.

Pages

Showing posts with label டீக்கடை சந்திப்பு. Show all posts
Showing posts with label டீக்கடை சந்திப்பு. Show all posts

Monday, March 4, 2013

[ 6 ] டீக்கடை சந்திப்பு !


அஸ்ஸலாமு அலைக்கும் சலீம் என்ன செய்தி சவ்க்கியமா இருக்கீங்களா..? என்ன கால தாங்கி தாங்கி நடந்து வர்றீங்க..!

வ அலைக்கும் சலாம் சாதிக். நீங்க எப்புடி இருக்குறீங்க. நா வர்ற வழியிலே கல்லு குத்திப்புடிச்சி. இந்த பாழாப்போன ரோட்டத்தான் போடறேன் போடறேன்டு சொல்லி அப்புடியே போட்டு வச்சிட்டாங்களே..!

கோபப்படாதிங்க சலீம். கூடிய சீக்கிரம் போட்டுடுவாங்க. அது வரைலும் நீங்க கொஞ்ச பாத்து ரோட்டோரமா போங்க. அப்புறம் எங்க இன்னைக்கு கொஞ்சம் வேகமா போற மாதிரி தெரியிது.

மீனு வாங்க மார்கட்டுக்குக்கு தான் போயிட்டு இருக்கேன் சாதிக். மீனு கொஞ்சம் சல்லிசா கெடக்கிதாம். அதான் வெள்ளனமையே போய் வாங்கி கொடுக்கலாமுண்டு போறேன்.

ஆமா நானுந்தான் கேள்விப்பட்டேன் சலீம். மீனு இப்போ வரத்து அதிகமா இருப்பதாலே சல்லிசா இருக்குதாம். சவ்ரியமா கெடக்கும் போதே நல்ல படியாவாங்கி சாப்புட்டுக்கிட வேண்டியது தான்.ஆனா தேங்கா வெல தான் ஏறிப்போச்சி.தெரியுமா..?

அப்புடியா எவ்வளவு விக்கித்து சாதிக். பெரும்பாலும் நம்ம வூட்டுலே தேங்கா வெட்டுக்காறாரு மணி அண்ணன் தான் வந்து வெட்டு தேங்கா அஞ்சி பத்துண்டு கெடக்கிரத்த கொடுத்துட்டு காச வாங்கி கிட்டு போவாரு.அதுனால நா வெளியிலே தேங்கா ரேட்டலாம் விசாரிக்கிறது கெடையாது.

தேங்கா ஒன்னு இப்போ பத்து ரூபாயாம் சலீம். ஒரு பொருளுக்கு ரேட்டு எறங்குனா இன்னொரு சாமானுக்கு ரேட்டு ஏறிக்கிட்டு போவுது.என்னா செய்றது. கணக்கு பாத்தா நமக்கு செலவு மாசம் ஒரே மாதிரியாத்தான் வருது.

சாதிக்ட்ட ஒன்னு கேக்கலாம்ண்டு நெனச்சேன்.அதான் இந்த ரயிலு ரோட்ட ரொம்ப துரிதமாபேத்து வேலையெல்லாம் மும்முரமா நடந்துச்சே. அப்பறம் என்னாச்சி அப்புடியே போட்டுடாங்களே. மறுபுடி புது ரோடு எப்ப போடப்போறாங்களாம். நீங்க எதுவும் கேள்வி பட்டீங்களா..?

அந்த செய்திய உடுங்க சலீம். அது இப்போ நடக்குற மாதிரி தெரியலே. நம்ம காலத்துலே தான் ரயிலையே நம்பிக்கிட்டு இருந்தோம். அதான் மதுராசுக்கு போக மாடல் மாடலா நம்ம ஊர்லேந்து பஸ்சு விட்டுருக்காங்களே அப்பறம் என்ன..?

அப்பறம் சாதிக் மல்லிபடத்துலே கூறக்கத்தாலே மீனு கூகூண்டு மாட்டுனிச்சாமுல நல்ல வெலையில போயிருக்கு தெரியுமா உங்களுக்கு..?

ஆமா நானும் தான் கேள்விப்பட்டேன் சலீம்.மொத்தம் 202 மீனு மாட்டுனிச்சாம். ஒவ்வொரு மீனும் 30 கிலோ வரை எட இருந்திருக்கு. மொத்தம் 60 லெட்சத்துக்கு வெல போயிருக்கு.இது எப்பவாச்சும் கொஞ்சம் ஆழ்கடல் பக்கம் கூட்டம் கூட்டமா வருமாம். பேசிக்கிர்றாங்க.உசுர கைல புடிச்சிக்கிட்டு கடல நம்பி பொழப்பு நடத்துறவங்களுக்கு ஆண்ணடவனா பாத்துக்கொடுத்த  அதிர்ஷ்டமுண்டு தான் சொல்லணும்

சரி சாதிக் நா மொதல்ல போய் மீனா வாங்கி கொடுத்துட்டு வந்துடறேன். இன்ஷா அல்லாஹ் பிறகு பார்ப்போம். இப்பவே போனாத்தான் கொஞ்சம் நல்ல மீனா வாங்கலாம்.

அதிரை மெய்சா

Thursday, February 21, 2013

[ 5 ] டீக்கடை சந்திப்பு !


                   
அஸ்ஸலாமு அலைக்கும் என்ன சாதிக். சௌக்கியமா இருக்கீங்களா..? ஆளையே பாக்க முடியல. அன்னக்கி ராலு வாங்கி கொடுத்துட்டு இந்தா வந்துரெண்டு சொல்லிப்புட்டு போன ஆளு திரும்பி வரவே இல்லே..!

வ அலைக்கும் சலாம் சலீம். நீங்க எப்புடி இருக்கீங்க. வருத்தப்படாதிங்க. அன்னக்கி ரேசன் கடைவரைக்கும் போய் இருந்தேன். நம்ம தமிழ் நாடு அரசு கேபிள் டி.வி தொடங்குறாங்கலாம் மாசம் எழுவது ரூபாதான் வருமாம். அதான் இந்த கேபிள் டி வி க்கி பாரம் எழுதிக்கொடுக்கனும்ன்டு வூட்டுல சொன்னாங்க அதான் போய் நின்டு எல்லா வெவரமும் எழுதிக்கொடுத்துட்டு வரும் போது லொகருக்கு பாங்கு சொல்லிட்டாங்க. தொழுதுட்டு அப்புடியே வூட்டுக்கு போயிட்டேன். வேற ஏதும் நெனச்சிக்கிடாதீங்க. சரி...நீங்க எழுதி கொடுத்துட்டீங்களா..?

இப்ப நீங்க சொல்லித்தான் எனக்கே இதப்பத்தி தெரியிது சாதிக். ஊர் செய்தியெல்லா உங்ககிட்ட கேட்டாத்தான் நம்மதெரிஞ்சிக்க முடியிது. அப்பறம் இதுக்கு நாம் போய் நிக்க முடியாது. எம்மொவனத்தான் அனுப்பி வைக்கணும். எப்படியோ இனிமே நமக்கு கேபிள் டி வி லைன்லே கொஞ்சம் காசு மிச்சப்ப்படும்ண்டு சொல்லுங்க..ஹி..ஹி..ஹி..

அப்பறம் இன்னொரு செய்தி பரவலா ஜனங்க பேசிக்கிட்றது காதுலே உலுந்திச்சி சலீம். என்னான்டா முக்கியமான இடங்கல்லைஎல்லாம் சுகாதார வளாகமுன்டு பொதுக்கழிப்பிடம் கட்டுனாங்கல்ல அது கட்டி முடிஞ்சி இவ்வளவு நாலு ஆயிம் இன்னமும் தொறக்காம இப்புடியே போட்டு வச்சிக்கிராங்களே .அதெ எப்போதான் தொறக்க போறாங்களாம் உங்களுக்கு எதுவும் தெரியுமா..?

ஆமா இப்போதான் எனக்கும் ஞாபகம் வருது சாதிக். வர்ற வழிலே அதப்பத்திதான் பேசிக்கிட்டு நின்டாங்க. என்னாண்டு தெரியல கட்டி போட்டுட்டு கண்டுக்காம் சும்மா இருக்காங்க. ஏதோ காரணத்துனாலேதான் இப்புடி இருக்காங்க இதே சீக்கிரமா தொறந்து வச்சிட்டான்கண்டா நல்லது. எத்தனையோ வூட்டுலே டாய்லட் வசதி இல்லாதவங்களுக்கு .இது ரொம்ப உதவியா இருக்கும்.

நீங்க சொல்றது சரிதான் சலீம். நம்ம ''அனைத்து முஹல்லா'' காரவங்களாவது பேரூராட்சியிலே போய் முரயிடலாம்ல.அதான் என்னாண்டு ஒன்னும் புரியல.

அப்பறம் சாதிக் செய்தி கேள்விப்பட்டிங்களா..? துபாயிலே இருக்கிற கீழத்தெரு முஹல்லா, மேலத்தெரு முஹல்லாவாசிகள் கூட்டம் போன வாரம் நடந்திச்சாம். என் தங்கச்சி மொவன் போன் பண்ணும்போது சொல்லிக்காட்டுனான். அவங்க அவங்க தெரு சார்பா நல்ல நல்ல திட்டமெல்லாம்.தீர்மானிச்சி பேசி இருக்காங்க. எல்லாம் நம்ம ஊரும் தெருவும் வளர்ச்சியடைய நல்லதுக்காகத்தான் பேசி இருக்காங்க.

அப்புடியா சலீம். நம்ம ஊரு புள்ளைங்க வெளிநாட்டுல பொழப்புக்காக போன எடத்துலேயும் ஆயிரத்தெட்டு பிரச்னைக்கு நடுவுலே நம்ம ஊரப்பத்தியும் தெருவப்பத்தியும் இந்த அளவுக்கு அக்கறையா ஒவ்வொரு காரியமும் செஞ்சிக்கிட்டு இருக்காங்களே உண்மையிலேயே பாராட்டனும் தெரியுமா..!

என்னத்த சென்ஜாலும் நம்ம வூரு காரவங்க ஏதாவது கொற சொல்லிக்கிட்டு தானே இருக்காங்க சாதிக். இப்புடி ஒவ்வொரு முஹல்லாவுளையும் நல்ல  திட்டங்கள  தீர்மானிச்சி நம்ம தெருவுலயும் ஊர்லயும் உள்ள கொறபாடுகள சரி சென்ஜாங்கண்டா இன்னும் நம்ம ஊரு முன்னேத்தமா போவும். அதுக்கு எல்லாரும் நாம  ஒத்துமையா இருக்கணும்.

சொல்றவங்க எதையும் சொல்லிட்டு போகட்டும்ண்டு அத பெருசா எடுத்துக்கிடாம சமுதாயத்துக்கு நல்லது செய்யனும்ன்டு நெனக்கிறாங்களே அது பெரிய விசயம்தானே சலீம். இனி வருங்காலத்துலே எல்லாத்துக்கும் ஒன்றுபட்டு நிப்பாங்க.  இப்போ எல்லா இளைய சமுதாயமும் நல்லா  படிக்கிறாங்க. உலகவிசயத்துலே கவனமா இருக்கிறாங்க. அதெல்லாம் போக போக சரியாய்டும். நீங்க உங்க வயசுலே எவ்வளவு கலுசரத்தனம் பண்ணுனீங்க எல்லாரும் அப்புடித்தான்.

சரி அப்பறம் என்னா செய்தி சாதிக். நா பேத்திய கூட்டிக்கிட்டு உம்மா வூட்டுக்கு போவனும். நேரமாச்சி. உங்ககிட்ட ஊரு செய்தி பேசுனாலே நேரம் போறது தெரியாது. போயிட்டு வரட்டுமா. !

அதிரை மெய்சா                        
                                                       

Thursday, February 14, 2013

[ 4 ] டீக்கடை சந்திப்பு !

                                                                                             
அஸ்ஸலாமு அலைக்கும் சாதிக் நல்லா  இருக்கிறீங்களா ? என்ன இப்போ அடிக்கடி ஊருக்குள்ளே பாக்குறேன்..! பட்டுக்கோட்ட கடக்கி போற இல்லையா..?

வ அலைக்கும் சலாம் சலீம். நீங்க எப்படி இருக்கீங்க. நா இப்போ கடக்கி போறதில்ல அது நமக்கு சரியா வரலே. ஏதாவது நம்ம ஊர்லே தொழில் பண்ணலாம்ன்டு நெனச்சிக்கிட்டு இருக்கேன்.

நல்ல விஷயம் தானே சாதிக்கு. நம்ம ஊரும் கொஞ்சம் கொஞ்சமாவது முன்னேறட்டும். இப்பொ கூட ஹபீபா ஹைப்பர் மார்கெட்டுண்டு நம்ம துபைல இருக்குற மாதிரி ஒரே இடத்துலேயே எல்லா சாமான்களும் கெடக்கிற மாதிரி பெரிய லெவல்ல ஓப்பன் பண்ணி இருக்காங்க. இப்புடி நம்ம ஊர்ல கெடக்காத சாமான்களா பாத்து பிஸ்னஸ் ஆரம்பிச்சா வெளியூருக்கு ஏன் ஜனங்க போறாங்க..?

நல்ல யோசனை தான் சலீம். நம்ம ஊர்ல கெடக்காத சாமான் என்னண்டு பாத்து அந்த பிஸ்னச நம்ம ஆரம்பிச்சிட வேண்டியதுதான். யோசனை பண்ணிக்கிட்டு அப்புறமா நான் சொல்றேன். இத்தன வருசமா சௌதியிலெ இருந்து நம்ம காலத்தெ வேஸ்ட் பண்ணிபுட்டோமேண்டு தான் வருத்தமா இருக்கு.

அதெ இப்போ நெனச்சி என்னா பண்றது சாதிக். இனி ஆக வேண்டியத பாருங்க. உள்ளூர்ல வியாபாரம் பண்ணா அதுலெ ஒரு பரக்கத்து இருக்கு. அந்தக்காலத்துலெ நம்ம மூதாதையர்கள் எல்லாம் உள்ளூர்லெ வியாபாரம் பண்ணி சம்பாரிச்சி ஊடு கட்டலையா..? சொத்து வாங்கலையா..? கொமர கர சேக்கலையா..? குடும்பத்த ஓடலையா..? எதையும் முறையா செஞ்சா நட்டப்படாமே நல்லா லாபம் கெடக்கும். நம்மட சொந்த உழைப்பும் வேணும். நம்ம தான் முதலாளிண்டு ஒரு எடத்துலேயே உக்காந்து இருந்தா என்ன தான் யாபாரம் நடந்தாலும் வேற வழியா போய்டும். நீங்க இந்த அளவுக்கு என்னோட பலவுனத்துனாலே தான் உங்களுக்கு யாபாரத்த பத்தி எடுத்து சொன்னேன்.வேற எதுவும் தப்பா நெனச்சிக்கிடாதிங்க.

நா எதுக்கு தப்பா நெனக்கணும் சலீம். எல்லாம் என்னட நல்லதுக்கு தானே சொல்றீங்க. அதயும் உட்டுப்புட்டு இந்தக்காலத்துலே இப்புடியெல்லாம் உங்களை மாதிரி யாரு சொல்லிக்கொடுப்பா..? எல்லாம் நான் பாத்தவரக்கிம் சுயநல வாதிங்க தானே அதிகம் பேர் இருக்காங்க.உங்க மாதிரி பொது நல வாதியே எங்கே பாக்க முடியிது.

நீங்க இப்புடி சொன்னது நாளே தான் எனக்கும் ஒரு செய்தி ஞாபகத்துலெ வருது சலீம். என்னாண்டா இந்த சாராயக்கடை நம்ம ஊர்லே ஒன்னு ரெண்டா ஆனிச்சி. ரெண்டு மூனா ஆனிச்சி. இப்போ மூணு நான்கு என்று பெருத்துக்கேட்டே போய்க்கிட்டு இருக்கு. இத யாரும் தடுக்குறத்துக்கு ஆளில்லை. நெனக்க நெனக்க ஆத்திரமா வருது. நம்ம ஊர்ல அந்த அமைப்பு இந்த அமைப்புண்டு ஆயிரத்தெட்டு அமைப்பு இருக்கு. இருந்து என்ன புண்ணியம்..? ஒரு பிரச்சனைண்டா மட்டும் ஒன்னு கூடுறாங்க. இதுக்கு ஒன்னு கூடி தடுக்க ஏன் பயப்புடுராங்கண்டு தெரியல.

இது அரசியல் வாதிகளோட சப்போட்ல நடத்த உரிமை வாங்கிகிட்டு நடத்துனாலும் நடத்து வாங்க சாதிக். அதான் யாரும் எதுவும் கேட்காம ஓடிக்கிட்டு இருக்கு போல. இருந்தாலும் நம்ம ஊர் மக்கள் ஒன்னு கூடி அந்த சராயக்கடைனாலே என்ன பாதிப்பு இருக்குங்கிறத விவரமா எழுதி ஊர் மக்கள் எல்லாரும் கையெழுத்து போட்டு காவல் துறைக்கோ, இல்லாட்டி அது சம்மந்த பட்ட துறைக்கோ மனு கொடுத்தால் ஒரு சமயம் எடுத்துடுவாங்க. நமக்கு ஏன் வம்புண்டு நெனச்சி எல்லாரும் ஒதுங்கி போறத்துனால தான் துணிச்சலா ஒன்னு ஒன்னா நம்ம ஊர்ல அமைதியா எல்லா அனாச்சாரமும் நடந்துகிட்டு இருக்கு. நம்ம மட்டும் பேசி புண்ணியம் இல்லெ...!

அப்பறம் நம்ம ஊரு காட்டுப்பள்ளி மைதானத்துலெ மின்னொளி கைப்பந்து போட்டி நடத்து நாங்களே நீங்க வந்து பாத்தீங்களா சலீம்..? உங்களை ஆளையே காணமே வந்த மாதிரி தெரியலையே அதான் கேட்டேன்.

நா போக முடியலே சாதிக். ஒடம்பு நலுதா இருந்ததாலே இந்த பனியிலே நிண்டா சரிவராதுண்டு இருந்துட்டேன். இப்போ நம்ம ஊட்டுலெ ஒரு கம்பியூட்டர் இருந்தா போதும் உக்காந்த இடத்திலேயே ஊர் செய்தியே பாத்துக்கிடலாம்ன்னு இருந்துட்டேன். அப்பறம் நம்ம ஊரு அதிரை பிரண்ட்ஸ் அணி தான் ஜெய்ச்சி கப்பு வாங்கி இருக்காங்க. நம்மூறு ஜெய்ச்சத படிச்ச ஒடனே மனசுக்கு கொஞ்சம் சந்தோசமா இருந்திச்சி. நாம பெருமை படக்கூடிய விஷயம் தானே..!

நம்ம காலம் மாதிரி இல்லே சலீம்.. நம்ம ஊர்லே இப்போ உள்ள இளைஞ்சர்கள் விளையாட்டுலே நல்ல ஆர்வமாக இருக்காங்க. இனி வர்ற காலத்துலே நம்ம ஊருக்கும் பல விளையாட்டு வீரருவோ இந்தியா அளவுலே போய் விளையாடத்தான் போறாங்க பாருங்களேன்

அப்படி விளையாண்டா அது நம்ம ஊருக்கு பெருமை தானே சாதிக்..

சரி மணி பதினொன்னு ஆய்டிச்சி. உங்களோட பேசிக்கிட்டு இருந்ததாலே நேரம் போனதே தெரியல. வூட்டுலே ராலு வாங்கிட்டு வரச்சொன்னாங்க. நாம் போய் வாங்கி கொடுத்துட்டு வந்துட்றேன்.அப்பறமா பாக்கலாம். 

அதிரை.மெய்சா

Wednesday, February 6, 2013

[ 3 ] டீக்கடை சந்திப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்

என்னா சலீம் சவ்க்கியமா..? என்னா ஆச்சி பைக்க தள்ளி கிட்டு போறீங்க..! பஞ்சரா..?

வ அலைக்கும் சலாம், நல்லா இருக்கேன் சாதிக் 
அத ஏன் கேக்குறீங்க அர்ஜண்டா பேங்குக்கு போய் கிட்டு இருக்கிறேன் இப்போ பாத்து பஞ்சரா போய்டிச்சி..! என்னா பன்றதுண்டு ஒன்னும் புரியல.

கவலப்படாதீங்க சலீம். நானும் வர்றேன். பக்கத்துல தான் மெக்கானிக்கு கடை இருக்கு. போய் பஞ்சர் ஒட்ட கொடுத்துட்டு அவர்ட்டயே வேற பழைய வண்டி இருந்தா வாங்கிட்டு போயிட்டு வந்துடலாம். சரி உங்கட புது பைக்குல எப்புடி பஞ்சரா போனிச்சி..?

எல்லாம் இந்த ரோட்டுனாலேயே வண்டி வீனாபோச்சி சாதிக். நம்ம மெய்ன் ரோட்டுலேந்து மகிழன்கொட்ட போற வரைக்கும் உள்ள இந்த ரோட சரி பண்ணாமே இப்புடியே போட்டுட்டாங்க கிராணி மளிக கடைக்கிட்ட ரொம்ப மோசமா இருக்கு. நம்ம பெரிய ஜும்மா பள்ளி விலாவு பக்கம் போற ரோடும் ரொம்ப மோசமா இருக்கு. நேத்து கூட ஒரு பையன் பைக்க கல்லுல உட்டு ஏத்தி கீழ உளுந்து நல்லா அடிபட்டு போனிச்சி.அப்புறம் சொல்லப்போனா தம்பி மளிகை கிட்டயும் பள்ளமும் படு குழியுமா கெடக்குது.

இப்போ தம்பி மளிகை கிட்டதான் என்னட பைக்கும் பஞ்சரா போனிச்சி. இத்துண ஆளுவோ நம்ம ஊர்ல இருந்தும் புகார் கொடுத்து யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்குற மாதிரி தெரியல..!

ஏற்கனவே நம்ம எம் எல் ஏ கிட்ட போய் சொல்லி தான் இருக்குறாங்க சலீம். இப்போ கீழத்தெரு மஹல்லா சார்பாக மனு எழுதி நேர்லயே எம் எல் ஏ ட்டயும், ஊராட்சி ஒன்றிய தலைவர்ட்டையும் போய் கொடுத்து புட்டு வந்திருக்கிறாங்க.அநேகமா கூடிய சீக்கிரமா ரோடு போட ஏற்பாடு செய்வாங்கன்டு நெனக்கிறேன். இந்த ரோட்ட போட்டுட்டா எல்லாத்துக்கும் நல்லது. எப்பொ இந்த வேலையே தொடங்க போராங்கண்டு தெரியல. பாக்கலாம்..!

அப்பறம் சாதிக் உங்ககிட்ட சந்தோசமான செய்தி ஒன்னு சொல்லலாமுண்டு இருந்தேன். இப்பதான் ஞாபகத்துல வந்திச்சி. நம்ம ஊரு செய்திதான் நம்ம ஊரு போவ போவ முன்னேற்றம் அடஞ்சிக்கிடே போவுதுண்டுதான் சொல்லணும்.

அப்புடி யன்னா சந்தோசமான செய்தி சலீம். முடிச்சிபோட்டுக்கிட்டு போவாமே ஞாபகம் வந்ததோட சொல்லிடுங்க. இல்லாட்டி அதயே நெனச்சி எனக்கு தல வெடிச்சி போய்டும்.

இதுக்கு மேலயும் சொல்லாமே இருந்தா திட்டிப்புடுவீங்க சாதிக். . சொல்லிடறேன். நம்ம ஊர்ல பொருட்காட்சி வருவதாக கேள்விப்பட்டேன். அதுவும் நல்ல விசேசமா நடக்க போவுதாம். நம்ம காதிர் முகைதீன் மேல்நிலை பள்ளி மைதானத்துல தான் எடம் கொடுக்குறாங்களாம். இப்புடி வருசத்துக்கு ரெண்டு மூணு வாட்டி எதாச்சும் கண்காட்சி, பொருட்காட்சின்டு ஏற்பாடு பண்ணுனா நல்லா இருக்கும். அனாச்சார கலாச்சாரத்துலேந்து மாற்ற ஒரு வாய்ப்பாகவும் இருக்கும்.வூட்டுலேயே அடைஞ்சி கெடக்குற போம்புளையளுக்கும் கொஞ்சம் பொழுது போக்காகவும் இருக்கும்.நீங்க என்னா நெனக்கிறீங்க..?

நீங்க சொல்றது சரிதான் சலீம். பட்டுக்கோட்டைல போடுற மாதிரி நம்ம ஊர்லயும் அடிக்கடி பொருட்காட்சி கண்காட்சி நடந்தா வெளியூருக்கு போறது கொஞ்சம் குறையும். அனால் எந்த அனாச்சாரமும் நடக்காம கண்காணிக்க ஏற்பாடு செய்யணும். இதெ தொடர்ந்து நடத்திவந்தா கந்துரிக்கடக்கி போற கூட்டம் எல்லாம் இங்கே வந்துடுவாங்கண்டு சொல்லுங்க.

அப்பறம் இன்னொரு செய்தி கேள்விப்பட்டியலா சாதிக். நம்ம ராஜாமடம் போற ரோட்டுல கேட்டுவாசல் கிட்டே அடிக்கடி ஆக்சிடன்ட்டு நடக்குதுல 
அப்புடியா சலீம்... அந்த கேட் ரோட்ட அவசியம் சரி பண்ணனும். ரெண்டு ரோடா பிரிஞ்சி இருக்குறது தெரியாம வெளியூர்லேந்து வாகனம் ஓட்டிக்கிட்டு வர்றவங்க அந்த கேட்ல மோதி அநியாயத்துக்கு ரெண்டு மூணு பேரு செத்து இருக்காங்க. அப்பறம் உள்ளூர் காரவங்களுக்கும் பைக்குல மறதியா இந்த ரோட்டு பக்கமா போய் ஆக்சிடன்ட் ஆயி கை காலு முறிஞ்சி போய் இருக்கு. புதுசா போட்ட ரோட்ட திறந்து பழைய ரோட்ட மூடிட்டா இப்புடி அடிக்கடி விபத்து நடக்காது. அதுக்கு பொது மக்கள் தான் நடவடிக்கே எடுக்கணும். ஆனா சகோதரர் தனி மனிதனா முயற்சி எடுக்குறாரே நிச்சயமா நம்ம எல்லோரும் அவர பாராட்டனும்.

நீங்க சொல்றது சரிதான் சாதிக். இந்த காலத்துலெ பொது நலன்லெ அக்கறையா யாரு செயல் படுறாங்க. எல்லாரு அவங்க அவங்க வேலையைத்தானே பாத்துகிட்டு போறாங்க. நூத்தூலெ ஒரு மனுஷன் தான் இந்த மாதிரி எறங்கி சமூக சேவை செஞ்சிகிட்டு இருக்காங்க. இந்த மாதிரி ஆளுகலெ நாம தான் ஊக்கப்படுத்தணும்.

நீங்க ஒன்னு சலீம். நம்ம ஊர்ல என்னத்த நல்லது செஞ்சாலும் பின்னாடி கொர சொல்லத்தான் ஆள் இருக்கும். அனால் இப்பொ உள்ள இளைய தலைமுறைங்க விழிப்புடனே செயல் படறாங்க. பழைய நம்ம காலம் மாதிரி இல்லே.

சரி சாதிக்கு. நம்ம சின்ன வயசு கூட்டாளி கமாலு வாக்கிங் போலாம்ண்டு கூப்பிட்டான். எனக்கு வெய்ட் பண்ணிக்கிட்டு நிப்பான். நா போயிட்டு வர்றேன். இன்ஷா அல்லாஹ் பிறகு பார்ப்போம்.

அதிரை மெய்சா
myshaadirai@rediffmail.com

Thursday, January 31, 2013

[ 2 ] டீக்கடை சந்திப்பு ! தொடர்கிறது...

அஸ்ஸலாமு அலைக்கும் சாதிக் நல்லா இருக்கீங்களா...?

வ அலைக்கும் சலாம் சலீம் நீங்க எப்புடி இருக்கீங்க. பட்டுக்கோட்டக்கி வேலக்கி போனதுலேர்ந்து ஆளையே பார்க்க முடியலே. நம்மளையும் கொஞ்சம் பார்த்துக்குங்க.

ஆமா நம்மொ பட்டுக்கோட்டைல வேல பாக்குரதாலே வாரத்துக்கு ஒரு நாளக்கி தான் லீவுல வருவேன். வந்தாக்கா எதாச்சும் இங்கே வேல வந்துடும் வேற எதுவும் தப்பாநேனச்சிக்கிடாதிங்க.இப்பொதான் அசர் தொழுதுட்டு வர்றேன்.அப்புடியே டீ சாப்பிட்டுட்டு மொவன கூட்டிகிட்டு பட்டுக்கோட்ட வரைக்கும் போகணும்ன்டு நெனச்சிக்கிட்டு இறிக்கிறேன் அப்புடியே ஊட்டுக்காரவங்களும் கொஞ்சம் சாமானுவொ வாங்கிட்டு வரச்சொன்னாங்க. சாதிக்.

எதுக்கு சலீம் பட்டுக்கோட்டக்கி இந்த நேரத்துலே. போறீங்க பஸ்ல கூட்டமாவுல இறிக்கிம் அதுவும் மொவன வேற கூட்டிக்கிட்டு போறீங்க. அப்புடி என்னா வேலையா போறீங்க..?

பஸ்சுல யாரு போறது பைக்குள தான் போகணும் சாதிக்.  எம்மொவனுக்கு பல்லு வலிக்கிதுண்டு அழுவுறான். அதான் பட்டுக்கோட்டக்கி போய் பல்ல புடுங்கி உட்டுடலாமுண்டு கூட்டிக்கிட்டு போறேன். அப்பறம் ஊட்டுக்காரவோ வாங்கி கேட்ட சாமானுவஎல்லாம் இன்னக்கே வாங்கி கொடுத்தாத்தான். நாளக்கி வேல இருக்குது. .

ஏம்ப்ப சலீம் பக்கத்துலே பல்லு டாக்டர வச்சிக்கிட்டு  இவ்வளவு செரமப்பட்டு கிட்டு போவனுமா...? நம்மளுவொல நம்பித்தானே இங்க பல்லு ஆஸ்பத்திரி வச்சி இருக்காங்க பேபி நகைகடக்கி பக்கத்துலேயே இருக்கு. அதுக்கு நம்ம தானே ஆதரவு கொடுக்கணும்.

ஆமா சாதிக் நீங்க சொல்றதும் சரிதான் சரி நல்ல டாக்டரா..? நல்லா பாக்குறாங்களாமா..? புதுசா கேள்வி பட்ரேனே...??அதான் யோசனையா இருக்கு...

என்னா இப்புடிகேட்டுபுட்டிங்க சலீம். நல்ல டாக்டரு நல்ல கவனிச்சி பொறுமையா பாக்குறாரு. நான்கூட ஒரு பல்லு புடிங்கி இருக்கேன். புடுங்குன வலியே தெரியல.அப்போதான் நான் நெனச்சேன் நாம இனிமே பல்லு வலிண்டா கவலைபட வேண்டிய தேவை இல்லே. பக்கத்துலேயே நல்ல டாக்டரா வந்துட்டாருண்டு சந்தோசப்பட்டேன்.நம்ம ஆளுங்களுக்கு வெளியூருக்கு போய் அங்க உள்ள டாக்டர்ட்ட காச அள்ளிக்கொடுத்துபுட்டு வந்தாதான் சீக்கு நல்லா போவாட்டியும் நல்லா போன மாதிரி தெரியும். இந்த மனச முதல்லெ மாத்தணும்.

சரி ஆத்திரப்படாதீங்க சாதிக் சும்மா தெரிஞ்சிக்கலாம்ண்டு தான் கேட்டேன். அப்புடீண்டா ஆறுமணிக்கித்தானே கெரண்டு வரும் கெரண்டு வந்த ஒடனே தான் போவனும்.நம்ம வேலை எல்லாத்தையும் சகுனம் பாக்குற மாதிரி கெரண்ட இருக்குதாண்டு பாத்துதான் போகவேண்டிய சூழ்நிலையா இருக்குது.

கெரண்டு தொல்ல தானே பெருன்தொல்லயா இருக்கு. சலீம் ஒரு நாளக்கி பத்துவாட்டி போவுது. கெரண்ட நம்பி ஒரு வேலையும் செய்ய முடியல. இன்னம் இந்தகெரண்ட சரி பண்ண மாட்டேன்குறாங்க. கூப்பன்ல இந்த எலவச சாமானே கொடுக்குறதெ நிறுத்திட்டு கெரண்ட ஒழுங்கா கொடுத்துட்டா ஆளுங்கச்சிக்கி நல்ல பேருதானே.உங்கள்ற யோசனை என்னா...?

மக்களுவொலுக்கு அதா தெரியிது சாதிக். அரசாங்கம் நூறு ரூபாயையும் அரிசியையும் வெல்லத்தையும் கொடுத்தாத்தான் எல்லாத்தையும் மறந்துடுரான்களே.! இந்த இலவசத்த வச்சித்தானே அரசியலு நடந்துகிட்டு இருக்கு.

அப்புடி சொல்லாதீங்க சலீம் நீங்க பல வகையிலே சம்பாரிச்சி வச்சி இருக்கிறீங்க. அதுனால உங்களுக்கு ஒன்னும் பிரச்சன இல்லே ஏழை எளியதுவோ என்னா பண்ணும்..? அவங்களுக்கும் இப்படி அரசாங்கம் ஏதாவது கொடுத்தாதானே காவயிராவது நெறையும். அதெ நம்ம கொற சொல்லகூடாது.

அதுவும் சரிதான் நா ஆத்துரத்துலே அப்புடி சொன்னேன். அப்பறம் சாதிக் கூப்பன்ல இந்த வருஷம் பொருளுவொ வாங்க உள் தாள்ண்டு ஒன்னு வச்சி சீல் அடிச்சி கொடுக்குராங்களே உங்க வூட்டுல வாங்கிட்டாங்களா..? எங்க வூட்டுல வாங்கிட்டதா எங்க வூட்டுக்காரவோ சொன்னாங்க.

எங்க வூட்டுளையும் எம்மொவன் போய் வாங்கி கொடுத்துட்டான்டு எங்கூட்டு காரவொளும் சொன்னாங்க சலீம். அந்த உள் தாள் பேப்பர கிளிச்சிப்புடாமே வர்ற வருஷம் வரைக்கும் பத்தரமா வச்சிக்கிடுங்க இல்லாட்டி ரேசன்ல சாமான் வாங்க முடியாது. அதோட பேருவொ வுடு பட்டு போயிருந்தாலும் இல்லாட்டி வூட்டு விலாசம் மாத்துறதா இருந்தாலும் பாரம் ஒன்னு கொடுக்குறாங்க. அத பூர்த்தி செஞ்சி இந்த பிப்ரவரி மாசம் கடைசிக்குள்ள கொடுத்துடுங்க. என்னா நா சொல்றது காதுல வுளுவுதா சொல்றத கேக்காம மூஞ்சிய தீக்கி வச்சிக்கிட்டு ஏன் நிக்கிறீங்க என்னாச்சிப்பா..?

அதே ஏன் கேக்குறீங்க சாதிக் போன வாட்டி அப்புடித்தான் அவங்க கொடுத்த பாரத்துல கரக்டா பேர எழுதி கொடுத்தும் தப்பு தப்பா பதிஞ்சி வந்துச்சி இன்னமும் கடைசி எழுத்து தப்பாத்தான் இருக்கு. ஓட்டு ஐ.டி ளையும் அப்புடித்தான் நாம ஒன்னு எழுதிக்கொடுத்தா அவங்க ஒன்னு எழுதிடறாங்க. வேல பாக்குற ஆபிசர் கொஞ்சம் கவனித்து பொருப்போட சரிபாத்து கொடுத்துட்டா நமக்கும் டென்சன் இல்லாம போய்டும் அவங்களுக்கும் ரெண்டு வேல இருக்காது. எல்லாம் நம்ம கொடுக்குற வரிப்பணம் தானே சாதிக்கு...!

சலீம் நீங்க சொல்றது நூத்துக்கு நூறு சரியான செய்திதான். அதெல்லாம் ஆரம்பத்துலேதான் அப்புடியாப்பட்ட தப்பு நடந்திச்சி இப்போ எல்லாத்துலயும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரக்கூடாதுண்டு சரியா பாத்து பதியிறாங்க. அதுக்கு காரணம் இருக்கு ஆதார் அட்டைண்டு புதுசா ஒன்னு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வந்து பதிஞ்சிட்டு போனாங்கள்ள அது வந்துட்டா அதுல எல்லாமே சரியாய் இருக்கனும்ண்டு இப்பொ கவனமா செய்றாங்க இனிமே நீங்க கவலைப்பட வேண்டிய தேவை இல்லெ. நீங்க போய் இப்பவே பாரத்தெ எழுதி கொடுத்துடுங்க..கொஞ்சம் வெள்ளனமேயே போங்க இல்லாட்டி கூட்டமா இரிக்கிம்

சரி சாதிக் நாளக்கி அந்தவேலைய முதல்ல போய் பாத்துட்றேன். இந்த ஆதார் அட்டெண்டு என்னனமோ சொன்னியே அது பதியிரத்துக்கு ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னாடி மக்கள் தொகெ கணக்கு எடுக்க வரும்போது சிலிப்பு ஒன்னு கொடுத்தாங்கலாமுல அத காட்டுனாத்தானே பதிய முடியுமாம்,எங்க தெருவு சானாவயலுக்கெல்லாம் அப்புடி ஒன்னும் கொடுக்கலையே..? அப்போ நாங்க எப்போ பதியிறது...? அதப்பத்தி செய்தி கேள்விப்பட்டா கேட்டு வைங்க

இப்போவே சொல்லிடறேன் சலீம் எனக்கு தெரியும் கேள்வி பட்டேன். அது விடுபட்டு போனவங்களுக்கு பதிய இன்னும் ரெண்டு,மூணு மாசத்துலே மறுபடியும் வருவாங்களாம், அப்போ மறக்காம பதிஞ்சிடுங்க

சரி சாதிக் அதான் ஆறு மணி ஆவப்போவுதுல கெரண்டும் வர்ற நேரமாச்சி இங்கேயே மகரிபு தொழுதுட்டு எம்மொவன கூட்டிக்கிட்டு பல்லு புடுங்க நம்ம ஊரு டாக்டர்டையே போறேன்.

இன்ஷா அல்லாஹ் அப்புறமா பாக்கலாம்...

அதிரை மெய்சா

Monday, January 28, 2013

[ 1 ] டீக்கடை சந்திப்பு...

அஸ்ஸலாமு அலைக்கும் சலீம்

வ அலைக்கும் சலாம் சாதிக்
என்னாப்பா சாதிக் நல்லா இருக்கிறியா..? இப்போ எங்க இருக்கே. கொஞ்ச நாளா ஆளையே காணோம். சவுதியிலேந்து வந்ததுக்கு பொறவு ஆளயே பாக்கமுடியலே..?

ஆமா சலீம் நல்லா இருக்கிறியா..? ஒன்னே நானு பாத்து ரொம்ப நாளாச்சில .
நா சவூதிய முடிச்சிட்டு வந்ததுமே நம்ம வேல பாத்தா பட்டுக்கோட்டை பழைய கடையிலேயே வேலக்கி சேந்துட்டே.

ஏன் அதுக்குலேயும் அப்புடிஎன்ன அவசரம் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து கிட்டு போனா என்ன. வந்து கொஞ்ச நாள்ளே ஏம்ப்பா  ஊரவுட்டு ஓடிப்போயிட்டியே சாதிக் ?

சலீமு வெலவாசி எல்லாந்தா நம்ம ஊர்ல தலகீழா இருக்குதப்பா... மீனு மார்கட்டு பக்க போவவே பயமா இருக்கு.மீனு யான வெல குதுர வெல இலப்பா சொல்றாங்க இதுக்கு சவூதி தேவல அங்கே ஒரு மனவு காள மீனு 40, 50,ரியாலுதான் விக்கிது.ஒரு மனுவுன்டா 4 கிலோ நம்மூரு காசுக்கு 800 ரூவா வரும். ஆனா நம்ம ஊருல 1 கிலோ கூட இல்லாத மீன 300, 400 னுன்டுல சொல்றாங்க. எதயு நம்மலப்போல நடுத்தர வாதி காசுகொடுத்து வாங்க முடியல. 1000 நோட்டு எல்லாம் அந்த காலத்துல 10 ரூபா நோட்டுக்கு உள்ள மதிப்பு  போல போய்டிச்சி. என்னா பன்றதுண்டு ஒன்னும் புரியல.

என்னா செய்றதுண்டு எனக்கும் ஒன்னும் புரியல சாதிக். .எல்லாம் வெளிநாட்டுலேந்து வர்றவங்க மார்கட்டெ கெடுத்து புட்டாங்க. கொடுவா மீனு திண்டு ரொம்ப நாலச்சிண்டு சொல்லிக்கிட்டு சொல்லுற வெலய 1000, 2000 ன்டு கொடுத்துட்டு வாங்கிட்டு போறாங்க. இப்புடி செஞ்சா நாம எப்புடி வாங்கி திங்க முடியும். சரி அத அப்பறமா பேசிக்கிடலாம் ஒன்கிட்ட ஒன்னு சொல்லலாம்ண்டு நெனச்சேன்.மொவளுக்கு வூடு  கட்டி கொடுக்கணும். அதான் மனக்கட்டு ஒன்னு நம்ம தெரு பக்கம் வருதாண்டு பாத்துக்கிட்டு இருக்கேன். ஒன்னும் அமைய மாட்டேங்குது. அப்புடியே வந்தாலும் 15லட்சம் 20 லட்சம் வருமுண்டு சொல்றாங்க. கேட்டா தலைய சுத்துது. எப்புடி நெலம் வாங்கி எப்புடி வூடு  கட்டி கொடுக்குரதுண்டு தெரியல..? எங்கயாச்சும் கொரச்ச வேலையில யாரும் மனக்கட்டு போட்டு வித்தா சொல்றியா..?

ஆமாம்ப்பா சலீம் எல்லா நம்ம ஆளுவ செஞ்ச வேல இது.. புரோக்கரு மாறுவோட ஐடியா அமரிக்கா ஆஸ்திரேலியா லண்டன் துபாயிண்டு எல்லாரும் நல்லா சம்பாரிக்கிராங்கண்டு ரேட்ட எல்லா ஏத்தி உட்டு வச்சிட்டாங்க. இதுனால ஏழ நடுத்தர வாசி நம்மலபோல ஆளுவோ ஒன்னும் வாங்க முடியல.வருங்காலத்துல எல்லாம் கொமருவோ எப்புடி கர சேரப்போவுதுண்டு தெரியல. சரி அப்புடி நல்ல மனையா வந்தா சொல்றேன். நானும் எப்பவாச்சும் ஏதாவது வந்தாக்கா வாங்கிப்போட்டு வித்துகிடுரதுதான். இல்லாட்டி உள்ளூர்ல இருந்து கிட்டு எப்புடி காலத்த தள்ள முடியும்..?  

அப்போ ஓம்பாடு பரவாஇல்லே. எப்புடியோ நியாயமா ஹலாலா சம்பாரிச்சா சரி.அப்பறம் எல்லாம் மாப்புளக்கி வூடு கொடுக்குற பலக்கத்த இன்னம் வச்சிரிக்கிறது நாலாதான் சாதிக் மனக்கட்டு ரேட்டு ஏறிப்போச்சி. வரதட்சன வாங்க மாட்டோம்ண்டு சொல்லி கல்யாணத்த பண்ணி புட்டு அது என்னா வூடு மட்டும் கேட்கிறாங்க..? இத எந்த கணக்குல சேக்குறது, ஒண்ணுமே புரிய மாட்டேன்குதப்பா ! வயலுவோல எல்லா அழிச்சிட்டு மனக்கட்டு போட்டு வித்துட்டாங்க. இனி நம்ம ஊரு பக்கம் வெல்லாமெண்டா என்னாண்டு நம்ம பேரப்புள்ளயளுவோ கேக்க போரானுவோ. 

அப்பறம் சாதிக்  கமலஹாசனப்பத்தி விசுவரூபமுண்டு ஒரு படக்கதயெ பத்தி செய்தி கேள்விப்பட்டியா..?

அதான் உலக நாயகன்டு பேர வச்சிக்கிட்டு உலக முசுலிமயே உசுப்பெ ஏத்தி விசுவரூபமுண்டு படத்த எடுத்து முசுலீம் மக்களுவொல்ட்ட பேர கெடுத்து கிட்டாரே சலீம்.

சாதிக் நா சின்னப்புள்ளயைலேந்து கமல் படமுண்டா கடைக்கி போவாமே லீவபோட்டுட்டு போய் பாப்பேன்ப்பா..சின்னப்புள்ளைலே கமலு போட்டாவே கண்ணாடி பீரோவுல ஒட்டி வச்சதுக்கு எங்க வாப்பாட்டே நா அடி வாங்கி இருக்கேன் தெரியுமா..? அப்போவே என் வாப்பா சொல்லுவாரு சினிமா நடிகன்ற போட்டோவ ஏண்டா ஊட்டுக்குள்ள ஒட்டி வக்கிறே தருத்திரியம்டாண்டு சொல்லுவாரு நா கேக்க மாட்டேன். இப்போதான் அதெல்லாம் ஞாபகத்துக்கு வருது.

சலீம் நானும் அப்புடித்தாம்ப்பா கமலு படமுண்டா எனக்கு உசுரு ரெண்டம்பில்ல பட்டுகோட்டக்கி சைக்கிள்ள நானும் ரெஜாக்கும் டபுள்ஸ் போட்டுக்கிட்டு போய் பாப்போம். அப்போவெல்லாம் அவரு படத்துலே முஸ்லீமெ பத்தி தப்பா ஒன்னும் சொல்லல. நல்லா தானே நடிச்சிக்கிட்டு இருந்தாரு. இவ்வளவு வருசமா அரசியலுக்கு கூட வர ஆசைப்படாம அவரு நடிப்ப மட்டும் நடிச்சிக்கிட்டு இருந்தாரு திடீர்ண்டு ஏன் யார்ர தூண்டு கோல்லெ எடுத்தார்ன்டு தெரியல. இப்புடி நம்மலுவொல தீவிரவாதியா படம் எடுத்தாரே இதுல ஏதோ உள்நோக்கம் இருக்குற மாதிரி தெரியுது

சாதிக் அப்போ கமழு படத்தெ இனிமே நம்ம ஆளுவோ யாரும் பாக்க மாட்டாங்கன்டு சொல்லு..

சலீம் நம்மாளுவொலுக்கு ஒன்னும் கேரண்டியா சொல்ல முடியாது. யாரு எப்புடி போனாத்தான் என்னன்டு நெனச்சி சமுதாய சிந்தனையில்லாம ரொம்ப பேரு இருக்கிறாங்க. இனிமேயாச்சும் புரிஞ்சிக்கிடுவாங்கண்டு நெனக்கிறேன்.   

சாதிக் என்ன செய்றது. எது எப்புடியோ இந்த நாடு சுதந்திரம் அடைய நம்ம ஆளுவோலும் ரொம்ப பாடுபட்டு இருக்காங்க.ஆனா நம்ம எல்லார்ர பேரையும் மறச்சது மட்டுமல்லாமே இப்போ ஒவ்வொரு ஆளும் தீவிரவாதிண்டு சொல்ல கெலம்பிட்டானுங்க இப்புடி சொல்லி அவன்னவன் சுயநலத்துக்காக எல்லார்ட்டயும் ஒத்துமையா இருக்கிற நம்பல பிரிச்சி லாபம் அடைய பார்க்குரானுவோ. நம்மலுவோல எல்லாரும் தீவிரவாதியா நெனக்க வக்கிரானுவோ வெவரம் தெரிஞ்ச மக்களுக்கு இது தெரியாமலையா இருக்கும்.

சலீம் நா ஒன்னோட பேசிக்கிட்டே மறந்துட்டேன்ப்பா நம்ம கொல்லைலே ஆறுமுகமும் மணி அண்ணனும் வேல செஞ்சிகிட்டு இருக்காங்க. நா போய் வடையும் டீயும் வாங்கி கொடுத்துட்டு வந்துடுறேன்.

சரி சாதிக் அப்புறமா பாக்கலாம். அந்த மனக்கட்டு செய்தியே மறந்துடாதே.

தொடரும்...
அதிரை மெய்சா