.

Pages

Showing posts with label சம்சுல் இஸ்லாம் சங்கம். Show all posts
Showing posts with label சம்சுல் இஸ்லாம் சங்கம். Show all posts

Friday, July 24, 2020

சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் 2 ஆம் கட்டமாக 8 இடங்களில் கப சூரக் குடிநீர் விநியோகம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 24
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை சார்பில் பொதுமக்களுக்கு கப சூரக் குடிநீர் இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

இதில், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு, CMP லைன் மெடிக்கல் அருகில், சித்தீக் பள்ளி அருகில், செக்கடி மேடு ஜம்ஜம் ஹோட்டல் அருகில், ரஹ்மானியா பள்ளி அருகில், புதுப்பள்ளி அருகில், A J பள்ளி அருகில், முகைதீன் ஜும்ஆ பள்ளி அருகில், கலீபா உமர் பள்ளி அருகில் என மொத்தம் 8 இடங்களில் பொதுமக்களுக்கு கப சூரக் குடிநீர் நேரில் சென்று வழங்கினர்.

இதில், சில பயனாளிகள் கப சூரக் குடிநீரை அருந்திவிட்டு, தங்களது குடும்பத்தினருக்கு ப்ளாஸ்கில் வீட்டிற்கு வாங்கிச் சென்றனர். இதில், மொத்தம் 3000 க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

இதேபோல், வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பொதுமக்களுக்கு கப சூரக் குடிநீர் வழங்க திட்டமிட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். 'ஆர்சனிகம் ஆல்பம் 30சி' என்ற நோய் எதிர்ப்பு சக்தி ஹோமியோபதி மருந்தை விரைவில் வீடுதோறும் நேரில் சென்று வழங்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.
 
 
 
 
 
 

Friday, July 17, 2020

சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் அதிராம்பட்டினத்தில் 9 இடங்களில் கப சூரக் குடிநீர் விநியோகம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 16
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை சார்பில் பொதுமக்களுக்கு கப சூரக் குடிநீர் இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

இதில், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு, செக்கடி மேடு (நடைமேடை), செக்கடி மேடு ( ஜம் ஜம் உணவகம் அருகில்),  சிஎம்பி லேன் மெடிக்கல் அருகில், சிஎம்பி லேன் ஹனீப் பள்ளிவாசல், ரேசன் கடை அருகில்), நடுத்தெரு ஹம்ஜா கடை அருகில், மரைக்கா பள்ளிவாசல் முக்கம், வாய்க்கால் தெரு ரஹ்மானியா பள்ளிவாசல் அருகில், ஆஸ்பத்திரி தெரு  புதுப்பள்ளிவாசல் அருகில், ஏ.ஜெ பள்ளிவாசல் அருகில்,  சுரைக்கா கொல்லை உமர் பள்ளிவாசல் அருகில் ஆகிய 9 இடங்களில்  பொதுமக்களுக்கு கப சூரக் குடிநீர் நேரில் சென்று வழங்கினர்.

இதில், சில பயனாளிகள் கப சூரக் குடிநீரை அருந்திவிட்டு, தங்களது குடும்பத்தினருக்கு ப்ளாஸ்கில் வீட்டிற்கு வாங்கிச் சென்றனர். இதில், மொத்தம் 2500 க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

இதேபோல், வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பொதுமக்களுக்கு கப சூரக் குடிநீர் வழங்க திட்டமிட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். 
 
 
 
 
 

Friday, June 5, 2020

சம்சுல் இஸ்லாம் சங்கம் நூற்றாண்டு விழா குர்ஆன் கிராத் போட்டி வெற்றியாளர்கள் (முழு விவரம்)

அதிரை நியூஸ்: ஜூன் 05
அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஷிஸ்வா (Shamsul Islam Sangam Welfare Association) அமைப்பின் அமீரக கிளை சார்பில், வாட்ஸ்அப் சமூக வலைத்தளம் மூலம் குர்ஆன் கிராஅத் போட்டி அண்மையில் நடத்தப்பட்டது.

இதில், அதிராம்பட்டினம், சென்னை, அமீரகம், சவுதி அரேபியா, அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா, கத்தார் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசிக்கும் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளின் சிறார்கள் மொத்தம் 464 பேர் போட்டியில் கலந்துகொண்டனர். போட்டியில் சிறப்பிடம் பிடித்த வெற்றியாளர்கள் பற்றிய அறிவிப்பு நிகழ்ச்சி புதுமனைத்தெரு சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, சங்கத் தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம் முகமது அபூபக்கர் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக, மவ்லவி ஏ.எஸ் அகமது இப்ராஹீம், மவ்லவி எம்.எஸ் அப்துல் ஹாதி ஆகியோர் கலந்துகொண்டு, குர் ஆன் கற்றலின் அவசியம் பற்றியும், போட்டி நடத்திய விதம் பற்றியும் மற்றும் தேர்வானவர்கள் பற்றியும் எடுத்துரைத்தனர்.

பின்னர், சங்க செயலாளர் ஹாஜி எம்.ஏ அப்துல் காதர் கிராத் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பற்றிய விவரங்களை அறிவித்தார்.

இதில், 4 வயதுக்கு உட்பட்ட பிரிவில்.... 
ஏ.முகமது (முதலிடம்), டி.தஸ்பீஹா (இரண்டாமிடம்), எம்.எஸ் ஷனா, எம்.உஜைர், எஸ்.கதீஜா, எம்.ஹதீஜா, ஆர்.முகமது அயான் ஆகிய 5 பேர் மூன்றாமிடமும் பிடித்தனர்.

இதில், 5 ~ 7 வயதுக்கு உட்பட்ட பிரிவில்....
எஸ். கதீஜா (முதலிடம்), எம்.ரம்லா (இரண்டாமிடம்), எம்.ஜெய்னா, எம் ஷபீனா, எச்.முகமது, பி.சல்வா, எச். நுஸைபா ஆகிய 5 பேர் மூன்றாமிடமும் பிடித்தனர்.

இதில், 8 ~ 13 வயதுக்கு உட்பட்ட பிரிவில்....
ஏ.அஜீம் (முதலிடம்), ஏ.கிஃபாயத்துல்லா (இரண்டாமிடம்), எம்.முகமது சமீஹ், ஏ.சுஹைல், எம்.ஐ உசைத், ஏ.உமர் ஆபத், எச். மஹ்ரூஸ் ஆகிய 5 பேர் மூன்றாமிடமும் பிடித்தனர்.

ஓவ்வொரு பிரிவுகளிலும் முதலிடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ. 3 ஆயிரமும், இரண்டாமிடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரமும், மூன்றாமிடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ. ஆயிரமும் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. மேலும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் ரூ.400 மதிப்பிலான சுவர் கடிகாரம் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, சம்சுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்க செயலர் எம்.எப் முகமது சலீம் வரவேற்றார். நிறைவில், சம்சுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்கத் தலைவர் அகமது அனஸ் நன்றி கூறினார். இந்நிகழ்வில், சங்க இன்னாள், முன்னாள் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
 
 

Tuesday, June 2, 2020

ஷிஸ்வா அமைப்பின் அறிவிப்பு!

அதிராம்பட்டினம், ஜூன் 02
அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, கரோனா முடக்கங்களுக்கிடையில் வாட்சப் சமூக வலைத்தளம் மூலம் ஷிஸ்வா (Shamsul Islam Sangam Welfare Association) அமைப்பின் அமீரக கிளை நடத்திய கிராஅத் போட்டியில், உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மஹல்லாவாசி குழந்தைகள் பலர் பங்கேற்றனர்.

இப்போட்டியின் வெற்றியாளர்கள் பற்றிய விபரங்கள் வரும் (05-06-2020) அன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள முன்னோட்ட காணொளி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, February 22, 2020

CAA, NRC, NPR க்கு எதிராக அதிராம்பட்டினத்தில் கண்டனப் பேரணி (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.22
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, தொடா் போராட்டம் கடந்த (பிப்.19) புதன்கிழமை மாலை அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் தொடங்கி,  சனிக்கிழமை 4-வது நாளாக தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

இதில், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், ஜமாத் மற்றும் கிராம பஞ்சாயத் நிர்வாகிகள் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்துப் பேசி வருகின்றனர்.

இந்நிலையில், CAA, NRC, NPR ஆகியவற்றிற்கு எதிராக அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில், சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள், இளைஞர்கள் சங்க நிர்வாகிகள், மஹல்லாவாசிகள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கண்டனப்பேரணி இன்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

பேரணி சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்திலிருந்து புறப்பட்டு, செக்கடித்தெரு, சேர்மன் வாடி, ஆஸ்பத்திரி சாலை, பழைய போஸ்ட் ஆபிஸ் சாலை, கடைத்தெரு வழியாக அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் நடைபெறும் தொடர் போராட்டக் களத்தில் நிறைவடைந்தது.

இதில், இந்திய தேசியக்கொடியை கையில் ஏந்தியவாறு, மத்திய குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆா்) ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக தீா்மானம் நிறைவேற்றி, தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்பிஆா்) ஆகிய பணிகள் நடைபெறாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
 

Thursday, January 2, 2020

சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் அதிராம்பட்டினம் அனைத்து ஜமாத் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்!

அதிராம்பட்டினம், ஜன.01
அதிராம்பட்டினம் அனைத்து ஜமாத் நிர்வாகிகள் ~ சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் புதுமனைத்தெரு சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் இன்று (ஜன.01) வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அதிரை பைத்துல்மால் அமைப்பின் செயலாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது தலைமை வகித்தார். கூட்டத்தின் நோக்கம் பற்றி சம்சுல் இஸ்லாம் சங்க செயலாளர் பேராசிரியர் எம்.ஏ அப்துல் காதர் எடுத்துரைத்தார். பின்னர், கூட்டத்தை வழிநடத்தினார்.

இக்கூட்டத்தில், அதிராம்பட்டினம் அனைத்து ஜமாத் நிர்வாகிகள், இளைஞர்கள் சங்க நிர்வாகிகள், தமுமுக, எஸ்.டி.பி.ஐ, மமக, மஜக உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்று கருத்துரை வழங்கினர்.

இக்கூட்டத்தில், அனைத்துக் கட்சிகள், மாணவா் அமைப்புகள், சமுதாயக் கூட்டமைப்புகள் ஆகியவற்றின் சாா்பில், நாளை (ஜன.3) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் எதிரில் நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் அனைத்து ஜமாத்தார்கள் திரளாக பங்கேற்பது எனவும், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகியவற்றை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் கட்சிகள், சமுதாய கூட்டமைப்புகள், மாணவர்கள் அமைப்புகள் ஆகியவற்றிற்கு ஆதரவு தெரிவிப்பது என தீர்மானிக்கப்பட்டது. நிறைவில், அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம் அனைவருக்கும் நன்றி கூறினார்.