.

Pages

Showing posts with label உலகச்செய்திகள். Show all posts
Showing posts with label உலகச்செய்திகள். Show all posts

Tuesday, August 2, 2016

இஸ்லாத்திற்கும் தீவிரவாதத்திற்கும் தொடர்பில்லை போப்பாண்டவர் திட்டவட்டம் !

ஸ்லாத்தை தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தவே கூடாதென்றும் இளைய சமுதாயத்தை ஐரோப்பியர்களின் தவறான போக்கு பயங்கரவாதத்தின் பக்கம் தள்ளிவிடும் என்ற எச்சரிக்கையையும் கடந்த ஞாயிரன்று போலந்திலிருந்து வாடிகன் திரும்பும் வழியில் தனது சிறப்பு விமானத்தில் போப் பிரான்ஸிஸ் அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளிக்கும் போது இவ்வாறு கூறினார்.

கடந்த வாரம் ஃபிரான்ஸ் நாட்டின் சர்ச் ஒன்றில் பாதிரியார் ஒருவர் பயங்கரவாதி ஒருவனால் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டதை மிகவும் வன்மையாக கண்டித்த போப் இந்த பயங்கரவாதியின் செயலை இஸ்லாத்துடன் தொடர்புபடுத்தக் கூடாதென திட்டவட்டமாக கூறினார். பாதிரியாரின் படுகொலைக்கு எதிராக முஸ்லீம்கள் கிளர்ந்தெழுந்து கிருஸ்தவர்களுக்கு ஆதரவளித்ததையும் சுட்டிக்காட்டினார்.

ஐரோப்பிய நாடுகளில் சமீபகாலமாக ஐ.எஸ் என்ற இயக்கத்தினரால் நிகழ்த்தப்பட்டு வரும் தொடர் வன்முறை சம்பவங்கள் குறித்து கேள்வியெழுப்பிய போது அவர்கள் மிகச்சிறிய குழுவினரென்றும் அவர்களை போன்ற குழுவினர்கள் நம் (கத்தோலிக்கர்கள்) மத்தியிலும் உள்ளனர் என்றும் விளக்கமளித்ததார். சமீபத்திய செய்திகளில் இத்தாலியில் நெருங்கிய உறவினர்களை கொன்ற வன்முறையாளர்கள் ஞானஸ்னானம் செய்யப்பட்ட கத்தோலிக்க கிருஸ்தவர்கள் இல்லையா? என வினா எழுப்பினார்.

கத்தியை போன்றே நாவும் ஒரு கொலை ஆயுதம் தான் என்றும், மக்களின் மத்தியில் இனவாதங்களை எண்ணெய் ஊற்றி வளர்ப்பதிலும் (அகதிகள் போன்ற) வெளிநாட்டவர்கள் குறித்த துவேஷங்களை பரப்புவதிலும் சில அரசியல் கட்சிகள் முன்னிற்பதாகவும் சாடினார்.

எந்தவொரு தீவிரவாதத்தின் பின்னும் பொருளாதார சுரண்டலே ஒளிந்திருப்பதாகவும், நாம் இளைய சமுதாயத்திற்கு சரியான வழிகாட்டததன் விளைவாக பல ஐரோப்பிய இளைஞர்கள் வேலை இன்றியும் பின்பு போதை அடிமைகளாகவும் மாறியும் இறுதியாக பயங்கரவாத இயக்கங்களின் சதிவலைகளில் சிக்கியும் உள்ளனர் என்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் அடையாளம் வன்முறையே அன்றி இஸ்லாமிய மார்க்கம் அல்ல எனவும் தெளிவுபட கூறினார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Sunday, July 24, 2016

'அல்லாஹ்' மீது வினோத அச்சம்! முஸ்லீம்கள் விமான பயணங்களில் சந்திக்கும் பிரச்சனைகள்

அல்லாஹ்வின் நிகரற்ற ஆற்றலை அறிந்துள்ள மனிதர்களாகிய நாம் மீது அச்சம் கொள்ள வேண்டும் என்பது சரிதான் ஆனால் அல்லாஹ் என்ற எழுத்தை பார்த்து யாராவது அச்சம் கொள்வார்களா?

யூத, கிருஸ்தவர்களால் நடத்தப்படும் மேற்கத்திய ஊடகங்கள் முஸ்லீம்கள் மீது ஏற்படுத்தியுள்ள பயங்கரவாத தோற்றம் மேற்கத்திய நாட்டு மக்களை அர்த்தமில்லாமல் கனவிலும் அலற விடுகின்றன, குறிப்பாக விமானப் பயணங்களில் இவை தொடர்கதையாகி வருகின்றன.

குற்றம் குற்றமே அவற்றை யார் செய்தாலும் ஆனால் மேற்கத்திய வல்லரசுகளும் அவற்றின் அடிவருடி நாடுகளும் முஸ்லீம்கள் மீது இழைக்கும் வன்முறைகளை, படுகொலைகளை பத்தி செய்தியாக கூட கொண்டு வராதவர்கள் சில இஸ்லாமிய பெயர்தாங்கி மூடர்கள் செய்யும் அட்டுழியங்களை மட்டும் முஸ்லீம்கள் மீதான வெறுப்பு குறைந்துவிடாதவாறு பக்கம் பக்கமாக எழுதுகின்றன, காட்சி ஊடகங்களில் கற்பனைகளுடன் ஒப்பாரி வைக்கின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த வினோத அச்சத்தையும் விவேக நடவடிக்கையையும் பார்ப்போம்.

ஜிவா அக்பர் என்ற பிரிட்டனை சேர்ந்த முஸ்லீம் இளம்பெண் கிரேட்டர் மான்செஸ்டரிலிருந்து ஸ்பெயினுக்கு செல்லும் விமானத்தில் அமர்கிறார், அவருக்கு அருகே ஒரு தாய் தனது 11 வயது குழந்தையுடன் இருந்தவர் திடீரென படபடப்புடன் வேர்த்து விறுவிறுத்தவராக, முகம் இருண்ட நிலையில் இருக்கையிலிருந்து படாரென்று எழுந்து சென்று விமானப் பணிப்பெண்களிடம் முறையிடுகிறார். ஜிவா அக்பர் அவருடைய நடவடிக்கையால் குழம்பி உடல்நிலை சரியில்லையோ என எண்ணுகிறார் ஆனால் அங்கிருந்து கிடைத்ததோ இதயத்தை நிறுத்திவிடும் பதில், அது ஜிவா அக்பர் தன்னுடைய மொபைலில் 'அல்லாஹ்' என்று டைப் செய்வதை பார்த்தேன் என்பது தான் அவரது வினோத அச்சத்திற்கு காரணமாம்.

ஓரு வழியாக விமானப்பணிப் பெண்களும், ஜிவா அக்பரும் அந்தப் பெண்ணை 15 நிமிடப் போராட்டதிற்குப்பின் சமாதானப்படுத்தினர். மேலும், ஜிவா அக்பர் அவர்கள் அந்தப் பெண்ணுக்கு 'அல்லாஹ்' என்றால் என்ன? இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லீம்கள் யார் என்பதெல்லாம் குறித்து பொறுமையாக, விவேகத்துடன் தனது பயண நேரத்தில் அழகிய முறையில் எடுத்துச் சொல்ல, அது உலக விஷயங்கள் பலவற்றையும் பகிர்ந்த கொள்ளும் அளவுக்கு மிக நெருக்கமாக, இன்று அச்சம் அகன்ற அந்தப் பெண்ணும் ஜிவா அக்பரும் நண்பர்களாக தொடர்கிறார்கள்.

ஒரு சில விமானப் பணிப்பெண்களைப் போல் தன்னை விமானத்திலிருந்து வெளியேற்றி விடாமல் நேர்மையாக நடந்து கொண்ட அவர்களை குறித்து நன்றியுடன் சிலாகிக்க, முகநூல் பதிவு பல்லாயிரக்கணக்கோரால் பகிரப்பட்டும் விரும்பப்பட்டும் வருகிறது.

இவை இப்படி இருக்க, அமெரிக்காவில் முஹமது அஹமது ரதுவான் என்ற முஸ்லீம் சகோதரர் ஒருவர் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண்ணால் அநியாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

வடக்கு கரோலினா, சர்லோட் விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸின் விமானப் பணிப்பெண் திடீரென மைக்கில் ரிதுவானுடைய பெயர், சீட் நம்பர் என அனைத்தையும் அறிவித்து 'உன்னை நான் கண்காணித்துக் கொண்டுள்ளேன்' என அறிவித்துள்ளார்.

ரிதுவான் இந்த அறிவிப்பு குறித்து வேறு இரு விமானப் பணியாளர்களிடம் விஷயத்தை எடுத்துச் சொல்ல அவர்களும் நீங்கள் இதில் பயணிப்பதை 'மிகுந்த சங்கடமாக உணர்கிறோம்' என வலுக்கட்டாயமாக விமானத்திலிருந்து இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

இப்படிப் பல அமெரிக்க விமானப் பணியாளர்கள் மனநோய் சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர் என்பதை கடந்த ஏப்ரல் மாதம் ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு நேர்ந்த சம்பவமும் தெளிபடுத்துகிறது.

ஹக்கீமா அப்துல்லா என்ற சோமாலிய வம்சாவழிப் பெண் சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் எனும் அமெரிக்கா விமானத்தில் சிகாகோ நகரிலிருந்து சியாட்டில் நகருக்கு செல்வதற்காக வந்தவர் தனது முன்னிறுக்கையை நேரக்கும்படி வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து, வேறு எத்தகைய காரணமுன்றி விமானத்திலிருந்து வலுக்கட்டாயமாக கீழே இறக்கிவிடப்பட்டுள்ளார். இதுகுறித்து விமான நிறுவனம் 'பாதுகாப்பு காரணம்' என்ற விளக்கெண்ணை விளக்கம் அளித்துள்ளது.

மேலும், கடந்த மாதம் இதே சிகாகோ விமான நிலையத்தில், யுனைடெட் ஏர்லைன்ஸ் என்ற விமானத்திலிருந்தும் 3 குழந்தைகளுடன் ஒரு தம்பதியர் பாதுகாப்பு காரணங்கள் என்று கூறி வெளியேற்றப்பட்டதாகவும், அதிகரித்து வரும் இத்தகைய இனவெறுப்பு சம்பங்கள் குறித்து அமெரிக்க - இஸ்லாமியர்களுக்கிடையிலான நல்லுறவுகளுக்காக அமைப்பு சம்பந்தப்பட்டவர்களிடம் புகார் தெரிவித்துள்ளது.

Source: The Independent
தமிழில் விமர்சனங்களுடன்
நம்ம ஊரான்

Saturday, July 23, 2016

விருது பெற்ற உலகின் பசுமைக் கட்டிடங்கள் [ படங்கள் ]

நவீன வசதிகளோடு பலரும் வியக்கும் விதமாக உயரக் கட்டிடங்கள் பலவும் உலகெங்கும் கட்டப்படுகின்றன. இவற்றில் வருங்காலத்தை உத்தேசித்து பல்வேறு வசதிகளோடு இயற்கைக்கு உகந்த மாதிரி கட்டுபவர்கள் மிகவும் குறைவு. அப்படி கட்டியிருந்தாலும் அவர்களைப் பற்றி நமக்குத் தெரிவிப்பது விருதுகள்தான். விருதுகளை தாம்பூலப்பை போல தராமல் தரத்தைப் பார்த்து தந்த விருதுகள் இவை.

உயரமான கட்டிடங்கள் மற்றும் நகர்ப்புற வாழிடங்களுக்கான கவுன்சில் (CTBUH), அண்மையில் தனது 15ம் ஆண்டு விழாவின்போது ‘2016ம் ஆண்டின் சிறந்த கட்டிட வடிவமைப்பு’க்கான விருதை வழங்கியது. உலகமெங்கும் உள்ள மிகச்சிறந்த கட்டிடங்களை அடையாளும் கண்டு கௌரவிக்கும் இவ்விழாவில் இந்த ஆண்டு இரண்டாவது மிகப்பெரிய கட்டிடம், பிரமிடு வடிவிலான கட்டிடம் ஆகியவையும் இடம்பெற்று விருது வாங்கின.

அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா பகுதிகளைச் சேர்ந்த கட்டிடங்கள் மதிப்பீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. வெளிப்புற அழகு, கவரும் விதம் என்பது மட்டுமல்லாமல் இயற்கைக்கு உகந்த விதத்தில் உள்ளேயும் பல வசதிகள் அமைந்திருப்பதுதான் இந்தக் கட்டிடங்களில் விசேஷம். விருது பெற்ற கட்டிடங்களைப் பற்றிப் படித்து அவற்றின் சிறப்புகளை அறிந்துகொண்டால்தானே, வருங்காலக் கட்டிடங்களை மற்றவர்களைக் கவர்வதுபோல கட்டி கல்லா கட்ட முடியும்?!
ஷாங்காய் டவர்
இந்த ஷாங்காய் டவர்தான் தற்போது உலகத்திலேயே இரண்டாவது பெரிய கட்டிடமாக உள்ளது. 2.4 பில்லியன் டாலர்கள் செலவு செய்து கட்டப்பட்ட 632 மீட்டர் உயரமுள்ள இந்தக் கட்டிடம், கீழேயிருந்து மேலே வரை 120 டிகிரியில் வளைத்து முறுக்கியது போல் அமைந்து பார்ப்பவர்களை வியக்க வைக்கக்கூடியதாகும். 128 மாடிகளைக் கொண்டுள்ள இந்தக் கட்டிடமானது, 4 லட்சத்து 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. ‘சிறந்த பசுமைக் கட்டிடம்’ என சான்று பெற்றுள்ள ஷாங்காய் டவரில் மழைநீர் சேகரிப்பு, பயன்படுத்திய நீரை மறுசுழற்சி செய்வது, 270 காற்றாடிகளின் மூலம் மின்சாரம் தயாரிப்பு உள்ளிட்டவை உண்டு.
க்யூப் ஆரஞ்ச் கட்டிடம்
மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகள் பிரிவில் விருது பெற்ற கட்டிடம் இது. டச்சு நாட்டு நிறுவனமான ஆரஞ்ச் ஆர்க்கிடெக்ட் உருவாக்கிய இது, லெபனான் நாட்டின் தலைநகரம் பெய்ரூட் நகரில் அமைந்துள்ளது. இந்தக் கட்டிடம் 50 மீட்டர் உயரம் கொண்டது. 14 அடுக்கு களாக 90 டிகிரி அளவில் சாய்ந்தது போல அமைத்துக் கட்டப்பட்டுள்ள இக்கட்டிடத்தில் மொத்தம் 19 சொகுசு வீடுகள் 5,600 சதுர மீட்டர் அளவில் கட்டப்பட்டுள்ளன.
வெஸ்ட் 57 பிக் கட்டிடம்
டென்மார்க் நிறுவனமான ஜார்கே இன்ஜெல்ஸ் குழுமம், தனது 57, வெஸ்ட்பிக் எனும் கட்டிடத்திற்காக விருது பெற்றுள்ளது. நியூயார்க்கின் அடையாளமாக மாறிவிட்ட பிரமிட் வடிவில் அமைந்த இக்கட்டிடம், 142.3 மீட்டர் உயரம் கொண்டுள்ளது. 80 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டுள்ள இந்தக் கட்டிடம் குறைவான நீர்ப் பயன்பாடு, மழைநீர் சேகரிப்பு, குறைவான மின்சக்தியைப் பயன்படுத்துவது என பல்வேறு திட்டங்களிலும் பாஸ் மார்க் வாங்கி விருதை தட்டிச்சென்றுள்ளது.
தி வொயிட் வால்ஸ்
பிரெஞ்ச் நிறுவனமான அடெலியர்ஸ் ஜீன் நோவல் கட்டியுள்ள கட்டிடமான திவொயிட் வால்ஸ் என்பதற்கு இன்னொரு பெயரும் உண்டு. சைப்ரஸ் டவர் என்றும் கனிவோடு அழைக்கப்படும் இது 69.6 மீட்டர் உயரம் கொண்டு நாட்டிலேயே உயரமான கட்டிடம் என்ற சாதனையை சொந்தமாக்கியுள்ளது. இக்கட்டிடத்தில் பல்வேறு காய்கறிகள் வெர்டிகல் ஃபாரஸ்ட் முறையில் விளைவிக்கப்படுகின்றன என்பதால் காற்றோட்டத்திற்குக் கவலையில்லை.

- ச.அன்பரசு
நன்றி: குங்குமம்

Wednesday, July 13, 2016

உலகின் முதல் பத்து இடங்களை பிடித்துள்ள விமான நிறுவனங்கள் ! [ படங்கள் ]

துபாய், ஜூலை 13
சர்வதேச அளவில் விமான பயணிகளுக்கு தரமிக்க சேவைகளை வழங்குவதில் சிறந்த விமான நிறுவனங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில் நேற்று செவ்வாய் கிழமை அன்று ஸ்கைட்ராக்ஸ் வேர்ல்ட் ஏர்லைன்ஸ் விருதுகள் வழங்கப்பட்டன. சுமார் 104 நாடுகளை சேர்ந்த 19.2 மில்லியன் பயணிகளிடம் சிறந்த சேவைகளை வழங்கும் விமான நிறுவனங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

விமானங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் தரமிக்க உணவுகள், செளகரியமான இருக்கைகள் மற்றும் பயணிகளிடம் விமான குழுவினர் நடந்துக்கொள்ளும் விதம் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

கடந்த 2001, 2002 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் முதல் இடத்தை பிடித்துள்ள எமிரேட்ஸ் விமான நிறுவனம் இந்த ( 2016 ) ஆண்டும் நான்காவது முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளது.

சர்வதேச அளவில் சிறந்த விமான சேவைகளின் முதல் 10 இடங்களை பிடித்துள்ள விமான நிறுவனங்களின் பட்டியல்:
1. Emirates
2. Qatar Airways

3. Singapore Airlines

4. Cathay Pacific Airways

5. ANA All Nippon Airways

6. Etihad Airways

7. Turkish Airlines

8. EVA Air

9. Qantas Airways

10. Lufthansa
செய்தி தொகுப்பு : அதிரை நியூஸ்

Friday, March 11, 2016

அதீத மொபைல் மோகத்தால் விரலை இழந்த சிறுவன்!

சீனாவில் அதீத மொபைல் மோகம் காரணமாக சிறுவன் ஒருவன் தனது விரலை துண்டித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் சூழோ நகரில் பெற்றோருடன் குடியிருந்து வருபவர் 11 வயதான பெங். இவருக்கு அவரது தந்தை புது மாடல் மொபைல் ஒன்றை வாங்கி தந்துள்ளார்.

அந்த மொபைலில் எந்த நேரமும் சிறுவன் பெங் விளையாடி பொழுதை கழித்து வருவது அவரது தந்தைக்கு கோபத்தை உண்டாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வாக்குவாதத்தினிடையே சிறுவன் தனது சுண்டு விரலை துண்டித்துள்ளான்.

பதறிப்போன அவரது தந்தை உடனடியாக அந்த துண்டிக்கப்பட்ட விரலுடன் சிறுவன் பெங்கையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். 3 மணி நேரம் நீண்ட அறுவைசிகிச்சைக்கு பின்னர் மருத்துவர்கள் துண்டிக்கப்பட்ட விரலை அந்த சிறுவனின் கையுடன் இணைத்துள்ளனர்.

வெற்றிகரமாக தற்போது இணைத்துள்ளதாக கூறிய மருத்துவர்கள், இனி மேல்தான் இணைக்கப்பட்ட அந்த விரலுடன் உடல் ஒத்துழைக்குமா என்பது தெரியவரும் என்றனர். மேலும் இணைக்கப்பட்டுள்ள விரல் குணமடையும் வரை அழுத்தம் தராமல் இருந்தால் மட்டுமே விரைந்து குணமடையும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தந்தையுடன் ஏற்பட்ட கோபத்தால் விரலை துண்டித்த சிறுவன் இனி மொபைல் விளையாட்டை நீண்ட நாளுக்கு ஆட முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

Monday, December 21, 2015

டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்!

இந்தோனேசிய நாட்டில் உள்ள ஏரி ஒன்றில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்துகிடந்த சம்பவம் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகர் அருகில் சித்ரா என்ற ஏரியுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியது.

இந்நிலையில் திடீரென ஏரியில் உள்ள மீன்கள் அனைத்தும் செத்து மிதக்க தொடங்கின. சுற்றுச்சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாகவும் ஆக்ஸிஜன் இல்லாததன் காரணமாகவுமே மீன்கள் செத்து மிதப்பதாக தகவல் பரவி வருகின்றன. இதனால் அவைகளை அப்புறப்படுத்தும் வேளையில் மீனவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டு வருன்றனர்.

இந்நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்கள் ஏரியில் இறந்து மிதந்தது அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Source: Dailymail

Tuesday, July 14, 2015

இங்கிலாந்தில் படிக்கும் இந்திய மாணவர்களின் பகுதிநேர பணிக்கு தடை !

இங்கிலாந்தில் படிக்கும் இந்திய மாணவர்களின் பகுதிநேர பணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் படிக்கும் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் வாரத்துக்கு 10 மணி நேரம் பகுதி நேர ஊழியர்களாக பணியாற்றி பணம் சம்பாதிக்க அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதனால் அங்கு படித்து கொண்டே பணம் சம்பாதித்து கல்வி செலவை சரிசெய்து வந்தனர்.

ஆனால் அதற்கு தற்போது அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வருகிறது.

இது குறித்து இங்கிலாந்து குடியுரிமை மந்திரி ஜேம்ஸ் புரோகன்ஷிர் கூறியதாவது:
ஐரோப்பிய யூனியன் நாடுகள் அல்லாது வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் அடுத்த மாதம் முதல் வாரத்துக்கு 10 நாட்கள் பகுதி நேரம் பணிபுரியும் உரிமையை இழக்கிறார்கள்.

ஏனெனில் இச்சலுகையை பயன்படுத்தி குடியுரிமை குற்றத்தில் ஈடுபடுபவர்கள் இங்கிலாந்தில் உள்ள வேலை வாய்ப்புகளை சட்ட விரோதமாக விற்பனை செய்து வருகிறார்கள். அதை ஏராளமானவர்கள் வாங்கி பயன்பெறுகிறார்கள்.

எனவே, ஐரோப்பிய யூனியன் நாடுகள் இன்றி பிறவெளி நாடுகளில் இருந்து படிக்க வரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாவில் சீரமைப்பு செய்யப்படுகிறது.

அதன்படி கல்வி பயில வருபவர்களுக்கு ஆங்கில மொழி தேர்வு மற்றும் நூற்றுக்கணக்கான போலி கல்லூரிகளின் ‘ஸ்பான்சர் ஷிப்’ உரிமைகள் நீக்கம், பகுதிநேர வேலைவாய்ப்பு பெறும் மாணவர்களின் விகிதம் குறைப்பு போன்றவை நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. அதன் மூலம் இங்கிலாந்தில் இது போன்று குடியேறுபவர்களின் சலுகைகள் கட்டுப்படுத்தப்படும் என்றார்.

வெளிநாட்டு மாணவர்கள் பகுதிநேரம் பணிபுரிய தடை விதிப்பது மட்டுமின்றி அவர்கள் படித்து முடித்த பிறகு மேலும் இங்கு தொடர்ந்து தங்க விசாவுக்கு விண்ணப்பிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது போன்று கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் இந்தியாவை சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர். எனவே ‘விசா’ மறுசீரமைப்பு நடவடிக்கையால் இந்திய மாணவர்களே பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.

இதற்கிடையே இங்கிலாந்துக்கு கடந்த ஆண்டு வெளிநாட்டு மாணவர்கள் 1 லட்சத்து 21 ஆயிரம் பேர் வந்தனர். அவர்களில் 51 ஆயிரம் பேர் மட்டுமே வெளியேறியுள்ளனர் என இங்கிலாந்து உள்துறை தெரிவித்துள்ளது.

நன்றி:மாலைமலர்

மக்களின் உயிரை குறி வைக்கும் சீனா ப்ளாஸ்டிக் அரிசி: அதிர்ச்சி ரிப்போர்ட் !

மற்றவர்களுடைய அழிவில்தான் தங்கள் வாழ்க்கை மலர்ச்சி இருக்கிறது என்று, மனிதர்கள் நம்புகிற காலம் இது. உணவுகளிலேயே மனிதர்களை விஷம் வைத்துக்கொள்வது போல, பொல்லாத போலிகளை அரங்கேற்றி இருப்பவர்கள் அதை உண்மையாக்கி விட்டார்கள். சீனாவின் போலி உணவுகளுக்கும் ப்ளாஸ்டிக் அரிசிக்கும் எதிரான செய்திகள் ஊடகங்களில் அதிர்வலைகளாக பரவி எச்சரிக்கை செய்து கொண்டிருக்கிறது.

கலப்படம் செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் அரிசி மற்றும் போலி உணவுகள் இந்தியா, வியட்நாம், சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதுதான் மிகவும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

தைவான், ஷான்க்ஷி ப்ரொவின்ஸ், சீனாவை மையப்படுத்திதான் ப்ளாஸ்டிக் அரிசி பற்றிய செய்தி உருவாகியிருக்கிறது. தாவரங்களிலிருந்தும் மரங்களிலிருந்தும் கிடைக்கும் ஒட்டும் தன்மையுள்ள ஒரு ஆர்கானிக் (Organic) பிசினிலிருந்துதான் இந்த போலி அரிசி தயாரிக்கப்படுகிறது என்றும், போலி தானியங்கள் உருளைக்கிழங்கு மற்றும் தொழிற்சாலைகளில் தயாராகும் ரெசினையும் (Resin) கலந்து தயாரிக்கப்படுவதாகவும் பொதுவாக சொல்லப்படுகிறது.

இந்த ப்ளாஸ்டிக் அரிசிகள் இயற்கை அரிசிகளோடு கலந்துவிட்டால் இரண்டையும் வேறுபடுத்துவது வெறும் கண்களுக்கு கடினமானதே. இந்த அரிசியை சாப்பிட்டால் மொத்த ஜீரண உறுப்புகளின் அமைப்பே கடுமையாக பாதிக்க நேரும்.

போலி அரிசி சமைத்தவுடன் வெப்பத்தால் விறைப்பாகி கடினமடைந்து விடும் என்பதும் சூப் தயாரிக்கும் போது மேல் அடுக்காக ப்ளாஸ்டிக் ஆடை உருவாவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூன்று கிண்ணம் ப்ளாஸ்டிக் அரிசி சாப்பிட்டால் ஜீரணிப்பது, ஒரு ப்ளாஸ்டிக் பை வயிற்றில் ஜீரணிப்பதுக்கு சமமானது என்று சீனாவின் உணவகங்களின் சங்க அலுவலகம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ள தொழிற்சாலைகளில் ப்ளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படும் வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளிவந்த பின்னர், மலேசிய உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் ஹசன் மாலிக் கூறியதாவது, சீனாவின் போலி அரிசி உண்மையோ வதந்தியோ என்பது குறித்து ஆதாரப்பூர்வமாக பிடிபடவில்லை.

அப்படி தகவல் கிடைத்தால் எங்கள் அமைச்சகத்துக்கு தெரியப்படுத்தலாம் என்றும் நாடு முழுவதும் அதற்காக எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் விவசாய மற்றும் காலநடை உணவு அதிகார மையம் கூறியதாவது, இறக்குமதி செய்யப்படும் அரிசி மற்றும் உணவுகளை நாங்கள் பரிசோதித்துதான் பயன்பாட்டுக்கு அனுமதிக்கிறோம்.

ஆனால், இதுவரை பரவி வரும் செய்தியை மெய்ப்பிக்கும் படியான போலி அரிசியோ, உணவுகளோ சிக்கவில்லை என்றும் நாங்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

உலகில் வேகமாக எல்லா துறைகளிலும் வளர்ந்து வரும் நாடுகளில் சீனா முக்கியமானதாக உள்ளது. எனினும் அங்குள்ள ஆட்சியில் குளறுபடியா அல்லது அவர்களுடைய சட்ட திட்டங்கள் கடைசி குடிமக்கள் வரை சென்றடைவதில் சிக்கல் உள்ளதா தெரியவில்லை.

மக்கள் தொகை அதிகமுள்ள நாடான சீனாவில் அதிக அளவிளான ஏழைகள், உணவுக்காக தெருவோரக் கடைகளையே நம்பியுள்ளனர். ஆனால் அதன் உணவு தயாரிப்புகள் எல்லாம் சமூக விரோதிகளின் கைகளுக்கு சென்றுவிட்டதோ என்று சந்தேகிக்கும் அளவில் சீனாவின் உணவு பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

குலை நடுங்க வைக்கும் கலப்பட உணவுகள்:
மாமிச உணவுகளில் எலிக்கறியை கலப்பது, பன்றி இறைச்சி மிருதுவாக இருக்க தடைசெய்யப்பட்ட ரசாயனப் பொருள்களை கலந்து வேகவைப்பது. இறைச்சிகளின் எடை கூடுவதற்காக தண்ணீரை ஊசி மூலம் செலுத்துவது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

தென் சீனாவில் உள்ள டாங்கன் நகரத்துக்கு அருகே தீங்கான உணவுகளை தயாரித்த குற்றத்துக்காக 2010 ம் ஆண்டில் 50 உணவு தொழிற்சாலைகள் அதிகார ஆணையங்களால் மூடப்பட்டிருந்தது.

ஆனாலும், அவற்றிலிருந்து ஒருநாளைக்கு 1.1 மில்லியன் பவுண்ட்ஸ் நூடுல்ஸ் தயாரிக்கப்பட்டு தற்போதும் விற்கப்படுவதாக நம்பப்படுகிறது.

மேலும் வாதுமை பருப்பில் சிமிண்டை உள்ளே வைத்து விற்பது. குழந்தைகள் குடிக்கும் பாலில் புரோட்டினை அதிகப்படுத்துவதற்காக மெலமின்(Melamine) என்ற ரசாயனத்தை கலந்ததால், அதை குடித்த 53 ஆயிரம் குழந்தைகள் 2009 ஆம் ஆண்டில் கடும் நோயால் பாதிக்கப்பட்டனர். போலி முட்டைகள், போலி ஒயின் என்று சீனாவின் உணவில் உள்ள போலித் தயாரிப்புகளை கேட்டாலே, அங்குள்ள மக்களை நினைத்து அனுதாபப்படவேண்டியுள்ளது.

இது மற்ற நாடுகளுக்கும் இறக்குமதி ஆகுமோ என்ற அச்சமும் இதுபோன்ற செய்திகளால் பணத்துக்காக எதையும் செய்யும் சமூக விரோதிகளுக்கும் தூண்டுகோலாகி விடுமோ என்ற எண்ணமும் ஏற்படுகிறது.

போலி உணவுகளை சாப்பிட்டு இறப்பதற்கு பதிலாக பட்டினி கிடந்து இறப்பதே மேல் என்று மக்கள் வெறுப்படையும் முன் ஆட்சியில் இருப்பவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து தடுப்பார்கள் என்று நம்புவோம்.
மெலமின் ஆளைக் கொல்லும் சயனைடுக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, July 11, 2015

வாட்ஸ் அப்பிற்கு தடையா ?

இங்கிலாந்தில் விரைவில் வாட்ஸ் அப் வலைத்தளத்துக்கு தடை விதிக்கப்படலாம் என தெரிகிறது. மறைமுக குறியீடுகள் கொண்ட குறுஞ்செய்திகளை அனுப்ப தடைவிதிக்கும் புதிய சட்டத்தை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் விரைவில் நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தில் அண்மையில் அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தலையடுத்து, செய்திகளை சமூக வலைத்தளங்கள் மூலம் பதிவு செய்து கண்காணிக்க வகை செய்யும் சட்ட மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இணைய தொடர்பு வசதிகளே பயங்கரவாதிகள் எளிதாக தகவல் பறிமாறிக்கொள்ள ஏதுவாக இருப்பதாகவும், எனவே இங்கிலாந்து புலனாய்வுத் துறை இந்த இணைய தொடர்புகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சட்டம் அமலுக்கு வந்தால் ஸ்நாப் சாட், ஆப்பிள் நிறுவனத்தின் ஐமெசேஜ், வாட்ஸ்-ஆப் போன்றவைகளுக்கு இங்கிலாந்தில் நிரந்தரமாக தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தகவல்கள் அனைத்தும் ஓராண்டுக்கு சேமிக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்படும்.

இந்த புதிய சட்டம் மக்களின் தனிப்பட்ட உரிமையை பாதிக்கும் என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி:மாலைமலர்

Sunday, June 28, 2015

144 வயது தோற்றத்தில் பாட்டியான 18 வயது இளம் பெண் !

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் அனா ரோசிலி போண்டர் ( வயது 18 ) இளம் பெண்ணான இவர் 18 வயதிலேயே பாட்டியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது 144 வயது மதிக்கத்தக்க பாட்டி போன்று தோற்றமளிக்கிறார்.

இளவயதிலேயே முதுமை போன்ற தோற்றத்துடன் காணப்படும் அரிய வகை 'புரோகேரியா' என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரது உடல் சராசரியாக வளர்ந்து வரும் உடல் வளர்ச்சியை வீட பத்து மடங்கு கூடுதலான வளர்ச்சியை கண்டுள்ளது. இதனால், முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தோல்கள் மிக தொய்வாக காணப்படுகிறது, ஆனால் உடலின் மற்ற பகுதிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. இந்த நோயினால் உலகில் 80 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி தொகுப்பு: அதிரை நியூஸ்
Source:Dailymail
 

Thursday, June 18, 2015

உலகின் முதல் பத்து இடங்களை பிடித்துள்ள விமான நிறுவனங்கள் ! [ படங்கள் இணைப்பு ]

சர்வதேச அளவில் விமான பயணிகளுக்கு தரமிக்க சேவைகளை வழங்குவதில் சிறந்த விமான நிறுவனங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில் கடந்த செவ்வாய் அன்று ஸ்கைட்ராக்ஸ் வேர்ல்ட் ஏர்லைன்ஸ் விருதுகள் வழங்கப்பட்டன. சுமார் 110 நாடுகளை சேர்ந்த 18.9 மில்லியன் பயணிகளிடம் சிறந்த சேவைகளை வழங்கும் விமான நிறுவனங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

விமானங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் தரமிக்க உணவுகள், செளகரியமான இருக்கைகள் மற்றும் பயணிகளிடம் விமான குழுவினர் நடந்துக்கொள்ளும் விதம் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

கடந்த 2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில் முதல் இடத்தை பிடித்திருந்த கத்தார் விமான நிறுவனம் இந்த ஆண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது.

சர்வதேச அளவில் சிறந்த விமான சேவைகளின் முதல் 10 இடங்களை பிடித்துள்ள விமான நிறுவனங்களின் பட்டியல்:

1. Qatar Airways

2. Singapore Airlines

3. Cathay Pacific Airways

4. Turkish Airlines

5. Emirates

6. Etihad Airways

7. ANA All Nippon Airways

8. Garuda Indonesia

9. EVA Air

10. Qantas Airways
உலகளவில் பெரிய விமான சேவை நிறுவனங்களாக கருதப்படும் அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவை சேர்ந்த எந்த விமான நிறுவனங்களும் முதல் 10 இடங்களில் இடம்பெறவில்லை.

அதே போல், சர்வதேச அளவில் குறைந்த கட்டணத்தில் தரமான சேவைகள் வழங்குவதில் ஏர் ஆசியா விமான நிறுவனம் தொடந்து முன்னிலை வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, June 14, 2015

அமெரிக்காவில் படித்து முடித்ததும் வேலை: இந்திய மாணவர்களுக்கு சிறப்பு சலுகை !

அமெரிக்காவில் மேற்படிப்பு படித்து முடித்ததும், இந்திய மாணவர்களுக்கு உடனே வேலை கிடைக்கும்.  அதற்கான சூப்பர் சலுகை திட்டத்தை அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.  மேற்படிப்பு படித்து முடித்ததும், இந்திய மாணவர்களுக்கு தற்காலிக வேலை விசா வழங்கப்படும். இதன் பெயர் எச்1 விசா. இதில் ஆறாண்டு வரை தங்கி வேலை பார்க்கலாம்.  இந்தியாவில் இருந்து சாப்ட்வேர் நிறுவனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும் ஊழியர்களுக்கு எல்1 மற்றும்  எச்1பி விசா வழங்கப்படுகிறது. எல்1 மூலம் அமெரிக்காவில் உள்ள கம்ெபனிக்கு தன் இந்திய கம்பெனி சார்பாக வேலை செய்யலாம். ஆனா்ல், அங்கேயே தங்கி விட  முடியாது. எச்1பி  என்பது ஊழியர்களுக்கு கூடுதல் சலுகை தருகிறது. அமெரிக்காவில் உள்ள கம்பெனிக்கு இந்திய கம்பெனி சார்பில் அனுப்பி வைக்கப்பட்டு பணி செய்ய அனுமதிக்கப்பட்ட ஊழியர், அங்கு வேறு கம்பெனிக்கு மாறலாம்.
இப்படி எச்1பி விசா மூலம் அனுப்பி வைக்கப்படும் இந்திய ஊழியர்கள், அமெரிக்காவில் உள்ள, குறிப்பிட்ட கம்பெனியில் பணியாற்றுவதாக சொன்னாலும், அவர்கள் வேறு கம்பெனிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்ற புகார் கிளம்பியது. அமெரிக்க ஊழியர்களை விட, இந்திய ஊழியர்களுக்கு சம்பளம் குறைவு. மேலும், முக்கிய துறைகளில், குறிப்பாக சாப்ட்வேர் துறைகளில் சில பணிகளுக்கு இந்தியர்கள் தான் குறைந்த சம்பளத்தில் கிடைக்கின்றனர். அதனால் பல அமெரிக்க நிறுவனங்கள், அமெரிக்க ஊழியர்களை விட, இந்திய ஊழியர்களை நியமிக்க முன்வருகின்றன. சமீப காலமாக எச்1பி விசா வைத்துள்ள இந்தியர்கள் எண்ணிக்கை சில நிறுவனங்களில் அதிகரித்து வருவது தொடர்பாக புகார் கிளம்பின

வெளிநாட்டினருக்கு வேலை அளித்து மண்ணின் மைந்தர்களுக்கு வேலை தரவில்லை என்பது எதிர்காலத்தில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தி விடும். இப்போதே கட்டுப்படுத்தி விடுவது நல்லது என்று அமெரிக்காவில் வேலையின்மைக்கு எதிராகவும், மண்ணின் மைந்தர்களுக்கு ஆதரவாகவும் போராடும் அமைப்புகள்,  குடியேற்றத்துறை அமைச்சகத்துக்கு மனுக்களை அளித்து வருகின்றன.

இந்த நிலையில், டிஸ்னி வேர்ல்டு, கலிபோர்னியாவில் உள்ள எடிசன் எலக்ட்ரிக் கம்பெனி  ஆகியவற்றில் அதிக அளவில் எச்1பி விசாவில் உள்ள இந்தியர்கள் பணிக்கு சேர்க்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியது.  இதனால் வேறு வழியின்றி, குடியேற்றத்துறை அவசரமாக விசாரணையில் இறங்கியது. டிசிஎஸ், இன்போசிஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள், தாங்கள் ஒப்பந்தம் போட்ட அமெரிக்க கம்பெனியை தவிர வேறு கம்பெனிக்கு ஆட்களை அனுப்ப கூடாது;  அப்படி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள்  எச்சரித்துள்ளனர்.   மேலும் எச்1பி விசா  எண்ணிக்கையை ஆண்டுதோறும், சில  குறிப்பிட்ட துறைகள் தவிர, பல துறைகளில் குறைத்து கொள்ள முடிவும் செய்துள்ளது குடியேற்றத்துறை.

அமெரிக்காவின் இந்த  நடவடிக்கை பல இந்திய நிறுவனங்களை நிலைகுலைய வைத்தது. இனி ஊழியர்களை அனுப்புவது கஷ்டம் தான்  என்று எண்ணின. இந்த நிலையில் அடுத்த அதிரடியை அதிபர் ஒபாமா நேற்று அறிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்து மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு திறன் அளிக்கும் வகையில் எச்1 விசா அளிக்கப்படும்;  அவர்கள்  ஆறாண்டு தங்கி கொள்ளலாம் என்று குடியேற்ற அமைச்சகம் அறிவித்துள்ளது.

 இதன் மூலம், ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது உறுதி. மூன்றாண்டு பட்டப்படிப்பு  முடித்ததும் ‘ஆப்ஷனல் ட்ரெயினிங் ப்ரோகிராம்’ என்ற அடிப்படையில் எச்1 விசா அளிக்கப்படும். அதன்படி, அவர்கள் ஆறாண்டு வரை தங்கி வேலை பார்க்கலாம். இதுவரை, இந்த வெளிநாட்டு மாணவர்கள் 12 முதல் 29 மாதங்கள் வரை தங்கிக்கொள்ளலாம் என்று தான் விதிமுறை இருந்தது. இது தற்போது மாற்றியமைக்கப்பட்டு, ஆறாண்டு வரை தங்க சலுகை தரப்பட்டுள்ளது. இதனால் எச்1பி விசா வைத்திருப்போருக்கு உள்ள தேவை குறையலாம்; பல அமெரிக்க நிறுவனங்கள் எச்1 விசா பெற்றுள்ள மாணவர்களை வேலைக்கு பணியமர்த்தலாம். இதன் மூலம் அவர்களுக்கு  கிடைக்கும் லாபம், ஒரு பக்கம் குறைவான சம்பளம் தரலாம்; இன்னொரு பக்கம் திறமையானவர்கள் கிடைக்கலாம். அதே சமயம், இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் மூலம் அமெரிக்காவுக்கு  அவ்வப்போது அனுப்பி வைக்கப்படும் ஊழியர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உண்டு. ஒபாமாவின் இந்த புதிய திட்டத்துக்கும் உள்நாட்டில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

எப்1...எச்1 க்கு மவுசு எச்1பிக்கு இனி குறையும்
அமெரிக்காவில் படிக்க  செல்லும் இந்திய மாணவர்களுக்கு அளிக்கப்படும் விசா எப்1. இதை பெற்று அவர்கள் பட்ட, மேற்படிப்பை முடிக்கலாம்.
அதன் பின், புதிய முறைப்படி, 6 ஆண்டு தங்கி கொள்ளலாம். அதற்காக அவர்களுக்கு தரப்படும் விசா எச்1. அதற்கு மேல் தங்க முடியாது.
எச்1பி, விசா, இந்திய ஊழியர்கள் அங்கு தங்கி வேறு கம்பெனிகளுக்கு கூட போக வகை செய்கிறது. இனி இதற்கு கட்டுப்பாடு அதிகரிக்கலாம்.

‘ஸ்டெம்’ படிப்புக்கு அங்கே ஆள் இல்லை
அமெரிக்காவில் மேற்படிப்பில் முக்கியமானது ‘ஸ்டெம்’ என்று செல்லமாக அழைக்கப்படும் படிப்புகள் தான்.  STEM என்பது முதலெழுத்தில் துவங்கும் சயின்ஸ், டெக்னாலஜி, இன்ஜினியரிங், கணிதம். இந்த படிப்புகளில் படித்து மேற்படிப்பு முடித்த அமெரிக்க மாணவர்கள் குறைந்து வருகின்றனர். இதில் திறமையான மாணவர்கள் இந்தியா, சீனாவை சேர்ந்தவர்கள் தான். அவர்களுக்கு தான் இப்போது கிராக்கி.

இதற்கு முன் அதிபராக இருந்த பலரும் இந்தியாவுக்கு எதிராக இருந்ததால் வேலைக்கான விசாக்கள் தருவதில் கடும் கட்டுப்பாடுகள் விதித்தனர்.
ஆனால் ஒபாமா, இந்தியர்கள் மட்டுமல்ல, வெளிநாட்டவர்களின் திறமைக்கு அதிகம் மதிப்பு தருபவர். இந்திய மாணவர்களிடம் உள்ள கணித, அறிவியல், தொழில்நுட்ப அறிவை அமெரிக்க மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும் என்று முன்பே அறிவுரை கூறியிருந்தார். அவர் ஆட்சியில் பல சலுகைகளை அளித்தார். எச்1பி விசாவில் பணி  செய்யும் வெளிநாட்டவர், தன் மனைவியை எச்1 விசா மூலம் அழைத்து வரலாம்; அது மட்டுமின்றி,  எச்4 விசாவில் இங்கு பணியும் செய்யலாம் என்றும் சலுகை அளித்தார்.

ஒபாமாவின் சலுகைகளை  எதிர்த்து வரும் சக் கிராஸ்லி போன்ற எம்பிக்கள், இப்போது வெளிநாட்டு மாணவர்களுக்கு அளிக்கப்படும் விசா சலுகையையும் எதிர்த்துள்ளனர்.   உள்நாட்டு குடியேற்ற பாதுகாப்பு துறை செயலாளர் ஜெக் ஜான்சனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘ஓபிடி’ பயிற்சி திட்டத்தின் மூலம் எச்1 விசா  அளிக்கப்படும் வெளிநாட்டு மாணவர்கள், இங்கேயே தங்கி பணியாற்றி விட வாய்ப்பு உள்ளது. இதனால் அமெரிக்க மாணவர்களுக்கு தான் ஆபத்து’ என்று கூறியுள்ளார்.

நன்றி:தினகரன்

Tuesday, June 9, 2015

வெளிநாடுகளுக்கு படிக்க செல்லும் இந்திய மாணவர்களுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் அதிரடி சலுகை !

இங்கிலாந்து அரசுக்கு சொந்தமான பிரிட்டிஷ் ஏர்வேஸ் கல்வி கற்பதற்காக வெளிநாடுகளுக்கு செல்லும் இந்திய மாணவர்களுக்கு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் படிப்பதற்காக செல்லும் இந்திய மாணவர்கள் வரும் 31-03-2016 வரை 23 கிலோ பொருட்களை கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கொண்டு செல்லலாம் என இன்று வெளியாகியுள்ள பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது.

டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் சென்னையில் இருந்து மேற்கண்ட நாடுகளின் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் இந்திய மாணவ-மாணவியருக்கு இந்த சிறப்பு சலுகை பொருந்தும் என இந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர்வரை, ‘செக்-இன் லக்கேல்’ ஆக வெறும் 23 கிலோ பொருட்களை மட்டுமே கொண்டு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:மாலை மலர்

Monday, April 27, 2015

ஜப்பானியர்களின் வினோத குளியல் !

ஜப்பானின் மூன்றாவது பெரிய தீவான கியுஷுவில் உள்ள எரிமலைப் பகுதிகளில் இருந்து எடுத்து வரப்படும் ஈரமண்ணை கொண்டு மக்கள் மண் குளியல் போடுகின்றனர். கியுஷு தீவில் எரிமலைகள் அதிகளவில் காணப்படுவதால் அங்கே பெருமளவில் வெந்நீர் ஊற்றுகள் காணப்படுகின்றன.

இங்கே நிலவும் பருவநிலைக்காகவும், இயற்கையாக அமைந்துள்ள பல வெந்நீர் ஊற்றுகளுக்காகவும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள். மேலும், இங்கு செயல்படும் ஸ்பாக்களில் செய்யப்படும் மண் குளியல் மக்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தவதாக கூறுகின்றனர். அந்த மண்ணில் உள்ள வெப்பம் குறைந்தவுடன் மனிதர்களை வெளியில் எடுத்து வெந்நீர் ஊற்று நீரால் குளிக்க வைக்கின்றனர்.

இந்த வினோத மண் குளியலை எடுப்பதற்காகவே பலர் இந்த பகுதிக்கு சுற்றுலா வந்து செல்கின்றனர். இந்த மண் குளியலால் குழந்தையின்மை, சர்க்கரை நோய், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் சரியாகும் என்றும் உடல் எடை குறையும் என்றும் சுற்றுலா வரும் மக்கள் நம்புகின்றனர்.

மேலும், இந்த குளியலால் மக்களுக்கு நோய் சரியாகிறதோ, இல்லையோ ஆனால் கண்டிப்பாக புத்துணர்ச்சி கிடைப்பதாகப் பலரும் நம்புகின்றனர்.