.

Pages

Showing posts with label மௌலீது நிகழ்ச்சி. Show all posts
Showing posts with label மௌலீது நிகழ்ச்சி. Show all posts

Sunday, February 1, 2015

செக்கடி பள்ளியில் நடைபெறும் மவ்லூது நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு !

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்ஷாஅல்லஹ் நாளை 02. 02. 2015திங்கட்கிழமை காலை 08.30மணியளவில் நம் செக்கடிப் பள்ளி மஸ்ஜிதில் நம் பெருமானார் (ஸல்) அன்னவர்களின் புனித மௌலீது ஷரீபு நிகழ்வு ஹாஜி M.S.முஹம்மது உமர், செக்கடிப்பள்ளி உப தலைவர் அவர்கள் தலைமையில்,

ஹாஜி M.M.S.சேக் நஸ்ருத்தீன், அவர்கள், தலைவர், அதிரை அனைத்து மஹல்லா ஜமாஅத், ஜனாப் S.S.B.ஷேக் நஸ்ருத்தீன் அவர்கள்,மாநில துணைத் தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஹாஜி S.M.A.அக்பர், அவர்கள், துணைத் தலைவர், அஜ்ஜாவித்துல் ஸாதுலியா, ஹாஜி S.அப்துல் ரெஜாக், அவர்கள், துணைத்தலைவர், தமிழக சுன்னத்துவல் ஜமாஅத்பேரவை, அதிரைக் கிளை இவர்கள் முன்னிலையில் அதிவிமரிசையாக நடைபெற உள்ளது.

அதுசமயம் காலை 09.30 மணியளவில் நம் தஞ்சாவூர் ஆற்றங்கரைப் பள்ளிவாசல் தலைமை இமாமும், தஞ்சை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவருமான மௌலவி, ஹாபில், அல்ஹாஜ் M.செய்யது அஹமது மிஸ்பாஹி அவர்கள் சிறப்புரை ஆற்றவுள்ளார்கள்.

பெண்களுக்கு அருகில் இருக்கும் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் தனியிட வசதி செயப்பட்டுள்ளது. விழா நிகழ்வு சரியாகக் காலை 10.30க்கு முடிந்துவிடும்.விழா முடிவில் தப்ருக் வழங்கப்படும்.பெருமானாரின் நேசர்களான தாங்கள் அனைவரும் பங்கேற்று அல்லாஹ்வின் நல்லருளைப் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

இவண்,
உங்கள் உஸ்வத்துன் ஹசனா மீலாது விழாக் குழு.
அதிராம்பட்டினம்