.

Pages

Showing posts with label தப்லிக் ஜமாத். Show all posts
Showing posts with label தப்லிக் ஜமாத். Show all posts

Tuesday, January 29, 2019

திருச்சி இனாம்குளத்தூர் இஜ்திமா மாநாடு நிறைவு ~ நேரடி ரிப்போர்ட் (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜன.29
தமிழ்நாடு இஜ்திமா மாநாடு திருச்சி அருகே, இனாம்குளத்தூரில் ஜன.26, 27, 28 ஆகிய 3 நாட்கள் பிரமாண்டமாக நடைபெற்றது.

கடந்த 3 நாட்களாக நடைபெற்ற இந்த மாநாட்டில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு தொடர் சொற்பொழிவு ஆற்றினர். இதில், இறையச்சம், வாழ்வியல் நெறிமுறைகள், நற்பண்புகள், மறுமை வாழ்வு பற்றிய சிந்தனைகள் இடம் பெற்றது. நேற்று (ஜன.28) திங்கட்கிழமை மதியம் நடைபெற்ற மாநாட்டின் நிறைவில் தப்லீக் ஜமாத் அகில உலக பொறுப்பாளர் டெல்லி முகமது சாத் மவுலானா சொற்பொழிவை இந்தி மொழியில் நிகழ்த்தினார். அதன் தமிழாக்கத்தை திருச்சி ரூஹுல் ஹக் மவுலான மொழி பெயர்த்தார். இதன், பின்னர், 30 நிமிஷங்கள் சிறப்பு துஆ ஓதப்பட்டன. இறை அச்சத்தோடு வாழ்தல், இம்மை மற்றும் மறுமைக்கான வாழ்வு, உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும், மும்மாரி மழை பெய்யவும், நாட்டு மக்கள் சுபிட்சமாக வாழவும், பிறருக்கு உதவுதல், கீழ்படிதல், உதவி புரிவது, தொண்டு புரிதல், ஈமானோடு இறுதி வரை இருப்பது, இறைவன் காட்டிய வழிமுறைகளை பின்பற்றி வாழ்வது உள்ளிட்டவை பிரார்த்தனையில் இடம்பெற்றது.

மாநாடு துளிகள்:
1. திருச்சி ~ திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டிபுதூரில் இருந்து இனாம்குளத்தூர் வரை லட்சக்கணக்கானோர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.

2. வாகனங்கள் நிறுத்துவதற்கும் பல ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடு செய்யப்பட்டது. குடிநீர் வசதி, குளியல் அறை, உணவு, கழிவறை, தூங்குவதற்கான இடம், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் என அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

3. இரவை பகலாக்கும் வகையில் மாநாட்டு திடல் மற்றும் மக்கள் வந்து செல்லும் பகுதி முழுவதும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

4. மாநாட்டில் நபிவழி சுன்னத் அடிப்படையில் சுமார் 150 க்கும் மேபட்டோருக்கு எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.

5. வாய் பேசாத  ~ காது கேளாத வருகையாளர்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

6. ஒளு செய்வதற்கு, கழிப்பறை, சிறுநீர் கழிக்க மாநாட்டின் மைதானப் பகுதிகளில் தனித்தனியாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும், திருச்சி சுற்றுவட்டார நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள இடங்களில் இஜ்திமா வருகையாளர்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

7. மாநாட்டில்,  தமிழகத்தின் தென் ஆற்காடு (01), கோவை (02), வெளி மாநிலங்கள் (03), இராமநாதபுரம் (04), சேலம் (05), மதுரை (06), புதுக்கோட்டை (07), திருநெல்வேலி (08), பாரா ஜமாத் (09), திருச்சி (10), தஞ்சாவூர்(11), வட ஆற்காடு (12 ), செங்கல்பட்டு (13), சென்னை (14) என 14 மண்டலங்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டன. இப்பகுதிகளில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்தோர் அமர்ந்து இருந்தனர்.

8. ஒவ்வொரு மண்டலங்களுக்கும் தனித்தனியாக உணவுக்கூடங்கள் அமைக்கப்பட்டு அதில், இரவு, காலை, பகல் ஆகிய 3 வேளைகளுக்கான உணவு பரிமாறப்பட்டது. இப்பணிகளில் தன்னார்வ களப்பணியாளர்கள் ஈடுபட்டனர்.

9. மாநாட்டில் மருத்துவ முதலுதவிக்காக மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

10. மாநாட்டு வருகையாளர்களுக்கு வழிகாட்ட பிரதான சாலைப் பகுதிகளில் 'வழிகாட்டி பதாகைகள்' ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்தன.

11. மாநாட்டில் இஸ்லாமிய மார்க்க நூல்கள், தொப்பி, அத்தர், பழங்கள், சிப்ஸ், குளிர் பானங்கள், தின்பண்டங்கள், பேக்கரி கேக் வகைகள், பட்டர் பிஸ்கட்ஸ், மலைத்தேன், பனங்கருப்பட்டி, மசாலா பவுடர், சூப், சுண்டல் ஆகியவை விற்பனைக்காக தனி ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

11. மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வசதியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுன. வட மற்றும் தென் மாநிலங்களில் இருந்து வரும் ரெயில்கள் இனாம்குளத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று சென்றன. திருச்சி பேருந்து நிலையத்திலிருந்து மாநாட்டு நடைபெறும் இடத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

12. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்தரபிரதேசம், தெலுங்கானா, டெல்லி, பீகார் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இலங்கை, சவுதி, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் வந்து குவிந்தனர்.

13. மாநாட்டின் நிறைவில் நடைபெற்ற சிறப்பு துஆவில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

14. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் வந்ததால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இஸ்லாமிய தன்னர்வல இளைஞர்கள் வாகனங்களை ஒழுங்குபடுத்தியதோடு அதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.

15. வெளியூர் செல்லும் ஜமாத்தினர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. குறிப்பாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைவரும் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

16. மாநாட்டு திடல் நிரம்பி வழிந்ததால் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலர் வெளியில் நின்றபடி துஆ வில் கலந்து கொண்டனர். 

17. இதற்கு முன்பாக, தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் கடந்த 1983 ஆம் ஆண்டும், மேல்விஷாரத்தில் 1997 ஆம் ஆண்டும் பிரமாண்ட இஜ்திமா மாநாடுகள் நடைபெற்றன. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்தக்கது.

மாநாட்டில் இருந்து... 
எம். நிஜாமுதீன், 
ஏ.சாகுல் ஹமீது, 
பாருக், காதர்
 

Sunday, January 27, 2019

திருச்சி இனாம்குளத்தூரில் பிரமாண்ட இஜ்திமா மாநாடு ~ லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

அதிரை நியூஸ்: ஜன.27
ஜன.26, 27, 28 ஆகிய 3 நாட்கள் நடைபெறும் தமிழ்நாடு இஜ்திமா மாநாடு திருச்சி அருகே, இனாம்குளத்தூரில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.

நேற்று (ஜன.26) சனிக்கிழமை காலை பஜ்ர் தொழுகைக்கு பிறகு சிறப்பு துஆவுடன் இஜ்திமா மாநாடு தொடங்கியது. அதைத்தொடர்ந்து மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகள் நடைபெற்றன.

இந்த மாநாடு இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) தொடர்ந்து நடக்கிறது. மாநாட்டில், இறைவன் கட்டளையை நிறைவேற்றி இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் (ஸல்) வாழ்க்கை முறையை பின்பற்றி அனைவரும் வாழ வேண்டும், மறுமை வாழ்வை நினைத்து அதற்கு தகுந்தாற்போல் எப்படி வாழ வேண்டும், சகோதரத்துவம், மனிதநேயம், மனிதாபிமானம், நல்லொழுக்கம், ஒற்றுமை, பிறருக்கு உதவும் மனப்பான்மை, அனாதைகளை ஆதரித்தல், ஏழை ~ எளியோருக்கு உதவுதல், மகளிருக்குரிய உரிமை மற்றும் சலுகைகளை இஸ்லாமியம் அருளியபடி முறையாக கொடுத்து அவர்களை கவுரவப்படுத்துவது, குழந்தை வளர்ப்பு முறை பற்றி போதித்தல், வணிகத்தில் நேர்மை, கொடுக்கல் ~ வாங்கலில் நேர்மை, மது இல்லா வாழ்வு, உயரிய பண்பாட்டோடு வாழ்வது, இழிவு பேசுவதை தவிர்த்து வாழ்வது குறித்து தினமும் சொற்பொழிவு நடைபெறுகிறது.

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள பிரபல மார்க்க அறிஞர்கள் சொற்பொழிவு ஆற்றுகின்றனர். இதேபோல பஜ்ர், லுஹர், அஸர், மஹ்ரிப், இஷா ஆகிய 5 வேளை தொழுகையும் மாநாடு திடலில் நடைபெறுகிறது.

மாநாட்டில் திருமணம்:
வளர்ந்து வரும் நாகரிக உலகில் பிரமாண்டமான முறையில் திருமணங்கள் நடைபெற்று வரும் நிலையில், அதற்கு மாறாக நபிவழி சுன்னத் என்பதன் அடிப்படையில் எளிமையான முறையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மாநாட்டு திடலில் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு எவ்வித ஆடம்பரமும் இன்றி எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.

மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வசதியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வட மற்றும் தென் மாநிலங்களில் இருந்து வரும் ரெயில்கள் இனாம்குளத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்வதால் ரெயில் மூலமும் அதிக அளவில் முஸ்லிம்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

பிரமாண்ட பந்தல்:
திருச்சி ~ திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டிபுதூரில் இருந்து இனாம்குளத்தூர் வரை லட்சக்கணக்கானோர்  அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

வாகனங்கள் நிறுத்துவதற்கும் பல ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடு செய்யப்பட்டது. குடிநீர் வசதி, குளியல் அறை, உணவு, கழிவறை, தூங்குவதற்கான இடம், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. மாநாட்டு திடல் மற்றும் மக்கள் வந்து செல்லும் பகுதி முழுவதும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. இவை பார்ப்பதற்கு இரவை பகலாக்கும் வகையில் உள்ளது.

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்தரபிரதேசம், தெலுங்கானா, டெல்லி, பீகார் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இலங்கை, சவுதி, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் வந்து குவிந்தனர்.

சிறப்பு துஆ:
மாநாடு நாளை (ஜன.28) திங்கட்கிழமை பகல் லுஹர் தொழுகையுடன் நிறைவுபெற உள்ளது. முன்னதாக, உலக அமைதி, ஆரோக்கியம், பாதுகாப்பு, மறுமை வாழ்வு சிறக்க ஆகியவற்றை வலியுறுத்தி சிறப்பு பிரார்த்தனை நடைபெறும். இதில், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பாக, தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் கடந்த 1983 ஆம் ஆண்டும், மேல்விஷாரத்தில் 1997 ஆம் ஆண்டும் பிரமாண்ட இஜ்திமா மாநாடு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்தக்கது.

போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் இஸ்லாமிய தன்னார்வல இளைஞர்கள்:
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் வந்ததால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இஸ்லாமிய தன்னர்வல இளைஞர்கள் வாகனங்களை ஒழுங்குபடுத்தியதோடு அதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.

14 மண்டலங்கள்:
மாநாட்டில்,  தமிழகத்தின் தென் ஆற்காடு (01), கோவை (02), வெளி மாநிலங்கள் (03), இராமநாதபுரம் (04), சேலம் (05), மதுரை (06), புதுக்கோட்டை (07), திருநெல்வேலி (08), பாரா ஜமாத் (09), திருச்சி (10), தஞ்சாவூர்(11), வட ஆற்காடு (12 ), செங்கல்பட்டு (13), சென்னை (14) என 14 மண்டலங்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டன. இப்பகுதிகளில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்தோர் அமர்ந்து இருந்தனர்.

3 வேளை உணவு: 
ஒவ்வொரு மண்டலங்களுக்கும் தனித்தனியாக உணவுக்கூடங்கள் அமைக்கப்பட்டு அதில், இரவு, காலை, பகல் ஆகிய 3 வேளைகளுக்கான உணவு பரிமாறப்பட்டது. இப்பணிகளில் தன்னார்வ களப்பணியாளர்கள் ஈடுபட்டனர்.

மருத்துவ முதலுதவி:
மாநாட்டில் மருத்துவ முதலுதவிக்காக மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

வழிகாட்டல்:
மாநாட்டு வருகையாளர்களுக்கு வழிகாட்ட பிரதான சாலைப் பகுதிகளில் 'வழிகாட்டி பதாகைகள்' ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்தன.

ஸ்டால்கள்:
மாநாட்டில் இஸ்லாமிய மார்க்க நூல்கள், தொப்பி, அத்தர், பழங்கள், சிப்ஸ், குளிர் பானங்கள், தின்பண்டங்கள், பேக்கரி கேக் வகைகள், பட்டர் பிஸ்கட்ஸ், மலைத்தேன், பனங்கருப்பட்டி, மசாலா பவுடர், சூப், சுண்டல் ஆகியவை விற்பனைக்காக தனி ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
 
 
 
 
 
 

Saturday, February 10, 2018

அதிராம்பட்டினம் இஜ்திமா மாநாடு துளிகள் (நேரடி ரிப்போர்ட்)

அதிராம்பட்டினம், பிப்.10
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள மைதானப் பகுதிகளில், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட  இஜ்திமா மாநாடு (பிப்.09) வெள்ளிக்கிழமை மாலை அஸ்ர் தொழுகைக்கு பிறகு தொடங்கி சனிக்கிழமை (பிப்.10) இரவு இஷா தொழுகை வரை நடைபெற்றது.

மாநாடு துளிகள்:
1. அதிராம்பட்டினத்தில்  கடந்த 1983 ஆம் ஆண்டு இஜ்திமா மாநாடு நடைபெற்றது. கடந்த 35 ஆண்டுகளுக்கு பிறகு, 2 வது தடவையாக மீண்டும் இஜ்திமா மாநாடு இப்பகுதியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

2. இந்த மாநாட்டில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு தொடர் சொற்பொழிவு ஆற்றினர். இதில், இறையச்சம், வாழ்வியல் நெறிமுறைகள், நற்பண்புகள், மறுமை வாழ்வு பற்றிய சிந்தனைகள் இடம் பெற்றது.

3. மாநாட்டில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.

4. மாநாட்டு நிறைவில் சுமார் 30 நிமிடங்கள்  சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், அனைவரும் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.

5. இஜ்திமா மாநாட்டையொட்டி, அதிராம்பட்டினம் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மற்றும் அதன் வளாகப் பகுதிகளில் தொழுகையாளிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இடப்பற்றாக்குறையால் பள்ளிவாசல் எதிரே அமைக்கப்பட்ட பந்தலில் அமர்ந்து தொழுதனர்.

6. வாய் பேசாத  ~ காது கேளாத வருகையாளர்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

7. ஒளு செய்வதற்கு, கழிவறை, சிறுநீர் கழிக்க பெரிய ஜும்மா பள்ளிவாசல் மற்றும் அதன் அருகில் உள்ள மைதானப் பகுதிகளில் 3 இடங்களில் தனித்தனியாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. மேலும், அதிராம்பட்டினத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது,

8. தஞ்சை, கும்பகோணம், அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியினருக்கு தனித்தனியாக உணவுக்கூடங்கள் அமைக்கப்பட்டு அதில், இரவு, காலை, பகல் ஆகிய 3 வேளைகளுக்கான உணவு பரிமாறப்பட்டது. இப்பணிகளில் தன்னார்வ களப்பணியாளர்கள் ஈடுபட்டனர்.

9. மாநாட்டில் மருத்துவ முதலுதவிக்காக மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

10. மாநாட்டில், மருத்துவ அவசர சிகிச்சைக்காக, தமுமுக அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, மதுக்கூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஆம்புலன்ஸ் வாகனம் ஆகியவை நிறுத்தப்பட்டு இருந்தது. மேலும், பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையக் காவலர்கள் அடங்கிய மீட்புக்குழுவினர் தீ அணைப்பு வாகனத்தை தயார் நிலையில் நிறுத்தி வைத்து இருந்தனர்.

11. மாநாட்டில் போக்குவரத்து சீர் செய்தல், மாநாடு இடம் வழிகாட்டுதல், அவசர உதவி போன்ற பணிகளில் எஸ்.டி.பி.ஐ கட்சி தன்னார்வ களப்பணியாளர்கள் சுமார் 60 க்கும் மேற்பட்டோர் முழு நேரப்பணிகளில் ஈடுபட்டனர். மாநாட்டில் அவசர உதவி மையம் அமைத்து இருந்தனர்.

12. குடிநீர் விநியோகம், ஜூஸ் விநியோகம், தேநீர் விநியோகம் போன்ற பணிகளில் அதிராம்பட்டினம் மஹல்லா சங்கங்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர், ஆட்டோ ஓட்டுநர்கள் நலச் சங்கத்தினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

13. அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் மற்றும் பிரதான பஸ் நிறுத்தங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார், வேன், ஆட்டோ போன்ற வாகனங்கள் மூலம் பிற ஊர் வருகையாளர்களை மாநாடு நடைபெறும் இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர்.

14. மேலும், பிற ஊர் வருகையாளர்களுக்கு வழிகாட்ட பிரதான சாலைப் பகுதிகளில் 'வழிகாட்டி பதாகைகள்' ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்தன.

15. போக்குவரத்து நெருக்கடியைப் போக்க ஆம்னி பேருந்துகள் மற்றும் அரசு போக்குவரத்து பேருந்துகள் அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் பயணிகளை இறக்கி விட அறிவுறுத்தப்பட்டன. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வானங்கள் பெரிய ஜும்மா பள்ளிவாசல் பின்புறம் அமைந்துள்ள மைதானம் மற்றும் புளியமரக் கொல்லை ஆகிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டது.

16. மாநாட்டில் இஸ்லாமிய மார்க்க நூல்கள், தொப்பி, அத்தர், பழங்கள், சிப்ஸ், குளிர் பானங்கள், தின்பண்டங்கள், பேக்கரி கேக் வகைகள், பட்டர் பிஸ்கட்ஸ், மலைத்தேன், பனங்கருப்பட்டி, மசாலா பவுடர், சூப், சுண்டல் ஆகியவை விற்பனைக்காக தனி ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

17. மாநாட்டையொட்டி அதிராம்பட்டினம் கடைத்தெரு, பேருந்து நிலையம் மற்றும் தக்வா பள்ளிவாசல் மீன் மார்க்கெட் உள்ளிட்ட பெரும்பாலான பகுதி வியாபாரிகள் சனிக்கிழமை கடையடைப்பு செய்தனர்.

18. மாநாட்டில் மஹல்லா சங்கம் சார்பில் ஸ்டால்கள் அமைக்கப்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தது.

19. தூய்மைப் பணிகளில் அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

20. மாநாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், வல்லத்தை சேர்ந்த முகமது பாருக் மகன் அகமது அப்துல் காதர் மணமகனுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

21. மாநாட்டிற்கு வருகை தந்த பள்ளிச் சிறுவர்கள் காலையில் அருகில் உள்ள செடியன் குளத்தில் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனர்.

22. பெரிய ஜும்மா பள்ளிவாசல் மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள பரந்த மைதானங்களில் அனைத்து வசதிகளும் அருகே அருகே ஏற்பாடு செய்து இருந்ததால், மாநாடு வருகையாளர்களை பெரிதும் கவர்ந்தது. மாநாடு ஏற்பாட்டில் முழு நேரப்பணிகளில் ஈடுபட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நிறைவில் பிரார்தனை செய்யப்பட்டது.

- மாநாட்டில் இருந்து... 
எம். நிஜாமுதீன், 
ஏ.சாகுல் ஹமீது, 
என், முகமது அஜீம் 
மர்ஜூக்