.

Pages

Showing posts with label கடிதம். Show all posts
Showing posts with label கடிதம். Show all posts

Tuesday, October 17, 2017

அதிராம்பட்டினத்தில் பால்ய நண்பர் எழுதிய கடிதத்தை பொக்கிஷமாக பாதுகாக்கும் பேராசிரியர் !

அதிராம்பட்டினம், அக்.17
ஒருவருக்கொருவர் கடிதங்கள் எழுதிக்கொள்ளும் பழக்கம் மங்கி மறைந்து வருகிறது என்றாலும் கடிதங்கள் எழுதிக்கொள்வது அரசியலிலும் நட்பிலும் நிர்வாகத்திலும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

நண்பர்களுக்கடையேயான கடிதங்கள் பெரும்பாலும் அந்தரங்கமானவையே. ஆனாலும் இங்கே நாம் பகிர இருக்கும் இந்தக் கடிதம் இரு நீண்ட நாள் நண்பர்களுக்கிடையே ஆனது.

சரி விசயத்திற்கு வருவோம்...
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், பிரபல பேச்சாளர். சிறப்பு அழைப்பின் பேரில், பல்வேறு நாடுகள், ஊர்களுக்குச் சென்று பல்வேறு தலைப்பின் கீழ், சிறப்புரை ஆற்றி, பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர். இவரது நண்பர் ஏ.இப்ராஹீம் அன்சாரி. எழுத்தாளர், முத்துப்பேட்டை அல் மஹா மகளிர் அரபிக் கல்லூரி முதல்வர்.

இவர்கள் இருவரும் தொடக்கப் பள்ளி முதல் கல்லூரி படிப்பை வரையிலான பால்ய நண்பர்கள். கடந்த 2009 ஆம் ஆண்டின் போது, அமீரகம் துபாய் நாட்டில் மனிதவள மேம்பாட்டுத்துறை மேலாளராக எழுத்தாளர் ஏ. இப்ராஹீம் அன்சாரி பணியாற்றிய போது, தனது நண்பர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் அவர்களுக்கு கடிதம் எழுதி இருந்தார். இக்கடிதத்தை, இன்று வரை தனது வீட்டில் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார். நட்புக்கு மரியாதை கொடுக்கும் விதத்தில், இக்கடிதத்தை கடந்த அக்.6 ந் தேதி தபால் தினத்தில் ரசித்து வாசித்து வாசித்தார். இலக்கிய நடையில் எழுதப்பட்ட இக்கடிதத்தை அதிரை நியூஸ் வாசகர்களுக்கு பகிர்வதில் ஆனந்தம் அடைகிறோம்.

Thursday, August 11, 2016

திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை விரிவாக்கப் பணிகளுக்கு மண் எடுக்க அனுமதி வழங்க வலியுறுத்தி முதல்வருக்கு கடிதம் !

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 11
திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை பணியினை விரைவுப்படுத்தக்கோரி அதிராம்பட்டினத்தில் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக்கூட்டம் சாரா திருமண மஹாலில் கடந்த 31-07-2016 அன்று நடந்தது. கூட்டத்தில் அகல ரயில் பாதை பணிகள் தாமதத்திற்கான காரணங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக பட்டுக்கோட்டை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் சார்பில் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை விரிவாக்கப் பணிகளுக்கு மண் எடுக்க அனுமதி வழங்க வலியுறுத்தி தமிழக முதல்வரின் தனிபிரிவுக்கு கோரிக்கை கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை வாழ் சமூக ஆர்வலர்கள், சமூக அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அயல் நாடு வாழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை கடிதமாக அனுப்ப அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கடிதத்தின் மாதிரி
அடைதல்
மாண்புமிகு. தமிழக முதல்வர் அவர்கள்,
சிறப்பு பிரிவு ( CM Cell )
தலைமைச் செயலகம்,
தமிழ்நாடு அரசு,
புனித ஜார்ஜ் கோட்டை,
சென்னை.

மாண்புமிகு அம்மா,

பொருள் : தஞ்சாவூர் மாவட்டம்,  திருவாரூர் - காரைக்குடி அகல இருப்புப்பாதை விரிவாக்கப் பணிகளுக்கு  மண் எடுக்க அனுமதி வழங்கப்பட வேண்டுதல் சம்பந்தமாக. 

காரைக்குடி - திருவாரூர் இருப்புப்பாதையில், மீட்டர் காஜ் ரயில் பாதையை அகல இருப்புப்பாதையாக மாற்றும் பணி 14.04.2012  முதல் துவங்கப் பெற்று நடைபெற்று வருகிறது. 114 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இப்பாதையில் 4 வருடங்களாக பயணிகள் ரயில் இயங்கவில்லை. 2006 முதல் இப்பகுதியிலிருந்து சென்னைக்கு செல்லும் விரைவு ரயில்கள் இயங்கவில்லை. இதனால் நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த யாத்ரீகர்கள், வியாபாரிகள், அரசு அலுவலர்கள், மாணவர்கள், நோயாளிகள், பெண்கள், பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். விவசாயப்பொருட்கள், உணவு தானியங்கள், கடல் உணவு பொருட்களான மீன், கருவாடு, உப்பு போன்ற பொருட்களை, அனுப்புவதிலும் சிரமம் ஏற்பட்டுவருகிறது. இப்பகுதி மக்கள், மதுரை, சென்னை, இராமேஸ்வரம் போன்ற தொலைதூர ஊர்களுக்கு பயணம் செல்வதிலும் பெரும் இடர்பாடு உள்ளது.

இரயில்வே துறையின் சார்பில், காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வரையில் புதிய பாலங்கள், இருப்புப் பாதை நிலையங்கள், பிளாட்பாரங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பட்டுக்கோட்டையிலிருந்து திருவாரூர் வரை பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. தண்டவாளங்கள், கருங்கல்& ஜல்லிகள், சிலிப்பர் கட்டைகளும் இருப்புப்பாதை பணிக்கு வந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இருப்புப்பாதை நிலையங்களின் நடைமேடை மற்றும் இருப்புப்பாதைகளை மேடு செய்ய மண் தேவைப்படுவதாக அறிகிறோம். மண் கிடைத்தால் இப்பணி விரைவில் முடிந்து தொடர்வண்டிகள் இயங்கத் தொடங்கி விடும்,

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள், இப்பகுதி 5 மாவட்ட மக்களின் மேல் கருணை கொண்டு, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கனிமவளத்துறைக்கு தக்க ஆணையினை பிறப்பித்து, இருப்புப்பாதை அமைக்கும் பணிக்கு, இருப்புப்பாதைக்கு அருகில் உள்ள ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் மழைகாலம் துவங்குமுன், மண் எடுக்க அனுமதி வழங்குமாறு மிகவும் பணிவுடன் வேண்டுகிறோம்.

ஏரிகளில் மண் எடுப்பதால், நீர்நிலைகள் ஆழப்படுத்தப்படும். இதனால் வெள்ளக்காலங்களில் மழை நீர் கடலுக்கு செல்லாமல் சேமித்து வைக்கப்படும். வெள்ள சேதம் தவிர்க்கப்படும். நிலத்தடி நீர் மட்டம் உயர்வதால் கடலோர கிராமங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது. வேளாண்மைக்கும், கால்நடைக்கும் மிக்க பயனுள்ளதாக இருக்கும். உள்ளூர் நீர்நிலைகளில் மீன்வளம் பெருகும். மேலும், மாண்புமிகு அம்மா அவர்களின் சிறப்புத்திடமான மழை நீர் சேமிப்பு திட்டம் வெற்றி பெறும் இருப்புப்பாதை அமைக்கும் பணியினை விரைந்து முடித்திட மத்திய அரசை வலியுறுத்தவும், இதுகுறித்து  இப்பகுதி மக்கள் நேரில் அம்மா அவர்களை சந்தித்து இம்மனுவினை அளிக்க அனுமதி வழங்கிடவும் பணிவுடன் வேண்டுகிறோம்.

தங்கள்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம், பட்டுக்கோட்டை

நகல்:
1. உயர்திரு.ஆர்.வைத்திலிங்கம் அவர்கள்,
முன்னாள் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்,
பாராளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை), புது டெல்லி.
2. பாராளுமன்ற உறுப்பினர் (மக்களவை) அவர்கள்,
தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி.
3. சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்,
பட்டுக்கோட்டை.
4. சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், பேராவூரணி.
5. மாவட்ட ஆட்சியர் அவர்கள், தஞ்சாவூர்.
6. உதவி இயக்குநர் அவர்கள், கனிமவளத்துறை.

Friday, February 27, 2015

ஏக்கம்: அயலக வாழ் அன்பர்களுக்கு சமர்ப்பணம் !

என் வாழ் நாளில் முதன் முதலாய் அன்றுதான் உங்களை பார்த்தேன். நீங்களோ மிகவும் பரிச்சயம் ஆனவர் போல் என் அருகில் வந்து என்னை இருக அனைத்துக்கொண்டீர்கள் நான் திமிறினேன், தினறினேன் என்னை நீங்கள் விடுவதாய் இல்லை உங்கள் மீது சிகரட்டும், சென்டும் கலந்த வாடை எனக்கு பிடிக்கவே இல்லை. அன்னியமாய் பட்டது அடக்க முடியாமல் அழுது விட்டேன்.
     
சில நாட்களே நகர்ந்தது நீங்கள் காட்டும் அன்பில் நான் உருகினேன் உங்கள் ஸ்பரிசத்தில் மயங்கினேன். உங்களோடே என் பொழுதை முழுமையாய் கழித்தேன் நீங்கள் வெளியே செல்லும்போதல்லாம் நானும் வர அடம் பிடித்தேன் நீங்களும் எந்த மறுப்பும் சொல்லாது வெளியில் அழைத்து செல்வதை வழக்கமாக்கி கொண்டதில் மிகவும் பூரிப்படைந்தேன்.
 
நீங்கள் இல்லாமல் நானும் இல்லை என்றெண்ணிய பொழுது! அந்த நாள்?!!!இன்றும் என் மனதில் நீங்காமல் இருக்கிறது. உங்கள் கண்களில் நீர் கோர்க்க என் அருகில் வந்தமர்ந்தீர்கள் என்னை மலங்க மலங்க பார்த்தீர்கள் நானும் ஒன்றும் புரியாமல் பார்த்தேன் அப்படியே இருக அனைத்துக்கொண்டீர்கள் முதல் முதலாய் அனைத்த அதே இறுகிய அனைப்பு நான் திமிறவில்லை தினறவில்லை அனுபவித்தேன் உங்களது சிகரட், சென்ட் கலந்த வாடை இப்பொழுது எனக்கு பிடித்திருந்தது. உங்கள் கண்ணீர் என் முதுகை நனைக்க உணர்ந்தேன்.
     
அதுதான் உங்களுக்கும் எனக்கும் நடந்த கடைசி ஸ்பரிசம் உங்களை கொஞ்ச நாளா காணவில்லை எங்கு சென்றீர்கள் ? என்ன ஆனீர்கள் ? யாரிடம் கேட்டாலும் இப்ப வந்திடுவாங்கன்னு சொல்றாங்க ஆனா நீங்க வந்த பாடில்லை உங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும், அரவணைப்பிற்கும் ஏங்கி கிடக்கும்...
                   
உங்கள் அன்பு மகள்,
செல்லக்குட்டி ( L.K.G 'B' Sec -  ABC Metric School ) 

( குறிப்பு  இந்தியாவில் ஊழியம் செய்யும் என் இனிய நண்பன் என் மகளுக்காக எனக்கு எழுதிய மடல் கண் கலங்கிவிட்டேன் அயலக வாழ் அன்பர்களுக்கு சமர்ப்பணம் )