.

Pages

Showing posts with label பல்சுவை செய்திகள். Show all posts
Showing posts with label பல்சுவை செய்திகள். Show all posts

Saturday, January 5, 2019

குஜராத்தில் ஓர் அரிய அதிசய நிகழ்வு!

அதிரை நியூஸ்: டிச.05
குஜராத் என்றாலே மதவெறியால் மனிதம் மாய்க்கப்பட்டு ஒருவரையொருவர் நம்பிக்கையின்மையுடன் "பகைவர்களாக எண்ணிக்கொண்டு" நாட்களை தள்ளி வருவதே நினைவுக்கு வரும்.  நாட்டில் மட்டுமல்ல காட்டிலும் இயல்பாகவே  இதேநிலை தான். பொதுவாகவே காட்டில் சிங்கங்களுக்கு சிறுத்தைகளை கண்டாலே ஆகாது, பாய்ந்து கடித்து குதறியெடுத்துவிடும்.

குஜராத் மண்ணுக்கே உரித்தான இந்த பகையுணர்வை தகர்த்தெறிந்துள்ளது 2 குட்டிகளுடன் வலம் வரும் ஒரு பெண் சிங்கம், இதை மிக மிக அதிசய நிகழ்வென வர்ணிக்கின்றனர் குஜராத் காட்டு இலாகா அதிகாரிகள்.

குஜராத்தின் "கிர்" காட்டில்  ஒன்றரை மாத சிறுத்தை குட்டி ஒன்று ஏதோவொரு காரணத்தால் அனாதையாகியுள்ளது. இந்த அனாதை சிறுத்தை குட்டியை தத்தெடுத்து பாலூட்டி, சீராட்டி, கூடுதல் பாதுகாப்புடன் வளர்த்து வருகின்றது அதாவது சக சிங்கங்களின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதில் மிக கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றதாம்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

Sunday, December 30, 2018

65 வயதில் குழந்தை பெற்று காஷ்மீர் பெண் உலக சாதனை!

அதிரை நியூஸ்: டிச.30
இயற்கையான முறையில் 65 வயதில் கருவுற்று குழந்தை பெற்று காஷ்மீர் பெண் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

நவீன யுகத்தில் 72 வயதுடைய பெண்மணிகள் வரை குழந்தை பெற்றுக் கொண்டதாக தகவல்கள் இருந்தாலும் அவை அனைத்தும் என்கிற செயற்கை கருவூட்டல் எனும் மருத்துவ தொழிற்நுட்பத்தின் அடிப்படையிலேயே சாத்தியமாகியுள்ளது. இந்தியப் பெண்களுக்கு மாதவிலக்கு அதிகபட்சம் 47 வயதில் நின்றுவிடும், மாதவிலக்கு நின்ற பெண்கள் இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது அரிதினும் மிக அரிதான செயலாகும்.

சுமார் 50 வயதுகளில் இயற்கையான முறையில் குழந்தை பிறந்துள்ளதாக செய்திகள் உள்ள நிலையில் 65 வயதில் இந்த காஷ்மீரப் பெண்மணி ஆரோக்கியமானதொரு பெண் குழந்தையை பெற்றுள்ளது உலக சாதனையாகும் என மகப்பேறு மருத்துவர் ஷப்Pர் சித்தீகி தெரிவித்துள்ளார். இந்தத் தம்பதிக்கு ஏற்கனவே 8 மற்றும் 10 வயதுகளில் 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த பெண் குழந்தையை அல்லாஹ் தனக்கு அருளிய விலைமதிப்பற்ற பரிசு என வர்ணிக்கும் இந்த பெண்மணியின் கணவர் ஹக்கீமுத்தின் 80 வயது முதியவர் என்பதுடன் ஏற்கனவே 2 குழந்தைகளை வளர்க்க சிரமப்பட்டு வரும் நிலையில் காஷ்மீர் மாநில அரசு தனக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். காஷ்மீரில் தற்போது மத்திய பாஜக அரசின் ஏஜென்டான கவர்னர் ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

2006 ஆம் ஆண்டில் செயற்கை கருவூட்டல் முறைப்படி இதற்கு முன் மிக தனது 66வது  வயதில் ஸ்பெயினைச் சேர்ந்த மரியா டெல் கார்மன் என்ற பெண் இரட்டை குழந்தைகளை ஈன்றெடுத்தார், இவர்களே பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் முதிய வயதில் குழந்தை பெற்ற பெண் என்ற அங்கீகாரத்திற்கு உரியவர்.

அதேபோல் 2016 ஆம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த தல்ஜிந்தர் கவுர் என்ற 72 வயது பெண்மணி செயற்கை கருவூட்டலில் 2 முறை தோல்வியடைந்திருந்த நிலையில் 3வது முயற்சியில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

அல் குர்ஆனின் கூற்றுப்படி மிகவும் முதிய வயதில் இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் இறைத்தூதர் ஜக்கரியா (அலை) மற்றும்  இறைத்தூதர் இப்ராஹிம் (அலை)ஆகியோர் ஆவர்.

இறைத்தூதர் ஜக்கரியா (அலை) அவர்களுக்கு முதுமையில் குழந்தை வழங்குவது குறித்த இறைவனின் முன்னறிவிப்பு:

قَالَ رَبِّ اَنّٰى يَكُوْنُ لِىْ غُلٰمٌ وَّكَانَتِ امْرَاَتِىْ عَاقِرًا وَّقَدْ بَلَـغْتُ مِنَ الْـكِبَرِ عِتِيًّا‏ 
19:8. “என் இறைவனே! என் மனைவியோ மலடாகவும், முதுமையின் தள்ளாத பருவத்தை நான் அடைந்தும் இருக்கும் நிலையில் எனக்கு எவ்வாறு ஒரு புதல்வன் உண்டாகுவான்?” எனக் கூறினார்.
19:9
قَالَ كَذٰلِكَ‌ۚ قَالَ رَبُّكَ هُوَ عَلَىَّ هَيِّنٌ وَّقَدْ خَلَقْتُكَ مِنْ قَبْلُ وَلَمْ تَكُ شَيْـٴًـــا‏ 
19:9. “(அது) அவ்வாறே (நடைபெறும்) என்று கூறினான். இது எனக்கு மிகவும் சுலபமானதே! முன்னர் நீர் ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த காலத்து, நானே உம்மை படைத்தேன்” என்று இறைவன் கூறினான்.


இறைத்தூதர்  இப்ராஹிம்  (அலை) அவர்களுக்கு முதுமையில் குழந்தை வழங்குவது குறித்த இறைவனின் முன்னறிவிப்பு: 
 قَالُوْا لَا تَوْجَلْ اِنَّا نُبَشِّرُكَ بِغُلٰمٍ عَلِيْمٍ‏ 
15:53. அதற்கு அவர்கள், “பயப்படாதீர்! நாம் உமக்கு மிக்க ஞானமுள்ள ஒரு மகனைப் பற்றி நன்மாராயம் கூறு(வதற்காகவே வந்திருக்)கின்றோம்” என்று கூறினார்கள்.
15:54
 قَالَ اَبَشَّرْتُمُوْنِىْ عَلٰٓى اَنْ مَّسَّنِىَ الْكِبَرُ فَبِمَ تُبَشِّرُوْنَ‏ 
15:54. அதற்கவர், “என்னை முதுமை வந்தடைந்திருக்கும்போதா எனக்கு நன்மாராயங் கூறுகிறீர்கள்? எந்த அடிப்படையில் நீங்கள் நன்மாராயங் கூறுகிறீர்கள்? உங்கள் நற்செய்தி எதைப்பற்றியது?” எனக் கேட்டார்.

Source: Khaleej Times & Daily Mail
தமிழில்: நம்ம ஊரான்
 

Monday, December 24, 2018

500 திர்ஹம் செலவில் எளிமையாக திருமணம் முடித்த மணமகனுக்கு குவியும் வாழ்த்துகள்!

அதிரை நியூஸ்: டிச.24
500 திர்ஹம் செலவில் எளிமையான முறையில் திருமணம் முடித்த பாகிஸ்தானியருக்கு இந்தியாவிலிருந்தும் குவியும் வாழ்த்துகள்

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் (இறையருள்) நிறைந்தது என நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல் முஸ்னத் அஹ்மத்)

நடப்பு உலகில் திருமண நிகழ்வுகள் மிகவும் ஆடம்பரமாக, பிறரை விட மிகைக்கும் நோக்கில் பெரும் பொருளாதார செலவில் நடத்தப்படுகின்றன. நட்சத்திரங்கள் என புகழப்படுபவர்கள் சிலர் மேற்கு நாடுகளுக்குச் சென்று திருமணம் நடத்துவதை தற்போது ஒரு பேஷனாக கடைபிடிக்கத் துவங்கியுள்ளனர். சமீபத்தில் இந்திய பணக்காரர் ஒருவர் பல்லாயிரம் கோடிகளை இரைத்து திருமணம் நடத்தியதும் நாம் சர்வ சாதாரணமாக கடந்து வந்த செய்திகளாக போய்விட்டன.

இந்நிலையில் ரிஜ்வான் பெஹ்லவான் என்ற பாகிஸ்தானிய போட்டோகிராபர் ஒருவர் 20,000 பாகிஸ்தானிய ரூபாய்க்குள் (523 திர்ஹம்) தனது திருமணத்தை முடித்து அது குறித்த செய்தியினை விபரமாக டிவிட்டரில் பதிவிட நட்சத்திரங்கள், பெரும் பணக்காரர்களுக்குக் கூட கிடைக்காத நல்வாழ்த்துக்கள் கிடைத்து வருகின்றன. அதிலும் இந்தியாவிலிருந்தும் பலர் மனமுவந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அவரது வீட்டு மொட்டை மாடியே திருமண அரங்கம், உறவுகள் நண்பர்கள் என சுமார் 25 பேர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். அவரது நண்பரின் சமையல்காரரும், மணப்பெண்ணுமே திருமண விருந்தை சமைத்துள்ளனர். மணமகனுக்கும் மணமகளுக்குமான திருமணத்திற்கான புதிய ஆடைகளை அம்மாவும், சகோதரியும் அன்பளிப்புச் செய்துள்ளனர். மொட்டை மாடியில் வெளிச்சத்திற்காக தந்தை மின் விளக்குகளை ஏற்பாடு செய்துள்ளார். அவ்வளவு தான் என அனைத்து செலவுகளும் அந்த 20 ஆயிரம் பாக். ரூபாய்களுக்குள் முடிந்தது.

இந்தியர்கள் சிலர் வாழ்த்திய டிவிட்டுகள் சில அப்படியே ஆங்கிலத்தில்...

The account was shared and liked by thousands of users and Twitter India recognised it as one of their ‘moments’. @RizwanPehelwan was also surprised by how much love he had received from Indian tweeps. 

Twitter user @IyerAvin called it a hope for peace, using the hashtag #ShaadiKaBudgetGhataoBorderHatao [Reduce the wedding budget, remove the border]

Tweep @mouseplanet wrote: “Preach! Weddings have become a competition about who can prove to be more ‘extra’.”

Another Twitter user @romanawanisachd added: “ … sounds like fun with little or no stress to family, friends or self. Enjoyment with all who matter. Hope this becomes a trend. Congratulations and kudos.”

Hi Rizwan, really enjoyed reading your wedding story, sounds like fun with little or no stress to family, friends or self. Enjoyment with all who matter. Hope this becomes a trend. Congratulations and kudos.

— roma nawani sachdev (@romanawanisachd) December 24, 2018

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

சிங்கப்பூரை அசத்தும் 'ப்ரீகேன்ஸ்' பேஸ்புக் தன்னார்வக்குழு!

அதிரை நியூஸ்: டிச.24
சிங்கப்பூர் மிகச்சிறிய ஆனால் பொருளாதார வளர்ச்சியில் உயர்ந்தோங்கியுள்ள நாடு என்பது அனைவருக்கும் தெரிந்தது தான் ஆனால் அவர்கள் 'ஒரு கல்லில் இரு மாங்காய்' என்ற அடிப்படையில் தங்கள் நாட்டை தொடர்ந்து சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்கவும் அதேவேளை பிறருக்கு வழங்கி மனம் மகிழவும் புதியதோர் வழியை தேர்ந்தெடுத்து அசத்தி வருகின்றனர்.

சிங்கப்பூரில் சேரும் குப்பைகளை கொட்டுவதற்காகவே அருகில் ஒரு செயற்கை தீவை உருவாக்கி வைத்துள்ளது அரசு. இந்தத் தீவு எதிர்வரும் 2050 ஆண்டுகளில் தான் இதன் முழுகொள்ளளவை அடையும் என எதிர்பார்த்த நிலையில் முன்னதாகவே அதாவது 2035 ஆம் ஆண்டுகளிலேயே நிரம்பிவிடும் என அதிர்ச்சியான கணிப்பும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சிங்கப்பூர் மற்றும் சிங்கைவாழ் வெளிநாட்டினர் என சுமார் 6,500 பேரை உறுப்பினர்களாக கொண்ட 'ப்ரீகேன் இன் சிங்கப்பூர்' ( Freegan in Singapore) என்ற முகநூல் அங்கத்தினர்கள் சிங்கப்பூர் மக்கள் உபயோகப்படுத்திய ஆடை அணிகலன்கள், பெண்களின் கைப்பைகள், மின்சாதனங்கள், பலவகையான வீட்டு உபயோகப்பொருட்கள் போன்றவற்றை சேகரித்து அதன் போட்டோக்களையும் தகவல்களின் முகநூலில் வெளியிடுகின்றனர்.

இந்தப் பொருட்களை சிங்கப்பூரில் வேலை செய்யும் ஏழ்மையான வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்கள் பெற்று தங்களின் நாடுகளுக்கு அனுப்பி விடுகின்றனர். இதே முகநூல் குழுமம் வருடத்திற்கு ஒருமுறை அதிர்ஷ்ட குலுக்கல் நடத்தியும் மிகவும் நல்ல நிலையில் உள்ள ஆடம்பர பொருட்களை மேற்படி வெளிநாட்டினருக்கு பரிசுகளாக வழங்குகின்றனர். இதன் மூலம் சிங்கப்பூர் மேலும் மேலும் குப்பைகளை சுமக்காமல் சுத்தமாகின்றது, வாங்க வசதியற்ற எளியவர்களின் முகத்திலும் புன்னகையையும் வரவழைக்க முடிகின்றது.

மேலும் இந்த ப்ரீகேன்ஸ் குழுவினர் சிங்கப்பூரிலுள்ள பசீர் பன்ஜாங் என்கிற மொத்த வியாபார மையத்தில் வியாபாரிகளால் கழிக்கப்படும் காய்கறி, பழங்களையும் பெற்றுவந்து வந்து தரம்பார்த்து 'அனைவருக்கும் உணவு' என்ற திட்டத்தின் கீழ் தினமும் ஏழைகளுக்கு விநியோகித்து வருகின்றனர்.

Produce, which was rejected by suppliers at Pasir Panjang Wholesale Center and given to a food rescue group started by freegans, is distributed for free to residents by the charity Free Food For All, in Singapore.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

Sunday, December 23, 2018

1.48 கிராம் எடையில் உலகின் மிகக்குட்டியான 'சிலந்தி ரோபோ' (வீடியோ)

அதிரை நியூஸ்: டிச.23
உலகின் மிகச்சிறிய, எடை குறைவான சிலந்தியை போன்ற உருவத்தை பிரதிபலிக்கும் ஸ்பைடர் போட் எனப்படும் 'ரோபோ' (A micro  machine you can call 'Spider-bot')  ஒன்றை விஞ்ஞானி தயாரித்துள்ளனர். இந்த ரோபோவின் விசேஷத்தன்மையே மின்சக்தியால் எந்தத் தரையை பிடித்து ஒட்டிக்கொண்டும், தொங்கிக் கொண்டும் நிற்கும், நாலாபுறமும் அசையும் 4 பாதங்களுடன் கூடிய கால்களே. (Micro-robot with sticky feet that can climb up, down and all around in narrow, complex space)

The tiny-robot, weighs 1.48g and has electro-adhesive foot pads, origami ankle joints and specially-engineered walking gait, which can help climb on vertical and upside-down conductive surfaces like the inside walls of a commercial jet engine that are inaccessible to human workers.

இந்த மூட்டுக்களுடன் உள்ள இதன் கால்களை கொண்டு கீழ் மேலாக, குறுக்கு நெடுக்காக, மேடு பள்ளமான, வளைந்த என எந்த பக்கமும் நகரும். 3 கால்கள் மட்டுமே பிடித்துக் கொண்டுள்ள நிலையில் 1 கால் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தாலும் இது வேலை செய்யும்.இந்த ரோபோவிற்கு  HAMR-E - (Harvard Ambulatory Micro-Robot with Electroadhesion) என பெயரிட்டுள்ளனர் இதை உருவாக்கிய ஹார்வேர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.

இந்த ரோபோ மனிதர்கள் செல்லமுடியாத ஜெட் எஞ்சின்களின் பக்கச்சுவர்களுக்குள் செல்வதற்கென்றே வடிவமைக்கப்பட்டிருந்தாலும் எதிர்காலத்தில் இதன் பயன்பாடுகள் கட்டிடங்கள், எஞ்சின்கள், பைப்புகள், ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட மேலும் பல துறைகளுக்கும் பரவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

Tuesday, December 18, 2018

அமெரிக்காவில் தலைமுடி உருளைக்குள் 70 சிட்டுக்குருவிகள் கடத்தல்!

அதிரை நியூஸ்: டிச.18
மனிதர்களின் சிந்தனைத்திறன் அற்புதமானவை, இந்த சிந்தனைத்திறன் நன்மையான செயல்களுக்கு பயன்படுவது போலவே தீமையான செயல்களுக்கும் பயன்படுகின்றன. சில விஷயங்கள் வெளிப்பட்ட பின் தான் அதன் அருமையே வெளியே தெரியும். நாம் அன்றாடம் சமூக ஊடகங்கள் வாயிலாக சந்திக்கும் 'மீம்ஸ்' மற்றும் 'மீம்ஸ் கிரியேட்டர்களின்' சிந்தனைத்திறன் உண்மையிலேயே பாராட்;டத் தகுந்தவை. பீடிகை இருக்கட்டும் ஒருபுறம்...

குயானா என்ற ஆப்பிரிக்க நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு ஒரு மனிதர் நியூயார்க்கின் 'ஜான் எப் கென்னடி' விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவர் வைத்திருந்த கருப்புப் பையை அதிகாரிகள் சந்தேகமடைந்து பரிசோதித்துப் பார்த்தால் அதனுள்ளே உயிருடன் 70 வண்ணச் சிட்டுக்குருவிகள் பெண்கள் அழகிற்காக தலைமுடியை சுருட்ட உதவும் உருளைகளுக்குள்ளே அடைத்து எடுத்து வரப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சிட்டுக்குருவிகள் ரிங்காரமிடும் சப்தத்திற்கும், நீண்ட நேரத்திற்கும் ஏற்ப ஒவ்வொன்றும் சுமார் 10,000 அமெரிக்க டாலர்கள் வரை விலை போகுமாம். பிடிபட்ட குருவிகளை விவசாயம் மற்றும் கால்நடைகள் துறை வசம் ஒப்படைக்கப்பட்டன, குயானா ஆள் அடுத்த விமானத்திலேயே மீண்டும் திருப்பியனுப்பப்பட்டார். அவர் செய்தது தவறான செயல் தான் என்றாலும் வித்தியாசமாக சிந்தித்த அந்த செயல் பேஷ்.. பேஷ் தான்... என்றாலும்,

இது என்ன பிரமாதம் ஜெயலலிதா அம்மா அப்போலோ மருத்துவமனையில் சாப்பிட்ட 2 இட்லியின் விலை சுமார் 1 ¼ கோடி ரூபாய் என கணக்கெழுதியவர்களும், சீன தயாரிப்பான பட்டேல் சிலைக்கு 3,000 கோடி ரூபாய் கணக்கு காட்டிய பீஜேபி ஆட்சியாளர்களும், சில தெர்மாகோல்களை அணையில் மிதக்கவிட்டு விட்டு 10 லட்சம் கணக்குச் சொன்ன செல்லூர் ராஜூக்களும் 'ரொம்பப் பிரமாதமான சிந்தனையாளர்கள்' தான்.

என்ன சொல்ல வந்தீங்க... ஆமா! இது ரொம்ப முக்கியம் என்று தானே. வாய் வரை வந்ததை நிறுத்துனா எப்படி? சொல்ல வந்ததை சொல்லிட்டு போயிருங்க மக்கா..! நாம கோவிக்கவுலாம் மாட்டோம்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

அமெரிக்காவில் 84 வயதில் இளங்கலை பட்டம் வென்ற பேரிளம் பெண்!

அதிரை நியூஸ்: டிச.18
முதிய வயது பெண்மணிகளை தமிழ்மொழி பேரிளம் பெண் என்றே விளிக்கின்றது என்றபோதும் இந்த டெக்ஸாஸ் பெண்மணி ஓர் இளம் பெண் செய்யும் காரியத்தை தனது முதிய வயதில் சாதித்துள்ளதால் 'பேரிளம் பெண்' என்ற சொல்லுக்கே புதிய அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தை சேர்ந்தவர் 'ஜெனட் பெயின்' (janet Fein) வயது 84. தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை பல்வேறு நிறுவனங்களில் 'காரியதரிசியாக' (Secretary) கழித்து தனது 77வது வயதில் 2012 ஆம் ஆண்டு இறுதியாக பணிஓய்வு பெற்றவர்.

டெக்ஸாஸ் மாநில உயர்கல்வித்துறை 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பல்கலைகழகங்களில் இலவசமாக இணைந்து பயில சிறப்பு அனுமதி ஒன்றை வழங்கியதை அடுத்து ஆர்வத்துடன் சமூகவியல் பாடத்தை தேர்வு செய்து படிக்கத் துவங்கினார். ஊன்றுகோல், செயற்கை சுவாச உபகரணங்களுடன் தானே காரை ஓட்டிச்சென்று வகுப்புக்களில் பங்கேற்று வந்தார் எனினும் அவரது முழங்கால் வலி தொடர்ந்து வகுப்புக்களுக்குச் செல்ல அனுமதிக்காததால் வீட்டிலிருந்தபடியே சுயமாக பாடங்களை தேடிப்படிக்க ஆரம்பித்து தற்போது சமூகவியலில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.

முதியோர் இல்லத்தில் (Senior living facility) ஜெனட் பெயினை கவனித்துக் கொள்ள ஒரு 53 வயது மருத்துவ உதவியாளராக பெண்மணி ஒருவர் உள்ளார். ஜெனட் பெயின் 84 வயதில் பட்டம் பெற்றுள்ளதால் ஊக்கம்பெற்ற அவர், தானும் நர்சிங் படிப்பில் பட்டம் பெற்று அங்கீகரிக்கப்பட்ட நர்ஸாக விரும்புகிறேன் என தனது கல்வியை தொடர முடிவு செய்துள்ளார். இதுதான் அடுத்தவருக்கு சிறந்த முன்மாதிரியாக விளங்குவதென்பது!

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

ஹாங்காங்கில் பணமழை பெய்வித்த பிட்காயின் கோடீஸ்வர இளைஞர் கைது!

அதிரை நியூஸ்: டிச.18
ஹாங்காங் நகரில் ஒரு உயரமான கட்டிடத்தின் உச்சியிலிருந்து ஹாங்காங் நாட்டின் பணமான HK100 டாலர் நோட்டுக்களை மழை போல் வீதியெங்கும் தூவினார், இதனை பொறுக்க மக்கள் குவிந்ததால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக, தொல்லை ஏற்படுத்திய வழக்கின் கீழ் போலீஸார் 24 வயது இளைஞரான வோங் சிங் கிட் (Wong ching kit) என்ற மல்டி மில்லியனரை கைது செய்தனர்.

பணமழை பெய்யும் இந்த செயலை அவர் நேரடியாக தனது பேஸ்புக் தளத்திலும் ஒளிபரப்புச் செய்தார், இவர் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களின் வழியாக கிரிப்டோகரன்சி (Crytocurrency) எனும் பிட்காயின் (Bitcoin) வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ளார். இவருக்கு "Coin Young Master" என்ற செல்லப் பெயரும் உண்டு.

பணக்காரர்களிடமிருந்து பணத்தை பறித்து இல்லாத ஏழைகளுக்கு கொடுத்துள்ளேன் என்றும் தனது செயலை நியாயப்படுத்தினார். போலீஸார் பணமழையாக பெய்த மில்லியன் கணக்கான 100 டாலர் நோட்டுகளில் சுமார் 6,000 ஹாங்காங் டாலர்களை மட்டும் மீட்டுள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Monday, December 17, 2018

விடுமுறை கேட்டு ஆம்புலன்ஸில் வந்த தமிழக அரசு ஊழியர்!

அதிரை நியூஸ்: டிச.17
ஈரோட்டில் உள்ள தமிழக அரசு போக்குவரத்து கழக பணிமனையை சேர்ந்தவர் டிரைவர் பாபு. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நிலையில் தொடர் சிகிச்சை பெற வேண்டி விடுமுறை தருமாறு பணிமனை மேலாளரிடம் அவரது மனைவி தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு வேண்டினார் ஆனால் மேலாளர் சுப்ரமணியன் உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் சம்பள பிடிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக கண்டிப்புடன் தெரிவித்து விட்டார்.

டிரைவர் பாபுவின் கணக்கில் 70 நாட்கள் விடுப்புக்கள் இருக்கும் நிலையில் மேனேஜரின் அடாவடி முடிவால் மன உளச்சலுக்கு ஆளான டிரைவர் பாபு உடனடியாக குடும்பத்துடன் மருத்துவமனையின் ஆம்புலன்ஸில் புறப்பட்டு ஈரோடு பணிமனைக்கே வந்துவிட்டார். பணிமனை வாயிற்காவலர்கள் ஆம்புலன்ஸை உள்ளே விட அனுமதி மறுக்க, சம்பவம் சக தொழிலாளர்களுக்குத் தெரியவர, திடீர் ஸ்ட்ரைக் நடத்தப்படும் நிலையில் இறங்கி வந்த மேலாளர் சுப்ரமணியன் டிரைவர் பாபுவிடமிருந்து விடுப்பு விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டு உடனடியாக அனுமதி வழங்கி பிரச்சனைகளிலிருந்து தப்பித்தார்.

Source: onmanorama
தமிழில்: நம்ம ஊரான்

Friday, December 14, 2018

கரும்புச் சக்கையிலிருந்து மின்சாரம் தயாரிப்பு (படங்கள்)

அதிரை நியூஸ்: டிச.14
கரும்புச் சக்கையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் மொரிஷியஸ் நாடு

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது போல் மொரிஷியஸ் தீவினருக்கு கரும்பு திகழ்கின்றது. சர்க்கரை தயாரிக்க கரும்புகள் பிழியப்பட்ட பின் அதன் இலைகள், சக்கைகள் போன்ற கழிவுகள் மாற்று எரிபொருளாக மாற்றப்படுகின்றன. இந்த கரும்புச் சக்கை கள் "Bagasse" என்று அழைக்கப்படுகின்றன.

ஓம்னிகேன் (Omnicane) என்ற சர்க்கரை மற்றும் மின்சார தயாரிப்பு நிறுவனத்தில் மட்டும் தினமும் சாராசரியாக 8,500 டன் என ஆண்டுக்கு சுமார் 900,000 டன் கரும்புக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இதுபோல் மொரிஷியஸில் பல சர்க்கரை மற்றும் அனல் மின்சாரத் தயாரிப்பு நிறுவனங்கள் பல உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் மின்சாரம் அரசின் மின்துறைக்கு விற்கப்படுகின்றது.

கரும்பு விவசாய நாடான மொரிஷியஸ் தன்னுடைய நாட்டின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவையில் சுமார் 14 சதவிகிதத்தை கரும்புச் சக்கை மற்றும் அதன் இலை, சருகுகளிலிருந்து பெறுகின்றது. ஆண்டுதோறும் கரும்பு அறுவடை தொடங்கியவுடன் சுமார் 6 மாத கால அனல் மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருளாக சேமிக்கப்படுகின்றது அதன் பின் அந்த அனல்மின் உற்பத்தி நிலையங்கள் எண்ணெய் மற்றும் நிலக்கரிக்கு மாறுகின்றன. மொரிஷியஸின் மின் தேவைகள் காற்றாலை, சூரிய ஓளி மற்றும் நீர்மின் திட்டங்கள் வழியாக கிடைக்கின்றது.

மொரிஷியஸ் தீவு - ஒர் சுருக்கமான வரலாறு:

ஆப்பிரிக்கா கண்டத்திலிருந்து சுமார் 2,000 கி.மீ தூரத்தில் இந்தியப் பெருங்கடலுக்குள் அமைந்துள்ள ஒரு குட்டித்தீவு நாடு. ஆரம்பத்தில் இந்தத் தீவில் மனிதர்கள் யாருமில்லை என்றாலும் அரேபிய கடல் வணிகர்கள் ஓய்வெடுக்கும் இடமாக மட்டுமே இருந்தது, இத்தீவிற்கு அரேபியர் இட்ட பெயர் டைனா அரோபி (Dina Arobi). பின்பு போர்த்துகீசிய கடலோடிகள் 1507 ஆம் ஆண்டில் இதை ஒரு தங்குதளமாக உருவாக்கி 'இல்ஹா டீ சிர்னி' (Ilha Die Cirne) என அழைத்தனர் என்றாலும் இத்தீவு அவர்களுக்கு பிடிக்காமல் போக, சொற்ப காலத்திலேயே வெளியேறிவிட்டனர்.

பின்பு 1598 ஆம் ஆண்டு டச்சு கடற்படை (டென்மார்க்) வீரர்கள் வந்திறங்கி 'மொரிஷியஸ்' எனப் பெயரிட்டனர் என்றாலும் 1638 ஆண்டுகளில் தான் ஒரளவிற்கு மக்கள் நிரந்தரமாக தங்கி வசிக்கும் பகுதியாக துவங்கியது என்பதால் 1638 ஆம் ஆண்டிலிருந்தே 1710 வரை டச்சுக்காரர்கள் ஆட்சி செய்தனர் என்பதாக வரலாற்றில் கணக்கிடப்படுகின்றது.

டச்சுக்காரர்களே இங்கு மான், வீட்டு வளர்ப்பு பிராணிகள், கருங்காலி மரங்கள், கரும்பு போன்றவற்றை கொண்டு வந்து வளர்க்க ஆரம்பித்தனர் என்றாலும் அவர்களுக்கும் இந்தத் தீவிலிருந்து எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்காததால் தீவை ஆட்சி செய்வதை விட்டும் 1710 ஆம் ஆண்டு வெளியேறினர். 1710 முதல் 1715 வரை ஆட்சியாளர் யாருமின்றியே இருந்தது.

பக்கத்து தீவான ரீ-யூனியன் தீவை (Re-union Island) பிரான்ஸ் ஆட்சி செய்து வந்தநிலையில் கேட்பாரின்றி சும்மாகிடந்த இந்தத் தீவை (1715 – 1810) பிரேஞ்சுக்காரர்கள் கைப்பற்றி ஆளத்துவங்கினர், இதற்கு அவர்கள் இட்ட பெயர் ஐஸில் டி பிரான்ஸ் (Isle De France), பிரான்ஸ் ஆட்சி காலத்தில் தான் இங்கு கரும்பு விவசாயம் செழிக்கத் துவங்கியதுடன் ஒரு கப்பல் கட்டும் தளமும் உருவாக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து பல கட்டிடங்கள் உருவாயின, அவற்றில் பல இன்றும் அரசு அலுவலகங்களாக காலத்தை வென்ற உறுதியுடன் நிலைத்துள்ளன. இந்த தீவு 'பிரான்ஸ் ஈஸ்ட் இந்தியா கம்பெனியின்' (France East India Company) நிர்வாகத்தின் கீழ் இருந்தது.

மன்னர் நெப்போலியன் பிரான்ஸை ஆண்டபோது பிரிட்டனுக்கு பெரிய தலைவலியாக மாறியது இந்தத் தீவு, இங்கிருந்த பிரான்ஸ் கடற்படை இந்தியாவை ஆண்ட பிரிட்டனின் ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் (Britain's East India Company) வர்த்தக கப்பல்களை வழிமறித்து தாக்கி கொள்ளையடித்து வந்ததால் பிரிட்டன் இந்தத் தீவின் மீது படையெடுத்து வென்றது. ஆங்கிலேயர்கள் இந்தத் தீவிற்கு மீண்டும் மொரிஷியஸ் (Mauritius) என்றே பெயரையிட்டனர்.

ஆங்கிலேயர்கள் இங்கு பிரான்ஸ் ஆட்சியில் நிலவிய ஆப்பிரிக்க அடிமை முறையை ஒழித்து 1834 ஆம் ஆண்டுமுதல் 1921 ஆம் ஆண்டு வரை இந்தியாவிலிருந்து 5 ஆண்டுகால ஒப்பந்தத்தில்; சுமார் 5 லட்சம் தொழிலாளர்களை படிப்படியாக இறக்குமதி செய்தனர் ஆனால் பின்னாளில் மொரிஷியஸே அவர்களின் தாயகமாக மாறியது. இவர்கள் அங்கு கரும்பு விவசாயம், கட்டுமானம், தொழிற்சாலைகள், போக்குவரத்து, சாலை அமைத்தல் போன்ற பல பணிகளைச் செய்தனர்.

மகாத்மா காந்தி 1901 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பி வரும்; வழியில் சுமார் 2 வார காலம் இங்கு தங்கியிருந்த போது இந்தியத் தொழிலாளர்களை சந்தித்து கல்வியிலும், தீவிரமான அரசியலிலும் ஈடுபட உற்சாகமூட்டினார். மொரிஷியஸ் 1968 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றப்பின் பலமுறை இந்நாட்டின் ஆட்சியாளர்களாகவும் தமிழர்கள் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினர் இருந்துள்ளனர், இருந்து கொண்டுள்ளனர், இனியும் வருவர்.

Sources: Emirates 247 & Wikipedia
தமிழில்: நம்ம ஊரான்
 
 

Thursday, December 13, 2018

சர்வதேச ஊடகங்களின் பாராட்டில் 7 வயது சிறுமி!

அதிரை நியூஸ்: டிச.13
சர்வதேச ஊடகங்களின் பாராட்டில் கழிவறைக்காக தந்தையை கைது செய்ய சொன்ன 7 வயது ஆம்பூர் சிறுமி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மலம், ஜலம் கழிக்க (செல்ல) விரும்பினால் தன்னை யாரும் பார்க்காதவாறு (மறைவான) தொலைவிற்கு சென்றிடுவார்கள் என்று ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: அபூ தாவூது)

இம்ரான் பின் ஹூசைன் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது :
'வெட்கப்படுவது அது நல்லதையே கொண்டுவரும் என நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ, முஸ்லிம்)

'நபி (ஸல்) அவர்கள் ஓர் அன்சாரித் தோழர் அருகே நடந்து செல்கையில் அவர் தன் சகோதரருக்கு வெட்கத்தால் வரும் விளைவுகள் பற்றி நினைவு கூறினார் . உடனே நபி (ஸல்) அவர்கள் வெட்கபடுவதின்  மீது அவரை விட்டுவிடுவீராக! அவ்வாறு தடுப்பதையும் தவிர்ந்திருப்பீராக! ஏனெனில் வெட்கம் ஈமானின் (இறை நம்பிக்கையில்) ஒரு பகுதியாகும்  என கூறினார்கள் . (நூல்: புகாரீ ; முஸ்லிம்)

இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:
 'உனக்கு வெட்கம் வரவில்லையானால்  நீ நினைத்ததை செய்வாய் ' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்:புகாரீ)

மேற்காணும் இஸ்லாமிய மரபுகளை மரபணுக்களுடன் பெற்றிருந்த சிறுமி ஹனீஃபா ஜாரா!

வேலூர் மாவட்டம் ஆம்பூர் நடராஜபுரத்தை சேர்ந்த ஏழைக்கூலி தொழிலாளி இஷானுல்லா. இவரது 7 வயது மகள் ஹனீஃபா ஜாரா 2 ஆம் வகுப்பு படித்து வருகின்றார். பொதுவாக இங்குள்ளவர்கள் திறந்தவெளிப் பகுதியையே தங்களின் சுகாதாரத் தேவைகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர் என்றாலும் திறந்தவெளியை பயன்படுத்தும் இச்செயலை சிறுமி ஹனீஃபா ஜாரா விரும்பவில்லை. எனவே தனது தந்தையிடம் கழிப்பறை ஒன்றை கட்டித்தருமாறு தொடர்ந்து நச்சரித்து வந்துள்ளார்.

கழிப்பிடம் அமைத்து தரும் அளவிற்கு வசதியில்லாத தந்தையும் படிப்பில் நல்ல மார்க் எடுத்தால் கட்டித்தருவதாக மகளை சமாதானம் செய்து வைத்திருந்தார். மகளும் தந்தை சொல்லுக்குகேற்ப படித்து நல்ல மதிப்பெண்களை பெற்றதையடுத்து மீண்டும் தந்தையை கழிப்பறை அமைத்துத் தர சொல்லி கேட்டும் தந்தையால் மகளின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் போனது.

தந்தை தன்னை ஏமாற்றுவதாக கருதிய சிறுமி, கழிப்பறை கட்டித்தராமல் ஏமாற்றும் தந்தையை கைது செய்யுங்கள் என ஆம்பூர் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று முறையிட்டாள் இந்த மழலை. சிறுமியின் புகாரை கேட்டு அதிர்ந்த போலீஸார் தந்தையை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விரைவில் கட்டித் தருவார் எனக்கூறி தந்தையையும், மகளையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

சிறுமியின் இந்த செயற்கரிய செயல் பற்றி கேள்விப்பட்ட மாவட்டக் கலெக்டர் ராமன் அவர்களும், நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி அவர்களும் சிறுமி ஹனீஃபா ஜாராவை பாராட்டியதுடன் அவரை ஆம்பூர் நகராட்சியின் தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவராக நியமித்து கண்ணியப்படுத்தியதுடன் உடனடியாக சிறுமி ஹனீஃபா ஜாரா வீட்டிற்கு கழிவறை ஒன்றை அமைத்துத் தர ஆம்பூர் நகராட்சிக்கு உத்தரவிட, கழிவறையும் கட்டிக் கொடுக்கப்பட்டுவிட்டது.

கொசுறு... 
அரசின் தூய்மை இந்தியத் திட்டத்தின் சார்பாக கழிவறை கட்டித்தரக் கோரி பலமுறை ஆம்பூர் நகராட்சிக்கு படையெடுத்தும் 'காசு பெயராமல்' ஒன்றும் நடக்கவில்லை என்ற தகவலையும் ஊடகங்கள் முன்பாக போட்டுடைத்தது தனி விஷயம்.

இந்த செய்தி நேற்று தமிழ் ஊடகங்கள் சிலவற்றில் வெளிவந்திருந்தாலும் சிறுமி ஹனீஃபா ஜாராவின் செயல் இன்று பல சர்வதேச ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன் பாராட்டக்களையும் குவித்து வருகின்றது.

சாம்பிளுக்கு சில...

https://www.khaleejtimes.com/international/india/7-year-old-indian-girl-seeks-fathers-arrest-over-toilet-

https://www.channelnewsasia.com/news/asia/indian-girl-seeks-father-s-arrest-over-broken-promise-to-build-11025404

https://www.reuters.com/article/india-toilets/indian-girl-seeks-fathers-arrest-over-broken-promise-to-build-lavatory-idUSL3N1YH37M

https://punchng.com/girl-seeks-dads-arrest-over-broken-promise-to-build-indoor-toilet/

https://www.usnews.com/news/world/articles/2018-12-12/indian-girl-seeks-fathers-arrest-over-broken-promise-to-build-lavatory

https://www.thenewsminute.com/article/7-yr-old-tn-girl-gets-swachh-honour-after-dragging-father-cops-over-lack-toilet-93209

https://noovell.com/similar/16608671/

https://www.indiatoday.in/india/story/tn-school-girl-father-promised-toilet-ambur-tamil-nadu-1408014-2018-12-12

https://news.google.com/stories/CAAqOQgKIjNDQklTSURvSmMzUnZjbmt0TXpZd1NoTUtFUWphcEl1cWpZQU1FV2RHaDl3RUhHSlpLQUFQAQ?hl=en-IN&gl=IN&ceid=IN%3Aen

Source: Khaleej Times / thatstamil etc..
தமிழில்: நம்ம ஊரான்

Tuesday, December 11, 2018

இறந்தாக அறிவிக்கப்பட்ட மகள் 70 ஆண்டுகளுக்குப் பின் தாயுடன் இணைந்தார் (வீடியோ)

அதிரை நியூஸ்: டிச.11
இறந்தாக அறிவிக்கப்பட்ட மகள் புளோரிடாவில் 70 ஆண்டுகளுக்குப் பின் தாயுடன் இணைந்தார்.

1949 ஆம் ஆண்டு இன்டியானா மருத்துவமனை ஒன்றில் ஜெனீவீவே பூரின்டன் என்ற பெண்மணிக்கு பெண் குழந்தையொன்று முறைதவறிய உறவால் பிறந்தது. அந்த குழந்தை இறந்தே பிறந்ததாக மருத்துவமனை சொல்லியதுடன் இறந்த குழந்தையையும் கடைசி வரை கண்ணில் காட்டவேயில்லை.

1940 மற்றும் 1950களில் அமெரிக்காவின் சில மருத்துவமனைகள் முறைதவறிய உறவுகளில் பிறக்கும் குழந்தைகளை யாருக்காவது தத்து கொடுத்துவிட்டு பொய் சொல்வது சர்வ சாதாரண நிகழ்வாக இருந்துள்ளது.

ஒரு அனாதை ஆசிரமம் வழியாக ஒரு கலிபோர்னியா குடும்பத்திற்கு தத்துக் கொடுக்கப்பட்டு கோனி மால்ட்ரோப் (Connie Moultroup) என்ற பெயரில் வளர்ந்தார் அந்தப் பெண் குழந்தை பின்பு வெர்மோன்ட் (Vermont) என்ற பகுதிக்கு இடம் பெயர்ந்தனர் என்றாலும் கோனி மால்ட்ரோப்பை தத்தெடுத்த தாயும் அவரது 5வது வயதில் மரணமடைந்தார்.

அவரது இளம் பருவத்திலேயே தான் தத்தெடுக்கப்பட்ட குழந்தை என்பதை அறிந்தே வளர்ந்துள்ளார் மேலும் தனது உண்மையான தாயை கண்டுபிடிக்க வேண்டும் என்பதையும் ஒரு லட்சியமாகவே வைத்திருந்துள்ளார். இவ்வாறாக தாய் சுமார் 88 வயதையும் மகள் 69 வயதையும் அடைந்துவிட்டனர், 70 ஆண்டுகளும் இடையில் கடந்து போயிருந்தன.

கோனி மோல்ட்ரோப்பின் மகள் சேஸ் (Chase) தனது தாய் தன்னை பெற்றவளை தேடி வருவதை அறிந்திருந்தவர் அவரது பிறந்த நாளிற்கு முன்னோர்களின் மரபணுவை கண்டுபிடிக்க உதவும் Ancestry DNA testing kit ஒன்றை பரிசாக வழங்கினார். அந்த கிட் மூலம் கோனியின் ஒன்றுவிட்ட சகோதரி ஒருவர் கண்டுபிடிக்கப்பட, அவர் மூலம் கோனியை பெற்றெடுத்த தாயை கண்டறிந்துள்ளார்கள்.

புளோரிடா, டம்பாவிலுள்ள (Florida, Tampa) ஒரு முதியோர் இல்லத்தில் ஜெனீவீவே பூரின்டனும் கோனி மால்ட்ரோப்பும் அதாவது 70 ஆண்டுகளுக்குப் பின் நேரில் தாயும் சேயும் சந்தித்துக் கொள்ள, ஆனந்தக் கண்ணீர் பெருக முடிவு சுபமானது.

Sources: kutv.com, Emirates 247, globalnews.ca & femalefirst.co.uk etc....
தமிழில்: நம்ம ஊரான்

Monday, December 3, 2018

இங்கிலீஷ் புரியாமல் பீஹார் மாநிலத்தில் ஒருவரை கைது செய்த 'நீட்' போலீஸ்!

அதிரை நியூஸ்: டிச.03
பீஹார் மாநிலம் ஜெகன்னாபாத் மாவட்டம் மக்தூம்பூரைச் சேர்ந்தவர்கள் நீரஜ் குமார், ரெனு தேவி தம்பதியர். இவர்களுக்கிடையே தொடர் பிரச்சனை நிலவியதால் விவாகரத்துக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். இதற்கிடையில், இந்தியாவில் நிலவும் வழமைக்கு ஏற்ப கணவன் தன்னை அடித்து துன்புறுத்தி வரதட்சணை கேட்டு மனம் மற்றும் உடல்ரீதியாக கொடுமைபடுத்தி வருவதாகவும் ரெனு தேவி ஒரு வழக்கும் தொடுத்து வைத்துள்ளார், அது உண்மையா பொய்யா என்பது அல்ல சப்ஜெக்ட்.

மாநிலத் தலைநகர் பட்னாவில் இயங்கும் குடும்ப நல நீதிமன்ற கணவர் நீரஜ் குமார் இறுதித்தீர்ப்பு வரும் வரை மனைவியின் செலவினங்களுக்காக மாதாமாதம் 2,500 ரூபாயை வழங்கி வர வேண்டும் என இங்கிலீஷில் உத்தரவிடுகின்றது அதாவது இப்படி! “warrant to enforce payment of maintenance” இங்கு தான் ஆரம்பித்தது நீரஜ் குமாருக்கு பிரச்சனை.

பாட்னா குடும்ப நல நீதிமன்ற உத்தரவை இப்படி “warrant of arrest” என புரிந்து கொண்ட மக்தூம்பூர் போலீஸ் நிலைய அதிகாரிகள் வாரண்ட் (Warrant) என்ற வார்த்தை வந்திருந்தாலே அதற்கு அர்த்தம் கைது (Arrest) தான் என முடிவு செய்து நீரஜ் குமார் தன் கடையில் வாடிக்கையாளர்களை கவனித்துக் கொண்டு இருந்த போது கொத்தாக தூக்கிக் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு வந்து போலீஸ் நிலைய கஸ்டடி அறையில் அடைக்கின்றனர்.

நீரஜ் குமார் எவ்வளவோ விளக்கம் சொல்லுகின்றார், தனது வக்கீலுடன் பேச வேண்டும் என்கிறார், அவை அனைத்தும் செவிடன்கள் காதில் ஊதிய சங்காகவே முடிகின்றது. 24 மணிநேரத்திற்குப் பின் அடுத்த நாள் தங்களுடைய கடமையை செவ்வனே செய்த பூரிப்புடன் பாட்னா குடும்ப நல நீதிமன்றத்தில் நீரஜ் குமாரை ஆஜர்படுத்தினர் போலீஸார்.

மக்தூம்பூர் போலீஸாரின் முட்டாள்தனத்தை அறிந்த நீதிபதி, காண்டாகி போய் போலீஸாரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி, உடனடியாக நீரஜ் குமாரை அவருடைய வீட்டில் கொண்டு போய் விடுமாறு உத்தரவிட்டனர். இந்த லட்சணத்தில் ஆங்கில அறிவை கொண்டுள்ள வடநாட்டினர் தான்
தமிழர்களாகிய நம் மாணவர்களுக்கு 'நீட்' தேர்வு வைத்து வருடந்தோறும் நம் குழந்தைகளை கொன்று வருகின்றனர். (மக்களின் அறியாமைக்கு அவர்களை ஆண்ட, ஆளும் அரசுகளே முழுமுதற் காரணம்)

மேலும் சமீபத்தில் திறக்கப்பட்ட 3,000 கோடி ரூபாய் வெட்டி செலவான பட்டேல் சிலையின் கீழ் Statue of Unity என்பதை 'ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி' என தமிழை? படுத்தி வைத்திருந்தனர் இந்த 'நீட்' கோஷ்டியினர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Thursday, November 29, 2018

திருச்சியில் நடந்தது போல் சுவீடன் விமான நிலைய கட்டிடத்தில் ஏர் இந்திய விமானம் மோதல்!

அதிரை நியூஸ்: நவ.29
டெல்லியிலிருந்து சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் அர்லண்டா விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் பயணிகளை இறக்குவதற்காக டேக்ஸிவேயில் சென்று கொண்டிருந்த போது அதன் இறக்கைகளில் ஒன்று விமான நிலைய கட்டிடம் ஒன்றின் மீது மோதி சேதமடைந்தது.

இந்த விமானத்தில் இருந்த 179 பயணிகளும் விமான ஊழியர்களும் எத்தகைய காயங்களுமின்றி நகரும் படிக்கட்டு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தினை தொடர்ந்து ஸ்டாக்ஹோமிலிருந்து புறப்படும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதற்கு முன் கடந்த அக்டோபர் மாதம் திருச்சியிலிலிருந்து துபைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று அங்கிருந்த கண்காணிப்பு கோபுரம் மற்றும் விமான நிலைய சுற்றுச்சுவர்களின் மீது மோதியதில் பலத்த சேதமடைந்த நிலையிலேயே பறந்து சென்ற விமானம் திரும்ப அழைக்கப்பட்டு மும்பையில் தரையிறக்கம் செய்யப்பட்டது.

அதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் மாலத்தீவு நாட்டின் மாலி விமான நிலையத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த பூர்த்தியாகாத புதிய விமான ஓடுதளத்தில் தவறுதலாக தரையிறங்கியது எனினும் இந்த அனைத்து சம்பவங்களிலும் இறையருளால் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதே மிகவும் ஆறுதலளிக்கும் செய்தியாகும்.

Source: the news minute
தமிழில்: நம்ம ஊரான்

Sunday, November 11, 2018

நடுவானில் பசியால் கதறிய குழந்தை: பாலூட்டிய விமான பணிப்பெண்ணின் தாயுள்ளம்!

அதிரை நியூஸ்: நவ.11
நடுவானில் பசியால் கதறிய குழந்தை பாலூட்டிய பிலிப்பைன்ஸ் விமான பணிப்பெண்ணின் தாயுள்ளம்.

கைக்குழந்தையுடன் பிலிப்பைன்ஸ் விமானத்தில் பறந்து கொண்டிருந்த ஒரு பெண் பயணியின் கைக்குழந்தை பசியால் கதறியது, அதன் தாயோ கொண்டு வந்த புட்டிப்பால் தீர்ந்ததால் கையறுநிலையில் இருந்தார் மேலும் விமானத்திலும் குழந்தைகளுக்கான பாலுணவு ஏதுமில்லை, தாய் ஏன் பாலூட்டவில்லை என்பதற்கான காரணம் சொல்லப்படவில்லை.

குழந்தை பசியால் அழுததை கண்ட 24 வயது விமானப் பணிப்பெண்ணான பட்ரீஷியா ஆர்கானோ என்பவர் மேலும் தாமதிக்காமல் குழந்தையை வாங்கி சமயோசிதமாக தான் பாலூட்டத் துவங்கினார், குழந்தை முழுமையாக பாலருந்தி விட்டு தானாக உறங்கும் வரை பாலூட்டினார். இது அவரது பணிக்கடமைகளில் ஒன்றாக இல்லாவிட்டாலும் ஒரு தாயாக மாறி தனது உணர்வுகளை செயல்படுத்தியதை அடுத்து பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் நிர்வாகம் உள்ளிட்ட பல தரப்பிலும் வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

அமெரிக்காவில் மீன்கள் ரோட்டில் நீந்தியதால் நின்று போன வாகனப் போக்குவரத்து!

அதிரை நியூஸ்: நவ.11
அமெரிக்காவில் மீன்கள் ரோட்டில் நீந்தியதால் வாகனப் போக்குவரத்து பாதிப்பு.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் மழையை தொடர்ந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடிய நீரில் டஜன் கணக்கிலான சால்மன் வகை மீன்கள் எதிர்நீச்சல் அடித்து சென்றன இதனால் அந்த சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் தாங்களாகவே வாகனங்களை நிறுத்தி மீன்கள் நீந்திச் செல்லும் வரை காத்திருந்து சென்ற அரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

https://edition.cnn.com/2018/11/06/us/salmon-crossing-the-road-trnd/index.html

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
 

Friday, November 9, 2018

கூகுள் எர்த் மூலம் கடலுக்குள் மூழ்கிய விமானம் கண்டுபிடிப்பு? (வீடியோ)

அதிரை நியூஸ்: நவ.09
இங்கிலாந்தின் தென் யார்க்ஷையரைச் சேர்ந்த 55 வயது ராபர்ட் மோர்டன் என்பவர் கூகுள் எர்த்தை (Google Earth) ஆராய்ந்து கொண்டிருந்த போது ஒரு ஆச்சரியமான விஷயம் அவரது கழுகு பார்வைக்குப்பட்டது. ஸ்காட்லாந்து நாட்டின் கடல் பகுதியில் எடின்பர்க் (Edinburg) என்ற நகரிலிருந்து 7வது மைலில் கடலுக்குள் ஒரு விமானம் முழுமையாக மூழ்கியிருப்பதை கண்டு ஆச்சரியத்தில் இவரே மூழ்கிப் போனார்.

தொடர்ந்து தகவல்களை இணையத்தில் தேடியதில் எந்த விமானமும் அந்தப்பகுதியில் விழுந்து மூழ்கியதற்கான தகவல் கிடைக்கவில்லை. எனவே, இது கூகுள் எர்த் பூமியை படம்பிடிக்கும் போது மெல்லிய மேகக்கூட்டத்தின் கீழ் பறந்த விமானத்தின் பிம்பம் இப்படி கடலுக்குள் முழ்கியுள்ளது போல் பரிணமித்திருக்க வாய்ப்புள்ளது என்ற கருத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இதேபோல் மர்மமாக காணமல் போன மலேஷியன் ஏர்லைன்ஸின் விமானத்தின் சிதைந்த பாகங்களை கம்போடியா நாட்டின் தலைநகர் பினோம்பெங்கிற்கு (Phnom Penh) வடக்கேயுள்ள காட்டுப்பகுதிக்குள் கூகுள் எர்த் மூலம் பார்த்ததாக டேனியல் போயர் என்ற விமானி தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ லிங்க்: https://www.msn.com/en-ca/video/watch/google-earth-image-shows-a-plane-apparently-resting-beneath-the-sea/vi-BBPsBgS

Source: Daily Mail
தமிழில்: நம்ம ஊரான்

Wednesday, November 7, 2018

இந்தோனேஷியா விமான பயணிகள் சந்தித்த வித்தியாசமான பிரச்சனை!

அதிரை நியூஸ்: நவ.07
'பழங்களின் அரசன்' (King of Fruits) என வர்ணிக்கப்படும் சிறிய சைஸ் பலா பழங்களைப் போல் காணப்படும் துரியான் (Durian) பழங்கள் கிழக்காசிய நாடுகளில் 2 மிக முக்கிய காரணங்களுக்காக மிகவும் பிரசித்துபெற்றது.

ஒன்று: இளமஞ்சள் நிற வெண்ணெய் போல் அதனுள் இருக்கும் சுளைகளின் அற்புதமான சுவை.

இரண்டு: பழத்திலிருந்து எழும் சகிக்க இயலாத துர்நாற்றம். 

சுமத்ரா மாகாணத்தின் பெங்க்குலூ (Bengkulu) நகர விமான நிலையத்திலிருந்து தலைநகர் ஜகார்த்தாவிற்கு ஸ்ரீவிஜயா ஏர் (Sriwijaya Air) எனும் பயணிகள் விமானம் புறப்படத் தயாரான நிலையில் விமானத்தின் உள்ளிருந்து கிளம்பிய துர்நாற்றத்தை அடுத்து அதிலிருந்த பயணிகள் 'ஒன்னு எங்கள இறக்கிவிடு இல்லே விமானத்தில் ஏற்றப்பட்டுள்ள துரியான் பழங்களை இறக்கு' என போராட்டத்தில் குதித்தனர் இதனால் விமான புறப்பட சுமார் 1 ½ மணிநேரம் தாமதமானது.

விமான நிறுவன ஊழியர்கள் வெயிலாக இருப்பதால் வாடை வருகின்றது, விமானம் பறக்க ஆரம்பித்தவுடன் நாற்றம் காற்றில் கரைந்துவிடும், துரியான் பழங்கள் விமானத்தில் கொண்டு செல்ல தடை செய்யப்பட்ட பொருளல்ல, நாற்றம் பரவாமல் இருக்க ரம்ப இலைகள் (Pandan Leaves) மற்றும் காபி தூள் துவப்பட்டுள்ளன என பல சமாதானங்களை கூறினாலும் பயணிகளிடம் எதுவும் எடுபடவில்லை. இறுதியாக விமானத்தில் ஏற்றப்பட்டிருந்த 2 டன் துரியானை பழங்களையும் இறக்கிய பிறகே பயணிகள் சமாதானம் அடைந்துள்ளனர்.

துரியான் பழங்களுடன் பிறந்து, உண்டு, வளர்ந்த மக்களாலேயே இந்தோனேஷிய விமானத்திற்கு இப்படியும் ஒரு சோதனை!

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

ஆஸ்திரேலியாவில் டிரைவர் இன்றி 92 கி.மீ ஓடிய சரக்கு ரயில் (வீடியோ)

அதிரை நியூஸ்: நவ.07
மேற்கு ஆஸ்திரேலியாவின் நியூமேன் (Newman) எனுமிடத்திலுள்ள இரும்புத்தாது சுரங்கத்திலிருந்து தாதுக்களை ஏற்றிக் கொண்டு ஹெட்லேண்ட் (Port Hedland) எனும் துறைமுகத்திற்கு திங்கள் அதிகாலை 4.40 மணியளவில் புறப்படவிருந்த சரக்கு ரயில் ஒன்று டிரைவர் இல்லாமமேயே தரிகெட்டு ஓடத்துவங்கியது. இந்த ரயில் உட்பட 4 ரயில்கள் கனிமங்களை வெட்டியெடுக்கும்  (Mining giant) BHP எனப்படும் சுரங்க நிறுவனத்திற்கு சொந்தமாகவுள்ளன.

சுமார் 2 கி.மீ நீளமுடைய இந்த ரயில் 268 பெட்டிகளுடன் மணிக்கு 110 கி.மீ (68 மைல்) வேகத்தில் சுமார் 50 நிமிடங்கள் தன்னிச்சையாக ஓடியதால் துறைமுக நகரான ஹெட்லேண்டை அடையுமுன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆளரவமற்ற பில்பாரா (Pilbara) எனுமிடத்தில் நிறுத்தும் நோக்கில் 92வது கி.மீ தூரத்தில் 'வேண்டுமென்றே தடம் புரளச்செய்யப்பட்டது' (Deliberately derailed) . இந்த செயற்கை விபத்தால் சுமார் 1,600 மீட்டர் ரயில்வே டிரேக் பலத்த சேதமடைந்துள்ளன. இவற்றை சரிசெய்து மீண்டும் இப்பாதையில் ரயல் போக்குவரத்தை துவங்க 1 வார காலம் ஆகுமாம்.

இந்த ரயிலின் டிரைவர் ரயில் புறப்படுமுன் அனைத்தும் சரியாக இருக்கின்றதா என பரிசோதித்து விட்டுப் புறப்படுவதே வழக்கம், அதே அடிப்படையில் ரயில் பெட்டிகளின் இணைப்பை உறுதி செய்தி கொள்ள இறங்கிய நேரத்திலேயே ரயில் தானாக ஓடத்துவங்கியுள்ளது. இந்த ரயிலில் யாருமே இல்லாததால் எத்தகைய மனித சேதாரங்களும் நிகழவில்லை. விபத்து குறித்து உயர்மட்ட விசாரனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளன.

Sources: Gulf News / The Guardian etc...
தமிழில்: நம்ம ஊரான்




Monday, November 5, 2018

அமெரிக்காவில் விமானத்தில் கார்கோ ஏற்றும் பகுதியில் தூங்கிய ஊழியர்!

அதிரை நியூஸ்: நவ.05
அமெரிக்காவின் கன்சாஸ் விமான நிலையத்தில் பயணிகளின் கார்கோ ஏற்றும் ஊழியராக பணிபுரிந்து வருகிறார் 23 வயது இளைஞர் ஒருவர். இவர் மது அருந்திவிட்டு பணிக்கு சென்றதால் விமானத்தின் கார்கோ ஏற்றும் பகுதியில் தன்னை மறந்து தூங்கிவிட்டார்.

தூங்கிய ஊழியருடன் கன்சாஸ் (Kansas) நகரிலிருந்து புறப்பட்ட விமானம் 2 மணிநேரம் கழித்து சிகாகோ (Chicago) விமான நிலையத்தில் தரையிறங்கியது.

அமெரிக்க விமானத்தின் கூத்து இதுவென்றால் இந்திய விமான கூத்தோ அதற்கும் மேலே! 

இந்தியாவில் பயணிகளின் கார்கோவையே ஏற்ற மறந்த கோ ஏர் (Go Air) நிறுவனம்
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலிருந்து ஜம்முவிற்கு புறப்பட்ட கோ ஏர் (Go Air) எனும் விமானத்தில் அதன் ஊழியர்கள் பயணிகளின் லக்கேஜ்களை சுத்தமாக ஏற்ற மறந்துள்ளனர் இல்லையில்லை கடும் அலட்சியம் காட்டியுள்ளனர். காஷ்மீர் மாநிலப் பயணிகள் யாரும் தங்களுடைய கேபின் பேக்கேஜ் எனப்படும் கை பேக்குகளை விமானத்தினுள் எடுத்துச் செல்ல தடை உள்ளது என்பதை அறிந்தால் மட்டுமே இதன் பாதிப்பை உணர்ந்து கொள்ள முடியும்.

ஜம்மு சென்ற பயணிகள் தங்களுடைய லக்கேஜ் 1 மணிநேரத்திற்கு மேல் காத்திருந்தும் வராததையடுத்து விமான ஊழியர்கள் ஸ்ரீநகரிலிருந்து ஜம்மு வரும் அடுத்த தனியார் விமானத்திலேயே உங்களுடைய பொருட்கள் எடுத்து வரப்படும் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் பின்பு சிறிது நேரத்திலேயே உங்களுடைய உடைமைகளை நாளை வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என பெரிய சம்மர்சால்ட் அடித்துள்ளனர்.

இந்த அவல அலட்சிய சேவை குறித்து பத்திரிக்கையாளர்கள் கோ ஏர் விமான நிறுவனத்தை போனில் தொடர்பு கொள்ள முயன்றபோதும் எதிர்முனையில் எடுத்து பதில் சொல்ல யாருமில்லை. கோ ஏர் விமான நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் குறிப்பட்டிருந்த ஈமெயில் முகவரிகளுக்கு புகார் அனுப்பியும் யாரும் கண்டுகொள்ளவில்லை. மேலும் ஜம்மு விமான நிலையத்தில் எக்ஸிகியுடிட் பயணிகளுக்கான பகுதியில் பணியிலிருந்த ஊழியரும் 'பதில் சொல்ல தனக்கு அதிகாரமில்லை' என மறுத்துவிட்டார்.

இதை அலட்சியம் என சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்