.

Pages

Showing posts with label மீலாது விழா. Show all posts
Showing posts with label மீலாது விழா. Show all posts

Thursday, January 8, 2015

அதிரையில் மீலாது விழா நிகழ்ச்சி !

உஸ்வத்துன் ஹசனா மீலாது விழாக் கமிட்டி சார்பில் அதிரை காட்டுப்பள்ளி வளாகத்தில் இன்று மாலை மீலாது விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தாஜுல் இஸ்லாம் சங்க தலைவர் எம் எம் எஸ் சேக் நசுருதீன் தலைமை வகித்தார். கடற்கரை தெரு ஜமாத் பிரமுகர் எஸ் எம் ஏ அக்பர் ஹாஜியார், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நகர தலைவர் கே கே ஹாஜா நஜ்முதீன், மதுக்கூர் ஜாமிஆ மஸ்ஜீத் கமிட்டி நிர்வாக தலைவர் முகைதீன் மரைக்காயர், செயலாளர் சதக்கத்துல்லா, மதுக்கூர் ஜமாஅத் பிரமுகர் ஹாஜி அப்துல் வஹாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மறைஞான பேழை இதழின் ஆசிரியர் எஸ். ஹுசைன் முஹம்மது ஹக்கீயுல் காதிரி, மன்பயி, மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக் கல்லூரி பேராசிரியர் மவ்லவி அவர்கள் ' நானிலம் போற்றும் நன்னபி நாதர்' என்ற தலைப்பிலும், பி.ஏ காஜா முயினுதீன் பாகவி அவர்கள் 'பெருமானார் (ஸல் ) காட்டி தந்த வெற்றி வாழ்க்கை' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில துணை தலைவர் எஸ்எஸ்பி நசுருதீன் வாழ்த்துரை வழங்கினார்.

முன்னதாக உஸ்வத்துன் ஹசனா மீலாது விழாக் கமிட்டி நிர்வாகி சேக் அப்துல்லா வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உஸ்வத்துன் ஹசனா மீலாது விழாக் கமிட்டி அமைப்பாளர் அதிரை அப்துல் ரஹ்மான் ஏற்றிருந்தார். இதில் பெண்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன்னதாக சிறுவர் சிறுமிகளுக்கு மார்க்க அறிவுத்திறன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறுவர் சிறுமிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.