முத்துப்பேட்டையில் அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் ஒருங்கிணைந்து இருக்கும் குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் புதுத்தெரு திடலில் தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரியும், தமிழகத்தில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் கணக்கெடுப்பை நடத்தக்கூடாது என்று வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் கடந்த 4 நாட்களாக இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள், குழந்தைகள் அதிகமாக கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இன்று (18-02-2020) 4- வது நாள் போராட்டத்தில் சிறை கம்பி கூண்டு போல அமைத்து அதற்குள் கைதிகளாக இளைஞர்கள் அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் போராட்டத்திற்கு பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்துள்ளனர். மாலை நேரங்களில் மாணவர்கள் போராட்ட களத்திற்கு வருகை தந்து தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
படங்கள்: முத்துப்பேட்டை சுல்தான் இப்ராஹீம்






























































