.

Pages

Showing posts with label தனலட்சுமி வங்கி. Show all posts
Showing posts with label தனலட்சுமி வங்கி. Show all posts

Friday, March 13, 2020

தனலட்சுமி வங்கி அதிராம்பட்டினம் கிளை வாடிக்கையாளர்கள் சந்திப்புக் கூட்டம்!

அதிராம்பட்டினம், மார்ச் 13
தனலட்சுமி வங்கி அதிராம்பட்டினம் கிளை வாடிக்கையாளர்கள் சந்திப்புக் கூட்டம் கிளை வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு கிளை மேலாளர் திருமதி ஆர். பாலா தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக வங்கியின் சென்னை மண்டல முதுநிலை மேலாளர் முகமது அஸ்ரப் அலி கலந்துகொண்டு பேசியது;
கேரளத்தை தலைமையிடமாகக் கொண்ட தனலட்சுமி வங்கி, தனது 93-வது ஆண்டுகாலப் பாரம்பரியம் மிக்க சேவையை அதிநவீன தொழில்நுட்பத்துடனும், ஒப்பற்ற திட்டங்களுடனும் வழங்கி வருகிறது. வங்கி ரூ.63.18 கோடி இலாபத்தை ஈட்டியுள்ளது. வங்கியின் வாரக்கடன் 1.62 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தப் புள்ளி விவரங்கள் வங்கி சிறப்பான வளர்ச்சியையும், மேலாண்மையையும் பறை சாற்றுகின்றன.

தென்னிந்திய வங்கிகளின் ஸ்த்திரத்தன்மை குறித்து சில வதந்திகள் ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது. ஆனால் சர்வசேத விதிகளின் படியும், பாரத ரிசர்வ் வங்கியின் விதிப்படியும் ஒரு வங்கியின் ஸ்திரத்தன்மையானது CRAR எனப்படும் Capital Risk Weighted Asset Ratio என்ற விகிதத்தின் படியே அளவிடப்பட வேண்டும். இதில், மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் 31-12-2019 காலாண்டு நிலவரப்படி, தனலட்சுமி வங்கியின் விகிதமானது 13.55 சதவிகிதமாகும். ஆனால் பாரத ரிசர்வ் வங்கியின் விதிப்படி 9 சதவிகிதம் இருந்தாலே போதுமானது.

எமது வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற வங்கிச்சேவைகளை தொடர்ந்து வழங்கிட தயாராக இருக்கிறது. எனவே, வாடிக்கையாளர்கள் வங்கியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்குமாறு அன்போடு வேண்டுகிறோம் என்றார்.

மேலும், கூட்டத்தில் வாடிக்கையாளர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கமளித்துப் பேசினார். நிறைவில், கிளை துணை மேலாளர் டி.சுரேஷ் நன்றி கூறினார்.

முன்னதாக, தனலட்சுமி வங்கி அதிராம்பட்டினம் கிளை வாடிக்கையாளர்கள் சந்திப்புக் கூட்டம் அதிராம்பட்டினம் முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் அருகில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக, வங்கியின் சென்னை மண்டல முதுநிலை மேலாளர் முகமது அஸ்ரப் அலி கலந்துகொண்டு, வாடிக்கையாளர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கமளித்துப் பேசினார். இதுபற்றி, வெளிநாடு வாழ் உறவினர்கள், நண்பர்களிடம் எடுத்துரைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை, பிரசன்னா, வெங்கடேஷ், ரம்யா, சண்முகம் ஆகியோர் செய்திருந்தனர்.
 

Thursday, January 9, 2020

அதிராம்பட்டினத்தில் இலவச தென்னை மரக்கன்றுகள் வழங்கல் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.09
தனலட்சுமி வங்கி 93-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, பசுமையை வலியுறுத்தி இலவச தென்னை மரக்கன்றுகள் வழங்கும் முகாம் அவ்வங்கியின் அதிராம்பட்டினம் கிளை வளாகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட, அதிராம்பட்டினம் மருத்துவர் டாக்டர் எச். அப்துல் ஹக்கீம் முகாமை தொடங்கி வைத்து, வங்கி வாடிக்கையாளர்கள் 93 பேருக்கு தென்னை மரக்கன்றுகள் இலவசமாக வழங்கினார். பேராசிரியர் எம்.சீனி கமால் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

வங்கி கிளை மேலாளர் திருமதி ஆர்.பாலா தலைமை வகித்து, வரவேற்றுப் பேசினார். முகாமில், வங்கி அலுவலர்கள் பிரசன்னா வெங்கடேஷ், கே.ரம்யா, பி.சண்முகம் மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 

Monday, December 9, 2019

அதிராம்பட்டினத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.09
தனலட்சுமி வங்கி 93-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, வங்கியின் அதிராம்பட்டினம் கிளை, தஞ்சை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஆகியன சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் வங்கி வளாகத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.

வங்கி கிளை மேலாளர் திருமதி ஆர்.பாலா தலைமை வகித்து, முகாமை தொடங்கி வைத்தார். இதில், தஞ்சை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவக்குழுவினர், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்து, உரிய மருத்துவ ஆலோசனை வழங்கினர். முகாம் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 3.30 மணி வரை நடைபெற்றது.

முகாமில், வங்கி துணை மேலாளர் டி.சுரேஷ், வங்கி அலுவலர்கள் கே.ரம்யா, பி.சண்முகம் மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 

Wednesday, March 6, 2019

அதிராம்பட்டினத்தில் புதிய ஏடிஎம் சேவை மையம் தொடக்க விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச்.06
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் தனலட்சுமி வங்கி கிளையின் 2-வது ஏடிஎம் சேவை மையத்தின் தொடக்க விழா பழஞ்செட்டித்தெரு பஸ் நிறுத்தம் அருகே (கூட்டுறவு வங்கி அருகில்) அமைந்துள்ள எம்.எம்.எஸ் யூசுப் ஹாஜியார் கட்டிடத்தில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது.

விழாவிற்கு, வங்கி கிளை மேலாளர் ஆர். பாலா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வங்கி மண்டல மேலாளர் சன்னி ஜார்ஜ் ஏடிஎம் சேவை மையத்தை திறந்து வைத்தார். விழாவில், வங்கி முநிலை மேலாளர் ஆண்டனி இருதயராஜ், வங்கி அலுவலர்கள் டி.சுரேஷ், பி.விஷ்வதீப், கே.ரம்யா, பி.சண்முகம் மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த வங்கியின் முதலாவது ஏடிஎம் சேவை மையம் பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் அமைந்துள்ள கிளை அலுவலகத்தில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.