.

Pages

Showing posts with label அமெரிக்கா செய்திகள். Show all posts
Showing posts with label அமெரிக்கா செய்திகள். Show all posts

Tuesday, May 1, 2018

சிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து அமெரிக்காவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

காஷ்மீரில் ஆஷிஃபா என்ற 8 வயது சிறுமியை கோவில் கருவறைக்குள் அடைத்து வைத்து கற்பழித்து, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இக்கொடூர குற்றத்திற்கு நீதி வேண்டியும், அமெரிக்கா வாழ் தமிழர்கள் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், அதிராம்பட்டினம், வடகரை, மீமிசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அமெரிக்கா வாழ் தமிழர்கள் பலர் கலந்துகொண்டு முழக்கமிட்டனர்.

Thursday, November 20, 2014

அமெரிக்கா நியூயார்க்கில் கடும் பனிப்பொழிவு ! [ படங்கள் இணைப்பு ]

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று ஏற்பட்ட கடும் பனிப் பொழிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க், நார்த் டகோடா, மினசோடா, விஸ்கான்சின், மிச்சிகன், ஒஹியோ மற்றும் பென்சில்வேனியா உட்பட பல பகுதிகளில் தற்போது பனி கடுமையாக பொழிகிறது. சில இடங்களில் இரவு நேரத்தில் வெப்பநிலை மைனஸ் 11 டிகிரி செல்சியஸாக உள்ளது. ஒரு மணி நேரத்துக்கு 13 செ.மீ அளவுக்கு பனி பொழிகிறது. நியூயார்க்கின் பவ்பலோ நகரில் 6 அடி உயரத்துக்கு பனி படர்ந்துள்ளது. இதனால் மக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். குளிர் தாங்க முடியாமல் நியூயார்க் நகரில் இதுவரை 4 பேர் பலியாகிவிட்டனர்.  சில இடங்களில் வாகனங்கள் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் நிலைமை மிகமோசமாக இருப்பதால், அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டு மீட்பு பணி நடக்கிறது.

Saturday, October 25, 2014

'கிரீன் கலாம்' திட்டத்திற்கு அமெரிக்காவில் விவேக்கை சந்தித்து எம்.எம்.எஸ் பகுருதீன் வாழ்த்து !

சென்ற ஞாயிறு கலிபோர்னியா மாகாண ஹேவார்டில் ஷாபொட் கல்லூரி ஆடிடோரியத்தில் கலாலயா USA மற்றும் பாரதி தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய விழாவில் கலந்து கொண்ட விவேக்கை நமதூரை சேர்ந்த எம்.எம்.எஸ் பகுருதீன் சந்தித்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கனவு திட்டமான கிரீன் கலாம் 10 லட்சம் மரம் கன்றுகளை நடும் திட்டத்தை தமிழகத்திலும், புதுவையிலும் நடுவதற்கு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி திட்டத்தை முழுமை அடைய அயராது பாடுபடும் விவேக்கிற்கு வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.

தகவல்: எம்.எம்.எஸ் சிராஜ்

Tuesday, May 27, 2014

அமெரிக்க வாழ் தமிழ் முஸ்லீம்களின் சந்திப்பு !

அமெரிக்க வாழ் தமிழ் முஸ்லீம்களை ஒன்றிணைக்க டெக்ஸஸ் மாநிலத்தில் உள்ள டல்லஸ், ஹூஸ்டன்,ஆஸ்டின் ஆகிய நகரங்களில் வாழும் இஸ்லாமியர்கள் முயற்சி செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக சந்திப்பு நிகழச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. டல்லஸ் நகருக்கு அருகில் இருக்கும் ப்லேனோவில் கடந்த [ 25-05-2014 ] அன்று முதல்நாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 200 க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர். சந்திப்பின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் 250 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள். தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த முயற்சியை பிற மாநிலங்களிலும் விரிவுபடுத்தவும், தேசிய அளவில் மாநாடு ஒன்றை நடத்துவது என்றும் இதன் அமைப்பினர் உத்தேசித்துள்ளனர்.

இதில் இணைய http://www.americantamilmuslims.org/ என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்ளபடுகிறது.

செய்தி தொகுப்பு : A. சேக்தாவூத் ( அமெரிக்க )






Monday, January 6, 2014

அமெரிக்கா கலிபோர்னியாவில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அதிரையர்கள் பங்கேற்பு [ புகைப்படங்கள் ] !

சகோதரர் பரகத் அவர்களின் மகள் பஸ்மினாவுக்கும் புதுதெரு மர்ஹும் அக்பர் கான் அவர்களின் பேரனும் சகோதரர் ஜக்கரியாஹ் அவர்களின் புதல்வர் பயாஸ் அகமதுக்கும் சென்ற ஆண்டு இறைவன் அருளால் திருமணம் நடைபெற்று மணமகள் குடும்பத்தினர் அமெரிக்க குடி உரிமை உள்ளவர்கள் என்பதால் மணமகனுக்கும் குடி உரிமை கிடைக்கபெற்று  தம்பதிகள் இருவரும் சென்ற வாரம் அமெரிக்காவுக்கு வந்தனர்.

இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கலிபோர்னியா மாநில ஸ்டாக்டன் நகரில் உள்ள இஸ்லாமிக் சென்டரில் நேற்று [ 05-01-2014 ] ஞாயிற்றுகிழமை மணமகளின் தந்தை சகோதரர் பரகத் அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தார். இதில் அதிரையர்கள் மற்றும் நண்பர்களை மதிய உணவிற்கு அழைத்து இருந்தார்கள். இந்நிகழ்ச்சியில் அதிரையர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

கலிபோர்னியாவிலிருந்து அதிரை நியூஸ் செய்தியாளர்