சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்திலிருந்து சென்னைக்கு 5 படகுகள் அனுப்பி வைக்கப்பட்டன.
சென்னையில் மழை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க அதிராம்பட்டினத்திலிருந்து சென்னைக்கு படகுகளை அனுப்பி வைக்கும்படி பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியருக்கு தஞ்சை ஆட்சியர் என். சுப்பையன் உத்தரவிட்டார். இதன்பேரில், பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் ஆர். அரங்கநாதன், வட்டாட்சியர் பொ. சேதுராமன் ஆகியோர் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புறக்கரை கிராம மீனவர்களிடமிருந்து 5 மீன் பிடி படகுகளைப் பெற்று லாரி மூலம் சென்னைக்கு வியாழக்கிழமை மாலை அனுப்பி வைத்தனர்.