.

Pages

Showing posts with label அரசு செய்திகள். Show all posts
Showing posts with label அரசு செய்திகள். Show all posts

Saturday, January 16, 2016

அதிரையில் நாளை போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்!

*File Image
அதிரை உள்ளிட்ட தஞ்சை மாவட்ட அனைத்து பகுதியிலும் பிறந்த குழந்தை முதல், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் முதல் தவணை நாளை 17-1-2016 காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதிரையில் அரசு மருத்துவமனை, முத்தம்மாள் தெரு, புதுமனை தெரு, கீழத்தெரு சங்கம், மாரியம்மன் கோயில் தெரு, காந்தி நகர், தைக்கால் தெரு, கடற்கரை தெரு, மேலத்தெரு சங்கம், பழஞ்செட்டி தெரு, செட்டி தோப்பு காலனி, பிள்ளைமார் தெரு உள்ளிட்ட  பகுதிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பொது சுகாதாரத் துறை சார்பில் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என். சுப்பையன் அவர்கள் பேசியதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் 17.01.2016 அன்று நடைபெறும் முதலாவது சுற்றில் 2 இலட்சத்து 24 ஆயிரத்து 636 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.  இப்பணியில் 6 ஆயிரத்து 40 சொட்டு மருந்து வழங்கும் பணியாளர்களும் 178 மேற்பார்வையாளர்களும் மற்றும் 120 மருத்துவ அலுவலர்களும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

நகரப்பகுதிகளில் 128 மைங்களும், ஊரக பகுதிகளில் ஆயிரத்து 382 மையங்களும் ஆக மொத்தம் ஆயிரத்து 510 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், புகை வண்டி நிலையங்கள், கோயில்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிலையங்கள், புகைவண்டி நிலையங்களில் 17.01.2016 அன்று முதல் சுற்றாக சொட்டு மருந்து வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொது சுகாதாரத்துறை, ஊட்டச்சத்து துறை, சமூக நலத்துறை வருவாய்த்துறை, கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சிகள், உள்ளாட்சித்துறை, அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஆகியோர் பங்கேற்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

17.01.2016 அன்று பிறந்த குழந்தைக்கும், மேலும் எத்தனை முறை தடுப்பு மருந்து குழந்தைகளுக்கு கொடுத்திருந்தாலும், இந்த முகாமில் கூடுதல் தவணையாக கட்டாயம் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும். இந்த தடுப்பு மருந்து அரசின் மூலமாக முற்றிலும் இலவசமாகப் வழங்கப்படுகிறது.

வேலை நிமித்தமாக வெளி மாநிலங்களிலிருந்து வந்து தற்காலிகமாக தங்கியிருக்கும் மக்களின் குழந்தைகளுக்கும் மற்றும் நாடோடிகளாக இடம் பெயர்ந்து செல்லும் மக்களின் குழந்தைகளுக்கும் விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு நடமாடும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
முகாம்களில் உள்ளுர் மற்றும் வெளியூர் குழந்தைகள் யாராக இருந்தாலும் சொட்டு மருந்து வழங்கப்பட்டு குழந்தைகள் இடது கை சுண்டு விரலில் அடையாள மை வைக்கப்படும்.

போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்க 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் "இரண்டு சொட்டு" போலியோ சொட்டு மருந்தை தங்கள் குழந்தைகளுக்கு தவறாமல் கொடுத்து தஞ்சை மாவட்டத்தை போலியா இல்லாத மாவட்டமாக அடைய வேண்டும் என பொது மக்களை கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பேசினார்.

Saturday, February 21, 2015

அதிரையில் நாளை 2 ம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் !

அதிரை உள்ளிட்ட தஞ்சை மாவட்ட அனைத்து பகுதியிலும் பிறந்த குழந்தை முதல், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் முதல் தவணையாக கடந்த 18-1-2015 அன்று நடந்தது. இதையடுத்து இரண்டாவது தவணையாக நாளை 22-02-2015 காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதிரையில் அரசு மருத்துவமனை, முத்தம்மாள் தெரு, புதுமனை தெரு, கீழத்தெரு சங்கம், மாரியம்மன் கோயில் தெரு, காந்தி நகர், தைக்கால் தெரு, கடற்கரை தெரு, மேலத்தெரு சங்கம், பழஞ்செட்டி தெரு, செட்டி தோப்பு காலனி, பிள்ளைமார் தெரு உள்ளிட்ட  பகுதிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Sunday, January 25, 2015

புதிய டிஜிட்டல் மீட்டர் பொருத்த பணம் கொடுக்க வேண்டாம்: மின் வாரியம் அறிவிப்பு!

பழைய மின் மீட்டர்களுக்குப் பதில் புதிய டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்த பொதுமக்கள் பணம் கொடுக்க வேண்டாம் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த வாரியம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாட்டில் பழைய தொழில்நுட்பத்துடன் இயங்கும் மின் மீட்டர்களை மாற்றி புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் மின் மீட்டர்களைப் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 2.30 கோடி மின் இணைப்புகளில் ஒரு கோடி மின் இணைப்புகளுக்கு டிஜிட்டல் மின் மீட்டர்கள் பொருத்தும் பணி முடிவடைந்துள்ளது.

இந்தப் புதிய டிஜிட்டல் மின் மீட்டர்களை எவ்விதக் கட்டணமுமின்றி பொருத்த வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பிரிவு அலுவலகத்தில் உள்ள ஆய்வாளர்கள், மின் உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

எனவே, புதிய டிஜிட்டல் மின் மீட்டர்களை மாற்ற தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்களுக்கு பொதுமக்கள் எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

புதிய டிஜிட்டல் மின் மீட்டர்கள் மாற்றுவதற்கு யாரேனும் பணம் கேட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய டிஜிட்டல் மின் மீட்டர்கள் பொருத்துவதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும், யாரேனும் பணம் கேட்டால் கொடுக்க வேண்டாம்

எனவும் பொதுமக்களைக் கேட்டுக் கொள்வதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.

நன்றி:தினமணி

Thursday, January 22, 2015

தன்னார்வ தொண்டர்கள் இரத்த தானம் செய்ய முன்வர வேண்டும்: வட்டார மருத்துவ அலுவலர் வேண்டுகோள் !

தன்னார்வ தொண்டர்கள் இரத்ததானம் செய்ய வட்டார மருத்துவ அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பட்டுக்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கு,அறிவழகன் இரத்ததானம் பற்றி கூறும்போது...
பாதுகாப்பான இரத்தத்தின் தேவைநாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது,  இந்தத் தேவையைப் பூர்த்திசெய்வதில் தன்னார்வ இரத்தகொடையாளர்களின் பங்குமகத்தானது, விபத்துகளின் போது இரத்த இழப்பை ஈடு செய்ய தேவைப்படுகிறது,

பெரியஅறுவைசிகிச்சைமேற்கொள்ளும் போது கூடுதலாக இரத்தம் தேவைப்படுகிறது,  இது தவிர 'தலசீமியா' நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும். தீக்காயம் அடைந்தவர்களுக்கும். இரத்த சோகை அதிகம் உள்ளவர்களுக்கும். பிரசவ காலத்தில் ஏற்படும் இரத்த இழப்பிற்கும். இரத்தப் புற்றுநோய் தாக்கியவர்களுக்கும் உயிர்காக்கும் மருந்தாக இரத்தம் தேவைப்படுகிறது,

இரத்ததானம் செய்வதால். மாரடைப்பை குறைக்கிறது, புதிய இரத்தஅணுக்கள் உருவாக ஊக்கப்படுத்துகிறது, இரத்ததானம் வழங்குவதால் ஒருவர் உடலில் 500 கலோரிகளுக்கு மேலாக எரிக்கப்படுகிறது, இரத்ததானம் செய்வதற்குமுன். உடல் எடை கணக்கிடப்படுகிறது,  இரத்தஅழுத்தம் பரிசோதிக்கப்படுகிறது,  ஹீமோகுளோபின் பரிசோதனை செய்யப்படுகிறது,  இரத்தவகை மற்றும் ஆர்,எச் பிரிவுப் பரிசோதனை செய்யப்படுகிறது,

இரத்ததானம் செய்தபிறகு. தானமாக பெறப்பட்ட இரத்தம் பல்வேறு நோய்களுக்காக பரிசோதிக்கப்படுகிறது,  எச்,ஐ,வி,. மஞ்சள் காமாலை. பால்வினை மற்றும் மலேரியாபோன்றநோய்கள் இருந்தால். இரத்தம் பயன்படுத்தப்படுவதில்லை,  மேலும் தானம் வழங்கியவருக்கும் இரத்தத்தில் உள்ளநோயின் தன்மை தெரியப்படுத்தப்படுகிறது,

மேலும். 18 வயதுமுதல் 60 வயது வரையுள்ள எல்லாஆண்களும். பெண்களும் இரத்ததானம் செய்யலாம், இரத்ததானம் செய்பவரின் எடை குறைந்தபட்சம் 45 கிலோ இருக்கவேண்டும்,  நம் ஒவ்வொருவருடைய உடலிலும் சுமாராக 5 லிட்டர் இரத்தம் உள்ளது,  இதில் இரத்த தானத்தின் போது எடுக்கப்படும் இரத்தம் 350 மில்லிலிட்டர் மட்டுமே, ஆனால் அந்த இரத்தமும் 24 மணிநேரத்திற்குள்ளாக நமது உடலால் மீண்டும் ஈடு செய்யப்படுகிறது,  3 மாதங்களுக்கு ஒரு முறை தாராளமாக இரத்ததானம் செய்யலாம், இரத்ததானம் செய்ய 20 நிமிடங்களே ஆகும்,  இரத்ததானம் செய்தவுடன் வழக்கம் போல் அன்றடாடவேலைகளை மேற்கொள்ளலாம்,

கருவுற்றிருக்கும் போதும். குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டும் போதும் இரத்ததானம் செய்யவேண்டாம்,  பெரிய அறுவை சிகிச்சை செய்த 6 மாதங்களுக்கம். சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்ட 3 மாதங்களுக்கும் இரத்ததானம் செய்வதை தவிர்க்கவும்,

மலேரியா நோய் சிகிச்சைப் பெற்றபிறகு, மு்ன்று மாதங்களுக்குத் தவிர்க்கவும்,  மஞ்சள் காமாலை சிகிச்சை பெற்றபிறகு ஓர் ஆண்டு வரை இரத்ததானம் செய்வதை தவிர்ப்பது நல்லது,  மேலும் பால்வினை - எச்,ஐ,வி நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்ததானம் செய்யக்கூடாது, மாதவிடாய் நேரங்களில் பெண்கள் இரத்ததானம் செய்யவேண்டாம்,  சர்க்கரைநோய் உள்ளவர்கள் இரத்ததானம் செய்வதைத் தவிர்க்கலாம்,  ஸ்டீராய்ட். ஹார்மோன் தொடர்பான மருந்துகள் உட்கொள்ளும் போதும். போதை மருந்து உட்கொள்ளுபவர்கள் மற்றும் பல்வேறு ஆண்-பெண் பாலியல் தொடர்பு வைத்திருப்பவர்கள் இரத்ததானம் செய்யக்கூடாது,  பல்வேறு நோய் தடுப்பு ஊசிகள். மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது இரத்ததானம் செய்யக்கூடாது, அரசு இரத்த வங்கிகள் மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் இரத்த வங்கிகளில் மட்டுமே இரத்ததானம் செய்யவேண்டும்,  அரசு இரத்த வங்கி நடத்தும் இரத்ததான முகாம்களிலும். இரத்ததானம் முகாம் நடத்தஅனுமதி பெற்ற தனியார் இரத்த வங்கிநடத்தும் முகாம்களிலும் இரத்ததானம் செய்யலாம்,

பட்டுக்கோட்டைவட்டாரப் பகுதிகளில்உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள். கல்லூரி மாணவ மாணவிகள் குழுவாக இரத்ததானம் செய்யவதற்கு பட்டுக்கோட்டை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அவர்களை 9442318881 என்கிற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றுகூறினார்,

Sunday, January 18, 2015

அதிரையில் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் !

அதிரை உள்ளிட்ட தஞ்சை மாவட்ட அனைத்து பகுதியிலும் பிறந்த குழந்தை முதல், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வரை முதல் தவணையாக இன்றும், இரண்டாவது தவணையாக 22-02-2015 ஆகிய இரண்டு தினங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பபட்டு வருகிறது. இதில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை முகாம்களுக்கு அழைத்து சென்று சொட்டு மருந்து செலுத்தி வருகின்றனர்.

அதிரையில் அரசு மருத்துவமனை, முத்தம்மாள் தெரு, புதுமனை தெரு, கீழத்தெரு சங்கம், மாரியம்மன் கோயில் தெரு, காந்தி நகர், தைக்கால் தெரு, கடற்கரை தெரு, மேலத்தெரு சங்கம், பழஞ்செட்டி தெரு, செட்டி தோப்பு காலனி, பிள்ளைமார் தெரு உள்ளிட்ட  பகுதிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Saturday, January 17, 2015

அதிரையில் நாளை போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்!

அதிரை உள்ளிட்ட தஞ்சை மாவட்ட அனைத்து பகுதியிலும் பிறந்த குழந்தை முதல், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வரை முதல் தவணையாக 18-1-2015 அன்றும், இரண்டாவது தவணையாக 22-02-2015 ஆகிய இரண்டு தினங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதிரையில் அரசு மருத்துவமனை, முத்தம்மாள் தெரு, புதுமனை தெரு, கீழத்தெரு சங்கம், மாரியம்மன் கோயில் தெரு, காந்தி நகர், தைக்கால் தெரு, கடற்கரை தெரு, மேலத்தெரு சங்கம், பழஞ்செட்டி தெரு, செட்டி தோப்பு காலனி, பிள்ளைமார் தெரு உள்ளிட்ட  பகுதிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவது தொடர்பாக ஆட்சியரகத்தில் பொது சுகாதாரத் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் பேசியதாவது:
தஞ்சை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) நடைபெறும் முதலாவது சுற்றில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 758 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணியில் 6,040 சொட்டு மருந்து புகட்டும் பணியாளர்களும், 178 மேற்பார்வையாளர்களும், 120 மருத்துவ அலுவலர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர். நகரப் பகுதிகளில் 128 மையங்களும், ஊரகப் பகுதிகளில் 1,382 மையங்களும் என மொத்தம் 1,510 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், புகை வண்டி நிலையங்கள், கோயில்கள், மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு எத்தனை முறை தடுப்பு மருந்து கொடுத்திருந்தாலும், இந்த முகாமில் கூடுதல் தவணையாகக் கட்டாயம் சொட்டு மருந்து புகட்டப்பட வேண்டும்.

வேலைநிமித்தமாக வெளி மாநிலங்களிலிருந்து வந்து தாற்காலிகமாக தங்கியிருக்கும் மக்களின் குழந்தைகளுக்கும் மற்றும் நாடோடிகளாக இடம் பெயர்ந்து செல்லும் மக்களின் குழந்தைகளுக்கும் விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு நடமாடும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர்.

Tuesday, December 16, 2014

வங்கிக் கணக்கு: டிச.18-க்குள் தொடங்க அறிவுறுத்தல் !

பிரதமரின் மக்கள் நிதி திட்டத்தின் கீழ் டிச. 18-ம் தேதிக்குள் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரதமரின் மக்கள் நிதி திட்டத்தின் மூலம் குடும்பத்தினர் வங்கிக் கணக்குத் தொடங்கி வருகின்றனர். மாவட்டத்தில் இன்னும் வங்கிக் கணக்குத் தொடங்கப்படாமல் உள்ள குடும்பத்தினர் அருகிலுள்ள வங்கிக் கிளையை அல்லது வங்கிச் சேவகரை டிச. 18-ம் தேதிக்குள் அணுகி வங்கிக் கணக்குத் தொடங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இந்தக் கணக்குத் தொடங்குபவர்களுக்கு ரூ. 30,000-க்கு காப்பீடு செய்யப்படும். மத்திய அரசின் மானிய உதவிகள், நிதியுதவிகள் அந்தந்த வங்கிக் கணக்கின் மூலமாக நேரடியாக வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களும் வங்கிக் கணக்குத் தொடங்க வேண்டும் என்பதால், அவர்கள் பணம் செலுத்தாமலே கணக்குத் தொடங்கலாம். கணக்குத் தொடங்குவது குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் முன்னோடி வங்கியின் தொலைபேசி எண் 04362 - 238798 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Monday, December 15, 2014

சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் பெற ஆன்லைனில் மனுசெய்யும் வசதி விரைவில் அறிமுகம் !

தமிழகத்தில் சமூக பாதுகாப்புத் திட்டங்களில் சேர ஆன்லைனில் மனு செய்யும் வசதியும், 24 மணி நேர கட்டணமில்லா தொலைபேசி வசதியும் விரைவில் அறிமுகமாக உள்ளது.

சமூக நலத்துறை சார்பில் 35.65 லட்சம் பேருக்கு, இந்திரா காந்தி தேசிய வயது முதிர்ந்தோர் ஓய்வூதியத் திட்டம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம், விதவையர் திட்டம் உள்ளிட்ட 8 சமூக பாதுகாப்புத் திட்டங்களில் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டம் குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்க, இரு புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இது தொடர்பாக தமிழக அரசு உயரதிகாரிகள் கூறியதாவது:

கடந்த ஆட்சியில் தகுதியற்ற பலரை பயனாளிகளாகச் சேர்த்துள்ளது தணிக்கையில் கண்டறியப்பட்டு, அவர்களை நீக்கி வருகிறோம். ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டதாக வெளியாகும் தகவல் தவறு. இத்திட்டங்களில் கடந்த ஜூன் முதல் 65 ஆயிரம் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். தகுதியானவர்கள் மனு செய்தால் நிச்சயம் ஓய்வூதியம் கிடைக்கும்.

மேலும், 10 இலக்க கட்டணமில்லா தொலைபேசி சேவையை தொடங்க உள்ளோம். இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். இதில் தொடர்பு கொண்டு விண்ணப்ப மனு எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். மனு நிராகரிப்பு, ஓய்வூதியம் நிறுத்தம் ஆகியவற்றுக்கான காரணங்களை தெரிந்து கொள்ளலாம்.

சமூக பாதுகாப்புத் திட்டத்தில் பயன்பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியையும் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம். இதனால் முதியோர், ஆதரவற்ற பெண்கள் தாலுகா அலுவலகங்களில் அலைக்கழிக்கப்படுவது தவிர்க்கப்படும். இணைய வசதி இல்லாதவர்கள், பொது சேவை மையங்களுக்குச் சென்று இந்த வசதியை பெறலாம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தகவல்: முஹம்மது ராவுத்தர்

Sunday, December 14, 2014

அதிரையில் நாளை முதல் ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்டும் பணி தொடக்கம்!

ரேஷன் கார்டில் 2015ம் ஆண்டுக்கான உள்தாள் ஒட்டும் பணி நாளை மறுதினம் முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் தொடங்குகிறது. உள்தாள் ஒட்ட முதல் இரண்டு அல்லது மூன்று நாட்கள் அதிக கூட்டம் இருக்கும். அதனால், முதல் ஒரு சில நாட்கள் காலை முதல் மாலை வரை ரேஷன் கடைகளில் உள்தாள் ஒட்டும் பணி மட்டுமே நடைபெறும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 17ம் தேதிக்கு பிறகு, காலையில் ரேஷன் பொருட்களும், மாலையில் உள்தாள் ஒட்டும் பணியிலும் ஈடுபட முடிவு செய்துள்ளதாக ரேஷன் கடை ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர்.

குடும்பத் தலைவரோ அல்லது குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்களோ உள்தாள் ஒட்டுவதற்காக கடைகளுக்குச் செல்லலாம். குடும்பத் தலைவரைத் தவிர்த்து வேறு யாரேனும் செல்ல விரும்பினால், அவர்களுக்கு 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அவர்கள் பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு உள்தாள்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், உள்தாள்கள் ஒட்டப்படும் நாள்களிலும் உணவுப் பொருள்களை வழங்க, கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Tuesday, November 18, 2014

35 சதவீத மதிப்பெண் எடுத்தால் தான் பிளஸ்-1 ல் பாஸ்: பள்ளி கல்வித்துறை அதிரடி !

பிளஸ்-1 மாணவர்கள் 35 சதவீத மதிப்பெண் எடுத்தால் தான் தேர்ச்சி என்று தமிழக பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. பிளஸ்-1 வகுப்பில் நன்றாக படித்து தேர்ச்சி பெற்றால்தான் பிளஸ்-2வுக்கு செல்ல முடியும். பிளஸ்-1 வகுப்பில் தேர்ச்சி பெற ஒவ்வொரு பள்ளியிலும் மாறுபட்ட மதிப்பெண் உள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் அமைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை கொண்ட தேர்வுக்குழு பரிந்துரைத்த மதிப்பெண்ணை கொண்டுதான் தேர்ச்சியா? தோல்வியா? என்பதை அந்த பள்ளி முடிவு செய்கிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 தேர்ச்சி விகிதம் 100க்கு 100 இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பிளஸ்-1 தேர்ச்சி சதவீதத்தை அதிக அளவில் வைக்கிறார்கள்.

இந்நிலையில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் இது பற்றி கூறும்போது, 
தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என எந்த பள்ளிகளாக இருந்தாலும் ஒவ்வொரு பாடத்திலும் 35 மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி. இந்த மதிப்பெண் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு அமலில் உள்ளது. 35 சதவீதத்திற்கு கீழ் தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயித்த பள்ளிகள் மற்றும் தேர்ச்சி மதிப்பெண் சதவீதம் 35க்கும் அதிகமாக நிர்ணயித்த பள்ளிகள் பற்றி தகவல் தெரிய வந்தால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Monday, November 10, 2014

தமிழக அரசின் இலவச அமரர் ஊர்தி சேவை !

அநாதை என்று இறந்த பிறகும் கைவிடப்படும் நபர்களை கணக்கில் கொண்டு, அநாதை மற்றும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் இறந்த பிறகு அடக்கத்துக்கு இலவச அமரர் ஊர்தி சேவையை துவக்கியிருக்கிறது தமிழக அரசு. இனி நீங்கள் 155377 என்ற எண்ணுக்கு போன் செய்தால் 24 மணிநேர இலவச அமரர் ஊர்தி சேவை கிடைக்கும். இதனை அனைவருக்கும் பகிருங்கள்.

Saturday, October 25, 2014

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை அதிரையில் சிறப்பு முகாம் !

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை அதிரையில் சிறப்பு முகாம் அந்தந்த பகுதிகளில் காணப்படும் வாக்கு சாவடிகளில் நடைபெற இருக்கிறது.

2015, ஜனவரி 1-ம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்த வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய அந்தந்தப் பகுதிகளில் உள்ள வரையறுக்கப்பட்ட மையத்தில் அக். 15-ம் தேதி முதல் நவ. 10-ம் தேதி வரையிலான நாள்களில் வரையறுக்கப்பட்ட அலுவலரிடம் உரிய படிவத்தைப் பெற்று நிறைவு செய்து அளிக்கலாம்.

மேலும், விடுமுறை நாள்களான ஞாயிற்றுக்கிழமை (அக். 26), நவ. 2-ம் தேதியிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பைப் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நாளை சிறப்புக் கிராம சபை:
இதேபோல, மாவட்டத்தில் உள்ள 589 ஊராட்சிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (அக். 26) சிறப்புக் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில், 1.1.2015-ஐ தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற படிவம் 6-ஐ நிறைவு செய்து கொடுக்கலாம். இதற்கு

தொடர்புடைய வாக்கு சாவடி நிலைய அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், கிராமப் பணியாளர்களைத் தொடர்பு கொண்டு வரையறுக்கப்பட்ட வாக்கு சாவடி மையங்களில் விண்ணப்பங்களைப் பெற்று மனு அளிக்கலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.

Thursday, October 16, 2014

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு ! உங்களுக்கு இடமுண்டா !?

தஞ்சை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் 18 வயது நிரம்பியவர்கள் இடம்பெற வேண்டும். பொதுமக்கள் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை நிர்ணயிக்கப்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் தொடர்பு கொண்டு அறியலாம். மேலும், இந்தப் பட்டியல்களை http://www.elections.tn.gov.in/ என்ற வலைத்தளத்திலும் காணலாம்.

பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், முகவரியை மாற்ற விரும்புகிறவர்கள், வயது, பெயர், முகவரியில் உள்ள பிழைகளை திருத்தம் செய்து கொள்ள விரும்புவர்கள் அதற்குரிய படிவங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கவும், திருத்தம் மேற்கொள்ளவும் நவம்பர் 10–ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் புதிதாக சேர்ப்பதற்கான விண்ணப்பத்துடன் இருப்பிட முகவரி, வயது ஆகியவற்றிற்கான சான்றுகள் இணைக்கப்பட வேண்டும். ரேஷன் அட்டை, வங்கி அல்லது அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகம், டிரைவிங் லைசன்சு, பாஸ்போர்ட், தொலைபேசி, சமையல் எரிவாயு இணைப்பு ஆகியவற்றின் சமீபத்திய ரசீது, ஆதார் அட்டை போன்றவற்றை முகவரி சான்றாக சமர்ப்பிக்கலாம்.

வயது சான்றாக பிறப்பு சான்றிதழின் நகல் அல்லது பள்ளி சான்றின் நகல் வழங்கலாம். 25 வயதுக்கு கீழுள்ள மனுதாரர்கள் வயது சான்றிதழை கட்டாயம் அளிக்க வேண்டும். ஜனவரி 1–ம் தேதி 2015–ம் ஆண்டு 18 வயது நிறைவடைந்தவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

முதல் முறையாக விண்ணப்பிக்க கூடியவர்கள் தவிர மற்ற மனுதாரர்கள் அனைவரும் அவர்களுடைய முந்தைய முகவரியையும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்ணையும் படிவத்தில் குறிப்பிட வேண்டும். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயரை சேர்க்க படிவம் 6–யும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தொலைந்திருந்தால் படிவம் 001–யும் பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட 6ஏ படிவத்தை நேரிலோ அல்லது தபாலிலோ அளிக்கலாம். தமிழ்நாட்டில் கிராம சபை மற்றும் குடியிருப்போர் நல சங்க கூட்டங்கள் வரும் 17, 30 தேதிகளில் நடைபெறுகிறது.

அக்டோபர் 26, நவம்பர் 2 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்படுகின்றன. வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்ப படிவங்களை மொத்தமாக கொடுக்கக்கூடாது. ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பிலும் ஒரு முகவரை நியமிக்கலாம். அவர் தினமும் 10 படிவங்களை மட்டுமே அளிக்கலாம். போலியாக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Tuesday, October 14, 2014

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு !

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் கு. கலைச்செல்வன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ. 100-ம் ( மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 300 ), தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 150-ம் ( மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 300 ), மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 200-ம் ( மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 375 ), பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 300-ம் (மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 450) வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெற தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது.

மேலும் http://tnvelaivaaippu.gov.in/Empower/ என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த உதவித்தொகை பெற விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓராண்டும் நிறைவு பெற்றிருக்க வேண்டும். இந்த உதவித்தொகையை எஸ்சி, எஸ்டி பிரிவினர் 45 வயது வரையும், இதர பிரிவினர் 40 வயது வரையும் பெற தகுதியுடையவர் ஆவர்.

மேலும் பொதுப்பிரிவினரின் ஆண்டு வருமானம் ரூ. 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டு வருமானத்தில் விலக்களிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் அனைத்து கல்விச்சான்றுகள் அசலுடனும், பதிவு செய்த வேலைவாய்ப்பு அடையாள அட்டை அசல் மற்றும் கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட அட்டை, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை அசல் மற்றும் நகல், வட்டாட்சியர் அலுவலக வருவாய் ஆய்வாளரிடம் பெறப்பட்ட ஒருங்கிணைந்த தகுதிச்சான்று ( இது மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையில்லை ), பாஸ்போர்ட் அளவு புகைப்படம், விண்ணப்பதாரர் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் புதிதாக தொடங்கப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக அசல் மற்றும் நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரருக்கு உதவித்தொகை காலாண்டுக்கு ஒருமுறை 3 ஆண்டுகளுக்கு அவருடைய வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். இதற்கான விண்ணப்பத்தினை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் வேலைவாய்ப்பு பதிவு அலுவலக அடையாள அட்டையுடன் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.

நீங்கள் புதிய வாக்காளர்களா ? விண்ணப்பிக்க அழைப்பு !

தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் ஆகிய பணி நாளை (புதன்கிழமை) முதல் தொடங்க உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 111 சிறப்பு முகாம்களில் விரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. குடும்ப உறுப்பினர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? என்பதை சரிபார்த்து கொள்ளலாம். தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் மற்றும் 1.1.2015 அன்று 18 வயது பூர்த்தியாகும் நபர்கள் படிவம் 6-யை பூர்த்தி செய்து தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

பெயர்களை நீக்கம் செய்ய படிவம்-7, பதிவுகளில் திருத்தம் செய்ய படிவம்-8, ஒரே தொகுதிக்குள் இடம் பெயர்ந்தவர்கள் படிவம்-8ஏ மற்றும் வெளிநாடு வாழ் வாக்காளர்கள் படிவம்-6ஏ ஆகியவற்றை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய ஆவணங்களுடன் அதற்கான நகலுடன் இணைத்து வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலங்களில் நாளை முதல் அடுத்தமாதம்(நவம்பர்) 10-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் சிறப்பு முகாம்கள் வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் வருகிற 26 மற்றும் அடுத்த மாதம் 2 ஆகிய தேதிகளில் நடக்கிறது. எனவே பொதுமக்கள் உரிய படிவங்களை பெற்று பூர்த்தி செய்து முகாம் நடைபெறும் இடங்களில் சமர்ப்பிக்கலாம். இதுதவிர பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் ஆகியவற்றை தேர்தல் இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

Wednesday, October 1, 2014

ஊராட்சி பகுதிகளில் மனை வாங்குபவர்கள் கவனத்திற்கு !!!

தஞ்சை மாவட்டத்தின் ஊராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மனைகளை பொதுமக்கள் வாங்கும் போது கீழ்க்கண்ட விவரங்களை சரிபார்த்து பின்னர் வாங்க வேண்டும் என்ற வேண்டுகோளை மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ளார். 

Friday, August 8, 2014

விண்ணப்பங்களுக்கு தீர்வு காண 'அம்மா மக்கள் சேவை மையம்' !

குடிநீர் குழாய் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ் கோரும் விண்ணப்பங்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில், 'அம்மா மக்கள் சேவை மையம்' நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று படித்த அறிக்கையில், "அலுவலர்கள் அலுவல் நிமித்தமாக வெளி இடங்களுக்கு சென்றுவிடும் நேர்வில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் அலுவலர்களை சந்திக்க இயலாமல் போய்விடுகிறது. இந்த இடர்பாட்டை தவிர்க்க, வாரத்தில் ஒரு நாள் மாநகராட்சிகளில் உள்ள மண்டல அலுவலகங்களிலும், நகராட்சிகளிலும் பேரூராட்சிகளிலும் பிறப்பு இறப்பு சான்றிதழ், வர்த்தக உரிமம், பாதாள சாக்கடை குழாய் இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பு, தொழில் வரி விதிப்பு, சொத்து வரி கேட்பு, கட்டட அனுமதி, பெயர் மாற்றம், காலிமனை வரி விதிப்பு, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு சான்றிதழ் ஆகியவை கோரும் விண்ணப்பங்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில், "அம்மா மக்கள் சேவை மையம்" நடத்தப்படும்.

இந்த மையத்தில் ஒவ்வொரு புதன் கிழமையிலும் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் முறையே உதவி ஆணையாளர்கள், ஆணையர்கள், செயல் அலுவலர்கள் பொது மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று, அவற்றின் மீது ஆய்வு செய்து, மக்கள் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கால வரையறைக்கு ஏற்ப ஆணை வழங்க நடவடிக்கை எடுப்பார்கள்.

அனைத்து விண்ணப்பங்களையும் கணினியில் பதிவு செய்து, ஒவ்வொரு கோரிக்கை மனுவிற்கும் விண்ணப்பதாரர்களுக்கு முறையான பதில் வழங்க ஏற்பாடு செய்யப்படும். இப்பணி முறையாக நடப்பதை உறுதி செய்ய அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அந்தந்த துறை தலைவர்கள் வலைதளம் மூலம் கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்படும். இதன் மூலம் அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு காலவிரயம் இன்றி குறைந்த செலவில் சென்றடைவது உறுதி செய்யப்படும்.

Sunday, March 16, 2014

ஹஜ் செல்ல விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு !

ஹஜ் செல்ல விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 15–ந் தேதிலிருந்து மார்ச் 22-ந் தேதிவரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு ஹஜ் கமிட்டி சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

ஹஜ் 2014–ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடமிருந்து, சில விதி முறைகள் மற்றும் வரையறைகளுக்குட்பட்டு, மும்பை இந்திய ஹஜ் குழு சார்பில் ஹஜ் விண்ணப்பங்களை தமிழ்நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது. சென்னை, எண்.13, மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸிடவர், மூன்றாம் தளத்திலுள்ள தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் செயலாளர் மற்றும் செயல் அலுவலரிடமிருந்து ஹஜ் 2014–ற்கான விண்ணப்பப் படிவங்களை பிப்ரவரி 1–ந் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது.

இவ்விண்ணப்பங்களை www.hajcommittee.com என்ற இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப்படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மனுதாரர்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 15 ஆக அறிவிப்பு செய்யப்பட்ட் இருந்தன. விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 22- தேதிவரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தகவல் : 
ஹாஜா செரிப்
யூனைட்டட் பவுண்டேஷன்
நடுத்தெரு - அதிரை

Monday, February 17, 2014

மக்களிடம் வாங்கும் பணத்துக்கு ரசீது ! பத்திர எழுத்தர்களுக்கு அதிரடி உத்தரவு !!

நிலம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக பொதுமக்களிடம் வாங்கும் பணத்திற்கு ரசீது வழங்கவேண்டும் என்று பத்திர எழுத்தர்களுக்கு பதிவுத்துறை அறிவுறுத்தி உள்ளது. பத்திரப்பதிவு அலுவலகங்களில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளை தடுக்க பதிவுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது பத்திர பதிவு அலுவலகங்கள் முற்றிலுமாக கேமரா கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. சொத்து வாங்குவோர், விற்போர் மற்றும் சாட்சிகள், அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் தவிர வேறு யாரும் பத்திர பதிவு அலுவலகங்களில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சொத்து வாங்குவோர் மற்றும் விற்போர் அங்குள்ள கேமரா மூலம் படம் எடுக்கப்படுகின்றனர். இதனால் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட தவறுகள் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சொத்து பத்திரங்களை எழுதும் ஆவண எழுத்தர்களுக்கு தமிழக அரசு பத்திர பதிவுத்துறை சில விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றும் படி அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பதிவுத்துறை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
ஆவண எழுத்தர்கள் கண்டிப்பாக அடையாள அட்டைகள் அணிய வேண்டும். ஆவணங்கள் அழகாகவும், தவறின்றியும், புரியாத வார்த்தைகளை பயன்படுத்தாமலும் எழுத வேண்டும். விலைக்கு வாங்கும் தொகையை குறைக்காமலும் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தாமலும் ஆவணங்களை எழுத வேண்டும். இடைத்தரகராக செயல்படக் கூடாது. எழுத்தர்களே சாட்சிகளாகவும் இருக்கக்கூடாது.

ஆவண எழுத்தர்கள் பத்திரங்கள் எழுத பத்திர பதிவு அலுவலக வளாகத்தை பயன்படுத்தக் கூடாது. ஆவணத்தில் விலை தொகை, ஆவண தேதி, சர்வே நம்பர், சந்தை மதிப்பு போன்றவற்றை எண்ணாலும், எழுத்தா லும் எழுத வேண்டும். சொத்துக்களை நேரில் பார்வையிட்டு அரசுக்கு இழப்பு ஏற்படாத வண்ணம் ஆவணம் எழுத வேண்டும்.ஆவண எழுத்தர்கள் பதிவு செய்யப்படும் ஆவணங்கள் குறித்து பதிவேடு, ரசீது போன்றவற்றை பராமரிக்க வேண்டும். கணக்குகளை அன்றாடம் பராமரித்து, பொதுமக்களிடம் வாங்கும் பணத்திற்கு ரசீது வழங்குவதுடன் பதிவுத்துறை அதிகாரிகள் கேட்கும்போது அவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : தினகரன்

Friday, February 7, 2014

நோயாளிகள் மருத்துவ நிதி உதவி ரூ 25,000/- பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு !

தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு ஏற்படும் பெரிய நோய்களுக்கு சிகிச்சை மேற்கொள்ள மாநிலநோயாளர் நிதி உதவி அமைப்பின் மூலம் நிதி உதவி வழங்கப்படுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள ஏழை, எளிய மக்களுக்கு இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை, இருதய வாழ்வு அறுவை சிகிச்சை, இருதய மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, அனைத்து வகை புற்றுநோய் அறுவை சிகிச்சை மற்றும் மருந்து மூலம் குணப்படுத்தும் ரத்த புற்றுநோய், மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை, மூளை நரம்பு, தண்டுவட நரம்பு அறுவை சிகிச்சை, இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, ஒட்டு உறுப்பு அறுவை சிகிச்சை, தீவிர எலும்பு முறிவு மற்றும் எலும்பு சிகிச்சை, சிறுநீரக பாதையில் கல் மற்றும் அது தொடர்பான சிகிச்சைகள் உள்ளிட்ட 11 வகையான நோய்களுக்கு சிகிச்சை மேற்கொள்வதற்கு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும்.

விண்ணப்பத்துடன் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலிருந்து நோயாளியின் முகவரி, மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை விவரம், சம்பந்தப்பட்ட மருத்துவரின் கையொப்பத்துடன் மருத்துவமனையின் முத்திரையுடன் கூடிய அறுவை சிகிச்சை செய்ததற்கான அசல் டிஸ்சார்ஜ் சம்மரி மற்றும் மருத்துவமனைக்கு செலுத்திய தொகைக்கான அசல் ரசீதுகளும் இணைக்கப்பட வேண்டும். குடும்ப அட்டை நகல், நோயாளியின் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் தாசில்தாரிடம் இருந்து பெறப்பட்ட அசல் வருமானச் சான்று, வேறு எந்த திட்டத்திலும் மருத்துவ சிகிச்சைக்கு நிதி உதவி பெறவில்லை என்பதற்கான சான்று ஆகியவை இணைக்க வேண்டும். மனுதாரர் சமர்ப்பிக்கும் அனைத்து சான்றுகளிலும் ஒரே முகவரி இருக்க வேண்டும். எனவே மாநில நோயாளர் நிதி உதவி அமைப்பின் மூலம் நிதி உதவி பெற தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.