.

Pages

Showing posts with label ABM ரியாத் கிளை. Show all posts
Showing posts with label ABM ரியாத் கிளை. Show all posts

Tuesday, November 17, 2020

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 82 வது மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)

அதிரை நியூஸ்: நவ.17
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 82-வது மாதாந்திரக்கூட்டம் கடந்த 13-11-2020 அன்று நடைபெற்றது, இதில், பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சி நிரல்:- 
கிராஅத்                 :  இக்பால் ( உறுப்பினர் )
முன்னிலை           :  S.சரபுதீன் ( தலைவர் ) 
வரவேற்புரை            :  P.இமாம்கான் ( கொள்கை பரப்பு செயலாளர் )
சிறப்புரை              :   A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )
அறிக்கை வாசித்தல்  :   ஷேக் மன்சூர் ( துணை செயலாளர் )
நன்றியுரை      :  நெய்னா  முகமது (ஒருங்கிணைப்பாளர் )

தீர்மானங்கள்:
1) நீண்ட நாட்களுக்கு பிறகு நடந்த நேரடிக் கூட்டத்தில் கலந்து சிறப்பித்த நமதூர்வாசிகள் அனைவர்களையும் வரவேற்று பல ஆரோக்கியமான நமதூர் ஏழைகளின் முன்னேற்றப்பாதையின் அடிப்படையில் கலந்து உரையாடப்பட்டது.

2) இவ்வரிடம் இக்கட்டான இக்கால கட்டத்திலும் பென்ஷன் உதவிய 26 நபர்களையும் பாராட்டி நன்றி தெரிவிக்கப்பட்டதுடன் இன்ஷா அல்லாஹ் வரும் 2021-க்கான ஆதரவற்ற பென்ஷன் திட்டத்திற்கு 26-ஐ விட குறையாமல் அதிக எண்ணிக்கையில்  இத்திட்டத்தில் கலந்து அவர்களின் துஆ பரக்கத்து கிடைக்கும் வண்ணம் உங்களின் முழு ஒத்துழைப்பும் ஆதரவை தருவதுடன் வரும் கூட்டங்களில் தங்களின் பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அத்துடன் தற்கால பொருளாதார பற்றாக்குறையின் அடிப்படையில் வரும் 2021 பென்ஷன் தொகையை அதிகப்படுத்துவது விஷயமாக கலந்து ஆலோசிக்கப்பட்டது.

ABMR-ல் கொரோனாவுக்கு முன் இவ்விசயமாக கலந்து முடிவெடுத்ததை குவைத் கிளையின் ஆலோசனைப்பிரகாரம் வரும் வரிடத்தில் அமல்படுத்துவதெனவும் அதற்கு தலைமையக்கத்திலிருந்தும் இதர கிளை நிறுவாகத்திடமிருந்து ஒப்புதல் வந்தவுடன் செயல்பாட்டினை நடைமுறைப்படுத்துவதென ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

3) மையவாடியின் அவசியத்தேவையான மழை தற்காப்பு கூரை ( TEMPORARY SHETTER ) உதவிய அனைவர்களுக்கும் துஆ செய்வதுடன் குறிப்பாக ABM ரியாத் கிளை சார்பாக உதவிய சகோ. அஹமது மொய்தீன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

4) இக்காலகட்டத்தில் நமதூர் ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கடந்த ஆறுமாத காலமாக மாதாந்திர சந்தா நிதியை தவறாமல் செலுத்தி உதவிவரும் அனைத்து அதிரை வாசிகளுக்கு நன்றி தெரிவித்து மேலும் வரும் காலங்களிலும் இது போன்று தொடர்ச்சியாக உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

5) ABM-ன் இலவச டயாலிசிஸ் திட்டத்திற்கான பொருளாதார உதவி மற்றும் தொடர்ந்து ஆதரவும் அளித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

6) இக்கூட்டத்தில் முன்னால் ஜித்தா AYDA-வின் ( ADIRAI YOUTH  DEVELOPMENT ASSOCIATION ) பொறுப்புதாரியான சகோ.ஆபிதீன் கலந்து கொண்டு ஆரோக்கியமான பல கருத்து பரிமாற்றங்களை தெரிவித்தார். இக்கூட்டத்தில் இதுபோன்ற பல நல்ல பயனுள்ள கருத்து பரிமாறிய அனைவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

7) கடந்த மார்ச் 2020 முதல் உலகை வாட்டி வதைத்துக்  கொண்டிருக்கும் கொரோனா வைரஸ்  நோய் முழுவதுமாக நீங்கிடுமாறும், அத்துடன் இக்காலகட்டத்தில் இறையடி சேர்ந்த நமதூர் ABM-ன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் மேலும் நமதூர் வாசிகள் அனைவர்களின் மறுஉலக வாழ்க்கைக்கு துஆ செய்வதுடன் இக்கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

8) இன்ஷா அல்லாஹ் அடுத்த 83-வது அமர்வு DECEMBER மாதம் 11-ம் வெள்ளிக்கிழமை நடைபெறும். அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை


Monday, October 12, 2020

ZOOM செயலி மூலம் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 81-வது மாதாந்திரக் கூட்டம்!

அதிரை நியூஸ்: அக்.12            
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 81-வது மாதாந்திர கூட்டம் கடந்த 09/10/2020 5-வது முறையாக ZOOM-APP எனும் காணொளி மூலம் நடைபெற்றது அதில் நமதூர் வாசிகள் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி நிரல்:- 
கிராஅத்                 : சகோ. அஸ்ரப்  (துணை தலைவர் ) 
முன்னிலை           : சகோ. S.சரபுதீன் ( தலைவர் ) 
வரவேற்புரை            : சகோ. அபூபக்கர் ( பொருளாளர்  )
சிறப்புரை              :  சகோ. A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )
அறிக்கை வாசித்தல்  :  சகோ. ஷேக் மன்சூர் ( துணை செயலாளர்)

தீர்மானங்கள்:
1) கடந்த 06-10-2020 அன்று தலைமையகம் மூலம் நலிவடைந்த ஏழை பெண்மணி அவர்களின் வாழ்வாதார உதவிக்கான தையல் மிஷினுக்கு பொருளாதார உதவிய அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை சகோதரர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

2) தலைமையகத்தின் மூலம் வந்த இலவச டயாலிசிஸ் மருத்துவ உதவி திட்டத்தின் பொருளாதார உதவியான POSITIVE MACHINE விஷயமாக கலந்து ஆலோசிக்கப்பட்டு அதற்கான முழு விவரங்களை தலைமையகம் மூலம் அறிந்து தெரிவிக்கப்பட்டது.

3) ஏழைக்குமறு திருமணம், முதல் முறையாக பைத்துல்மால் தலைமையகத்தில் வைத்து கடந்த 24-09-2020 சிறப்பாக நடத்தியதற்காகவும் அதற்கான முழு ஏற்பாட்டிற்கு உதவிய சகோதற்காக துஆ செய்யப்பட்டு இனிவரும் காலங்களில்  இது போன்று ஏழை திருமணமங்கள் ABM தலைமையகத்தில்  தொடர்வதற்கான முயற்சி செய்வதற்கு அனைவர்களும் முயற்சி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு அத்தம்பதிகளின் ஹக்கிலும் துஆ செய்யப்பட்டது.

4) புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேராசிரியர் துணை தலைவர் ஜனாப் S.நசுருதீன் அவர்களை வரவேற்று அப்பணி செம்மையாக செயல்பட இக்கூட்டத்தில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது

5) தற்சமயம் நமதூரில் ஏற்பட்டுள்ள சில நோயாளிகளின் அசாதாரண மருத்துவ உதவியான (ஆக்ஷின்) குறைபாடுகளை சம்சுல் இஸ்லாம் சங்கம் மூலமாகவும் அத்துடன் பைத்துல்மாலின் மூலமாகவும் உதவிவரும் இச்சேவையை ஏழை எளிய மக்கள் தவறாது பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது

6) இன்ஷா அல்லாஹ் அடுத்த 82-வது அமர்வு NOVEMBER மாதம் 13-ம் தேதி நேரடியாக நடத்துவதெனவும் அதனை பத்தாஹ் RT HOTEL மாடியில் சகோ.நிஜாமுதீன் வீட்டில் நடத்துவதென ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு அதில் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

Wednesday, September 16, 2020

ZOOM செயலி மூலம் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 80-வது மாதாந்திரக் கூட்டம்!

அதிரை நியூஸ்: செப்.16
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 80-வது மாதாந்திரக் கூட்டம் கடந்த 11-09-2020 அன்று 4-வது முறையாக ZOOM-APP எனும் காணொளி மூலம் நடைபெற்றது. இந்நிகழ்வில், நமதூர் வாசிகள்  பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி நிரல்:- 

கிராஅத்                 :  அப்துல் ரஹீம் ( உறுப்பினர் ) 
முன்னிலை           : S.சரபுதீன் ( தலைவர் ) 
வரவேற்புரை       : A. சாதிக் அகமது  ( இணைத்தலைவர் )
சிறப்புரை              :  A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )
அறிக்கை வாசித்தல்  :  ஷேக் மன்சூர் ( துணை செயலாளர் )
நன்றியுரை      :  P. இமாம்கான் ( கொள்கை பரப்பு செயலாளர் )

தீர்மானங்கள்:

1) அல்ஹம்துலில்லாஹ் எங்களது 80-வது கூட்டம் சிறப்பாக நடைபெற்று அதில் பல சேவைகளும் அதன் சிறப்புகளை பற்றியும் விவாதிக்கப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் காணொளி மூலம் கலந்து கொண்டு சிறப்பித்து அனைத்து சகோதரர்களுக்கும்  மற்றும் குறிப்பாக ஜித்தாவிலிருந்து ரியாத்திற்கு இடம் பெயர்ந்துள்ள சகோ.ஆபிதீன் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

2) நமதூர்  பைத்துல்மாலின் மூலம் சிறப்பாக செயல்பட்டு வரும் தையற்பயிற்சி வகுப்புகள் நீண்டகால இடைவெளிக்குப் பிறகு கடந்த மாதம் 25-ம் தேதி முதல் மீண்டும் துவங்கப்பட்டுள்ளதால், நமதூர் பெண்கள் மற்றும் மாணவிகளை இவ்வகுப்பிற்கு அனுப்பி அதனை கொண்டு பயனை அடைந்து கொள்ளுமாறும் அதற்காக முழு ஆதரவு நல்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

3) கல்வி உதவி தொகை-2020 எனும் திட்டத்தில் தொடர் படிப்பு, மருத்துவம், பொறியியல் தொழில்நுட்பம் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு தகுதி அடிப்படையில் கல்வி உதவி தொகை வழங்க முன் வந்ததற்காக ABM தலைமையகத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டு இதன் மூலம் நமதூர் ஏழை மாணவர்கள் முழுவதுமாக பயனடையுமாறும் அதன் மூலம் நமதூர் சிறந்த கல்வியாளர்களை உருவாக்கும் திட்டத்தில் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்குமாறு இக்கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

4) நமதூர் மாணவர்களுக்கு புதிய திட்டமாக கல்வி பயிற்சி வழங்குவதில் முன் வந்த நமதூர் தலைமையகத்திற்கு ஆதரவும் ஊக்கமும் நல்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

SPOKEN ENGLISH/ UPSC/ TNPSC /IIT/ CHARTERED ACCOUNT/ TOEFL/ IELTS/ IIM

மேலே குறிப்பிட்டுள்ள பயிற்சி முகாமின் அறிமுக கூட்டத்தில் முழு ஒத்துழைக்குமாறு நமதூர் பெற்றோர்களிடமும், மாணவர்களிடமும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

5) அதிரை பைத்துல்மாலின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இலவச டயாலிசில் சிகிச்சை திட்டத்திற்கு முழு ஆதரவும், ஒத்துழைப்பும், பொருளாதார உதவியும் நல்குமாறு இக்கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது

ABM-ன் மருத்துவ உதவி திட்டத்தின் அடிப்படையில் நமதூர் தகுதியுள்ள நோயாளிகளின் ABM-தலைமையகத்தை அணுகுமாறும் இதனை கொண்டு பாதிக்கப்பட்ட நபர்கள் பயனடைந்து கொள்ளுமாறு  கேட்டுக் கொள்ளப்பட்டது.

6) இக்கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இவர்களின் ஆகிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. 

(a) ரியாத் கிளையின் தலைவர் ஜனாப் சரபுதீன் அவர்களின் சகோதரி ஆலடித்தெரு தெருவை சேர்ந்த ஹாஜிமா ஜலீலா அம்மாள் அவர்களின் ஆகிரத்திற்காக துஆ செய்யப்பட்டது.

(b) மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் ஹாஜி.A.பகுருதீன் ( ABM-ன் ஆரம்ப கால பொறுப்புதாரி ) பொதுசேவகர் இவர்களின் ஆகிரத்திற்காக துஆ செய்யப்பட்டது.

7) இன்ஷா அல்லாஹ் அடுத்த 81-வது அமர்வு OCTOBER மாதம் 9-ம் தேதி, நேரம், இடம் பின்னர் அறிவிக்கப்படும் அதில் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால்  ரியாத் கிளை


Thursday, August 20, 2020

ZOOM செயலி மூலம் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 79-வது மாதாந்திரக் கூட்டம்!

அதிரை நியூஸ்: ஆக.20
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 79-வது மாதாந்திரக் கூட்டம் கடந்த 14/08/2020 ZOOM-APP எனும் காணொளி மூலம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது இதில், நமதூர்வாசிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சி நிரல்:- 
கிராஅத்                 : அஹமது அஸ்ரப் ( துணை தலைவர் )
முன்னிலை           : S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை       : N.அபூபக்கர் ( பொருளாளர் )
சிறப்புரை              :  A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )
சிறப்பு அழைப்பாளர்கள் : ஹாஜி ஜனாப் பரக்கத் சார் ABM தலைவர் (தலைமையகம்), ஹாஜி. ஜனாப் அப்துல் ஹமீது செயலாளர்  (தலைமையகம்)

தீர்மானங்கள்:
1) அல்ஹம்துலில்லாஹ் பைத்துல்மாலின் இவ்வரிடம் குர்பானித்திட்டம் இக்காலகட்டத்திலும் மிகவும் சிறப்பாக சேவையை செம்மையாக நின்று பணியாற்றிய ABM-ன் தலைமையகத்திற்கும் இந்த திட்டத்திற்காக உதவி மற்றும் தங்களின் பங்குகளை உதவிய அதிரைவாசிகள் அனைவர்களுக்கும் ஒருமனதாக நன்றி தெரிவிக்கப்பட்டது. இன்ஷா அல்லாஹ் இதைக்காட்டிலும் வரும் வரிடம் சிறப்பாக செயல்பட துஆ செய்யப்பட்டது.

2) அதிரை பைத்துல்மாலின் துணை தலைவர் மர்ஹும் ஹாஜி S.K.M.ஹாஜா முகைதீன் சார் அவர்கள் மறைவு அதிரை பைத்துல்மாலுக்கு மட்டுமல்ல அதிரை நகருக்கே ஏற்பட்ட பேரிழப்பு ஆரம்பத்திலிருந்தே இருந்தே நமக்கு சிறந்த ஆசானாகவும் துவக்கத்திலிருந்தே இறந்து போகும் வரை நம் அனைவருக்கும் சிறந்த ஆலோசகராகவும் ABM துணை தலைவராகவும் அதிரை பைத்துல்மாலின் ஒரு அரணாகவும் இருந்து வந்தார்கள் அப்பேற்பட்ட சிறந்த மகானை இழந்து வாடும் ABM-ன் தலைமையகம் மற்றும் அவர்களின் குடும்பத்தார்களுக்காகவும் மேலும் ABM-ன் பொருளாளர் ஹாஜி S.M.முகமது முகைதீன் அவர்களின் மனைவியரின் இழப்பிற்காகவும் இக்கூட்டத்தில் ஆழ்ந்த இரங்களை தெரிவித்து அவர்களுக்காக துஆ செய்யப்பட்டது.

3) தற்சமயம் அதிரையில் ஏற்பட்டுள்ள COVID-19 அசாதாரண சூழ்நிலை ( அச்ச உணர்வு ) பற்றியும் அதற்கான பாதுகாப்பை எந்த வகையில் முன் எடுத்து செல்லலாம் என நீண்ட கலந்தாய்வு நடைபெற்று இறுதியில் பல டாக்டர்களை முன்னிறுத்தி செயல்பட்டுவரும் அதிரை COVID-19  பாதுகாப்பு வாட்சப் குழு மூலமும், சம்சுல் இஸ்லாம் சங்கம் மூலம் சேர்ந்து அதிரை பைத்துல்மால் ஒன்றிணைந்து தற்சமய சூழ்நிலையை நமதூரின் அமைப்பான அனைத்து முஹல்லா கமிட்டியின் கவனத்தில் கொண்டு சென்று நமதூருக்கு மட்டும் தனிப்பட்ட COVID சென்டரை நமதூரிலோ அல்லது ராஜாமடத்திலோ  அமைத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பீதி குறைந்து அனைவரும் COVID TEST எடுப்பதற்கு முன்வருவார்கள் இதன் மூலம் பரவலை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என தீர்மானிக்கப்பட்டது.

4) நமதூரில் தற்சமயம் ஏற்பட்டுள்ள மருத்துவ குறைபாடுகள் டாக்டர்களின் சிகிச்சை குறைவதற்கான சாத்தியக்கூறு  பற்றியும் அதனை உடனே சரி செய்தால் மன உளைச்சல், பயம், பீதி இவைகள் பற்றியும் கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முஹல்லாவிலும் அந்தந்த முஹல்லா பொறுப்புதாரிகளின் மூலம் COVID-19  PRECAUSIONS தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கை எந்த அளவு முக்கியத்துவம் என்பதனை எடுத்து சொல்லி கண்டிப்பாக அதனை பின்பற்றுமாறு குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் அனைவர்களும் அவசியம் கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

5) ABM தலைமையகம் மூலம் நமதூருக்கு முதன் முதலில் சிறந்த ஹோமியோபதி நோய் எதிர்ப்புசக்தி மருந்து “ஆர்சனிகம் ஆல்பம் 30C” மாத்திரை திட்டத்தை அறிமுகம் செய்து இரண்டு கட்டங்களாக 4200 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டதற்காகவும் இதனை கொண்டு நமதூரிலுள்ள பல அமைப்புகளும் சங்ககங்களும் விநியோக செய்ததின் மூலம் ஊர்மக்களின் பயத்தையும் பாதுகாப்பையும் போக்க உறுதுணையாகவும் இருந்த அனைவர்களுக்காகவும்  இக்கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

6) தற்சமயம் நமதூரில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை மறுவதற்காக வேண்டி அனைவர்களும் துஆ செய்வதுடன் சில உள் கட்டுப்பாடுகளை பயன்படுத்தி கொண்டால் வரும் காலங்களில் பாதுகாப்பாக இருக்க முடியும் அதன் அடிப்படையில், அதிரை மேம்பாடு சங்கத்திற்கான ஏற்பாடுகளில் முழு ஒத்துழைப்பு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

i) முக கவசம் அணிதல் அவசியம் கட்டாயம் ( தொழுகை நேரங்களிலும் )

ii) சமூக இடைவெளியை பேணுதல் அவசியம் (அனைத்து  இடங்களிலும் )

iii) பள்ளிவாசல்களுக்கு செல்லும் பொது முஸல்லாவை கொண்டு செல்லுதல் ( இடைவெளி விட்டு தொழுதல் )

iv) வீணான கூட்டம் வீண் பேச்சுக்கள் பொது இடங்களில் தவிர்ப்பது

v) முதியவர்கள் மற்றும் அசுகம் உள்ளவர்கள் வீட்டிலேயே தொழுது கொள்வது

vi) அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற தேவைகளுக்கு வீட்டை விட்டு வெளியை வருவதை தவிர்ப்பது

vii) பொது இடங்களுக்கோ பள்ளிகளுக்கோ சென்று வந்தவுடன் SANITIZER பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்தல்

Viii) வெளிஊர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 14 நாட்கள் HOME QUARANTINE-ல் இருப்பது  பாதுகாப்புக்காக

இதுபோன்ற கட்டுப்பாடுகளை நமதூரில் அனைவர்களும் ( பெரியவர்கள், இளைஞர்கள், பெண்கள் ) கடைபிடித்தால் இந்த கொடிய நோயிலிருந்து முடிந்த அளவு பாதுகாப்பை பெற முடியும் என்பதாலும் நமதூரில் ஏற்பட்டிருக்கும் இந்த சோதனை மாறவேண்டி அனைவர்களும் கடைபிடிப்பது தற்சமய காலகட்டத்தின் அவசியமான ஒன்று ஆகவே அனைவர்களும் முழு ஒத்துழைப்பு தந்து நமதூர் மக்களை காப்பாற்ற முன்வருமாறு இக்கூட்டத்தின் மூலம் அன்போடு கேட்டுக் கொள்ளப்பட்டது.

7) எங்களது 79-வது கூட்டத்திற்கு கலந்து சிறப்பித்த தலைவர் ஜனாப்.பரக்கத் சார் மற்றும் ஹாஜி ஜனாப் செயலாளர் அப்துல் ஹமீது காக்கா மற்றும் தமாம் கிளை தலைவர் ஜனாப் புஹாரி மற்றும் நமது கிளை நிர்வாகிகள் பொறுப்புதாரிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

8) இன்ஷா அல்லாஹ் அடுத்த 80-வது அமர்வு அடுத்த மாதம் 11ம் தேதி, நேரம், இடம் பின்னர் அறிவிக்கப்படும் அதில் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை

Thursday, July 16, 2020

ZOOM செயலி மூலம் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 78 வது மாதாந்திரக் கூட்டம்!

அதிரை நியூஸ்: ஜூலை 16
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 78-வது மாதாந்திர கூட்டம் கடந்த 10/07/2020 ZOOM-APP எனும் காணொளி மூலம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது அதில் நமதூர்வாசிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சி நிரல்:- 
கிராஅத்                 :  அஹமது அஸ்ரப் ( துணை தலைவர் )
முன்னிலை           : S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை       :  P.இமாம்கான் ( கொள்கை பரப்பு செயலாளர் )
சிறப்புரை              :  N.அபூபக்கர் ( பொருளாளர் )
சிறப்பு அழைப்பாளர்  : அஹமது ஜலீல், இபுறாஹிம் ( தலைமையகம் )
அப்துல் ரசீது ( ABM ரியாத் கிளை முன்னாள் துணை செயலாளர்)
நன்றியுரை      : A. சாதிக் அகமது  (இணைத்தலைவர்)

தீர்மானங்கள்:
 1) அதிரை பைத்துல்மால் மூலம் இவ்வருட கூட்டு குர்பானி தனி நபர் குர்பானி விஷயமாக தெளிவான விளக்கங்களை தலைமையகத்தின் சிறப்பு அழைப்பாளர்கள் ரியாத் ABM-ன் கிளையின் இந்த ZOOM-ல் கூட்டம் மூலம் பல சந்தேகங்களை தெளிவுப்படுத்தப்பட்டு இதில் நமதூர் வாசிகள் இக்குர்பானி திட்டத்தில் பங்களித்து ஆதரவு தருவதுடன் பெயர்களை சகோ.அப்துல் மாலிக் அவரிடம் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

2) ABM-ன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கூட்டுக் குர்பானியின் பங்கு ஒன்று Rs.2200/- எனவும் மேலும் தனிநபர் ஒரு குர்பானிக்கான விலை முழு ஆடு ஒரு கிலோ Rs.350/- எனவும் கிட்டத்தட்ட 30kg-க்கு மேல் அமையும் என்பதனையும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

3) இக்கூட்டு குர்பானி திட்டத்தின் மூலம் ABM-ன் பல உதவி திட்டங்களை கல்வி உதவி, திருமண உதவி ஹத்னா, ஏழை எளியவர்களின் சிறு தொழில், மற்றும் வட்டியில்லாக் கடன் போன்ற உதவிகளை குர்பானி திட்டத்தின் மூலம் நிறைவேற்றி வெற்றியடைந்து வருவதால் அனைவர்களும் முழு ஆதரவு அளிக்குமாறு இக்கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

4) இந்த ZOOM மீட்டிங்கில் தலைமையக்கத்திலிருந்து பங்கு கொண்ட சகோ.இபுறாஹிம் மற்றும் சகோ.அஹமது ஜலீல் மற்றும் ரியாத் கிளையின் ஆரம்ப துவக்கத்திலிருந்து பங்காற்றிய முன்னாள் துணை செயலாளர் அப்துல் ரசீது அவர்களும் கலந்து பல கருத்துகள் பரிமாறிக் கொண்ட இம்மூவருக்கும் இக்கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

5) இக்கூட்டத்தில் ஆரம்ப நிலையிலிருந்தே முழு ஆதரவு தந்த சகோ ரியாத்தை சேர்ந்த மர்ஹும் ஹாஜா ஹுசைன் மற்றும் மர்ஹும் அமீர் மற்றும் சகோ பெரோஸ்கான் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அவர்களுக்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

6) இக்கூட்டத்தில் நமதூர் மறைந்த ஹாஜி மர்ஹும் L.M.S அப்துல் காதர் ஆலிம் அவர்களுக்காக இரங்கல் தெரிவித்து துஆ செய்யப்பட்டது.

7) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு AUGUST மாதம் 14-ம் தேதி ZOOM-ல் கூட்டம் நடைபெறும் அதில் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை


Tuesday, June 16, 2020

ZOOM செயலி மூலம் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 77-வது மாதாந்திரக்கூட்டம் (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜூன் 16
கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 77-வது மாதாந்திரக் கூட்டம் கடந்த 12/06/2020 ZOOM-APP எனும் காணொளி மூலம் நடைபெற்றது. அதில் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி நிரல்:- 
கிராஅத்                 :  அஹமது அஸ்ரப் ( துணை தலைவர் )
முன்னிலை          : S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை      : N.அபூபக்கர் ( பொருளாளர் )
சிறப்புரை             : A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )
சிறப்பு அழைப்பாளர்: ஹாஜி எஸ்.ஏ அப்துல் ஹமீது செயலாளர் (ABM தலைமை அலுவலகம்)
அறிக்கை வாசித்தல்  : ஷேக் மன்சூர் ( துணை செயலாளர் )
நன்றியுரை    :  A. சாதிக் அகமது  (இணைத்தலைவர்)

தீர்மானங்கள்:
1) வர இருக்கும் ஹஜ்ஜூப் பெருநாள் கூட்டு குர்பானி விஷயமாக கலந்துரையாடப்பட்டு அதில் தலைமையகத்தின் மூலம் தீர்மானிக்கப்பட்ட பங்கின் கூட்டு குர்பானி தொகை ரூ.2200/- என்பதனையும், சிறந்த முறையில் கூட்டு குர்பானி மற்றும் தனி நபர் குர்பானி செயல்பட்டு வரும் அதிரை பைத்துல்மாலின் மூலம் நாமும் பங்கு பெறுவதென்றும் அதன் மூலம் ஆர்வமுள்ள நபர்களை அடுத்த கூட்டத்தில் பெயர்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

2) ABMR மாதாந்திர சந்தாவை இனி நமது வாட்ஸ் அப் குரூப் மூலம் சந்தா தொகையை வசூல் செய்து அதனை தலைமையகத்திற்கு அனுப்பி சேவைகள் மேம்படுத்த முழு ஒத்துழைப்பு செய்வதென தீர்மானிக்கப்பட்டது. மேலும் இந்த சிறு உதவிகளை எல்லா மாதங்களும் முழு ஆதரவு தருமாறு அனைவர்களிடமும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

3) இறைவனின் உதவியால் ரமலான் கிட், ஜக்காத், பித்ரா மற்றும் சந்தா போன்ற நிதிகளை வாரி வழங்கிய நமது ABMR-ன் சேவைகளை திறம்பட செய்ய உறுதுணை செய்த அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் உறுப்பினர்கள் அனைவருக்காகவும் துஆ செய்யப்பட்டது. மேலும் தற்போதைய காலகட்டங்களில் பல சிரமத்திற்கேற்ப உதவி பொருட்களை சரியான நேரத்தில் சரியான நபரை சென்ற அடைய முயற்சி செய்து ஒத்துழைத்த அனைவர்களுக்கும் இக்கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

4) கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இறையடி சேர்ந்த மர்ஹும் அதிரை அஹமது, மர்ஹும் ஜெ.ஜெ சாகுல் ஹமீது ஆகியோருக்கும், கரோனா பாதிப்பில் உலகளவில் உயிரிழந்த அனைத்து சகோதர சகோதரிகளுக்காகவும் அவர்களின் மருமைக்காகவும் இக்கூட்டத்தில் துஆ செய்து இனிதே நிறைவடைந்தது.

5) ZOOM-APP-ல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்த ABM தலைமை அலுவலக செயலாளர் ஹாஜி. எஸ்.ஏ அப்துல் ஹமீது அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

6) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு ஜூலை மாதம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் அதில் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத்

Wednesday, March 18, 2020

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 76-வது மாதாந்திரக் கூட்டம் கடந்த 13/03/2020 அன்று இனிதே நடைபெற்றது. இதில், நமதூர் வாசிகள் பலரும் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சி நிரல்:- 
கிராஅத்                 :  அகமது அஷ்ரப்
முன்னிலை           :  S.சரபுதீன் (தலைவர்)
வரவேற்புரை       :  P. இமாம்கான் (கொள்கை பரப்பு செயலாளர்)
சிறப்புரை              : A.M.அஹமது ஜலீல் (செயலாளர்)
நன்றியுரை     : A. சாதிக் அகமது  (இணைத்தலைவர்)

தீர்மானங்கள்:
1) குடியுரிமை  சட்டத்திற்கு  எதிரான  தலைமையகம் எடுக்கும் எந்த ஒரு தீர்மானத்தையும் செயல்பாட்டினையும் முழு ஆதரவு தருவதென முடிவெடுக்கப்பட்டு அதற்கான ஓரிரு கருத்துக்களை தலைமையகத்திற்கு தெளிவுபடுத்தி அதனை விரைவில் செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் கடந்த 28 நாட்களாக நடைபெற்று வரும்  தொடர் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவர்களுக்காகவும் அதற்கான முழுவெற்றியடைய அனைவரும் இக்கூட்டத்தில் துஆ செய்யப்பட்டது.

 2) உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொடிய கொரோனா வைரஸிலிருந்து அனைவர்களுக்கும் பாதுகாப்பு அளித்திடுமாறு இக்கூட்டத்தில் துஆ செய்யப்பட்டது. மேலும் இந்த தொற்று நோய்க்காக இஸ்லாம் கூறும் தீர்வுகளையும்  உபதேசங்களையும் தெளிவுபடுத்தப்பட்டது

3) ரியாத் கிளையிலுள்ள இரண்டு உறுப்பினர்களின் நகைக்கடன் அத்தியாவசிய  தேவையை உடன் பூர்த்தி செய்த தலைமையகத்திற்கு நன்றியினை இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ரியாத் வாழ் அதிரை மக்களுக்காக ABMR-ன்  முழு ஒத்துழைப்பு எக்காலக்கட்டங்களிலும் அளிக்கப்படும் என உறுதி செய்யப்பட்டது.

4) மாதசந்தா மற்றும் வருடசந்தா விசயமாக இக்கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டது. அதற்கான முழு ஒத்துழைப்பையும் முழு ஆதரவையும் அளிக்குமாறு  கேட்டுக் கொள்ளப்பட்டது.

5) இன்ஷா அல்லாஹ் வரும் ரமலானில் மே 1-ம் தேதி 7-ஆம் ஆண்டு இஃப்தார் மற்றும் மெகா கூட்டம் நிகழ்ச்சியில் அனைத்து சவுதி அதிரை வாழ் சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

6) இக்கூட்டத்தில் தங்களின் உழைப்பால் ஈன்ற பொருளாதாரத்தில் இந்த வருடம் ஜக்காத்,பித்ரா சதக்காக்களை சரியான முறையில் ஏழை மக்களை சென்று அடையும் வண்ணம் இஹ்லாஸான முறையில் செயல்பட்டு வரும் பொது சேவை நிறுவனங்களின் ஒன்றான அதிரை பைத்துல்மாலின் மூலம் தாங்கள் முழு ஒத்துழைப்பையும் பொருளாதார பங்கீட்டை செலுத்தி அதற்கான நன்மையடைந்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

7) சமீபத்தில் அதிரையை சேர்ந்த இரண்டு பெண்கள் இறையடிசேர்ந்த மர்ஹும் சகோதரி ஜுஹைரா அம்மாள் ( ABMR-ன் தலைவர் சகோ. சரபுதீன் சகோதரி ) மற்றும் ரியாதில் இறையடிசேர்ந்த சகோதரி. பரிதா பேகம் அவர்களுக்காகவும் துவா செய்யப்பட்டு ஆழ்ந்த இறங்களையும் தெரிவிக்கப்பட்டது.

8) இக்கூட்டத்தில் பல புதிய உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தார்கள் அதில் முன்னாள் தமாம் ABM-ன் கிளை பொருளாளர் ரியாஸ் அஹமது மற்றும் தமீம், அஸ்ரப், அயூப் (கட்டுமாவடி) அனைவர்களும் வந்து கலந்து கொண்டு பல கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்கள். இதில் கலந்து கொண்ட கட்டுமாவடியை சேர்ந்த சகோ: அயூப் அவர்கள் புதிய பைத்துல்மால் சேவையை கட்டுமாவடியிலும் நிறுவுவது சம்பந்தமாக ஆலோசனைகளையும், கருத்துக்களையும் கேட்டு அறிந்தார். இக்கூட்டத்தில் அவரின் ஆர்வத்துக்காக நன்றி தெரிவிக்கப்பட்டது.

9) இன்ஷா அல்லாஹ் வரும் அமர்வு APRIL 2020 10-ம் தேதி பத்ஹா RT- RESTUARENT முதல் மாடியில் மஃரிப்  தொழுகை முடிந்த பிறகு நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டு நமதூர் வாசிகள் அனைவர்களும் முழு ஒத்துழைப்பு தந்து அல்லாஹ்வின் பொருத்தத்துடன் இந்த சேவையை சிறப்பாக நடத்துவதற்கு உறுதுணை செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை
 

Thursday, February 20, 2020

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 75 வது மாதாந்திர கூட்டம் கடந்த 14-02-2020 அன்று பத்ஹா RT-RESTUARENT முதல் மாடியில் நிஜாமுதீன் அவர்களின் Flat-ல் இனிதே நடைபெற்றது. அதில் நமதூர் வாசிகள்  பலரும் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

நிகழ்ச்சி நிரல்:- 
கிராஅத்                 : அகமது அஷ்ரப் ( துணை தலைவர் )
முன்னிலை           : S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை       : N.அபூபக்கர் ( பொருளாளர் )
சிறப்புரை              : A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )
நன்றியுரை     :  A. சாதிக் அகமது  ( இணைத்தலைவர் )

தீர்மானங்கள்:
1) ABM-ன் தலைமையகத்தில் நடைபெற்று வரும் மாதாந்திர கூட்டங்களின் வெளிநாட்டு கிளையின் நிறுவாகிகளின் கடிதங்கள் வாசிக்கப்படுவதால், வெளிநாட்டிலுள்ள அனைத்து ABM-ன் கிளை நிறுவனங்களில்  நடைபெறும் மாதாந்திர கூட்டத்தின் ஆக்கபூர்வமான கருத்துக்களையும், ஆலோசனைகளையும், தீர்மானங்களையும்  தலைமையகத்திற்கு அனுப்பி கொடுத்தால் ABM-தலைமையகம் மேலும் செம்மையாக திறம்பட செயல்படுவதற்கு உறுதுணையாக அமையும் என்பதை இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

 2) ABM-ன் பதிவுகள் சம்பத்தப்பட்ட பணிகள் தொய்வில்லாமல் மிகவும் விரைவில் துரிதமாக நிறைவு பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் பாராட்டி கூடிய விரைவில் பணி நிறைவு பெறுவதற்காக துஆ செய்யுமாறு இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

3) ABM-ன் தலைமையகத்தில் தேர்தல் நடத்துவது சம்பந்தமான கருத்துக்களையும் அதன் தீர்மானங்களையும் இக்கூட்டத்தில் முழுமனதாக ஏற்கப்பட்டு மேலும் ஒரு சில கருத்துக்களை முன் வைக்கப்பட்டு அதாவது மூன்று வருடத்திற்கு தேர்தலை தள்ளிவைத்த காரணத்தால் வரும் ஏப்ரலில் தற்பொழுது ABM-ன் செயல்பாடுகளில் முழு ஈடுபாடு உள்ளவர்களில் புதிய இளைஞர்களை ஓரிரு-துணை-இணை-நிலைகளில் சேர்த்து பொறுப்புகளை ஒப்படைத்தால் வரும் காலத்திற்கேற்ப செம்மையாக செயல்படும் என்பதை ஒருமித்த கருத்தாக தலைமையகத்திடம்  பரிந்துறைக்கப்பட்டது.

4) நிர்வாகப் பொறுப்பிற்கான பெயர்களை முன்வைக்கும் விதமாக பல நாடுகளில் வேலை செய்து விட்டு ஊர் திரும்பிய ஆர்வமுள்ள சகோதரர்களை தலைமையகம் மூலம் அணுகி அவர்களை இச்சேவையான பொதும் பணியினை தொடர்ந்து ஊரிலும் செம்மையாக செயல்பட வாய்ப்பு அளிக்குமாறும் அதற்கான முயற்சியில் முழு முயற்சியுடன் ஒருங்கிணைப்பாளரின் துணையும் செம்மையாக புதிய பெயர்களை அணுகி இச்சேவை மையத்திற்கு மெருகூட்டும் விதமாக துரித ஏற்பாடுகளை செய்திடுமாறு கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

5) இன்ஷா அல்லாஹ் ABMR 7-ம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி வரும் மே மாதம் 1-ம் தேதி 2020 மிகவும் சிறப்பாக கொண்டாடுவதென தீர்மானிக்கப்பட்டு அதற்கான ஏற்பாட்டின் பிரகாரம் புதிய இடமாக பத்ஹாவில் SHIFA AL JAZEERA AUDITORIUM-தில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டு, அதற்கான முழு வரையறை ஏற்பாடுகளை வரும் மார்ச் மாத கூட்டத்தில் கலந்து ஆலோசிப்படுவது எனவும் அதற்காக ரியாத்திலுள்ள அதிரைவாசிகள் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

6) இன்ஷா அல்லாஹ் வரும் அமர்வு MARCH 2020 13-ம் தேதி பத்ஹா RT- RESTUARENT முதல் மாடியில் மஃரிப்  தொழுகை முடிந்த பிறகு நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டு நமதூர் வாசிகள் அனைவர்களும் முழு ஒத்துழைப்பு தந்து அல்லாஹ்வின் பொருத்தத்துடன் இந்த சேவையை சிறப்பாக நடத்துவதற்கு உறுதுணை செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை
 

Wednesday, January 15, 2020

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை மாதாந்திரக்கூட்டம் (படங்கள்)

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 74-வது மாதாந்திரக்கூட்டம் கடந்த 10-01-2020 அன்று பத்ஹா RT-RESTUARENT முதல் மாடியில் நிஜாமுதீன் அவர்களின் இல்லத்தில் இனிதே நடைபெற்றது. இக்கூட்டத்தில், நமதூர்வாசிகள்  பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சி நிரல்:- 
கிராஅத்                 :  N. அபூபக்கர் (பொருளாளர் )
முன்னிலை           : S. சரபுதீன் (தலைவர் )
வரவேற்புரை       :  P. இமாம்கான் (கொள்கை பரப்பு செயலாளர் )           :  சிறப்புரை:               A.M அஹமது ஜலீல் (செயலாளர் )
நன்றியுரை      : A. சாதிக் அகமது  (இணைத்தலைவர்)

தீர்மானங்கள்:
1) அதிரை பைத்துல்மால் நிர்வாகத்தில் என்னென்ன செயல்பாடுகள் மற்றும் தொடர் சேவைகள் அல்லாஹ்விற்காக செய்து வருகிறார்கள் என்பதை விரிவாகவும, நமதூர் வாசிகள் கேட்ட கேள்விகளுக்கும் நிதானமாக விளக்கங்கள் அளிக்கப்பட்டது. 74-வது கூட்டம் சிறப்பு கூட்டமாக அமைந்தது, இதில் பல்வேறு கோணங்களில் பல்வேறு தரப்பு கேள்விகளுக்கு அவர்கள் நிறைவு அடையும் படி விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

2) பென்ஷன்தாரர்களுக்கு பென்ஷன் எந்த அடிப்படையில் கொடுக்கப்படுகிறது என்பதை விளக்கப்பட்டது. பென்சன்  தாரர்களுக்கு உதவ ரியாத் மாநகரில் புதிதாக சேர்ப்பதற்கு முயற்சிகள் எடுத்ததின் விளைவாக இதுவரை -26 நபர்கள்  தங்களின் பெயர்களை பதிவு செய்த அனைவருக்கும் அல்லாஹ் மேலும் இரண- பரக்கத்தை மேலும் அபிவிருத்தி செய்ய துஆ செய்யப்பட்டது. மேலும், பென்ஷன் சம்பந்தமான விளக்கங்கள் தலைமையகத்தில் இருந்து வந்த கடிதத்தை P. இமாம்கான் அவர்களால் வாசிக்கப்பட்டு அதற்குரிய பதில்களையும் விளக்கங்களையும் விரிவாக அனைவருக்கும் புரிந்து கொள்ளும்படி எடுத்து சொல்லப்பட்டது.

3) அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை செயல்பாடுகள் இன்னும் சிறந்து விளங்கிடவும், வலிமையோடும், மேலும் திறமையாக செயல்பட கூடுதலாக புதிதாக 3- பொறுப்புகளை, கீழ்காணும் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டது.

01.நிஜாமுதீன் - ஆலோசகர் ( புதிய பொறுப்பு )
02. ஜம்சித் அஹமது - இணை பொறுளாளர் ( காலி இடம் பூத்தி செய்யப்பட்டது )
03. நெய்னா முஹம்மது – ஒருங்கிணைப்பாளர் ( புதிய பொறுப்பு )
அதிரை பைத்துல்மால்  ரியாத் கிளை மென்மேலும் சிறந்து விளங்கிட பாடுபடுவோம் என்று அல்லாஹ்வுக்காக உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

4) சமீபத்தில் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்ற அனைத்து முஹல்லா  கூட்டமைப்பு அணைத்து தெருவாசிகள் சேர்ந்து ஊர், மற்றும் சமுதாய நலம் கருதி சம்பந்தமாக கூட்டம் நடத்தியமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பு  முழு வெற்றியடைய துவா செய்யப்பட்டது

5) அதிரையில் சமீபத்தில் வபாத்தான:  மர்ஹும். ஹாஜா முகைதீன் (அமா டிராவல்ஸ்),  மர்ஹும்.-மஜ்பா ஹாஜி எம்.ஏ அஸ்ரப் அலி. மற்றும் மர்ஹும். S.A.K கமாலுத்தீன் அவர்களுக்காக துவா செய்யப்பட்டு ஆழ்ந்த இரங்கள் தெரிவிக்கப்பட்டது.

6) இன்ஷா அல்லாஹ் வரும் அமர்வு FEBRUARY 2020 14-ம் தேதி பத்ஹா RT- RESTUARENT முதல் மாடியில் மஃரிப்  தொழுகை முடிந்த பிறகு நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டு நமதூர் வாசிகள் அனைவர்களும் முழு ஒத்துழைப்பு தந்து அல்லாஹ்வின் பொருத்தத்துடன் இந்த சேவையை சிறப்பாக நடத்துவதற்கு உறுதுணை செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

Wednesday, December 18, 2019

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 73-வது மாதாந்திரக் கூட்டம் கடந்த 13-12-2019 அன்று பத்ஹா RT-RESTUARENT முதல் மாடியில் நிஜாமுதீன் இல்லத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:- 
கிராஅத்                 : இக்பால் ( உறுப்பினர் )
முன்னிலை           : S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை       : A. சாதிக் அகமது  (இணைத்தலைவர்)
சிறப்புரை              : A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )
அறிக்கை வாசித்தல்  : ஷேக் மன்சூர் ( துணை செயலாளர் )
நன்றியுரை      : P.இமாம்கான் ( கொள்கை பரப்பு செயலாளர் )

தீர்மானங்கள்:
1) ABMR-ன் 72-வது கூட்டத்தின் வேண்டுகோளை ஏற்று அதற்கான பதில் ABM-HO கடிதத்தை இக்கூட்டத்தில் வாசிக்கப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டது. மேலும் சிறப்பாக நமது சேவை தொடர துஆ செய்யுமாறு அனைத்து உறுப்பினர்களிடமும் கேட்டுக் கொள்ளப்பட்டது. அத்துடன் அரசு சலுகைகளை முழு முயற்சியோடு நமதூர் வாசிகள் பயன்படும் அளவுக்கு முழு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

2) தற்சமயம் நகைக்கடன் மிக செம்மையாக மக்கள் முழு பயனுள்ளவகையில் உண்மையான தேவை அறிந்து கடன் விநியோகம் செய்யப்படுவதையும் அதுபோல் நமது மக்களும் அதை சரியான காலக்கெடுக்குள் திருப்பிடுவது விசயமாக ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

3) ரியாத் சார்பாக நிரந்தர ABM உறுப்பினர்கள் எண்ணிக்கை சேர்க்கும் விதமாக பல புதிய பழைய நபர்களின் விபரங்களை தலைமையகத்துக்கு அனுப்பி கொடுக்கப்பட்டு அதன் மூலம் ரிஜிஸ்ரேஷன்  ( REGISTERATION ) விஷயமாகவும் நிரந்தர ID CARD ஏற்பாடு செய்வதென இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

4) நமது உழைப்பிற்காக வெளிநாடு சென்று வேலை செய்ய கூடிய நபர்களும் நமதூர் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆங்கில அறிவு என்பது இக்கால கட்டத்தில் இன்றியமையாத ஒன்று அதன் பொருட்டு இம்மாதமுதல் ஆரம்பிக்க உள்ள ( SPOKEN ENGLISH ) நமதூர் வாசிகள் அனைவரும் சேர்ந்து ஒத்துழைப்பு அளித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

5) ஆதரவற்ற ஏழைகளின் திட்டமான மாதாந்திர பென்ஷன் விஷயமாக வரும் 2020-க்கான பென்ஷன் திட்டத்திற்கு இதுவரை பெயர் தராத சகோதரர்களிடம் ஆதரவு தந்து அதன் நன்மையை அடைந்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

6) ஊர் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும், ஊர் நலனை நாடக்கூடிய வண்ணம் அமைக்கப்பட்டு மிக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் இந்த ABMR-ன் ரியாத் கிளையை மேலும் வலுவூட்டும் வண்ணம் நமதூர் விடுபட்ட அதிரை சாகோதரர்களை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பை ஏற்படுத்தி இந்த சேவை இன்னும் சிறப்பாக நடத்திட மேலும் பொருளாதாரம் திரட்டும் வண்ணம் நமதூர் சகோதரர்களின் ஆதரவை நாடுவதென முடிவெடுக்கப்பட்டு அதற்கான நமதூர் அனைத்து தெருவாசிகளும் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

7) இக்கூட்டத்தில் நமதூரில் கடந்த இரு வாரங்களில் இறையடி சேர்ந்த மூவர்களான ஊர் தலைவர் சமூக சேவகர் ஹாஜி மர்ஹும் M.M.S.சேக் நசுருதீன் காக்கா, சகோ.மர்ஹும் யூசுப் ( S/O. மியன்னா காக்கா ), சகோ,மர்ஹும் முஹம்மது ராவுத்தர் ( மாற்று திறனாளிகளின் பாதுகாப்பு உரிமைகளின் நலச்சங்கத்தின் தலைவர் ) இவர்களுக்காக இரங்கல் தெரிவிக்கப்பட்டு இவர்களின் ஹக்கில் துஆ செய்யுமாறு இக்கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

8) இன்ஷா அல்லாஹ் வரும் அமர்வு JANUARY 2020 10-ம் தேதி பத்ஹா RT- RESTUARENT முதல் மாடியில் இஷா தொழுகை முடிந்த பிறகு நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டு நமதூர் வாசிகள் அனைவர்களும் முழு ஒத்துழைப்பு தந்து அல்லாஹ்வின் பொருத்தத்துடன் இந்த சேவையை சிறப்பாக நடத்துவதற்கு உறுதுணை செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை

Monday, November 11, 2019

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை மாதாந்திரக் கூட்டம்!

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 72 வது மாதாந்திர கூட்டம் கடந்த 08/11/2019 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:- 
கிராஅத்                 :  இக்பால் (உறுப்பினர்)
முன்னிலை           : S.சரபுதீன் (தலைவர்)
வரவேற்புரை       : A. சாதிக் அகமது  (இணைத்தலைவர்)
சிறப்புரை              : A.M அஹமது ஜலீல் (செயலாளர்)
அறிக்கை வாசித்தல்:  ஷேக் மன்சூர் (துணை செயலாளர்)
நன்றியுரை      : அகமது முனாஸ்கான் (ஜித்தா)

தீர்மானங்கள்:
1) அல்ஹம்துலில்லாஹ் இவ்வருடம் 2019-க்கான பென்ஷன் திட்டத்திற்கு உதவிய அதிரை வாசிகள் அனைவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டு இன்ஷா அல்லாஹ் வரும் 2020-க்கான பென்ஷன் திட்டத்தில் பெயர்களை பதிவு செய்து இதே ஆதரவை தந்து அதற்கான நன்மைகளை அடைந்திருமாறு இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

2) அதிரை பைத்துல்மால் சேவை திட்டத்தின் வரிசையில் பெண்கள் சுய தொழில் தையல் பயிற்சி ( கடந்த 3 ½ வருடமாக ) சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த பயிற்சிக்கு நமதூர் சகோதரிகள் மற்றும் மாணவிகள் சரியான முறையில் கற்று பயனடைந்தால் வரும் காலங்களில் பெண்களின் உடைகளை தாமாகவே தைத்து பயனடையலாம் என்பதையும், அதற்கான முழு ஆதரவு கொடுத்திடுமாறு மீண்டும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

3) கடந்த மாதம் தமிழக அரசின் பென்ஷன் மாத உதவி தொகை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்து பைத்துல்மாலின் சுமையை குறைக்கும் திட்டத்தின் பிரகாரம் உதவிய அனைவர்களையும் பாராட்டி நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும், அரசு சம்பந்தப்பட்ட அனைத்து உதவிகள் மற்றும் சலுகைகள் சரியான முறையில் சென்று அடைய ABM மேலும் முன்னெடுத்து செம்மையாக செயல்படுமாறு இக்கூட்டத்தில் ஒருமனதாக வேண்டி விரும்பி கேட்டுக்கொள்ளப்பட்டு அதற்கான ஒரு பொறுப்புதாரி ஒருவரை ABM-HO தேர்ந்தெடுத்து அதில் மட்டும் முழு கவனம் செலுத்தி அரசு தரக்கூடிய சலுகைகளை குறிப்பிட்ட காலக்கட்டத்தில் மனுக்கள் சென்று அடைந்தால் ஏழை எளிய மக்கள் பயனடைய உறுதுணையாக அமையும் என்பதை வலியுறுத்தப்பட்டது.

4) இத்துடன் குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் ஏழை மாணவ மாணவிகள் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் ஏழை எளிய மக்களின் தேவைகளை உணர்ந்து அவர்களின் குறைகளை கண்டெடுத்து சரியான முறையில் தேர்வு செய்து வைத்து கொண்டால் சரியான காலங்கள் வரும் போது அரசு அதிகாரிகளிடம் சரியான விண்ணப்பங்களை ஆளும் கட்சி பிரமுகர்களின் உதவியுடன் சென்றடைய உறுதுணையாக அமையும் என்பதை இக்கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டது.

5) வட்டியில்லா நகைக்கடன் விஷயமாக நன்கு அறிந்து சரியான தேவையை உணர்ந்து பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார சுமையை குறைக்கும் வண்ணம் மிகவும் செம்மையாக செயல்படுமாறும் பயனாளிகளிடம் அதற்கான கால கெடுவுக்குள் நகையை திருப்பி பெற்று கொள்ளுமாறு இவ்விஷயத்தில் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
6) இஹ்லாஷான முறையில் நமதூர் ஏழை எளிய மக்களின் சேவையை மேம்படுத்தும் விதமாக ABM ரியாத் கிளையின் மாதாந்திர சந்தா தொகை வசூலிக்கும் விசயமாக கீழுள்ள பொறுப்புதாரிகள் அந்தந்த ஏரியாவகையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பொறுப்புதாரிகள்: 
1) HARA – ABDUL MALIK
2) BATHA – JAMAL MOHAMED
3) MALAZ – FAJROON
4) OLAYA – AHAMED ASRAF
5) SULAI – IMAMKHAN

7) இன்ஷா அல்லாஹ் வரும் அமர்வு DECEMBER 14-ம் தேதி பத்ஹா சிட்டிக்குள் நடத்துவதாக இருப்பதால் நமதூர் வாசிகள் அனைவர்களும் முழு ஒத்துழைப்பு தந்து அல்லாஹ்வின் பொருத்தத்துடன் இந்த சேவையை சிறப்பாக நடத்துவதற்கு உறுதுணை செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

குறிப்பு: கூட்டத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் கலந்து கொள்ள முடியாத சகோதர்கள் தயவு செய்து தவறாமல் தங்களின் மாத சந்தாவான சதக்காவை பொறுப்புதாரிகளிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை

Sunday, October 13, 2019

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை மாதாந்திரக்கூட்டம் (படங்கள்)

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 71-வது மாதாந்திரக் கூட்டம் கடந்த 11/10/2019 அன்று WATER TANK பத்ஹா பார்க்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:- 
கிராஅத்                 :  இக்பால் ( உறுப்பினர் )
முன்னிலை          :  S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை      :  N.அபூபக்கர் ( பொருளாளர் )
சிறப்புரை             :  A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )
அறிக்கை வாசித்தல்  : ஷேக் மன்சூர் ( துணை செயலாளர் )
நன்றியுரை           : அஹமது அஸ்ரப் ( துணை தலைவர் )

தீர்மானங்கள்:
1) தலைமையகம் மூலம் கடிதம் அனுப்பி கேட்டுக்  கொண்டதின் பிரகாரம் வைப்பு நிதி விஷயமாக கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு அதன் நன்மைகள் எடுத்துரைக்கப்பட்டு அதற்காக ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

2) தலைமையக்கத்திலிருந்து வந்த கடிதத்தில் வரும் 2020 ஏப்ரல் மாதம் ABM தேர்தல் விஷயமாக விளக்கப்பட்டு ELECTION-னா? அல்லது SELECTION-னா? என இக்கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டு அதன் முழு விவரமும் கிளையின் ஆலோசனைகள் அடுத்த கூட்டத்தில் விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அத்துடன் இந்த ELECTION-ல் இளைஞர்களின் பங்கு பற்றியும் விவாதிக்கப்பட்டது.

3) இன்று நடைபெற்ற ABMR கூட்டத்திற்கு வந்து பெரும் திரளாக கலந்து சிறப்பித்த அதிரைவாசிகள் அனைவர்களுக்கும் மற்றும் ஜித்தாவிலிருந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சகோ.முனஸ்கான் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

4) தமிழக அரசின் உதவி தொகைக்கான ஏற்பாடுகள் பென்ஷனுக்கான பணி கடந்த அக்டோபர் 7-ம் தேதி தலைமையகத்தின் மூலம் தேர்வுப்பணி நடத்தப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு நமதூர் MLA-விடம் மனுக்கள் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான முயற்சிகளும் இது போன்று அரசு உதவி முழு கவனம் செலுத்தி அந்த உதவியை ABM மூலம் தொடர்ச்சியாக செயலாற்றி வருவதுடன் மேலும் மக்களிடம் இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என இக்கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டு அதற்காக முழு முயற்சியாக ஏற்பாடு செய்த அனைவர்களுக்கும் இக்கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

5) ரியாத் கிளையிலிருந்து நிரந்தர உறுப்பினர்கள் முழு தகவல்களையும் இன்ஷா அல்லாஹ் விரைவில் அனுப்பி தருவதாகவும் அதனை REGISTER செய்து ID CARD விரைவில் வழங்குமாறு தலைமையகத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

6) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் NOVEMBER 8-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெறும். அதில் அதிரை வாசிகள் அனைவர்களும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத்
 
 

Wednesday, September 18, 2019

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட்டம்!

அதிரை நியூஸ்: செப்.18
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 70 வது மாதாந்திரகூட்டம் கடந்த 13-09-2019 அன்று ரியாத்மாநகர் ஹாராவில் இனிதே நடைபெற்றது.     

நிகழ்ச்சி நிரல்:
கிராஅத்            முகமது சித்திக் (உறுப்பினர்)
முன்னிலை     S.சர்புதீன் (தலைவர்)
வரவேற்ப்புரை அபூபக்கர் (பொருளாளர்)
சிறப்புரை        A.M அஹ்மது ஜலில் (செயலாளர்)                           
மாதஅறிக்கை மன்சூர் ஷேக் (துணை செயலாளர்)
நன்றியுரை     A. சாதிக் அகமது  (இணைத்தலைவர்)

தீர்மானங்கள்:
1. அல்ஹம்துலில்லாஹ் இவ்வருடம் ABM-ன் குர்பானி திட்டத்தில் பைத்துல்மால் தலைமையகம் மிகவும் சிறப்பாக பணியாற்றி நல்லதொரு இலாபகரமாக பொருளாதார தொகையை ஈன்று அதன் மூலம் அதிரை ஏழை எளிய மக்களின் சேவை திட்டத்திற்கான பங்களிப்பை செலுத்திய
அனைவருக்கும் அமர்வில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

2. WELFARE CREDIT SYSTEM  விசயமாக அதன் முழு விளக்கங்களையும் தெளிவுபடுத்தப்பட்டு விருப்பமுள்ள சகோதரர்கள்; பொறுப்புதாரிகளிடம் தங்களின் பெயர்களை பதிவுசெய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

3.AGRA அமைப்பின் சேவையை பாராட்டியதோடு அதன் பொறுப்புத்தாரியுடன் தொடர்புகொண்டு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்ததுடன் அதன் முழுவிபரங்களையும் அறிந்து நிவர்த்தி செய்ய வேண்டியதை விரைவில் நிவர்த்தி செய்யுமாறு அமர்வில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

4. புதிதாக துவங்கப்பட்ட கத்தார் ABM-கிளைக்கு, ரியாத் ABM-கிளை சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதுடன் இதுபோன்று பல நாடுகளிலும் புதிய கிளைகளை உருவாக்க வேண்டி அமர்வில் தீர்மானம் போடப்பட்டது.

5. கடந்த 10 ஆண்டுகள் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து முடித்துவிட்டு தாயகம் சென்ருறிருக்கும் ஜம்ரூத் முகமது அவர்கள் ரியாத் பைத்துல்மால் ஆரம்ப துவக்கத்திலிருந்து  உறுப்பினராக இருந்து நல்ல ஒத்துழைப்பும் ஆதரவும் தந்துள்ளார். அவருடைய பணிக்காக வாழ்த்துக்களையும் நன்றியும் இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

6. இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு 11-10-2019 அன்று நடைபெறும்.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை

Thursday, August 8, 2019

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 69-வது மாதாந்திரக்கூட்டம்!

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 69-வது மாதாந்திரக் கூட்டம் கடந்த 02-08-2019 அன்று ரியாத் மாநகர் ஹாராவில் இனிதே நடைபெற்றது.           

நிகழ்ச்சி நிரல்:
கிரா அத்           இக்பால் ஹமீது
முன்னிலை     S. சர்புதீன்         (தலைவர்)
வரவேற்புரை P.  இமாம்கான்   (கொ.ப.செ.)
சிறப்புரை       A.M அஹ்மது ஜலில் (செயலாளர்)                         
மாத அறிக்கை   மன்சூர் ஷேக் (துணை செயலாளர்)
நன்றியுரை         A. சாதிக் அகமது   (இணைத்தலைவர்)

தீர்மானங்கள்:
இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் ABM ன் குர்பானி திட்டம் தொடர்பாக பைத்துல்மால் தலைமையகத்திலிருந்து அனுப்பிய கடிதம் (25-07-2019) அமர்வில் வாசிக்கப்பட்டு இந்த வருடம் அதிகம் கூட்டுக் குர்பானி மற்றும் தனிநபர் குர்பானித் திட்டத்திற்கு ABM.க்கு முழு  ஒத்துழைப்பும் மற்றும் ஆதரவு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

ABMன் கூட்டுக்குர்பானி (மாடு) பங்கிற்கும் தனிநபர்(ஆடு) குர்பானிக்கும் பெயர்கள் கொடுத்த வண்ணம் உள்ளார்கள்.  இன்ஷாஅல்லாஹ் வரும் சனிக்கிழமை (10-08-2019) வரை தங்களின் பெயர்களை பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

ABM ன் குர்பானி திட்டத்தின் மூலம் நமதூர் ஏழை எளிய மக்களின் நலத்திட்டங்களை செயல்படுத்த மிகவும் உறுதுணையாக இருப்பதால் நமதூர் வாசிகள் அனைவரும் இந்த குர்பானி திட்டத்தில் கலந்துகொண்டு முழு ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்ளபட்டது.

வேண்டுகோள்:-
ABM தலைமையகத்திற்க்கு குர்பானி திட்டத்தின் சேவையை எவ்வித குறைபாடின்றி சரியான நேரத்தில் முறையாக செம்மையாக முழு திருப்தியுடன் பொதுமக்களுக்கு சேவை ஆற்றிடுமாறு வேண்டுகோள் வைக்க தீர்மானம் போடாப்பட்டது                                                             

அயல் நாடுகளில் கிளைகள் உருவாக்குவதற்கு அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகள் கனடா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் வாழும் நமதூர் வாசிகள் பெருநாள் தினத்தை முன்னிட்டு அதிரை வருபவர்களை கண்டறிந்து ABM சேவைகளை எடுத்துரைத்து ABM கிளைகள் உருவாக்க தலைமையகம் முயற்சி செய்ய வேண்டும் என்று  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
அதிரை மக்களின் தேவைகள் அதிகரித்துக்கொண்டே போகிறது. மேலும் இதனை சரியான பாதையில் அரசாங்கத்திடமிருந்து நிர்வாகிகளிடமிருந்து பெறுவது மிகவும் கடினமாக மாறி உள்ளது. அதன் பொருட்டு நாம் அனைவரும் நமதூர் நலனுக்காக நம் சமுதாய நலனுக்காக.(பொது விஷயங்களில்) மட்டும் ஒன்று சேர்ந்து புதிய தலைமை மூலம் (AGRA வை போல்) ஒரு அமைப்பு உருவாக்கி இயக்கங்கள், சங்கங்கள், மஹல்லாஹ் ஒன்றாக இணைத்து பொதுச்சேவையை செய்யத்தொடங்கினால் நம் சமுதாய நலனுக்காக அரசாங்கத்திடமிருந்து பெற வேண்டியதை எளிதில் பெறலாம்.

நமதூரில் சமீப காலமாக உயிர் இழப்புகள் அதிகரித்துள்ளது (வயது வரம்பு இன்றி) அதை மனதில் வைத்துக்கொண்டு முதலுதவி செய்ய பயிற்சி மற்றும் உடற்பயிற்சி முறைகளுக்கு மருத்துவமனை மற்றும் சேவை மையங்களுக்கு ABM முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு வேண்டுகோள் வைக்கிறோம்.

அமர்வில் புதிய பழைய உறப்பினர்கள். மற்றும் ஜித்தாவில் இருந்து வந்த அய்டா உறுப்பினர் AMK அகமத் மன்சூர் அவர்களுக்கு ஆலோசனை வழங்கியமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

கண்ணியமிக்க முகம்மது யூசுப் ஆலிம் அவர்களுக்காகவும், ABM முஹல்லா நிர்வாகி ஹாஜி ஏ வாப்பு மரைக்காயர் அவர்களின் சகோதரர் ஷேக்தாவூத் அவர்களுக்காகவும் துஆ செய்யபட்டுள்ளது. எங்கள் வருத்தத்தையும் இதன் மூலம் தெரிவித்து கொள்கிறோம்.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை
 

Wednesday, July 17, 2019

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 68-வது மாதாந்திரக்கூட்டம்!

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 68-வது மாதாந்திரகூட்டம் கடந்த 12-07-2019 அன்று நேஷனல் மியூசியம்  பத்தா பார்க்கில் இனிதே நடைபெற்றது.             
நிகழ்ச்சி நிரல்:
கிரா அத்           சகோ. அகமது அஸ்ரப் (துணை தலைவர்)
முன்னிலை        சகோ. S.சர்புதீன்         (தலைவர்)
வரவேற்ப்புரை  சகோ. N.அபூபக்கர்        (பொருளாளர்)
சிறப்புரை           சகோ A.M அஹ்மது ஜலில்(செயலாளர்)
நன்றியுரை         சகோ A. சாதிக் அகமது   (இணைத்தலைவர்)

தீர்மானங்கள்;
இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் ஹஜ்ஜுப்பெருநாள் மற்றும் ABMன் குர்பானி திட்டவிசயமாக கலந்து ஆலோசிக்கப்பட்டது. அமர்வில் இந்த வருடம். அதிகம் கூட்டுகுர்பானி மற்றும் தனிநபர் குர்பானி திட்டத்திற்கு ABM.க்கு முழு  ஒத்துழைப்பும். மற்றும் அதிக நபர்களை சேர்த்து பயனடைய வளியுறுத்தப்பட்டது.

ABM ன் குர்பானி திட்டத்தின் மூலம் நமதூர் ஏழை எளிய மக்களின் நலத்திட்டங்களை செயல்படுத்த மிகவும் உறுதுணையாக இருப்பதால் நமதூர் வாசிகள் அனைவரும் இந்த குர்பானி திட்டத்தில் கலந்து கொள்ள பெயர்களை பதிவு செய்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுகொள்ளபட்டது.                       
ABM ல் குர்பானி திட்டத்திற்கு விலை நிர்ணயிக்கப்படாத நிலையில் இம்மாதம் இறுதிக்குள் தரமான சரியான ஆடுகள் மாடுகள்.பைத்துல்மால் மூலம் விநியோகிக்கப்படுவதால்.நமதூர் வாசிகள் இத்திட்டத்தில் இணைந்து தங்களின் மேலான இந்த கடமையை நிறைவேற்றுமாறு கேட்டுகொள்ளபட்டது.                                             

ABM ன் கிளைகள் சவுதி துபாய் மற்றும் குவைத்தில் செயல்படுவதுபோல் இதர அரபு நாடுகளில் கிளைகள் உருவாக்குவதோடு ஐரோப்பிய நாடுகள் கனடா. அமெரிக்கா. ஜப்பான் மற்றும் தாய்லாந்து. கிளைகள் உருவாக்க தலைமையகம் மேற்கண்ட நாடுகளில். வாழும் நமதூர் வாசிகளை தொடர்பு கொண்டு மேலும் கிளைகள் உருவாக்க முயற்சிசெய்யவேண்டும் என்று தீர்மானம் போடாப்பட்டது
             
சென்ற ரமலான் மாதத்தில் இஃலாஷாக திறம்பட பித்ரா மற்றும் ஜக்காத் போன்றநிதிகளைக்கொண்டு ஏழை எளிய மக்களின் தேவைகளை சரியான நேரத்தில் சிறந்த சேவைகள்  புறிந்த ABM நிர்வாகிகள்  மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் துவா செய்யப்பட்டு நன்றி தெரிவிக்கப்பட்டது.

நடுத்தெருவில் இரண்டு கூரை வீடுகள் எறிந்து உடமைகளை இழந்த குடும்பத்திற்கு உதவிகள் செய்ததற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
                             
பைத்துல்மால் செயல் பாடுகளில் இளைஞர்களை இணைக்கும் விஷயமாக கலந்து ஆலோசிக்கப்பட்டு. வரும் காலங்களில் இளைஞர்களை ஊக்கிவைக்கும் வகையில். துணை. நிலை பொறுப்புகளை பகிர்ந்துஅளித்தால் மேலும் செம்மையாக செயல்பட வாய்ப்பாக அமையும் என்பதை அமர்வில் ஆலோசிக்கப்பட்டது.

மூன்றாம் தவணை பென்ஷனுக்காக நிதியுதவிய நமதூர் நல்உள்ளங்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு அதிரைவாசிகள். அடுத்தடுத்த அமர்வுகளில்  தவறாமல் கலந்துக்கொள்ளுமாரறு. கேட்டுகொள்ளபட்டது.

அதிரைவாசிகள் அனைவரும் இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு. பெருநாள் விடுமுறை மற்றும் குர்பானிசம்பந்தமாக பேச இருப்பதால் முதல்வாரம் 02-08-2019 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழகை முடிந்தவுடன் நடைபெறும் என்று தெரிவிக்கபட்டது.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை

Saturday, May 11, 2019

ரியாத்தில் ABM இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள்)

அதிரை நியூஸ்: மே 11
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை சார்பில் ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி  வெள்ளிக்கிழமை மாலை பத்தா CLASSIC RESTAURANT ஆடிடோரியத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:- 
கிராத்                     : S.அகமது அஷ்ரஃப் ( துணை தலைவர் )
முன்னிலை          : S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை      : S.சரபுதீன் ( தலைவர் )
சிறப்பு பயான்:   : அப்துல்லாஹ் மௌலவி
அறிக்கை வாசித்தல்: A.M.அகமது ஜலீல் ( துணை செயலாளர் )
நிகழ்ச்சி தொகுப்பு : P. இமாம்கான்
நன்றியுரை   : A.சாதிக் அகமது ( இணை தலைவர் )

1) அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 6-வது ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சியும் 67-வது மாதாந்திர கூட்டமும் சேர்த்து மெகா கூட்டமாக இனிதே சிறப்பாக நடைபெற்றது.

2) இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான அதிரை சகோதர - சகோதரிகள், இளம் சிறார்கள் வந்து கலந்துகொண்டு நிகழ்ச்சியை மிகவும் சிறப்பித்தார்கள்.

 3) இந்த வருடம் குழந்தைகளுக்கான குர்ஆன் மற்றும் ஹதீது போட்டி நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது.

4) இந்த நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்த அனைத்து அதிரைவாசிகள் அனைவரையும் ABM ரியாத் கிளை சார்பாக நன்றியை தெரிவித்து மேலும் மேலும் ஒத்துழைப்பும் ஆதரவும் தந்து நமதூர் முன்னேற்றத்திற்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

5) அதிரை காஜா புயலில் சிறப்பாக பணியாற்றிய இமாம்கான் அவர்களுக்கு ABM ரியாத் கிளை சார்பாக இஃப்தார் நிகழ்ச்சியில் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.

செய்தி மற்றும் படங்கள்:
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை