.

Pages

Showing posts with label புதிய தொழில்முனைவோர். Show all posts
Showing posts with label புதிய தொழில்முனைவோர். Show all posts

Thursday, December 3, 2020

பட்டுக்கோட்டையில் 'ராஹத்' ஆம்னி பஸ் சேவை தொடக்கம்!

அதிரை நியூஸ்: டிச.03
பட்டுக்கோட்டையில் இருந்து சென்னை செல்லவும், சென்னையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு பயணம் மேற்கொள்ளவும் ராஹத் ஆம்னி பஸ் சேவை (02-12-2020 ) புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.

'ராஹத்' ஆம்னி பஸ் சேவையின் பட்டுக்கோடை முகவர் முகமது சாலிகு கூறியது;
'பட்டுக்கோட்டையில் இருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து பட்டுக்கோட்டைக்கும் என இரு மார்க்கத்திலும் போக்குவரத்து சேவையை மீண்டும் துவங்க உள்ளோம். 

தினமும் பட்டுக்கோட்டையில் இருந்து காலை 11 மணி, இரவு 9.15 மணி, 9.30 மணி, 9.45 மணிக்கும் பேருந்து புறப்படும். 'குறித்த நேரம் பயணம் - மிதமான வேகம் - பாதுகாப்பான பயணம் - பயணிகளை பத்திரமாக கொண்டு சேர்த்தல் - கனிவான பணிவிடை - அனுபவமிக்க ஓட்டுநர்கள், மேம்படுத்தப்பட்ட வசதிகளை பிரதானமாகக் கொண்டு இயங்க உள்ளது. 

அதிராம்பட்டினம் சாலை, பெட்ரோல் பங்க் எதிரில், கேபிஆர் காம்ப்ளக்ஸ், (பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில்) டி.எஸ் டிராவல்ஸ் ~ ராஹத் ஆம்னி பஸ் அலுவலகத்தில் இருந்து பஸ் புறப்படும். சென்னையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு வரும் பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவு வசதி செய்துகொடுக்கப்படும்.

மேலும் குறைந்த கட்டணத்தில் பொருட்களை உரியவரிடம் பத்திரமாக கொண்டு சேர்க்க பார்சல் சர்வீஸும் உண்டு. எங்கள் சேவை சிறக்க பயணிகள், வர்த்தகர்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

பயண முன்பதிவு தொடர்புக்கு
D.S TRAVELS & TOURS
8220 660 332

Wednesday, November 18, 2020

துபையில் 'தம்பிஸ்' உயர்தர அறுசுவை உணவகம் திறப்பு (படங்கள்)

அதிரை நியூஸ், நவ.18
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர்கள் என். முகமது ரபீக், 'மக்கத்தம்பி' என்கிற முகமது இலியாஸ், என்.முகமது இஸ்மாயில். இளம் தொழில் முனைவோர்கள். இவர்கள் மூவரும் இணைந்து, அமீரகம், துபை டேரா, புர்ஜ் அல் முரார் பகுதியில், அல் புத்திம் மஸ்ஜீத் அருகில் 'தம்பிஸ் ரெஸ்டாரண்ட்' என்ற பெயரில் உயர்தர அறுசுவை உணவகத்தின் திறப்பு விழா நாளை (19-11-2020) வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து உணவக உரிமையாளர்கள் என். முகமது ரபீக், 'மக்கத்தம்பி' என்கிற முகமது இலியாஸ் ஆகியோர் கூறியது;
புதிதாக தொடங்கிய எங்களது உணவகத்தில், குறைந்த கட்டணத்தில் உயர்தர அறுசுவையில் தென்னிந்திய அனைத்து வகை சைவ / அசைவ உணவுகள் உடனுக்குடன் தயார் செய்து சுடச்சுட வழங்கப்படும். மேலும், அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, காயல்பட்டினம், கீழக்கரை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளின் பிரசித்திபெற்ற மீன் / மட்டன் / கோழி பிரியாணி வகைகள், அஞ்சுகறி சஹன் உணவு, மோட்டா ரைஸ், பாரிக் ரைஸ், புரோட்டா, சப்பாத்தி உள்ளிட்ட அனைத்து வகை உணவுகள், அனுபவமிக்க மேஸ்திரிகளைக் கொண்டு சுவையுடன் தயாரித்து வழங்க உள்ளோம். ஆர்டரின் பேரில் பக்கெட்  மட்டன், சிக்கன் பிரியாணி உணவு செய்து கொடுக்கப்படும். இலவச டோர் டெலிவரி வசதியும் உண்டு. குடும்ப உறுப்பினர்கள் உணவருந்த உணவகத்தில் தனியிட வசதி உண்டு. வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர மெஸ் வசதி உண்டு.

நாளை (19-11-2020) அன்று நடைபெறும் உணவகத் திறப்பு விழாவில், அமீரக வாழ் தமிழர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு, எங்களது புதிய உணவகம் மேம்பட தொடர்ந்து ஆதரவு தரவேண்டும்' என்றனர்.

  • உணவகத் தொடர்புக்கு: 
  • 04- 2733119 / 052 526 3998

Friday, October 23, 2020

அதிராம்பட்டினத்திலிருந்து 'ராஹத்' ஆம்னி பஸ் சேவை மீண்டும் தொடக்கம்!

அதிரை நியூஸ்: அக்.23
அதிராம்பட்டினத்திலிருந்து சென்னை செல்லவும், சென்னையிலிருந்து அதிராம்பட்டினத்திற்கு பயணம் மேற்கொள்ளவும் ராஹத் ஆம்னி பஸ் சேவை எதிர்வரும் (26-10-2020 ) திங்கள்கிழமை முதல் வழமைபோல் மீண்டும் தொடங்க உள்ளது.

'ராஹத்' ஆம்னி பஸ் சேவையின் அதிராம்பட்டினம் முகவர் முகமது சாலிகு கூறியது;
'வழமை போல் அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, பாண்டிச்சேரி ஈசிஆர் சாலை வழியாக சென்னை தாம்பரம், ஏர்போர்ட் வழியாக மண்ணடிக்கும், சென்னை மண்ணடியிலிருந்து எக்மோர், தி நகர், பாண்டிச்சேரி வழியாக அதிராம்பட்டினம் என இரு மார்க்கத்திலும் போக்குவரத்து சேவையை மீண்டும் துவங்க உள்ளோம். 

தினமும் அதிராம்பட்டினத்திலிருந்து இரவு 8.30, மணிக்கு இருகை வசதி மட்டும் கொண்ட பேருந்தும், இரவு 9 மணிக்கு ஏ.சி படுக்கை வசதி கொண்ட பேருந்தும், இரவு 9.15 மணிக்கு படுக்கை வசதி கொண்ட நான் ஏசி பேருந்தும் புறப்பட உள்ளது. மறுமார்க்கத்தில் சென்னை மண்ணடியிலிருந்து இரவு 8.30 மணிக்கு பேருந்து புறப்படும். 'குறித்த நேரம் பயணம் - மிதமான வேகம் - பாதுகாப்பான பயணம் - பயணிகளை பத்திரமாக கொண்டு சேர்த்தல் - கனிவான பணிவிடை - அனுபவமிக்க ஓட்டுநர்கள், மேம்படுத்தப்பட்ட வசதிகளை பிரதானமாக கொண்டு இயங்க உள்ளது. 

அதிராம்பட்டினம் ஜாவியா ரோடு, ஸ்டார் வாட்டர் சர்வீஸ் அருகில் உள்ள (டிஎஸ் டிராவல்ஸ்) ராஹத் ஆம்னி பஸ் அலுவலகத்தில் இருந்து பஸ் புறப்படும். சென்னையில் இருந்து அதிராம்பட்டினம் வரும் பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவு வசதி செய்துகொடுக்கப்படும்.

மேலும் குறைந்த கட்டணத்தில் பொருட்களை உரியவரிடம் பத்திரமாக கொண்டு சேர்க்க பார்சல் சர்வீஸும் உண்டு. எங்கள் சேவை சிறக்க பயணிகள், வர்த்தகர்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

பயண முன்பதிவு தொடர்புக்கு
97 88 21 31 41 /  97908 28483

Wednesday, October 21, 2020

அதிராம்பட்டினத்தில் புதியதோர் உதயம் 'TRUFIT' ஆடையகம்!

அதிரை நியூஸ்: அக்.21
அதிராம்பட்டினம் டாக்டர் ராஜ் நர்சிங் ஹோம் வளாகத்தில் புதியதோர் உதயமாக TRUFIT' (ட்ருஃபிட்) என்ற பெயரில் ஆண்கள் ஆடையகம் கடந்த 15 ஆம் தேதி முதல் இயங்கி வருகிறது.

இதுகுறித்து நிறுவன உரிமையாளர் சலீம் கூறியது;
எங்கள் நிறுவனத்தில் ஆடவர்களுக்கு தேவையான அனைத்து 
டிசைன்களிலும் ஷர்ட், டீ-ஷர்ட், ஜீன்ஸ் தரமான ஆடைகள் நியாமான 
விலையில் எங்களது நிறுவனத்தில் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தொலை 
தூரங்களுக்கு சென்று ஆடைகள் வாங்கிவர வேண்டிய அவசியமிருக்காது.     
தரமான ஆடைகளை நியாயமான விலையில் விற்பனை 
செய்கிறோம். அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப்பகுதி பொதுமக்கள் எங்களது தொழில் வளர்ச்சியடைய தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்.    

நிறுவனத் தொடர்புக்கு: 
7708015260

செக்கடி மேட்டிலிருந்து சென்னை சென்று வர புதிய ஆம்னி பஸ் சேவை தொடக்கம்!

அதிரை நியூஸ்: அக்.21
அதிராம்பட்டினம் செக்கடி மேட்டிலிருந்து சென்னை செல்லவும், சென்னையிலிருந்து அதிரை செக்கடி மேட்டிற்கு பயணம் மேற்கொள்ளவும் புதிதாக 'ஸ்கை ஏர் பஸ்' ஆம்னி பஸ் சேவை நாளை (22-10-2020 ) வியாழக்கிழமை முதல் தொடங்க உள்ளது.

புதிய ஆம்னி பஸ் சேவையின் அதிராம்பட்டினம் முகவர் செக்கடிமேடு  முகமது அனஸ் கூறியது;
'அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, பாண்டிச்சேரி ஈசிஆர் சாலை வழியாக சென்னை தாம்பரம், ஏர்போர்ட் வழியாக மண்ணடிக்கும், சென்னை மண்ணடியிலிருந்து எக்மோர், தி நகர், பாண்டிச்சேரி வழியாக அதிராம்பட்டினம் என இரு மார்க்கத்திலும் போக்குவரத்து சேவையை துவங்க உள்ளோம். 

தினமும் செக்கடி மேட்டிலிருந்து இரவு 9.30 மணிக்கும், சென்னை மண்ணடியிலிருந்து இரவு 8.30 மணிக்கும் பேருந்து புறப்படும். 'குறித்த நேரம் பயணம் - மிதமான வேகம் - பாதுகாப்பான பயணம் - பயணிகளை பத்திரமாக கொண்டு சேர்த்தல் - கனிவான பணிவிடை - அனுபவமிக்க ஓட்டுனர்கள், மேம்படுத்தப்பட்ட ஆம்னி பஸ் உள்ளிட்டவற்றை பிரதானமாக கொண்டு இயங்க உள்ளது. 

மேலும் குறைந்த கட்டணத்தில் பொருட்களை உரியவரிடம் பத்திரமாக கொண்டு சேர்க்க பார்சல் சர்வீஸும் உண்டு. எங்கள் சேவை சிறக்க பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

பயண முன்பதிவு தொடர்புக்கு
9159494975 / 9944317144

Sunday, October 18, 2020

அதிராம்பட்டினத்தில் புதியதோர் உதயம் 'ஷோபா' பல் மருத்துவமனை (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.18
அதிராம்பட்டினம், திலகர் தெரு, ஈசிஆர் பிஸ்மி மெடிக்கல்ஸ் அருகில், தீன் டயக்னாஸ்டிக் சென்டர் கட்டிடத்தில், புதியதோர் உதயமாக 'ஷோபா' பல் மருத்துவமனை இன்று (18-10-2020) ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.

நிகழ்வுக்கு, பட்டுக்கோட்டை கணகேசதேவர் நினைவு மருத்துவமனை இயக்குநர் டாக்டர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்து, மருத்துவமனையை திறந்து வைத்தார். 

அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனை பல் பொதுநல மருத்துவர் மற்றும் பல் வேர் சிகிச்சை நிபுணர் டாக்டர் பா.பாரதி, மகிழங்கோட்டை ஜி. பாலசுப்பிரமணியன், வி.சுப்ரமணியன், விஜய் மக்கள் இயக்கம் பட்டுக்கோட்டை நகரத் தலைவர் ஆதி.ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில், உறவினர்கள், நண்பர்கள், ஊர் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

ஷோபா மருத்துவமனை பல் மருத்துவர் டாக்டர் பிரியங்கா பாரதி அனைவரையும் வரவேற்று, மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தாம் அளிக்க இருக்கும் அதிநவீன பல் மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை குறித்து கூறியது;
பல் பொதுமருத்துவம், முகத்தாடை அழகு சீரமைப்பு சிகிச்சை, பல்வேர் சிகிச்சை, லேசர் சிகிச்சை உள்பட பல் மருத்துவம் தொடர்பான அதிநவீன கருவிகள் மூலம் பல்வேறு சிகிச்சை அளிக்கப்படும். 

தினமும் காலை 9.30 மணி தொடங்கி மதியம் 1.30 மணி வரை... மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை மருத்துவ சிகிச்சை, ஆலோசனை வழங்கப்படும். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.  

பல் மருத்துவம் தொடர்பான சேவையை அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார கிராமப் பகுதி பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்' என்றார்.

பல் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை 
முன்பதிவு தொடர்புக்கு...

9787117949


Monday, September 21, 2020

அதிராம்பட்டினம் ECR ல் புதியதோர் உதயம் 'COAL BBQ' மினி கார்டன் Families ரெஸ்டாரண்ட் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.21
அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர்கள் ஜெ. ரியாஸ்கான், ஜெ.முகமது அசாருதீன். உடன் பிறந்த சகோதரர்களான இவர்கள் இருவரும் இணைந்து அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலை பிலால் நகர் பெட்ரோல் பங்க் அடுத்து, 'COAL BBQ' மினி கார்டன் Families ரெஸ்டாரண்ட் எனும் பெயரில் உயர்தர அறுசுவை உணவகத்தை புதிதாக தொடங்கி நடத்தி வருகின்றனர்.,

திறப்பு விழாவில் ஊர் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு வாழ்த்தி மகிழ்ந்தனர்.

இதுகுறித்து உணவக உரிமையாளர்கள் ஜெ. ரியாஸ்கான், ஜெ.முகமது அசாருதீன் ஆகியோர் கூறியது;
புதிதாக தொடங்கி இருக்கும் எங்களது உணவகத்தில், குறைந்த கட்டணத்தில் உயர்தர அறுசுவையில் சைனிஸ், அரபிக் மற்றும் தென்னிந்திய சைவ / அசைவ உணவுகள் தயாரித்து வழங்கப்படும். குறிப்பாக, சைனீஸ் கிரேவி, கிரில் சிக்கன், ஃப்ஹம், ஷவர்மா, சிக்கன் டிக்கா, நூடுல்ஸ் வகைகள், நான், புரோட்டா உள்ளிட்டவை உடனுக்குடன் தயார் செய்து சுடச்சுட வழங்கப்படும். 

ஹலால் செய்யப்பட்டு சுத்தமான முறையில் உணவுகளை தயாரிக்கப்படுவதுடன், கனிவான உபசரிப்பு, ஆர்டர் செய்த சில நிமிடங்களிலேயே இலவச ஹோம் டெலிவரி போன்ற வசதிகள் உள்ளது. பெண்கள் மற்றும் குடும்பமாக வருபவர்களுக்கு மினி கார்டனில் தனி இருக்கை வசதி உண்டு. அதிரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்கள் எங்கள் உணவகத்திற்கு தொடர்ந்து வருகை தந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றனர்.
உணவகத் தொடர்புக்கு:
900 331 9669