.

Pages

Showing posts with label பெருநாள் நிகழ்ச்சிகள். Show all posts
Showing posts with label பெருநாள் நிகழ்ச்சிகள். Show all posts

Monday, May 2, 2022

ஜப்பானில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங்கள் )


அதிரை நியூஸ்: மே.02 

உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் ஜப்பான் நாட்டிலும் வசித்து வருகின்றனர். ஜப்பானில் வாழும் முஸ்லீம்கள் பெருநாளை இன்று திங்கட்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஜப்பான் அஷிகஹா யமஸ்டசோவில் உள்ள நூர் மஸ்ஜீத்தில் நடைபெற்ற பெருநாள் சிறப்புத் தொழுகையில் அதிரையர்கள் ஒன்றாகக் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.

இங்குள்ள, நூர் மஸ்ஜித்தில் ஆண்களுக்கு காலை 6 மணி, 7 மணி ஆகிய வேளைகளிலும், பெண்களுக்கு காலை 8 மணிக்கும் பெருநாள் சிறப்புத் தொழுகை தனித்தனியாக நடத்தப்பட்டது.





















Saturday, August 1, 2020

அமெரிக்கா கலிபோர்னியா (Milpitas) வாழ் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)

அதிரை நியூஸ்: ஆக. 01
இசுலாமியர்களின் தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாள் பண்டிகை, அமெரிக்காவில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள (Milpitas) மில்பிடாஸ் பகுதியில் நடைபெற்ற பெருநாள் சிறப்புத் தொழுகையில் அங்கு வாழும் அதிரையர்கள் ஒன்றாகப் பங்கேற்று ஒருவருக்கொருவர் தங்களின் வாழ்த்துகளை மகிழ்ச்சி பொங்க பகிர்ந்துகொண்டனர். பின்னர், அனைவரும் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
 

அதிராம்பட்டினத்தில் சுட்டிக்குழந்தைகளின் பெருநாள் கொண்டாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக. 01
இசுலாமியர்களின் தியாகத் திருநாள் ஹஜ் பெருநாள் பண்டிகை தமிழகமெங்கும் இன்று சனிக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

குழந்தைகள் நமக்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ள மதிப்பிட முடியாத அருட்கொடை. இவர்களின் மழலைப் பேச்சு முதல் அவர்கள் செய்யும் குசும்பு வரை அருகில் இருந்து மனமகிழலாம். அதுவும் பண்டிகை காலமென்றால் அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி அளவில்லாதது. பெருநாள் மற்றும் விஷேச தினங்களில் குழந்தைகள் புதுப்புது டிசைன்களில் புத்தாடை உடுத்தி நகர்ப்புறங்களில் கலர்கலராக வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

அதிலும் சில துடிப்பான குழந்தைகளின் மழழைப்பேச்சும், தான் அணிந்து இருக்கும் உடையைப்பற்றியும், பெற்றோர் மற்றும் உறவினர்களிடமிருந்து பெறுகின்ற அன்பளிப்பு காசு பணத்தைப் பற்றியும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது ரசிக்கும்படி இருக்கும்.

எங்கள் கண்களில் தென்படாத அதிரை நியூஸ் வாசகர்களாகிய உங்கள் வீட்டுச்சுட்டிக் குழந்தைகளின் புகைப்படங்களை எங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு (editoradirainews@gmail.com) அனுப்பித்தந்தால் உடனடியாக தளத்தில் பதியப்படும்.   

பெருநாளன்று அதிரை நியூஸ் வாசகர்கள் அனுப்பி வைத்த சுவீட் பேபிகளின் கலர் ஃபுல் புகைப்படங்கள் இதோ...