.

Pages

Showing posts with label ஜாவியா மஜ்லிஸ். Show all posts
Showing posts with label ஜாவியா மஜ்லிஸ். Show all posts

Saturday, September 19, 2020

அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா நிர்வாகக் கமிட்டிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு!

அதிராம்பட்டினம், செப்.19
அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா நிர்வாகக் கமிட்டி புதிய நிர்வாகிகள் தேர்வுக்கூட்டம் ஜாவியா மஜ்லீஸ் வளாகத்தில் (18-09-2020) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, ஹாஜி எஸ்.ஏ அப்துல் ஹமீது தலைமை வகித்தார். கூட்டத்தில், அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா நிர்வாகக் கமிட்டி புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில், தலைவராக ஹாஜி எஸ்.முகமது அஸ்லம், துணைத்தலைவராக ஹாஜி எம்.பி அபூபக்கர், செயலாளராக எஸ். அப்துல் அஜீஸ், துணைச் செயலாளராக எஸ்.எச் அஸ்லம், பொருளாளராக ஹாஜி டி.ஏ சேக் அலி, துணைப் பொருளாராக ஹாஜி எஸ்.ஏ அப்துல் ஹமீது ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களைத் தவிர, 9 பேர் உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். 

Wednesday, November 27, 2019

அதிராம்பட்டினம் ஜாவியாவில் மீலாது பெருவிழா (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.14
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீலாது பெருவிழா அதிராம்பட்டினம் ஜாவியா மஜ்லீஸ் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா பள்ளி இமாம் மவ்லவி கே. முகமது முஸ்தபா சிராஜி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக சேலம் நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரி பேராசிரியர் மவ்லவி எம்.அபூதாஹிர் பாக்கவி, 'நம்மை போன்றவர்களா? நபி பெருமான் (ஸல்) அவர்கள்' என்ற தலைப்பிலும், காயல்பட்டினம் மவ்லவி. டி.எஸ்.ஏ அபூதாஹிர் ஃபஹீமி, 'மாநபி மவ்லீது மார்க்கத்திற்கு அரணா? முரணா?' என்ற தலைப்பிலும், அதிராம்பட்டினம், அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி பேராசிரியர் மவ்லவி தேங்கை சர்புதீன் மிஸ்பாஹி, 'பிறப்பையும் சரித்திரமாக்கிய பெருமானார் (ஸல்)' என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினர். நிறைவில், துஆ ஓதப்பட்டு அனைவருக்கும் தப்ரூக் உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை, அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா நிர்வாகக் கமிட்டியினர் எம்.பி அபூபக்கர், டி.ஏ சேக் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
 
 
 

Saturday, September 14, 2019

அதிராம்பட்டினம் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் நிறைவு விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.14
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் கடந்த 83 ஆண்டுகளாக ஓதப்பட்டு வரும் புஹாரி ஷரீப் மஜ்லீஸ், கடந்த ஆக.2 ந் தேதி ஜாவியா மஜ்லீஸ் வளாகத்தில் தொடங்கி, இன்று (செப்.14) சனிக்கிழமை காலை நிறைவடைந்தது.

அதிராம்பட்டினம் அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லவி கே.டி முஹம்மது குட்டி தலைமையில், 40 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சிறப்பு சொற்பொழிவு, துஆ, திக்ரூ நடைபெற்றது. இதில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 1000 த்திற்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று வந்தனர். தினமும் மஜ்லீஸ் முடிவில் அனைவருக்கும் 'தப்ரூக்' உணவு வழங்கப்பட்டது.

இந்நிலையில், இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று (செப்.14) சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதில், அதிராம்பட்டினம், அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லவி கே.டி முகமது குட்டி தலைமை வகித்து, இஸ்லாமிய மார்க்க விளக்க சொற்பொழிவு ஆற்றினார். முடிவில் சிறப்பு துஆ ஓதப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட 2000 த்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, இன்று சனிக்கிழமை அதிகாலை சுபுஹு தொழுகைக்கு பின் திக்ரூ மஜ்லீஸ் நடைபெற்றது. இதில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், தொழுகையாளிகள் பலர் கலந்துகொண்டு திக்ரூ செய்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை, அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா நிர்வாகக் கமிட்டியினர் எம்.பி அபூபக்கர், டி.ஏ சேக் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மஜ்லீஸ் துளிகள்:
1. மஜ்லிஸில் அதிராம்பட்டினம், அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லவி கே.டி முஹம்மது குட்டி, பேராசிரியர்கள் மவ்லவி நெய்னா, மவ்லவி தேங்கை சர்புதீன் உள்ளிட்ட மார்க்க அறிஞர்கள் சொற்பொழிவு ஆற்றினார்கள். இதில், நல்லொழுக்கம், இறை நம்பிக்கை, ரசூல் (ஸல்) முஹ்பத், சமூக நல்லிணக்கம், ஆரோக்கியம், நீண்ட ஆயுள், இயற்கை பேரிடர் மற்றும் நோயிலிருந்து பாதுகாப்பு, மழை வேண்டி உள்ளிட்டவை குறித்து இடம்பெற்றது.

2. தொடர்ந்து தினமும் 40 நாட்கள் நடைபெற்று வந்த மஜ்லீஸ் நிகழ்ச்சியில் சராசரியாக பெண்கள் உட்பட 1000 பேர் வரை கலந்துகொண்டு சிறப்பித்து வந்தனர். குறிப்பாக விடுமுறை தினங்களில் கூட்டம் அதிகமாகக் காணப்படும்.

3. பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் ஜாவியா நிர்வாககத்தின் சார்பில் தனித்தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெண்கள் அனைவரும் கடந்த வருடத்தை போல் அருகில் உள்ள காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமர வைக்கப்பட்டனர்.

4. அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா நிர்வாக கமிட்டி சார்பில் 6 ஆயிரம் உணவு பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள், சிறுவர்கள் உட்பட அனைவருக்கும்  வழங்கப்பட்டன.

5. கடந்த வருடங்களைப் போல் இந்த வருடமும் உணவு பொட்டலங்களில் பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக் பைகளை நிர்வாகக் கமிட்டியினர் தவிர்த்துக்கொண்டனர்.

6. உணவு பொட்டலங்கள் பேக்கிங் மற்றும் விநியோகம், ஹதியா நிதி வசூல் உள்ளிட்ட பணிகளில் உள்ளூர் தன்னார்வலர்கள் 100 பேர் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.
 
 
 
 
 

Friday, September 13, 2019

அதிராம்பட்டினம் புஹாரி ஷரீப் மஜ்லீஸ்: 'அவ்ராது பூஞ்சோலை' நூல் வெளியீடு (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.13
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் கடந்த 83 ஆண்டுகளாக ஓதப்பட்டு வரும் புஹாரி ஷரீப் மஜ்லீஸ், கடந்த ஆக.2 ந் தேதி ஜாவியா மஜ்லீஸ் வளாகத்தில் தொடங்கி, நாளை (செப்.14) சனிக்கிழமை காலை நிறைவடைய உள்ளது.

இந்நிலையில், 39-வது நாளான இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம், அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லவி கே.டி முகமது குட்டி தலைமை வகித்து, இஸ்லாமிய மார்க்க விளக்க சொற்பொழிவு ஆற்றினார். முடிவில், சிறப்பு துஆ ஓதப்பட்டன. இந்நிகழ்ச்சியில், பெண்கள் உட்பட 1500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சுபுஹு தொழுகைக்கு பின் திக்ரூ மஜ்லீஸ் நடைபெற்றது. இதில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், தொழுகையாளிகள் பலர் கலந்துகொண்டு திக்ரூ செய்தனர்.

நிகழ்ச்சியில், அதிரை ஜாவியத்துஷ் ஷாதுலியத்துல் ஃபாஸிய்யா சார்பில், அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி பேராசிரியர் மவ்லவி தேங்கை சரபுதீன் தொகுத்தளித்த 'அவ்ராது பூஞ்சோலை' எனும் தலைப்பிலான நூல் வெளியிடப்பட்டது. பிரதிகளை, அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர், மவ்லவி கே.டி முகமது குட்டி வெளியீட, முறையே முகமது அப்துல்லா, முகமது முகைதீன், அப்துல் ரெஜாக், அப்துல் லத்திப், அகமது கபீர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை, அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா நிர்வாகக் கமிட்டியினர் எம்.பி அபூபக்கர், டி.ஏ சேக் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
 
 
 
 
 
 

Saturday, July 13, 2019

அதிராம்பட்டினம் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் ஆக.02 ந் தேதி தொடக்கம்!

அதிராம்பட்டினம், ஜூலை 13
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஜாவியாவில் பல வருடங்களாக ஓதிவரும் புஹாரி ஷரீப் மஜ்லிஸ் நாளை 02-08-2019 [1440-துல்கஅதா பிறை 29] வெள்ளிக்கிழமை காலை 6.30 மணி முதல் முதல் அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் கே.டி முஹம்மது குட்டி ஆலிம் தலைமையில் தொடர்ந்து 40 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

தினமும் அதிகாலை சுபுஹு தொழுகைக்கு பின் திக்ரு மஜ்லிஸுடன் ஆரம்பமாகி சரியாக காலை 7-45 மணிக்கு மார்க்க அறிஞர்களின் சொற்பொலிவுடன் துஆ ஓதி நிறைவுபெறும்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வழமைபோல் தப்ரூக் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர், வெளியூர் முஸ்லிம் சகோதரர்கள் கலந்துகொண்டு பயனடைய அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா நிர்வாகக் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Friday, December 14, 2018

இயற்கை சீற்றத்திலிருந்து பாதுகாக்க வேண்டி அதிராம்பட்டினம் ஜாவியாவில் சிறப்பு பிரார்த்தனை!

அதிராம்பட்டினம், டிச.14
கஜா புயலால் பாதிப்படைந்த பொதுமக்கள் சகஜ நிலைக்கு திரும்பவும், இயற்கை சீற்றத்தில் இருந்து பாதுகாக்க வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை அதிராம்பட்டினம் ஜாவியா மஜ்லீஸ் வளாகத்தில் இன்று (டிச.14) வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லவி கே.டி முஹம்மது குட்டி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை (துஆ) நடைபெற்றது. இதில், அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் மவ்லவி. முகமது நெய்னா, மவ்லவி தேங்கை சரபுதீன், அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா நிர்வாகக் கமிட்டியினர் எம்.பி அபூபக்கர், சேக் அலி உள்ளிட்ட ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.
 

Monday, September 24, 2018

புஹாரி ஷரீப் மஜ்லீஸ் நிறைவு விழா ~ நேரடி ரிப்போர்ட் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப். 24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் பல ஆண்டுகளாக ஓதப்பட்டு வரும் புகாரி சரீப் மஜ்லிஸ், கடந்த ஆக.12 ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

அதிராம்பட்டினம் அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லவி கே.டி முஹம்மது குட்டி தலைமையில், 40 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சிறப்பு சொற்பொழிவு, துஆ, திக்ரூ நடைபெற்றது. இதில், அதிராம்பட்டினம் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 1000 த்திற்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். தினமும் மஜ்லீஸ் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று (செப்.24) திங்கட்கிழமை காலை நடைபெற்றது. இதில் அதிராம்பட்டினம், அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லவி கே.டி முஹம்மது குட்டி தலைமை வகித்து இஸ்லாமிய மார்க்க விளக்க சொற்பொழிவு ஆற்றினார். முடிவில் சிறப்பு துஆ ஓதப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, இன்று அதிகாலை சுபுஹு தொழுகைக்கு பின் திக்ரு மஜ்லிஸ் நடைபெற்றது. இதில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், தொழுகையாளிகள் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா நிர்வாக கமிட்டியினர் எம்.பி அபூபக்கர், சேக் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தனர்.

மஜ்லீஸ் துளிகள்:
1. மஜ்லிஸில் அதிராம்பட்டினம், அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லவி கே.டி முஹம்மது குட்டி, பேராசிரியர்கள் மவ்லவி முகமது நெய்னா, மவ்லவி தேங்கை சர்புதீன், மவ்லவி அப்துல் ஹாதி முப்தி, மவ்லவி சபியுல்லா அன்வாரி, மவ்லவி தமிமுன் அன்சாரி உள்ளிட்ட மார்க்க அறிஞர்கள் சொற்பொழிவு ஆற்றினார்கள். இதில், நல்லொழுக்கம், இறை நம்பிக்கை, ரசூல் (ஸல்) முஹ்ஹபத், சமூக நல்லிணக்கம், ஆரோக்கியம், நீண்ட ஆயுள், இயற்கை பேரிடர் மற்றும் நோயிலிருந்து பாதுகாப்பு, மழை வேண்டி உள்ளிட்டவை குறித்து இடம்பெற்றது.

2. தொடர்ந்து தினமும் 40 நாட்கள் நடைபெற்று வந்த மஜ்லீஸ் நிகழ்ச்சியில் சராசரியாக பெண்கள் உட்பட 1000 பேர் வரை கலந்துகொண்டு சிறப்பித்து வந்தனர். குறிப்பாக விடுமுறை தினங்களில் கூட்டம் அதிகமாகக் காணப்படும்.

3. பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் ஜாவியா நிர்வாககத்தின் சார்பில் தனித்தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெண்கள் அனைவரும் கடந்த வருடத்தை போல் அருகில் உள்ள காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமர வைக்கப்பட்டனர்.

4. அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா நிர்வாக கமிட்டி சார்பில் 6 ஆயிரம் உணவு பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள், சிறுவர்கள் உட்பட அனைவருக்கும்  வழங்கப்பட்டன.

5. கடந்த வருடங்களைப் போல் இந்த வருடமும் உணவு பொட்டலங்களில் பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக் பைகளை நிர்வாகக் கமிட்டியினர் தவிர்த்துக்கொண்டனர்.

6. உணவு பொட்டலங்கள் பேக்கிங் மற்றும் விநியோகம், ஹதியா நிதி வசூல் உள்ளிட்ட பணிகளில் உள்ளூர் தன்னார்வலர்கள் 100 பேர் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.
 

Sunday, August 19, 2018

கேரளா வெள்ள பாதிப்பில் மக்கள் மீள அதிராம்பட்டினம் புஹாரி ஷரீப் மஜ்லீஸில் சிறப்பு பிரார்த்தனை!

அதிராம்பட்டினம், ஆக.19
கேரளத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை மீள, அதிராம்பட்டினம் புஹாரி ஷரீப் மஜ்லிஸில் சிறப்பு பிரார்த்தனை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

அதிராம்பட்டினம் புஹாரி ஷரீப் மஜ்லிஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக.12) தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-வது நாள் நிகழ்ச்சிக்கு, அல் மதரஸத்துர் ரஹ்மானிய அரபிக்கல்லூரி பேராசிரியர் ஏ. முஹம்மது நெய்னா ஆலிம் தலைமை வகித்தார். கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி. சபியுல்லா அன்வாரி இஸ்லாமிய மார்க்க சிறப்புரை நிகழ்த்தினார்.

முடிவில், அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி பேராசிரியர் தேங்கை சரபுதீன் கேரளத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை மீளவும், வறண்டு காணப்படும் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை பொழியவும் சிறப்பு  பிரார்த்தனை செய்தார்.

இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த இஸ்லாமியப் பொதுமக்கள் 1500 பேர் கலந்து கொண்டனர். பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா நிர்வாகக் கமிட்டி செய்துவருகின்றனர். இதன் நிறைவு விழா எதிர்வரும் 06-09-2018 அன்று வியாழக்கிழமை காலை நடைபெற உள்ளது.