.

Pages

Showing posts with label ABCC-Dxb. Show all posts
Showing posts with label ABCC-Dxb. Show all posts

Friday, May 22, 2015

துபாயில் அதிரை கிரிக்கெட் அணி மீண்டும் அசத்தல்!-

துபாயில் முத்துப்பேட்டை மூன் லைட் வழங்கும் முதலாம் ஆண்டு தொடர் கிரிக்கெட் போட்டி இருமாதங்களுக்கு முன் துவங்கியது இன்று இறுதி ஆட்டமாக முத்துப்பேட்டை மூன் லைட் அணியும் அதிரை ABCC  DXB அணியும் மோதினர் இதில் நமதூர் அணி வெற்றிபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.
இந்த தொடர் கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 16 அணியினர் கலந்து கொண்டு விளையாடினர். இதில் நமதூர் அதிரை பாய்ஸ் A & B அணியும் கலந்துக்கொண்டு விளையாடியது. பல தலைசிறந்த கிரிக்கெட் அணிகள் கலந்துக்கொண்டு விளையாடிய இத்தொடரில் அதிரை A அணி மிகச் சிறப்பாக ஆடி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது மற்ற அதிரை B அணி அரையிறுதி வந்து தோற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதிப்போட்டி நாத் அல் சிபா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைப்பெற்றது. இதன் மூலம் முத்துப்பேட்டை மூன் லைட் வழங்கும் வெற்றிக் கோப்பையை அதிரை ABCC அணி கைப்பற்றி அசத்தியது. 
இவ்வருடத்தில் நான்காவது முறையாக இறுதி போட்டியில் நுழைந்து மூன்று முறை கோப்பையை தட்டிச்சென்றது நமதூர் அணி என்பது கூடுதல் தகவல் தருகிறார் அணி மேலாளர் சகோ.செய்யது அவர்கள்.
கடல் கடந்து சென்று தங்களின் கடும் வேலைகளுக்கு மத்தியில் தங்களின் கிரிக்கெட் திறமையால் அதிரைக்கு பெருமை தேடித் தந்த நமதூர் வீரர்களுக்கு அதிரை நியூஸ்யின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

-அதிரை தென்றல் (Irfan)

Thursday, April 9, 2015

ஐபிஎல் அமீரகத்தில்!

சென்ற வாரம் நமதூர் கிரிக்கெட் அணி ABCC-DXB, அமீரகத்தில் வென்று கோப்பையையும், பல பரிசுகளையும் வென்று முத்திரை பதித்தது அனைவரும் அறிந்ததே, கிரிக்கெட் ரசிகர்களுக்கு மேலும் உற்சாக படுத்தும் விதமாக வரும் வெள்ளி கிழமை முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் லீக் தொடர் நடத்த உள்ளனர்.

இதன்படி நமதூர் அணி இரு பிரிவுகளாகவும், முத்துப்பேட்டை மூன்லைட் அணி இரு பிரிவுகளாகவும், மதுக்கூர் அணி ஒர் அணியாகவும் மற்றும் இதர அணிகளும் பங்காற்றி விளையாட உள்ளனர்.

மேலும் சிறப்பு பரிசுகளும் வழங்கவுள்ளது, தலைசிறந்த அணிகள் மோதவுள்ளதால் ஒவ்வொரு ஆட்டமும் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர் அமீரக கிரிக்கெட் ஆர்வலர்கள்.

நமதூர் அணி கேப்டனாக "A" பிரிவில் வழக்கம் போல் ரியாஸ் அவர்களே தொடர்வார் என்றும், "B" பிரிவில் நஜிமுதீன் அவர்கள் டீமை வழி நடத்துவார் என்று ABCC-DXB நிர்வாகத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரை தென்றல் (!rfan)