.

Pages

Showing posts with label சுமுக. Show all posts
Showing posts with label சுமுக. Show all posts

Saturday, December 30, 2017

அதிராம்பட்டினத்தில் SUMUKA கலந்தாலோசனைக் கூட்டம்!

அதிராம்பட்டினம், டிச.30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பசுமையை வலியுறுத்தி, அதிராம்பட்டினம் சுகாதார முன்னேற்றக் கழகம் (சுமுக) அமைப்பின் தன்னார்வலர்கள் கடந்த சில வருடங்களாக மரக்கன்றுகள் நடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அவ்வமைப்பின் கலந்தாலோசனைக்கூட்டம் செக்கடிப் பள்ளிவாசல் வளாகத்தில் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.எச் அஸ்லம் தலைமை வகித்தார். சுமுக தலைவர் தமீம் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் செக்கடிப் பள்ளிவாசல், முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் உபரிநீரை சாலையோர மரக்கன்றுகள் வளர்வதற்கு பயன்படுத்தும் வகையில், இப்பணியை செயல்படுத்த தேவையான நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில், ரசூல், மிஃப்த்தா, ஆஷிக், கமாலுதீன், அமீன், சேக் அலி, அபூபக்கர், சாகுல் ஹமீது, முகமது சலீம், சேக் மதினா, அப்துல் காதர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 
 
 

Thursday, November 23, 2017

அதிராம்பட்டினத்தில் மரக்கன்றுகள் நடும் பணியில் தன்னார்வலர்கள் (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ.23
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பசுமையை வலியுறுத்தி மரக்கன்றுகள் நடும் பணியில், அதிராம்பட்டினம் சுகாதார முன்னேற்றக் கழகம் (சுமுக) அமைப்பின் தன்னார்வலர்கள் கடந்த சில வருடங்களாக மரக்கன்றுகள் நடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவ்வமைப்பின் மூலம் அதிராம்பட்டினம் நடுத்தெரு, புதுமனைத்தெரு, சிஎம்பி லேன், ஆலடித்தெரு, பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, ஈசிஆர் சாலை, மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிராம்பட்டினம் பழைய போஸ்ட் ஆபீஸ் - கடைத் தெரு செல்லும் சாலையோரத்தில் 10 இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணி இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இதில், புங்கை, வேம்பு, ஆலமரம், வாகை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. இவற்றை ஆடு, மாடு போன்ற கால்நடைகளிடமிருந்து பாதுகாக்க மரக்கன்றை சுற்றி இரும்பிலான வலைக் கூண்டுகள் அமைக்கப்பட்டது. 

இதுகுறித்து அதிரை சுகாதார முன்னேற்ற கழக அமைப்பினர் எஸ்.எச் அஸ்லம், தமீம் ஆகியோர் கூறியது;
'அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பசுமையை ஏற்படுத்தும் முயற்சியாக பல்வேறு பகுதிகளில் 1000 மரக்கன்றுகள் நடுதல், நீர் நிலைகளை அதிகப்படுத்துதல், குடியிருப்பு பகுதியில் காணப்படும் கருவேல மரங்களை அகற்றுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகியவற்றை இலக்காகக் கொண்டு, இப்பகுதி தன்னார்வலர்களின் கூட்டு முயற்சியாக இப்பணிகளை கடந்த சில வருடங்களாக செயல்படுத்தி வருகிறோம். இதுவரையில் 800 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டுள்ளோம். நாங்கள் நட்ட பல கன்றுகள் இன்று பெரிய மரங்களாக வளர்ந்து  சுற்றுச்சூழலலுக்கு பாதுகாப்பு அளிக்கின்றன. இப்பணி தொடர்ந்து நடைபெறும்' என்றனர்.