மும்பை நகரில் பரபரப்பான கண்டிவ்லி ரயில் நிலையத்தில் பலர் முன்னிலையில் தன்னை
மானபங்கம் செய்த காமுகன் ஒருவனை, முடியைப் பிடித்துத் தரதரவென இழுத்துச் சென்று
காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் பதிந்துள்ளார் கல்லூரி மாணவி இருபது வயது
பிரன்யா.
தன்னை சுற்றிலும் நூற்றுக் கணக்கானோர் வேடிக்கை பார்த்துக்
கொண்டிருந்தாலும் யாருடைய உதவியுமின்றி அந்தக் கயவனை இழுத்துச் சென்றிருக்கிறார்
பிரன்யா. சம்பவ நாளன்று கல்லூரி முடிந்து மதியம் இரண்டரை மணிக்கு ரயிலில்
வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
கண்டிவ்லி ரயில் நிலையத்தில் இறங்கி அடுத்த பிளாட்பாரத்தில்
ரயிலுக்கு காத்திருந்தார். அப்போது அங்கு போதையில் வந்த ஒருவன் தகாத முறையில்
அவரின் உடலைத் தொட்டிருக்கிறார். சில நிமிடங்களில் அதிர்ச்சியான பிரன்யா, கையில்
வைத்திருந்த பையை வைத்து அவனை அடித்து உதைத்து கிழே தள்ளி அவனது முடியைப்
பிடித்துத் தரதரவென காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்று ஒப்படைத்து இருக்கிறார்
இந்த வீரப் பெண்மணி பிரன்யா.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால்
முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்)
கோ.முஹம்மது அலியார்.
Human
Rights and Consumer Rights Included.
Thanjavur
District Organizer. Adirampattinam-614701.
