பிறந்த குழந்தை ஏன் அழுகிறது.!
இன்றோ அல்லது நேற்றோ பிறந்த குழந்தை சில நேரங்களில் தொடர்ச்சியாக
அழுதுகொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம்.
இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால் பலருக்கு காரணங்கள்
தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.
சரி அப்படி எதற்குத்தான் இந்த குழந்தைகள் அழுகிறது
சரி அப்படி எதற்குத்தான் இந்த குழந்தைகள் அழுகிறது
காரணங்கள் என்ன?
இதோ தெரிந்துகொள்ளுங்கள்.
இதோ தெரிந்துகொள்ளுங்கள்.
ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும்பொழுது தனது தாயின் இதயத்துடிப்பை பத்து மாதங்கள் கேட்டு கேட்டு மெய்மறந்து, அந்த இதயத்துடிப்பின் இசையில் பத்து மாதங்கள் உறங்கிக் கொண்டிருக்குமாம்.
இந்த பத்து மாதங்கள் கேட்டு ரசித்த இதயத் துடிப்பு
தீடிரென கேட்காமல் போவதால்தான் குழந்தைகள் பிறந்தவுடனே அழத் தொடங்கி
விடுகின்றனவாம்.
அது மட்டும் அல்லது அழுகின்ற குழந்தையை தூக்கி நெஞ்சில்
வைத்துக்கொள்ளும் பொழுது குழந்தை மீண்டும் அந்த இதயத் துடிப்பை உணரத் தொடங்குவதால், தனது அழுகையை நிறுத்தி விடுகிறது என்றால்
பார்த்துக்கொள்ளுங்கள்..
இப்படி பலர் நினைக்கின்றனர்.
வேறு சிலர் இப்படி
கூறுகின்றனர்.
அதாவது, குழந்தை பிறந்தவுடன்,
சீரான சுவாசம் பெறுவதற்கு நுரையீரல் சீராக இல்லாமல் சுருங்கியே இருக்கும், அது
விரிவடைய வேண்டுமானால், அதில் உள்ள பல்லாயிரக் கணக்கான அறைகள் திறக்க வேண்டும்.
அந்த அறைகள் திறந்தால் தான் சீராக முறையில் சுவாசிக்க முடியும்.
அதனாலேயே, இயற்கையிலேயே குழந்தை
பிறந்த உடன் அலறுகிறது, அப்படி அலறும்போது நுரையீரலில் உள்ள அறைகள் படிப்படியாக
திறக்குமாம்.
இன்னும் வேறு சிலர் இப்படி
கூறுகின்றனர்.
அதாவது, குழந்தை தாயின்
கருவறையில், தாயின் சூட்டோடு இருந்து விட்டு, வெளியில் வந்ததும் வித்தியாசமான
சீதோஷ்ண நிலையின் காரணமாகவும் இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
எது எப்படி? என்னதான்
இருந்தாலும் குழந்தை பிறந்த உடன் அழுதே தீரும் என்று முதியோர்கள் கூறுகின்றனர்.
நீங்கள் கூறப்போவது என்னவோ?
எதுவோ?
K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்)
கோ.மு. முஹம்மது அலியார்.
CONSUMER RIGHTS.
