.

Pages

Showing posts with label உலமா சபை. Show all posts
Showing posts with label உலமா சபை. Show all posts

Thursday, August 30, 2018

உலமா சபை சார்பில் கேரளத்துக்கு ரூ.2.45 லட்சம் வெள்ள நிவாரண நிதி அனுப்பி வைப்பு!

தஞ்சாவூர், ஆக.30-
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்துக்கு நிவாரணம்  வழங்குவதற்காக, தஞ்சாவூர் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை மூலம், தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் தொழுகையாளிகளிடம் வசூலிக்கப்பட்ட நிதி ரூ. 2.45 லட்சம், தஞ்சை மாவட்ட அரசு டவுன் ஹாஜி டி. காதர் ஹுசைன் அவர்களிடம் இன்று வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

தமிழ்மாநில ஜமாத்துல் உலமா சபை அறிவுறுத்தலின் பேரில், தஞ்சை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை மூலம், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பேராவூரணி, பாபநாசம், திருவிடைமருதூர், கும்பகோணம், திருவையாறு ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களின் ஜும்மா தொழுகையின் போது தொழுகையாளிகளிடம் திரட்டப்பட்ட மொத்தம் நிதி ரூ. 2.45 லட்சத்தை, தஞ்சை மாவட்ட அரசு டவுன் ஹாஜி டி. காதர் ஹுசைன் அவர்களிடம், தஞ்சை மாவட்ட  ஜமாத்துல் உலமா சபைத் தலைவர் மவ்லவி. எஸ். அயூப்கான் மன்பஈ, பொருளாளர் மவ்லவி எம். ஹாஜா முகைதீன் மிஸ்பாஹி, மவ்லவி எஸ். முகமது சிராஜுதீன் ஆகியோர் வழங்கி மாநில மாநில ஜமாத்துல் உலமா சபை மூலம் அனுப்பி வைக்க கேட்டுக்கொண்டனர்.