.

Pages

Showing posts with label மஸ்ஜிதுல் ஹுதா. Show all posts
Showing posts with label மஸ்ஜிதுல் ஹுதா. Show all posts

Sunday, September 8, 2019

நெசவுத்தெரு 'மஸ்ஜீது-ல்-ஹுதா' பள்ளிவாசல் புதிய நிர்வாகிகள் தேர்வு!

அதிராம்பட்டினம், செப்.08
அதிராம்பட்டினம், நெசவுத்தெரு 'மஸ்ஜீது-ல்-ஹுதா' பள்ளிவாசல் நிர்வாகக் குழு ஆலோசனைக்கூட்டம் (செப்.06)  வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, ஆலோசனைக்குழுத் தலைவர் ஹாஜி ஏ.இ.எஸ் முகைதீன் அப்துல் காதா் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், நெசவுத்தெரு 'மஸ்ஜீது-ல்-ஹுதா' பள்ளிவாசல் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில், தலைவராக எம்.எஸ் முகமது அபூபக்கர், செயலாளராக இன்ஜினியர் ஹாஜி எம். ஹலிமுத்தீன், பொருளாளராக ஏ. நெய்னார் முகமது, ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக ஹாஜி ஏ.ஜி.எஸ் முகைதீன் அப்துல் காதா், என். முகமது முகைதீன், எம். தமீம் அன்சாரி, ஹாஜி எம். எம் சேக் அலாவுதீன், எம்.பி ஹாஜா அலாவுதீன், எம் சாகுல் ஹமீது (சாமு), எம். சேக்தாவூது ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் அடுத்த இரண்டு ஆண்டுகள் ஆகும்.

Thursday, September 7, 2017

அதிரையில் 'மஸ்ஜீது-ல்-ஹுதா' பள்ளிவாசல் திறப்பு விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், செப். 06
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், நெசவுத்தெரு பகுதியில் 'மஸ்ஜீது-ல்-ஹுதா' புதிய பள்ளிவாசல் திறப்பு விழா இன்று (07-09-2017) வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

விழாவிற்கு நெசவுத்தெரு ஜமாத் மற்றும் நெசவுத்தெரு அமீரக அமைப்பின் நிர்வாகிகள் தலைமை வகித்தனர். அல் ஹாபிழ் சலாஹூத்தீன் கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதன் தமிழ் மொழி பெயர்ப்பை அல் ஹாபிழ் அப்துல் ஷக்கூர் வழங்கினார்.

விழாவில், சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட, திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி அஸ்ஸத்துல்லா, 'வளரும் தலைமுறை செழிக்க, மஸ்ஜீத் நிர்வாகத்தின் பொறுப்பு' என்ற தலைப்பிலும், அதிராம்பட்டினம், கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் எம்.ஜி. சஃபியுல்லாஹ் அன்வாரி, 'சமூகநலனில் மஸ்ஜீத்களின் பங்கு' என்ற தலைப்பிலும் சிறப்புரை வழங்கினார்கள். அல்ஹாஜ், கவிஞர் மு.மு முஹம்மது தாஹா, பள்ளிவாசல் இமாமை அறிமுகம் செய்து வைத்து, பள்ளிவாசல் வக்பு கடிதத்தை அனைவரரின் முன்பாக வாசித்தார். ஹாஜி அகமது அன்வர் முதல் பாங்கு ஒலியை எழுப்பினர். அதிராம்பட்டினம், மஸ்ஜீதுல் அக்ஸா ( மரைக்காப் பள்ளிவாசல்) மவ்லவி, அல் ஹாபிழ். அப்துல் காதிர் காசிஃபி லுஹ்ர் தொழுகையை நடத்தினார்.

நிகழ்ச்சிகள் அனைத்தையும், மவ்லவி. பேராசிரியர் இத்ரீஸ் தொகுத்து வழங்கினார். இவ்விழாவில், அதிராம்பட்டினத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.
விழாவில் கலந்துகொண்ட அனைவரையும் விழாக் குழுவினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
 
 
 

Wednesday, September 6, 2017

அதிரையில் மிகப்பெரிய குர்ஆன்~ 'மஸ்ஜீது-ல்-ஹுதா' பள்ளிவாசலில் வைப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், செப். 06
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், நெசவுத்தெரு பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 'மஸ்ஜீது-ல்-ஹுதா' பள்ளிவாசல் நாளை (07-09-2017) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு திறக்கப்பட உள்ளது.

இதையொட்டி, மலேசியா நாட்டில் வசித்துவரும் அதிராம்பட்டினத்தை சேர்ந்த ஏ. முகைதீன், மிகப்பெரிய அளவிலான குர்ஆன் ஒன்றை தொழுகையாளிகளின் பயன்பாட்டிற்கு அன்பளிப்பு செய்து உள்ளார். அரபு மொழியில் உள்ள புனிதமிகு குர்ஆனின் நீளம் 1-3/4 அடி , அகலம் 2-1/2 அடி, 604 பக்கங்கள் கொண்டுள்ளது. இதன் எடை 5 கிலோ ஆகும்.

மஸ்ஜீது-ல்-ஹுதா பள்ளிவாசலில், குர்ஆன் பிரதி பிரத்தியோகமாகத் தயாரிக்கப்பட்ட சில்வர் ஸ்டாண்டில், இன்று புதன்கிழமை மாலை வைக்கப்பட்டது. இவற்றை தொழுகையாளிகள் பலர் வாசித்து செல்கின்றனர். இக்குர்ஆன் சவூதி அரேபியா நாட்டில் தயாரானது ஆகும். அதிராம்பட்டினம் பள்ளிவாசாலில், மிகப்பெரிய குர்ஆன் ஒன்று இருப்பது இதுதான் முதல்முறை என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 

Tuesday, September 5, 2017

'மஸ்ஜீது-ல்-ஹுதா' இறை இல்லத்தின் எழில் மிகு தோற்றம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப். 05
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், நெசவுத்தெரு மஹல்லாவில் புதிதாக இறை இல்லம் கட்டிமுடிக்க வேண்டும் என்ற விருப்பம் நீண்ட காலமாக அப்பகுதியினரின் ஆள்மனதில் இருந்து வந்தது. இதற்கான முயற்சியில் அப்பகுதியை சேர்ந்த மஹல்லா நிர்வாகிகள் மற்றும் நெசவுத்தெரு அமீரக அமைப்பினர் தீவிரமாக ஈடுபட்டதன் அடிப்படையில், முதல் முயற்சியாக, நெசவுத்தெரு ஜமாத்தார்கள் கடந்த [ 07-08-2015 ] அன்று மாஆதினுள் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்கத்தில் ஒன்றுகூடி இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில், மாஆதினுள் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்கம் அமைந்துள்ள மேற்குப் பகுதியில் ( நோன்பு கஞ்சி காய்ச்சி விநியோகிக்கும் இடத்தில் ) புதிதாக இறை இல்லம் ஒன்றைக் கட்டி எழுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதன் பின்னர், கடந்த 02-09-2015 அன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், புதிதாக கட்ட உள்ள இறை இல்லத்திற்கு 'மஸ்ஜீது-ல்-ஹுதா' என்ற பெயர் சூட்டுவது என முடிவு செய்தனர். மேலும் கட்டுமானப் பணிக்கு புதிதாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. பணிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில், இதன் தொடக்க விழா நிகழ்ச்சி நாளை மறுதினம் (07-09-2017) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில்.இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலர் பல்வேறு தலைப்புகளின் கீழ் சிறப்பு சொற்பொழிவு ஆற்ற உள்ளனர். இந்நிகழ்ச்சியில், அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு, நிர்வாகக் கமிட்டி சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், இறை இல்லத்தில், பெண்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நாளை ( 06-09-2017 ) புதன்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், மவ்லவி ஹைதர் அலி கலந்துகொண்டு சொற்பொழிவு ஆற்ற உள்ளார். ஜொலிக்கும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இறை இல்லத்தை பெண்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இறை இல்லத்தின் சிறப்பு அம்சங்கள்:
1. அதிரையின் பாரம்பரியமிக்க சங்கமாக கருதப்படும், 1913 ம் ஆண்டு முதல், நூறாண்டுகளைக் கடந்து இயங்கி வரும், மாஆதினுள் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்கம் அமைந்துள்ள பகுதியை ஒட்டி இறை இல்லம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2. சுமார் 250 பேர் வரை தொழுகை மேற்கொள்ள தரை தளம் மற்றும் முதல் தளம் ஆகிய 2 தளங்களை பெற்றுள்ளது.

3. இடப் பற்றாக்குறையைப் போக்க, இறை இல்லத்தையொட்டி கீழ்புறத்தில் அமைந்துள்ள விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள சங்க வளாகம் மற்றும் அதன் மேல் தளம் ஆகியவற்றில் கூடுதலாக சுமார் 300 தொழுகையாளிகள் வரை தொழும் வசதி.

4. பெண்கள், ஆண்களுக்கு தனித்தனியாக நவீன கழிப்பறைகள், ஒழு எடுத்துக்க்கொள்ளும் வசதி அமைக்கப்பட்டுள்ளது.

5. பெண்கள் தொழுகைக்கு தனியிட வசதி.

6. பிரதி சனிக்கிழமை தோறும் மாலை 4.30 மணியளவில் ( அஸ்ர் தொழுகைக்குப் பிறகு ) வழக்கமாக நடைபெறும் பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.