.

Pages

Showing posts with label உலக செய்திகள்.. Show all posts
Showing posts with label உலக செய்திகள்.. Show all posts

Saturday, March 19, 2016

ரஷ்யா விமான விபத்தில் 2 இந்தியர்கள் உட்பட 61 பேர் பலி



மாஸ்கோ: ரஷ்யாவில் தரையிறங்கும் போது, விமானம் வெடித்துச் சிதறிய விபத்தில் 2 இந்தியர்கள் உட்பட 61 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

துபாயில் இருந்து ரஷ்யா சென்ற ஃபிளை துபாய் என்ற போயிங் 738 ரக விமானம், ரஷ்யாவின் ரோஸ்டாவ் ஆன் டான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளானது.

ஃபிளை துபாய் எப் இசட் 981 என்ற போயிங் விமானம் துபாயில் இருந்து வந்தது. தெற்கு ரஷ்யாவில் உள்ள ரோஸ்டாவ் ஆன் டான் விமான நிலையத்தில் அதிகாலை 3.50 மணிக்கு தரையிறங்க முயற்சி செய்யப்பட்டது. ஆனால் பனி மூட்டம் காரணமாக விமானம் ஒடுபாதையில் சரியாக இறங்க முடியாமல் மோதி விபத்தில் சிக்கியது. விமானம் வெடித்துச் சிதறி தீப்பிடித்ததில் அதில் பயணம் செய்த அனைவரும் உடல் கருகி பலியாகினர்.

மோசமான வானிலை மற்றும் உரிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் விமானம் விபத்தில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த விமானத்தில் 55 பயணிகள் இருந்ததாகவும், 6 பேர் விமான ஊழியர்கள் இருந்ததாகவும் அனைவரும் உயிரிழந்து விட்டதாக ரஷ்ய விமான துறை செய்தி தொடர்பாளர் கூறினார்.

விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விமான நிலைய அதிகாரி , "ஃபிளைதுபாய் விமான நிறுவனத்தில் எஃப் இசட் 981 என் கொடண்ட போயிங் 737-800 ஜெட் ரக பயணிகள் விமானம் 55 பயணிகளுடன் துபாய் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. விமானம் ஓடுதளத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. மோசமான வானிலை காரணமாக ஓடுதளத்தை சரியாக காணமுடியததால் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தில் விமானத்திலிருந்த 61 பேரும் பலியாகினர்" என்றார்.

இந்த விமான விபத்தை ஃபிளை துபாய் விமான நிறுவனமும் உறுதி செய்துள்ளது. விமான விபத்திற்கான காரணம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு விமான நிலைய ஆணையரகம் தெரிவித்துள்ளது. விமானத்தில் தீ அணைக்கப்பட்டுவிட்டது. எனினும் மோசமான இந்த விபத்துக்குப் பின்னர் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதனிடையே மோசமான வானிலை காரணமாக நிகழ்ந்ததாக கூறப்படும் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிகை மற்றும் அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விவரத்தை துபாய் ஊடக அலுவலகம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் வெளியிடப்பட்டுள்ள தகவல்படி இந்த விபத்தில் 44 பேர் ரஷ்யர்கள், உக்ரைன் நாட்டினர் 8 பேர், இந்தியர்கள் 2 பேர், உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் உயிரிழந்து விட்டதாக பதிவிடப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சியும் தற்போது வெளியாகியுள்ளது.

மோசமான வானிலையும், விமானி எடுத்த தவறான முடிவுமே விபத்திற்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com



Sunday, September 6, 2015

பெற்றோர்களே உஷார் !! தொடர்ந்து வீடியோ கேம் ஆடிய சிறுவன் மரணம்

ராஷ்யாவில் தொடர்ந்து 22 நாட்களாக விடியோ கேம் ஆடிய 17 வயது சிறுவன் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் உச்சலி நகரத்தை சேர்ந்த, 17 வயது சிறுவன் ஒருவனுக்கு, வீடியோ கேம் என்றால் உயிர். இந்நிலையில் கடந்த மாதம், நடந்த விபத்து ஒன்றில், அவரது கால் எலும்பில், முறிவு ஏற்பட்டதால் வீட்டில் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். அப்போது, பொழுது போகாமல் போரடிக்கவே, டிபென்ஸ் ஆப் ஏன்ஷியன்ட்ஸ் எனும் வீடியோ கேம்மை ஒரு நாளைக்கு ஆறரை மணி நேரம் என்ற விதத்தில் அவர் தொடர்ந்து 22 நாட்கள் விளையாடி வந்துள்ளார். சாப்பிடும் நேரம், துாங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் இந்த விளையாட்டை அவர் விளையாடி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒரு நாள், அவனது அறையில் இருந்து, வீடியோ கேம் விளையாடும் சத்தம் இல்லாததால், அவனது பெற்றோர் சந்தேகமடைந்து, அறைக்குள் சென்று பார்த்துள்ளனர்.

உள்ளே மயக்கத்தில் இருந்த சிறுவனை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவனை பரிசோதித்த மருத்துவர்கள் ரத்த உறைவு நோயால் சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சரிவர கவனிக்காமல் இருப்பதாலேயே இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது என, அந்நாட்டு மனோவியல் நிபுணர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Thursday, September 3, 2015

உலகின் சிறந்த விமான நிலையங்கள்: ஒரு சிறப்பு பார்வை !

அடிக்கடி உலகம் சுற்றுபவர்களை வியப்பிலாழ்த்தும் விமான நிலையங்கள் இவை. அதிக விமானங்களைக் கையாளுவதில் மட்டுமல்ல, பயணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தருவதிலும் இந்த விமான நிலையங்கள் உலக அளவில் முதல் வரிசையில் உள்ளன.

தினசரி லட்சக்கணக்கான பயணிகளைக் கையாண்டாலும், இந்த விமான நிலையங்கள் பளப்பளப்பு குறையாமல் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பயணிகளுக்கான ஓய்வு வசதிகள், உணவகங்கள் எல்லாமே சர்வதேச தரத்தில், நட்சத்திர ஓட்டல்களுக்கு இணையாக போட்டி போடுகின்றன.

உலக அளவில் விமான நிலையங்களை பட்டியலிடும் அமைப்பான ஏர்போர்ட் கவுன்சில் இண்டர்நேஷனல் ஆண்டுதோறும் சிறந்த விமான நிலையங்களைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டு சர்வதேச அளவில் 250 விமான நிலையங்களில் டாப் 8 விமான நிலையங்கள் பட்டியலில் இடம் பிடித்தவை.
சாங்கி - சிங்கப்பூர்
உலகின் மிகச் சிறந்த விமான நிலையங்களில் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் முதல் இடத்தில் உள்ளது. உயரமான பகுதியில் அமைந்துள்ள விமான நிலையம் இது. நீச்சல் குளத்துடன் ஓய்வு விடுதிகள், திரையரங்கம் என பல வசதிகளைக் கொண்டுள்ளது. டாப் 10 ஏர்போர்ட் ஓட்டல் விருது பெற்ற கிரோவ்னி பிளாஸா ஓட்டல் இங்கு உள்ளது.

1981 ல் தொடங்கப்பட்ட இந்த விமான நிலையத்தை சிங்கப்பூர் அரசு நிர்வகித்து வருகிறது.

இங்கு 3 முனையங்கள் உள்ளன. ஆண்டுக்கு 5.40 கோடி பயணிகள் வந்து செல்கின்றனர். 13 கிமீ சுற்றளவு கொண்டது. 1.30 நிமிடத்துக்கு ஒரு விமானம் வந்து இறங்குகிறது.
ஜூரிச் - ஸ்விட்சர்லாந்து
1921ல் தொடங்கப்பட்ட விமான நிலையம். 1947 ஆம் ஆண்டிலேயே ஆண்டுக்கு 1 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளைக் கையாண்டுள்ளது. தற்போது 2.5 கோடி மக்கள் ஆண்டுக்கு வந்து செல்கின்றனர்.

3 முனையங்கள் உள்ளன. ஏர்போர்ட் வாசலிலிலேயே ரயில் வசதி உள்ளது. விமான நிலையத்தில் சைக்கிள் வாடகைக்கு கிடைக்கும். இங்குள்ள ஷாப்பிங் மால்களில் பொருட்கள் வாங்கினால் வரிகள் கிடையாது.

ஆண்டுக்கு 2.62 லட்சத்துக்கும் அதிகமான விமானங்கள் வந்து செல்கிறது. தினசரி 718 விமானங்களை கையாளுகிறது இந்த விமான நிலையம்.
இன்சியோன் - தென் கொரியா
தென்கொரியா அரசு நிர்வகிக்கும் இன்சிேயான் விமான நிலையம் கடந்த 10 ஆண்டுகளாகவே உலகின் முதல் நிலை விமான நிலையம் என்கிற இடத்தை தக்க வைத்துள்ளது.

காசினோ, உள் விளையாட்டு அரங்கம் என பல்வேறு சொகுசு வசதிகளைக் கொண்டுள்ளது விமான நிலையம். மேலும் தென் கொரியாவின் கலாசார அருங்காட்சியகமும் இந்த விமான நிலையத்தில் உள்ளது.

3 முனையங்கள் உள்ளன. ஆண்டுக்கு 4.17 கோடி பயணிகளைக் கையாளுகிறது. ஆண்டுக்கு 5.30 லட்சம் விமானங்களை கையாளுகிறது.
முனீச் - ஜெர்மனி
ஐரோப்பிய நாடுகளில் மிகப் பெரிய விமான நிலையம். ஜெர்மனியை பொறுத்தவரை பிராங்பர்ட் விமான நிலையத்துக்கு அடுத்து மிகவும் பரபரப்பான விமான நிலையம் இது. 1939-ல் திறக்கப்பட்டது. 1992-ல் மேம்படுத்தப்பட்டது.

சிறிய அளவிலான கோல்ப் விளையாட்டு மைதானம், 257 அறைகள் கொண்ட மூன்று நட்சத்திர ஓட்டல் உள்பட பல சொகுசு வசதிகள் உள்ளன. சுற்றளவு 15 கிலோமீட்டர்.

2 முனையங்கள் உள்ளன. ஆண்டுக்கு 4 கோடி பயணிகளையும், 3.80 லட்சம் விமானங்களையும் கையாளுகிறது. தினசரி 1,019 விமானங்கள் வந்து செல்கின்றன.
டோக்கியோ - ஜப்பான்
டோக்கியோ ஹனியா சர்வதேச விமான நிலையம் ஜப்பானில் உள்ள முக்கிய வர்த்தகத் தலம். டோக்கியோவிலிருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவிலேயே உள்ளது.

சுற்றுலா, மற்றும் பிசினஸ் பயணிகளுக்கான அனைத்து வசதிகளும் இந்த விமான நிலையத்தில் கிடைக்கிறது. பயணிகளுக்கான சேவைகள், பராமரிப்பு மற்றும் ஷாப்பிங் விஷயத்தில் முன்னணியில் உள்ளது. 1931 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.

அமெரிக்க வசம் இருந்த இந்த விமான நிலையம் 1952 ல் ஜப்பான் அரசு வசம் வந்தது. 3 முனையங்களுடன் ஆண்டுக்கு 6.2 கோடி பயணிகளை கையாளுகிறது.

ஆண்டுக்கு 7.2 கோடி பயணிகளைக் கையாளுகிறது. உலகின் முக்கியமான பிசினஸ் மையமாகவும் திகழ்கிறது. 12 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது. ஆண்டுக்கு 7.3 கோடி மக்கள் வந்து செல்கின்றனர்.
ஹீத்ரு - லண்டன்
5 முனையங்கள் உள்ளன. ஆண்டுக்கு 4,70,000 விமானங்களை கையாளுகிறது. தினசரி 1,290 விமானங்கள் வந்து செல்கின்றன. நியூயார்க், துபாய், பிராங்பர்ட், ஹாங்காங், டப்ளின் போன்ற விமான நிலையங்களை முக்கியமாக இணைக்கிறது.

சிறந்த ஏர்போர்ட்டுக்கான பிசினஸ் டிராவலர்ஸ் விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்ற விமான நிலையம். முன்னணி விமான நிலைய ஹோட்டல்கள் உள்ளது. விமான நிலையத்திலேயே மீட்டிங் ஏற்பாடு செய்யும் வசதிகள் உள்ளன.
ஷிபால் - ஆம்ஸ்டர்டாம்
நெதர்லாந்து நாட்டில் ராணுவ தேவைக்காக 1916ல் ஏற்படுத்தப்பட்ட விமான நிலையம் இது. 1940ல் பயணிகள் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது.

இன்று ஐரோப்பாவின் முக்கிய விமான நிலையமாக மாறியுள்ளது. 6 ரன்வே உள்ளது ஆண்டுக்கு 5.2 கோடி மக்கள் வந்து செல்கின்றனர். விமான நிலையத்தில் சொகுசு வசதிகள் தவிர அருங்காட்சியகம், நூலகம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

தோராயமாக 100 விமான நிறுவனங்கள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்துகின்றன.
பெய்ஜிங்
சீனாவில் முக்கிய விமான நிலையம். சீன மக்கள் குடியரசு நிர்வகிக்கிறது. ஆண்டுக்கு 7.5 கோடி மக்கள் விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர். தினசரி 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர்.

அடுத்ததாக ஆண்டுக்கு 13 கோடி மக்கள் வந்து செல்லும் விதமாக விரிவுபடுத்தும் வேலைகள் நடந்து வருகின்றன. ஆண்டுக்கு 5.5 லட்சம் விமானங்கள் வந்து செல்கின்றன. 1958ல் இந்த விமான நிலையம் திறக்கப்பட்டது.

விமான நிலைய வளாகத்துக்குள் நேரடியாக சூரிய ஒளி வருவது போல கூரைகள் அமைத்துள்ளனர். இதுவே பார்ப்பவர்களை கண்களை கவரும் விதமாக இருக்கிறது. விமான நிலையத்துக்குள் தோட்டம், மினி ரயில் வசதிகள் உள்ளன.

Sunday, August 30, 2015

கோழிக் குஞ்சு- சிக் ரன்!


சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் ஒரு பெரிய லாரி கோழிக் குஞ்சுகளை ஏற்றி வந்துகொண்டிருந்தது. திடீரென்று வண்டி கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்துவிட்டது. லாரியில் இருந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமான கோழிக் குஞ்சுகள் வெளியே ஓடி வந்தன. அந்தப் பகுதியே மஞ்சள் பந்துகள் உருண்டோடி வருவது போலக் காட்சியளித்தது. அருகில் இருந்த மக்கள் பெட்டிகள், வாளிகள், பைகளில் கோழிக் குஞ்சுகளை அள்ளிச் சென்றனர். லேசான காயம் அடைந்த ஓட்டுனர், கோழிக் குஞ்சுகளைக் காப்பாற்ற வழி தெரியாமல் அப்படியே அமர்ந்துவிட்டார்.

நன்றி தி இந்து.

K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.
தேசிய நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம்.
National Consumer Protection Service Centre.

Saturday, August 29, 2015

நாசா எச்சரிக்கை: 3 அடிகள் வரை உயரும் கடல் மட்டம்


புவி வெப்பமடைதலால் உருகும் பனி மலைகள், மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய காரணங்களால் கடல் மட்டத்தின் அளவு மூன்று அடி உயரும் என்று நாசா ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த  2013-ம் ஆண்டு பருவநிலை மாற்றத்துக்கான ஐக்கிய நாடுகளின் குழு கடல் மட்டம் உயர்வு பற்றி ஆய்வு நடத்தியது.  அதில் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டத்தின் அளவு ஒரு அடியில் இருந்து மூன்று அடியாக உயரலாம் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் அது எவ்வளவு விரைவாக நடைபெறும் என்பதை உறுதி செய்ய முடியாது. கிரீன்லாந்து  மற்றும் அண்டார்டிகா போன்ற பகுதியில், பனிப்பாறைகள் உருகியதால் கடல்மட்ட அளவு 3 அங்குலமாக உயர்ந்துள்ளது.என்று தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் மேலும் 3 அடிகள் வரை கடல் மட்டம் உயர்ந்தால் அது கோடிக்கணக்கான மக்களுக்கு ஆபத்தானதாக மாறும் என்று நாசா கவலை தெரிவித்துள்ளது. ஆனால் விஞ்ஞானிகளோ இனி இதை தடுத்து நிறுத்துவது என்பது மிகவும் காலதாமதமானது, அதற்கான  காலத்தை நாம் எப்போதோ கடந்து விட்டோம் என்று ஆதங்கமடைகின்றனர்.

நன்றி மாலை மலர்.

K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.
தேசிய நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம்.
National Consumer Protection Service Centre.