அதிராம்பட்டினம், ஜூன் 05
அதிராம்பட்டினத்தில் கடந்த சில மாதங்களாக ரூ.700 க்கு விற்கப்பட்டு வந்த ஆட்டு இறைச்சி தற்போது ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்படுகிறது.
திடீர் விலை குறைப்பு பற்றி ஆட்டிறைச்சி வியாபாரி அஸ்ரப் கூறியது;
செம்மறி இன ஆடுகள் வளர்க்கும் விவசாயிகள் இந்த மாதத்தில் ஆடுகளை கழிப்பதை வழமையாக கொண்டிருப்பார்கள். கழிக்கவில்லை என்றால், ஆடுகள் சினை படும் போது கலைந்து விடும் அபாயம் நிலவும் என்பதால், ஆடு வளர்ப்போர் ஆடுகளை விற்க அதிகம் ஆர்வம் காட்டுவர். தற்போது, கரோனா ஊரடங்கால் கால்நடை சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் ஆடுகள் மொத்த விற்பனையும் மந்தமாகவே உள்ளன.
மேலும், திருமண விருந்து, மொய் விருந்து உள்ளிட்ட பல்வேறு விருந்து விழாக்கள் நடைபெருவதில்லை. இதனால் ஆட்டிறைச்சி பயன்பாடும் வெகுவாக குறைந்திருக்கிறது. தற்போது ஆடுகளை கழிக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதால், வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்கின்றனர். இதனால், ஆட்டிறைச்சியின் விலை குறைந்துள்ளது என்றார்.