.

Pages

Showing posts with label இரத்த தானம். Show all posts
Showing posts with label இரத்த தானம். Show all posts

Friday, December 1, 2017

அவசர சிகிச்சைக்கு உதவிய முன்னாள் கவுன்சிலர்!

அதிராம்பட்டினம், டிச.01
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி 12 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் நூர்லாட்ஜ் செய்யது முகமது. இவர் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவருக்கு தனது A1 +ve வகை இரத்தத்தை தானமாக வழங்கி உதவினார். இவருக்கு தனியார் மருத்துவமனை இரத்த வங்கி அலுவலர் ராஜகோபால், பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அருகில், சமூக ஆர்வலர் அதிரை ஏ.சாகுல் ஹமீது உடன் இருந்தார்.
 


Friday, March 10, 2017

பிரசவித்த பெண்ணுக்கு 2 யூனிட் இரத்தம் வழங்கி உதவிய அதிரையர்கள் !

அதிராம்பட்டினம், மார்ச்-10
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண் ஒருவருக்கு அதிராம்பட்டினத்தை சேர்ந்த தன்னார்வல இரத்தக் கொடையாளர்கள் இருவர் 2 யூனிட் இரத்தம் வழங்கி உதவினர்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் மணிச்சுடர் சாகுல் ஹமீது. இவர் 31 தடவை இரத்தம் தானம் செய்து சாதனை நிகழ்த்தியவர். இவரது ஏற்பாட்டின் பேரில் அதே ஊரைச்சேர்ந்த தன்னார்வல இரத்தக் கொடையாளர்கள் நூர்லாட்ஜ் செய்யது, ஜாகிர் ஆகியோர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண் ஒருவரின் இரத்த தேவையை பூர்த்தி செய்ய நேரில் சென்று 2 யூனிட் இரத்தம் வழங்கி உதவினர். இவர்களின் மனிதநேயத்தை பெண்ணின் குடும்பத்தினர் பாராட்டி நன்றி தெரிவித்தனர். இருவருக்கும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை இரத்த வங்கி பொறுப்பாளர் கலைச்செல்வன் பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.