.

Pages

Showing posts with label மனோரா பாலிடெக்னிக் கல்லூரி. Show all posts
Showing posts with label மனோரா பாலிடெக்னிக் கல்லூரி. Show all posts

Friday, May 13, 2016

மனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ, மாணவிகளின் புதிய சேர்க்கை துவக்கம் !

பட்டுக்கோட்டையை அடுத்துள்ள கோட்டாகுடி-கார்காவயல் மனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் வரும் கல்வியாண்டுக்கான மாணவ மாணவிகளின் புதிய சேர்க்கை நடந்து வருகிறது.

இங்கு சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ( டூல் & டை ), எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகளுக்கான சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது.
மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு 
04373 223666 / 9843266844 / 9597174194

Friday, May 15, 2015

மனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ, மாணவிகளின் புதிய சேர்க்கை துவக்கம் !

பட்டுக்கோட்டையை அடுத்த கோட்டாகுடி-கார்காவயல் மனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் வரும் கல்வியாண்டுக்கான மாணவ மாணவிகளின் புதிய சேர்க்கை துவங்கியுள்ளது.

புதிய சேர்க்கை தொடர்பாக கல்லூரி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள துண்டு பிரசுரத்தில் குறிபிட்டுள்ளதாவது:

Saturday, February 21, 2015

மனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா நிகழ்ச்சி !

அதிரை அருகே உள்ள மனோரா பாலிடெக்னிக் கல்லூரியின் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரித் தலைவர் ஓ. சாகுல் ஹமீது தலைமையுரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட கவிஞர் நந்தலாலா, ராஜாமடம் அண்ணாமலை பல்கலைகழக டீன் முனைவர் ஜி. இளங்கோவன், மல்லிபட்டினம் அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் என் சண்முகம் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்

கல்லூரி பொருளாளர் எஸ். எம் முஹம்மது முகைதீன், துணை தலைவர் கே. நஜ்முதீன், துணை செயலாளர் என். ஜெகபர்அலி, கல்லூரி இயக்குநர்கள் எஸ். எச். அசாருதீன் ஆகியோர் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்புப் பரிசுகளும், கடந்த பருவத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும், அதிக தேர்ச்சி சதவிகிதம் வழங்கிய ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கி கெளரவித்தனர்.

முன்னதாக கல்லூரி செயலாளர் வி. சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார். முதல்வர் என். சரவணன் ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரித் தாளாளர் ஐ. நாடி முத்து தாளாளர் உரையாற்றினார்.

அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் மூத்த முதல்வர் பேராசிரியர் பர்கத், அதிரையின் முக்கிய பிரமுகர்கள், கார்காவயல் ஊராட்சித் தலைவர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் இயந்திரவியல் துறை தலைவர் எஸ். சிலம்புச்செல்வன் நன்றி கூறினார்.
 
 
 

Sunday, August 31, 2014

மனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் !

பட்டுக்கோட்டையை அடுத்த கோட்டாகுடி-கார்காவயல் மனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம், ரத்த தான முகாம் ஆகியவை நடைபெற்றது.
     
கோட்டை ரோட்டரி சங்கம், இந்திய மருத்துவ கழக பட்டுக்கோட்டை கிளை, மனோரா பாலிடெக்னிக் கல்லூரி, துணை இயக்குநர்-தொழுநோய் பிரிவு தஞ்சை ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற இம்முகாமிற்கு கோட்டை ரோட்டரி சங்கத்தலைவர் பொறியாளர் ஏ.ராமலிங்கம் தலைமை வகித்தார். ரோட்டரி துணை ஆளுநர் (மண்டலம்-21) டாக்டர் சி.வி.பத்மானந்தன், மனோரா பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் பொறியாளர் ஐ.நாடிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கார்காவயல் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமேகலை வெங்கடாசலம், ஒன்றியக்குழு உறுப்பினர் புஷ்பநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
                   
மருத்துவர்கள் செல்லப்பன், சுப்பிரமணியன், அய்யாசாமி, குணசீலன், ரெத்னா சுப்பிரமணியன், கிளாடிஸ் காமராஜ், முருகானந்தன், ராஜேஸ், புகழேந்தி, லெட்சுமிகாந்த், சங்கீதா கணேஷ், மேகலா, அறிவழகன், சரண்யா, ஶ்ரீநாத் உள்ளிட்ட 15 பல்துறை மருத்துவ நிபுணர்களும் சுமார் 410 நோயாளிகளுக்கு அனைத்து வகை நோய்களுக்கும் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர்.

முகாமில் 30 செவிலியர்களும், ஜீவன் நர்சிங் நிறுவனம், அன்னை ரத்த பரிசோதனை மையம் மற்றும் கிரேஸ் மருத்துவ மைய மாணவிகள் இணைந்து இசிஜி, ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்தனர்.
         
ரத்த தான முகாமில் மாணவ,மாணவியர்,ஆசிரியர்கள் உட்பட
35 பேர் குருதிக்கொடை அளித்தனர். மேலும் முகாமில் டெங்கு காய்ச்சல், அதன் அறிகுறிகள், தடுப்பதற்கான வழிமுறைகள், சித்த வைத்திய முறைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
           
ரோட்டரி கிளப் நிர்வாகிகள் இமானுவேல் ராஜ், கணேசன், தேவசகாயம், டாக்டர் சம்பத்குமார், மொகிதீன் அப்துல் காதர், ஜெயசீலன், பூபதி, கிக்காராம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள்  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.டெங்கு கொசுக்கள் உற்பத்தியை
தடுக்கும் வழிமுறைகள் குறித்த கையேடு வழங்கப்பட்டது.கோட்டை ரோட்டரி சங்க செயலாளர் எம்.சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.

செய்தி : எஸ்.ஜகுபர்அலி 
பேராவூரணி.