.

Pages

Showing posts with label புதுக்கோட்டை உள்ளூர் செய்திகள். Show all posts
Showing posts with label புதுக்கோட்டை உள்ளூர் செய்திகள். Show all posts

Saturday, April 4, 2020

புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் கரோனா நிவாரணம் வழங்கல் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.04
அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் கிராம ஊராட்சி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனோ நிவாரணத்தொகை மற்றும் நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட, பட்டுக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவரும், அதிமுக பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளருமாகிய பி.சுப்பிரமணியன், தமிழக அரசின் நிவாரணத் தொகை ரூ.1,000, அரிசி, சா்க்கரை, பருப்பு ஆகிய தொகுப்புகளை வழங்கி துவக்கி வைத்தாா்.

இதில், புதுக்கோட்டை உள்ளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவர் ஜிவ காருண்யம், புதுக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் கெளரி சங்கர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர். முதல் கட்டமாக 100 குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. மீதமுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு அடுத்தடுத்து நாட்களில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.