.

Pages

Showing posts with label சுகாதாரம். Show all posts
Showing posts with label சுகாதாரம். Show all posts

Tuesday, January 20, 2015

அதிரை சுற்று வட்டார பகுதி மக்களுக்கு அன்பான வேண்டுகோள் !

அதிரை சுற்று வட்டார பகுதி மக்களுக்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறையின் அன்பான வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

அம்மை, காய்ச்சல், வயிற்றுபோக்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கவும், மக்கள் பொதுநலன் காக்கவும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறையின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நோய்களில் பாதிக்கப்பட்டவர்கள் கீழ்கண்ட சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சுகாதார ஆய்வாளர்:
சா. சந்திரசேகரன் 9442136171
எஸ். வெங்கடேஷன் 9600483808
வட்டார சுகாதார மேற்பார்வையாளர்:
வ. விவேகானந்தன் 9442318881

அரசினர் ஆரம்ப சுகாதர நிலையம்
தாமரங்கோட்டை - பட்டுக்கோட்டை வட்டாரம்

Saturday, February 23, 2013

டெங்கு விழிப்புணர்வு - குறும்படம் [ காணொளி ] !

டெங்கு விழிப்புணர்வு  - குறும்படம் !

பஞ்சனைகள் சுகம்
தன்னில்
பங்கு கேட்கும்
பாவிக் கொசு
பாயினில் படுக்கையிலே
பதுங்கி வந்த
பாவிக் கொசு
பாயோடு கிடத்திவிடும்
பாடையிலும் ஏற்றிவிடும்
பல்இழந்த
பாட்டியென்ன
பல் இல்லா
பாலகரென்ன
பல்லில்லாக்
கொசுக்கூட்டம்
பாடாய்
படுத்திவிடும்
சினம் கொண்ட
சிங்கமுண்டு
பயம் கொண்ட
சிங்கமுண்டா
கொசுவிடம்
கேட்டால்
கதை கதை யாய்
அது சொல்லும்
காலரா பேதி டெங்கு
கொசு இருக்கும் அங்கு
அலட்சியம் வேண்டாம்
இங்கு
ஊதிடுவான் சங்கு


நன்றி :
கவிதை - மு.செ.மு. சபீர் அஹமது
குறும்படம் - பொது சுகாதாரப்பிரிவு சேலம் மாநகராட்சி