துவிட்டு வரும்போதும்
6. பெருநாள் விருந்து
7. குழந்தை பிறப்பு

என இவ்வாறெல்லாம் விருந்துகள் உபசரிக்கப்படுகிறது.

லுஹர்த் தொழுகை முடித்தவுடன் வைபவங்கள் நடக்கும் வீட்டினிலோ அல்லது திருமண மண்டபத்திலோ ஏற்பாடு செய்யப்படும் விருந்துகளை, உற்றார் - உறவினர்- நண்பர்கள் ஆகியோருக்காக உபசரிக்கப்படும்.

ஊரிலே 'கலரி சாப்பாடு' என்றொரு பெயரிலும் இவற்றை அழைப்பதுண்டு.
இஸ்லாத்தின் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் ஏழை !?, பணக்காரான் !?, தெருக்காரன் - எங்கள் குடும்பம் !?, எங்களுக்கு வேண்டியவர், பிற மதத்துக்காரன் என்ற பாகுபாடுகள் இல்லாமல் தமிழகத்திலேயே சஹனில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடிய ஊர்களில் நமதூரும் ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரு சஹனிலும் தலா மூவர்/நால்வர் வீதம் அமர்ந்து பரிமாறுவார்கள்.

அஞ்சு கறி என்ற பெயரில் விருப்பமாக அழைக்கப்படும் இந்த உணவை அதிரையர் அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். இவை சீராகச் சம்பா, துளசி பழையது, பாஸ்மதி போன்ற உயர்ரக அரிசியில் தயாரிக்கப்படுகிற கம கம மணத்துடன் நெய்ச்சோறு, செம்மறி ஆட்டுக்கறியில் கூடுதல் ஆயில் ( ! ) இட்டு தயாரிக்கப்படுகிற இறைச்சி ஆணம், நாவிற்கு சுவையைக்கூட்ட நாட்டுக் கத்தரிக்காயில் பச்சடி, உருளையில் குருமா, செரிமானத்திற்கு என்று சொல்லியே ( ! ? ) அனைவரும் விரும்பி பருகக்கூடிய புளியாணம் ( ரசம் ) போன்றவை ஒரு வகையாகவும்...

மற்றொறு வகையாக பிரியாணி ! நமதூருக்கே பெருமை சேர்க்கக்கூடிய உணவாகவும் அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணக்கூடியதாகவும் உள்ளது. இவை சீராகச்சம்பா, துளசி பழையது, பாஸ்மதி போன்ற உயர்ரக அரிசியில் சமமான அளவு செம்மறி ஆட்டுக்கறிச் சேர்த்து தயாரிக்கப்படுகிற பிரியாணி சுவையாகவும், நறுமண மிக்கதாகும் இருக்கும். பிற ஊர்களுக்கு சவால் விடக்கூடிய அளவிற்கு டேஸ்டாக இருக்கும். கூடுதல் இணைப்பாக துண்டுகளிட்ட பொரிச்சகோழி, வெங்காயத்தயிர் ஊறுகாய், எலுமிச்சை கலரி ஊறுகாய் போன்றவை இடம்பெற்றிருப்பது வயிறார உண்பதற்கு கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.

தால்ச்சா !  இதன் ருசியே தனி, அஞ்சு கறி, பிரியாணி போன்ற உணவிற்கு கூடுதல் இணைப்பாக அதில் இடம்பெற்றிருக்கும்.

இனிப்பு வகைகளாக...
1. சேமியாவில் தயாரிக்கப்படுகிற பிர்னி
2. பீட்ரூட்டில் தயாரிக்கப்படுகிற இனிப்பு
3. மம்மி கோதுமையில் தயாரிக்கப்படுகிற இனிப்பு
4. ரவாவில் தயாரிக்கப்படுகிற கேசரி
5. பேரிட்சை - தக்காளி பழத்தில் தயாரிக்கப்படுகிற இனிப்பு
6. பிரட் ஸ்வீட்

ஆகியவற்றில் ஏதாவது ஒன்று அஞ்சு கறி மற்றும் பிரியாணி விருந்தில் இடம்பெற்றிருக்கும். மேலும் ஒவ்வொரு சஹனிலும் மூன்று தண்ணிர்ப் பாக்கெட்கள் அதில் வைக்கப்பட்டிருக்கும். கை துடைக்க பேப்பர்களும் இடம்பெற்றிருக்கும். :)

மறு சோறு போதும்... போதும்... எனச்சொல்லுமளவிற்கு, இருக்கும் இடத்திற்கே கொண்டு வந்து ( அன்பைக் ) கொட்டுவார்கள்.

வாங்க காக்கா !
பேப்பரு தாங்க...
மூணு பேரா உட்காருங்க...
அங்கே ஒரு சஹன் வைய்ங்க !
எங்கே தால்ச்சா ?
இங்கே சோறு பத்தலே...
எங்கே மறுசோறு ?
இன்னொரு சுவீட் எடுத்துத் தாங்க !

என இதுபோன்ற பழக்கப்பட்ட சந்தோஷக் குரல்கள் கலரிச் சாப்பாட்டில் ஆங்காங்கே ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்...

என்ன சகோதரர்களே !

உங்களுக்கும் அப்படி ஒலித்ததா என்ன !?

கவனத்தில் கொள்ளவேண்டியவை :
வைபவங்கள் நடக்கும் வீட்டில் நடைபெறும் விருந்து உபசரிப்புகளில் வீணாக உணவு விரையமாக்கப்படுவது மிகவும் வேதனைப்பட வேண்டிய ஒன்று மட்டுமல்ல சிந்திக்கபட வேண்டிய ஓன்று. உணவுப் பற்றாக்குறையுடன் ஏழைகள் பலர் நம்மிடையே வாழ்கிற இந்நாட்டில் உணவு வீண் விரையம் செய்வது மிகப்பெரிய சமூகக்குற்றமாக கருதப்படும். உணவை வீணாக்ககூடாது என்ற உணர்வை நம் பிள்ளைகளின் மனதில் இப்போதிலிருந்து போட்டு வைப்போம். ஒரு பருக்கை கூட தட்டில் மிச்சம் வைக்காமல் உண்பதுதான் சிறந்தது என்பதை அனைவரும் உணருவோம்.

சேக்கனா நிஜாம்
இது ஒரு மீள்பதிவு !

Wednesday, July 30, 2014

செக்கடிமேடு நண்பர்களின் பெருநாள் மந்தி விருந்து [ படங்கள் இணைப்பு ]

செக்கடி மேடு நண்பர்கள் சார்பில் வருடந்தோறும் பெருநாள் மந்தி பிரியாணி விருந்து நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தவருடமும் செக்கடிமேடு நண்பர்களின் சார்பில் பட்டுகோட்டை சாலை இமாம் ஷாஃ பி மெட்ரிக் பள்ளியின் விளையாட்டு மைதானத்தின் எதிரே அமைந்துள்ள நெய்னா முஹம்மது அவர்களுக்கு சொந்தமான தென்னை தோப்பில் நடைபெற்ற பெருநாள் மந்தி பிரியாணி விருந்தில் 300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்வமுடன் சமைத்துக்கொடுத்த அஹமது ஜுபைர் அவர்களின் மந்தி பிரியாணியை கலந்துகொண்ட அனைவரும் சஹனில் ஒன்றாக அமர்ந்து ருசித்து சாப்பிட்டனர். அதிரையின் அனைத்து பகுதிலிருந்து வருகை தந்த சிறப்பு அழைப்பாளர்கள் பலர் ஆர்வத்துடன் விருந்தில் கலந்து கொண்டனர்.















Thursday, May 15, 2014

அதிரையின் அசர வைக்கும் விருந்து உபசரிப்பு !

'பந்திக்கு முந்து படைக்கு பிந்து' என்ற பழமொழி எதற்கு கூறினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அதிரையரின் உணவு உபசரிப்புக்காக மாத்திரம் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளாத்தான் இவை இருக்கும் என நான் கருதியதுண்டு. அந்தளவிற்கு விருந்தோம்பலுக்கு பெயர்பெற்ற ஊர்களில் நமதூரும் ஒன்று. உற்றார் - உறவினர்- நண்பர்கள் படைசூழ வந்திருந்த அனைவருக்கும் சகோதரத்துவ அன்பை வெளிப்படுத்தும் விதமாக அருகிலே நின்று விருந்து உபசரிக்கப்படும் பண்பு பிறரை மெய்சிலிர்க்க வைக்கும்.

நமதூரில் எவ்வாறெல்லாம் விருந்துகள் உபசரிக்கப்படுகின்றது ?

1. திருமண வலீமா விருந்து
2. புதிய வீடு கட்டி குடிபோகும்போது வைக்கப்படும் விருந்து
3. விருந்தாளிகளுக்கு வைக்கப்படும் விருந்து
4. நண்பர்களுக்கு வைக்கப்படும் விருந்து
5. ஹஜ் செல்லும்போதும் / முடித்துவிட்டு வரும்போதும்
6. பெருநாள் விருந்து
7. குழந்தை பிறப்பு

என இவ்வாறெல்லாம் விருந்துகள் உபசரிக்கப்படுகிறது.

லுஹர்த் தொழுகை முடித்தவுடன் வைபவங்கள் நடக்கும் வீட்டினிலோ அல்லது திருமண மண்டபத்திலோ ஏற்பாடு செய்யப்படும் விருந்துகளை, உற்றார் - உறவினர்- நண்பர்கள் ஆகியோருக்காக உபசரிக்கப்படும்.

ஊரிலே 'கலரி சாப்பாடு' என்றொரு பெயரிலும் இவற்றை அழைப்பதுண்டு.
இஸ்லாத்தின் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் ஏழை !?, பணக்காரான் !?, தெருக்காரன் - எங்கள் குடும்பம் !?, எங்களுக்கு வேண்டியவர் என்ற பாகுபாடுகள் இல்லாமல் தமிழகத்திலேயே சஹனில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடிய ஊர்களில் நமதூரும் ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரு சஹனிலும் தலா மூவர் வீதம் அமர்ந்து பரிமாறுவார்கள்.

அஞ்சு கறி என்ற பெயரில் விருப்பமாக அழைக்கப்படும் இந்த உணவை அதிரையர் அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். இவை சீராகச் சம்பா, துளசி பழையது, பாஸ்மதி போன்ற உயர்ரக அரிசியில் தயாரிக்கப்படுகிற கம கம மணத்துடன் நெய்ச்சோறு, செம்மறி ஆட்டுக்கறியில் கூடுதல் ஆயில் ( ! ) இட்டு தயாரிக்கப்படுகிற இறைச்சி ஆணம், நாவிற்கு சுவையைக்கூட்ட நாட்டுக் கத்தரிக்காயில் பச்சடி, உருளையில் குருமா, செரிமானத்திற்கு என்று சொல்லியே ( ! ? ) அனைவரும் விரும்பி பருகக்கூடிய புளியானம் ( ரசம் ) போன்றவை ஒரு வகையாகவும்...

மற்றொறு வகையாக பிரியாணி ! நமதூருக்கே பெருமை சேர்க்கக்கூடிய உணவாகவும் அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணக்கூடியதாகவும் உள்ளது. இவை சீராகச்சம்பா, துளசி பழையது, பாஸ்மதி போன்ற உயர்ரக அரிசியில் சமமான அளவு செம்மறி ஆட்டுக்கறிச் சேர்த்து தயாரிக்கப்படுகிறப் பிரியாணி சுவையாகவும், நறுமண மிக்கதாகும் இருக்கும். பிற ஊர்களுக்கு சவால் விடக்கூடிய அளவிற்கு டேஸ்டாக இருக்கும். கூடுதல் இணைப்பாக துண்டுகளிட்ட பொரிச்சகோழி, வெங்காயத்தயிர் ஊறுகாய், எலுமிச்சை கலரி ஊறுகாய் போன்றவை இடம்பெற்றிருப்பது வயிறார உண்பதற்கு கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.

தால்ச்சா !  இதன் ருசியே தனி, அஞ்சு கறி, பிரியாணி போன்ற உணவிற்கு கூடுதல் இணைப்பாக அதில் இடம்பெற்றிருக்கும்.

இனிப்பு வகைகளாக...
1. சேமியாவில் தயாரிக்கப்படுகிற பிர்னி
2. பீட்ரூட்டில் தயாரிக்கப்படுகிற இனிப்பு
3. மம்மி கோதுமையில் தயாரிக்கப்படுகிற இனிப்பு
4. ரவாவில் தயாரிக்கப்படுகிற கேசரி
5. பேரிட்சை - தக்காளி பழத்தில் தயாரிக்கப்படுகிற இனிப்பு

ஆகியவற்றில் ஏதாவது ஒன்று அஞ்சு கறி மற்றும் பிரியாணி உணவில் இடம்பெற்றிருக்கும். மேலும் ஒவ்வொரு சஹனிலும் மூன்று தண்ணிர்ப் பாக்கெட்கள் அதில் வைக்கப்பட்டிருக்கும். கைதொடைக்க பேப்பர்களும் இடம்பெற்றிருக்கும். :)

மறு சோறு போதும்... போதும்... எனச்சொல்லும் அளவுக்கு அனைவருக்கும் வழங்கி தங்களின் சகோதரத்துவ அன்பைக் காட்டுவார்கள்.

வாங்க காக்கா !
பேப்பரு தாங்க...
மூணு பேரா உட்காருங்க...
அங்கே ஒரு சஹன் வைய்ங்க !
எங்கே தால்ச்சா ?
இங்கே சோறு பத்தலே...
எங்கே மறுசோறு ?
இன்னொரு சுவீட் எடுத்துத் தாங்க !

என இதுபோன்ற பழக்கப்பட்ட சந்தோஷக் குரல்கள் கலரிச் சாப்பாட்டில் ஆங்காங்கே ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்...

என்ன சகோதரர்களே !

உங்களுக்கும் அப்படி ஒலித்ததா என்ன !?

கவனத்தில் கொள்ளவேண்டியவை :
வைபவங்கள் நடக்கும் வீட்டில் நடைபெறும் விருந்து உபசரிப்புகளில் வீணாக உணவு விரையமாக்கப்படுவது மிகவும் வேதனைப்பட வேண்டிய ஒன்று மட்டுமல்ல சிந்திக்கபட வேண்டிய ஓன்று. உணவுப் பற்றாக்குறையுடன் ஏழைகள் பலர் நம்மிடையே வாழ்கிற இந்நாட்டில் உணவு வீண் விரையம் செய்வது மிகப்பெரிய சமூகக்குற்றமாக கருதப்படும். உணவை வீணாக்ககூடாது என்ற உணர்வை நம் பிள்ளைகளின் மனதில் போட்டு விதைப்போம். நாளை அது செழித்து வளர்ந்து சமூக அக்கரை உள்ள குடிமக்களை உருவாக்கும். ஒரு பருக்கை கூட தட்டில் மிச்சம் வைக்காமல் உண்பதுதான் சிறந்தது என்பதை அனைவரும் உணருவோம்.

சேக்கனா M. நிஜாம்
இது ஒரு மீள்பதிவு !



Saturday, September 14, 2013

காக்கா வாங்க பசியாறலாம் !?

வீட்ல யாரு ஆம்புளைங்க இருக்காங்களா காக்கா இருக்காஹலா ?

யாரு !? ஒரு நிமிஷம் இருங்க வந்துட்டேன்

அஸ்ஸலாமு அலைக்கும், என் மகளுக்கு கல்யாணம் வச்சிருக்கே[ன்] வர்ற வெள்ளிக்கிழமை செக்கடிப்பள்ளியில் காலை 11 மணிக்கு நிக்காஹ் நம்ம வீட்ல காலை பசியாற... பகல் மாப்பிள்ளை வீட்ல வலிமா... இரண்டுக்கும் நீங்க கட்டாயமா வரனும்

இன்ஷா அல்லாஹ்.

இந்தாங்க போயிராதிய செத்த நேரத்துல ரெடியாயிடும் பசியாறிட்டு போங்க.

இந்தா என்ன பசியாற ?

இது போன்ற உரையாடல்கள் அதிரையர்களுக்கு மட்டுமே சொந்தம் அதிகமாக பேசப்படும் வார்த்தைகள்

பசியை ஆற்றுதல் [ பசியை தணித்த ல்] பசிபோக்கும் உணவை அழகிய தமிழ் வார்த்தையில் பசியாற என்று நாம் குறிப்பிடுகிறோம் .

இட்டலி,தோசை.அப்பம்.இடியப்பம்,,, இவைகளுக்கு நாம் பசியாற என்போம் வெளியூர் இஸ்லாமியர்கள் நாஸ்டா என்றும் தமிழ் போற்றும் நல்லுலகம் சொல்லும் டிபன் [ TIFFAN ]

பசியை ஆற்றும் உணவுகள். சோறு,பிரியாணி, போன்றவைகளுக்கு நாம் பசியாற என்று சொல்வதில் ஏன் என்ற காரணமும் தெரியவில்லை

உதாரணம் இரவு கணவன் மனைவியிடம் கேட்பான் இன்னைக்கி என்ன பசியாற? அவள் சொல்வாள் இன்னைக்கி பசியாற பன்னால பகல் மிஞ்சின பிரியாணி இருக்கு என்பாள் பசியாற என்றாலே இடியப்பமும்,இட்லியும் ரொட்டியும் என்றாகி விட்டது.

வெளிநாட்டில் இருக்கும் நம் மக்கள் தம் தாய், மனைவி, பிள்ளைகள் இவர்களிடம் தொலைபேசி உரையாடலில் ?

அஸ்ஸலாமு அலைக்கும்

நல்லா இருக்கியா ?

சாப்டாச்சா ?

என்ன சாப்பாடு ?

என்ன பசியாற ?

இப்படி உரையாடல்கள் உரையாடப்படும் ! உடல் நலம் விசாரிப்பிற்கு பின். சாப்பாடு பற்றிய கேள்வி நிச்சயம் இருக்கும்

சரி அதிரை சொந்தங்களே நல்லா இருக்கீங்களா ? சாப்டீங்களா ?

வஸ்ஸலாம்
மு.செ.மு. சபீர் அஹமது 

Thursday, August 22, 2013

அதிரையை அசத்திவரும் மந்தி விருந்து !

மந்தி !?  தமிழ் போற்றும் நல்லுலகம் கூறிடும் இது மனிதனின் பரிணாம வளர்ச்சியில் முதல் பரிணாமம் என்று  [ அறிவியல் படி] இதை இஸ்லாம் மறுக்கின்றது என்பது வேறு விஷயம்.  அராபியர்களிடம் கூறினால் நாக்கை சுழற்றி சப்புக்கொட்டுவார்கள்.
ஆம் ! இது ஓர் உணவுவகை ருசிமிக்க உணவுவகை மந்தியின் தாவல் போல் அரபுலகத்தில் இருந்து அதிரையை நோக்கி ஒரே தாவலாய் நம்மவர்களிடத்திலும்...

இது பற்றி செய்முறை, ருசியில் பெருமைகள் தெரியலாயிற்று மேலை நாட்டவரின் உணவு பழக்கங்களில் பிசாவும், பர்கரும் அராபியருக்கு அன்றாட உணவு பழக்கங்களில் அத்யாவசியமாகி விட்டது அவர்களின் மந்தியும் கப்சாவும் கபாபும் சவர்மாவும் நம்மவர்களுக்கு பிடித்துவிட்டது.

ஒரு நாட்டு உணவு பழக்கங்கள் வேறு நாட்டவருக்கு அறவே பிடிக்காமல் போகும் சில பிடித்ததோடு மட்டுமில்லாது அத்யாவசிய  உணவாகிவிடும் உதாரணம் சொன்னால் சீனர்களின் உணவு பழக்கம் காரசாரமாக சாப்பிடும் இந்தியருக்கு பிடிக்காது ஆனால் நூடுல்ஸ், வெஜ் சூப்புகள் நம்மில் அன்றாட பழக்கத்தில் ஒட்டிக்கொண்டது.
         
பதமாய் ஆட்டுக்கறியை வேகவைத்து கறியின் சாற்றில் பாஸ்மதி அரிசியை வேகவைத்து இரண்டையும் இரண்டற கலந்தால் மந்தி தயார் இதற்கு பிரியாணிக்கு தேவையான ஐட்டங்கள் நிறைய இதற்கு தேவைப்படாது அசிடிட்டி, அல்சர் தொந்தரவு உள்ளோர்க்கு பிரியாணியை ஹராமாக்கி இருப்பார் அவர் குடும்ப டாக்டர்கள் மந்தியை ஒருநாள் சமைத்து அந்த டாக்டரிடம் உண்ணக் கொடுத்து நீங்கள் சாப்பிடுவதற்கு அனுமதி கிடைக்கும் என்பது எனது ஆணித்தரமான நம்பிக்கை காரணம் அதில் இஞ்சி, பூண்டு, கரம் மசாலாக்கள் மற்றும் எண்ணையின் அளவும் குறைவுதான்.
           
மந்திக்கு முக்கியம் நல்ல அரிசி, பெரிய துண்டுகள் கொண்ட ஆட்டுக்கறி, பொறுமையான சமையல்காரர். பெரிய துண்டுகள் கொண்ட கறியாக இருப்பதால் மூன்று,அல்லது நான்கு பேர்கள் அமர்ந்து சாப்பிடும் [சஹன் ] பெரிய தட்டுகள் வேண்டும். இதுவே சுன்னத் பேணுவதற்கு வழிவகுக்கின்றது, சாப்பிட்டபின் எழும்புத்துண்டுகளை வெளியில் அப்படியே போட்டு விடாதீர்கள் அதை புதைத்து விடுங்கள் தவறினால், நீங்கள் அஸருக்கு பின் செரிமான கோளாறில் சிரமப்பட சமையல்காரர் காரணம் இல்லை என்பதை நான் உறுதியளிப்பேன்.  சாப்பிட்டவர்களில் கலை நயமிக்கவர்கள் நான்கு பேர் ஒன்று கூடி குவிக் பிக்ஸ் உதவிகொண்டு எஞ்சிய எழும்புகளை ஒன்று சேர்த்து ஒரு முண்டமில்லா ஆட்டின் எழும்பு கூட்டை மியுசியத்திற்கு தயாரித்து விடலாம் ! இது ஒரு அதிசியமா ? என கேட்கும் அந்த[ மியூசிய ] அதிகாரியிடம் நான் கூறும் விஷயத்தை ஓர் பதாகையில் எழுதி அந்த எழும்புக் கூட்டோடு சேர்த்து சமர்பியுங்கள் விஷயம் இதுதான் "இந்த எழும்புக் கூடு நாங்கள் சமைத்து தின்ற ஆட்டின் எஞ்சிய பகுதி" என்று அதிசியத்துப்போவார்கள் காண்போர்கள் அனைவரும்

அதிரையில் கல்யாணம் முடிந்த இரண்டாம் நாள், பெருநாள் முடிந்த மறுநாள் இச்சிறப்புமிக்க உணவுகள் சமைக்கப்படுகின்றது.

மு.செ.மு. சபீர் அஹமது      

Tuesday, April 30, 2013

அதிரையின் அசர வைக்கும் விருந்து உபசரிப்பு !

'பந்திக்கு முந்து படைக்கு பிந்து' என்ற பழமொழி எதற்கு கூறினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அதிரையரின் உபசரிப்புக்காக மாத்திரம் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளாத்தான் இவை இருக்கும் என நான் கருதியதுண்டு. அந்தளவிற்கு விருந்தோம்பலுக்கு பெயர்பெற்ற ஊர்களில் நமதூரும் ஒன்று. உற்றார் - உறவினர்- நண்பர்கள் படை சூழ வந்திருந்த அனைவருக்கும் சகோதரத்துவ அன்பை வெளிப்படுத்தும் விதமாக அருகிலே நின்று விருந்து உபசரிக்கப்படுகின்றன.

நமதூரில் எவ்வாறெல்லாம் விருந்துகள் உபசரிக்கப்படுகின்றது ?

1. திருமண வலீமா விருந்து
2. வீடு குடிபுகுதல் விருந்து
3. விருந்தாளிகளுக்கு வைக்கப்படும் விருந்து
4. நண்பர்களுக்கு வைக்கப்படும் விருந்து
5. ஹஜ் செல்லும்போதும் / முடித்துவிட்டு வரும்போதும் வைக்கப்படுகின்ற விருந்து
6. பெருநாள் விருந்து
7. குழந்தை பிறப்பு

என இவ்வாறெல்லாம் விருந்துகள் உபசரிக்கப்படுகிறது.

லுஹர்த் தொழுகை முடித்தவுடன் வைபவங்கள் நடக்கும் வீட்டின் அருகிலே பந்தல் அமைக்கப்பட்டு அல்லது  திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இம்மதிய விருந்துகள் உற்றார் - உறவினர்- நண்பர்கள் ஆகியோருக்கு உபசரிக்கப்படுகின்றன.

ஊரிலே கலரி விருந்து என்றொரு பெயரிலும் இவற்றை அழைப்பதுண்டு.
இஸ்லாத்தின் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் ஏழை !?, பணக்காரான் !?, தெருக்கள் - குடும்ப பீலிங் !? என்றப் பாகுபாடுகள் இல்லாமல் தமிழகத்திலேயே சஹனில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடிய ஊர்களில் நமதூரும் ஒன்றாக இருக்கிறது.

அஞ்சு கறி என்ற பெயரில் விருப்பமாக அழைக்கப்படும் இந்த உணவை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். இவை சீராகச் சம்பா, துளசி பழையது, பாஸ்மதி போன்ற உயர் ரக அரிசியில் தயாரிக்கப்படுகிற கம கம மணத்துடன் நெய்ச் சோறு, செம்மறி ஆட்டுக்கறியில் கூடுதல் ஆயில் ( ! ) இட்டு தயாரிக்கப்படுகிற கறி ஆணம், நாவிற்கு சுவையைக்கூட்ட நாட்டுக் கத்தரிக்காயில் பச்சடி, உருளையில் குருமா, செரிமானத்திற்கு என்று சொல்லியே ( ! ? ) அனைவரும் விரும்பி பருகக்கூடிய புளியானம் ( ரசம் ) போன்றவை ஒரு வகையாகவும்...

மற்றொறு வகையாக பிரியாணி ! நமதூருக்கே பெருமை சேர்க்கக்கூடிய உணவாகவும் அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணக்கூடியதாகவும் உள்ளது. இவை சீராகச் சம்பா, துளசி பழையது, பாஸ்மதி போன்ற உயர் ரக அரிசியில் சமமான அளவு செம்மறி ஆட்டுக்கறிச் சேர்த்து தயாரிக்கப்படுகிறப் பிரியாணி சுவையாகவும், நறுமண மிக்கதாகும் இருக்கும். மேலும் கூடுதலாக துண்டுகளிட்ட பொரிச்ச கோழி, வெங்காயத் தயிர் ஊறுகாய், எலுமிச்சை கலரி ஊறுகாய் போன்றவைகள் இவற்றில் இடம்பெற்றிருப்பது வயிறார உண்பதற்கு கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.

தால்ச்சா !  இதன் ருசியே தனி, அஞ்சு கறி, பிரியாணி போன்ற உணவிற்கு கூடுதல் இணைப்பாக அதில் இடம்பெற்றிருக்கும்.

இனிப்பு வகைகளாக...
1. சேமியாவில் தயாரிக்கப்படுகிற பிர்னி
2. பீட்ரூட்டில் தயாரிக்கப்படுகிற இனிப்பு
3. கோதுமையில் தயாரிக்கப்படுகிற இனிப்பு
4. ரவாவில் தயாரிக்கப்படுகிற கேசரி
5. பேரிட்சை பழத்தில் தயாரிக்கப்படுகிற இனிப்பு

போன்றவற்றில் ஏதாவது ஒன்று அஞ்சு கறி மற்றும் பிரியாணி உணவில் இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும். மேலும் ஒவ்வொரு சஹனிலும் மூன்று தண்ணிர்ப் பாக்கெட்கள் அதில் வைக்கப்பட்டிருக்கும்.

அஞ்சு கறி, பிரியாணி போன்ற உணவுகள் திருமண நிகழ்ச்சிகள், வீடு குடி புகுதல், ஹஜ் செல்லும்போது / முடித்துவிட்டு வரும்போது போன்ற நிகழ்வுகளில் மதிய உணவாக ஒவ்வொரு சஹனிலும் தலா மூவர் வீதம் அமர்ந்து பரிமாறுவார்கள்.

மறு சோறு போதும்... போதும்... எனச்சொல்லும் அளவுக்கு அனைவருக்கும் வழங்கி தங்களின் சகோதரத்துவ அன்பைக் காட்டுவார்கள்.

வாங்க காக்கா !
பேப்பரு தாங்க...
மூணு பேரா உட்காருங்க...
அங்கே ஒரு சஹன் வைங்க !
எங்கே தால்ச்சா ?
இங்கே சோறு பத்தலே...
எங்கே மறுசோறு ?
இன்னொரு சுவீட் எடுத்துத் தாங்க !

என இதுபோன்ற பழக்கப்பட்ட சந்தோஷக் குரல்கள் கலரிச் சாப்பாட்டில் அங்காங்கே ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்...

என்ன சகோதரர்களே ! உங்களுக்கும் அப்படி ஒலித்ததா !?

கவனத்தில் கொள்ளவேண்டியவை :
வைபவங்கள் நடக்கும் வீட்டில் நடைபெறும் விருந்து உபசரிப்புகளில் வீணாக உணவு விரையமாக்கப்படுவது மிகவும் சிந்திக்க + வேதனைப்பட வேண்டிய ஒன்றாகும். உணவுப் பற்றாக்குறையுடன் ஏழைகள் பலர் நம்மிடையே வாழ்கிற இந்நாட்டில் உணவு வீண் விரையம் செய்வது மிகப்பெரிய சமூகக்குற்றமாகும். உணவை வீணாக்ககூடாது என்ற உணர்வை நம் பிள்ளைகளின் மனதில் போட்டு விதைப்போம். நாளை அது செழித்து வளர்ந்து சமூக அக்கரை உள்ள குடிமக்களை உருவாக்கும். ஒரு பருக்கை கூட தட்டில் மிச்சம் வைக்காமல் உண்பதுதான் சிறந்தது என்பதை அனைவரும் உணருவோம்.

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால்  !   தொடரும்...