.

Pages

Showing posts with label ADIRAI ILMI. Show all posts
Showing posts with label ADIRAI ILMI. Show all posts

Thursday, April 23, 2015

உங்கள் பிள்ளைகளின் டாக்டர் கனவு நனவாக: இல்மியின் - ஸ்கீம் 100

 
அஸ்ஸலாமு அலைக்கும்,

ஒவ்வொரு ஆண்டும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 90% க்கு மேல் மதிப்பெண் எடுக்கும் 150 முஸ்லிம் மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களை மெரிட் முறையில் டாக்டர்களாகவோ, இன்ஜினியர்களாகவோ ஆக்கும் வரை தேவையான அனைத்து ஏற்பாடுகளையும், செலவினங்களையும் ILMI பொறுப்பெடுத்து கொள்ளும். ( இன்ஷா அல்லாஹ் )

சென்ற ஆண்டு தேர்வான 100 மாணவர்கள் வெற்றிகரமாக பயின்று வரும் நிலையில் இவ்வாண்டு 150 மாணவர்களுக்கு பொன்னான வாய்ப்பு

சிறப்பம்சங்கள்: 
- முழுமையான இஸ்லாமிய சூழலுடன் மாணவ மாணவியருக்கு தனித்தனி வகுப்பறைகள் மற்றும் ஹாஸ்டல்.
- மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வூட்டும் விளையாட்டுக்கள்.
- சிறப்பான பயிற்சித்திறமை கொண்ட (நாமக்கல்) ஆசிரியர்கள்.
- குர்ஆன், ஹதீஸ், துஆக்கள் மனனம் உட்பட தினமும் இஸ்லாமிய வகுப்புகள். 
- ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி லேப் வசதி. 
- ஆரோக்கியமான சத்தான உணவு ஏற்பாடு.

இவையனைத்துக்கும் எந்த கட்டணமுமின்றி அனைத்து செலவுகளையும் ILMI ஏற்றுக்கொள்ளும். WWW.ILMI.CO வில் இன்றே பதிவு செய்யுங்கள்.

Tuesday, January 13, 2015

சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான இலவச பயிற்சி !

சென்னை: ‘இல்மி’ என்ற கல்வி நிறுவனம் இலவச சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான பயிற்சியை வழங்கவிருப்பதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 2015

பயிற்சி நடைபெறும் இடம்: சென்னை,கோவை, திருச்சி, நெல்லை

தமிழக அரசின் காவல்துறைக்கு இவ்வாண்டு சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு 1000 பேர் எடுக்கவுள்ளனர். காவல் துறையில் நமது சமுதாயத்தின் பிரதிநிதித்துவம் எவ்வளவு முக்கியதத்துவம் வாய்ந்தது என்பது தங்களை போன்ற சமூக அக்கறை உள்ளவர்களுக்கு தெரியும்.

சமீபத்தில் கோயமுத்தூர் கலவரம் தொடங்கி S.P. பட்டணம் லாக்கப் படுகொலை வரை காவல்துறை உட்பட பல்வேறு அரசு துறைகளில் நமது சமுதாயம் அலைக்கழிக்கப்படுவதும் அநீதமிழைக்கப்படுவதும் அதைக்கண்டு நம்மவர்கள் அங்காலாய்ப்பதும் வழமையாகி விட்டது.

இந்த கொடுமைகளில் இருந்து விடுபட அல்லாஹ் கொடுத்த அரிய வாய்ப்புதான் இந்த சப் இன்ஸ்பெக்டர் தேர்வு .இதற்கு முன் இது போன்ற ஆக்கப்பூர்வமான வாய்ப்புகளை நமது சமுதாயம் முறையாக பயன்படுத்தியிருந்தால் இப்போது நாம் அனுபவித்து வரும் இந்த அவல நிலை நமக்கு ஏற்பட்டிருக்காது.(குறிப்பாக இதற்கு முன் 2009 ல் இதுபோன்று சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு தேர்வு நடந்தபோது தேர்வான 1000 பேரில் 2 பேர் மட்டுமே முஸ்லிம்கள் என்பது வேதனையில்லையா ?)

இந்த வேதனைகளை களைவதற்கான உருப்படியான முயற்சிகளில் ஈடுபட ILMI களமிறங்கி உள்ளது .இந்த தேர்வில் பங்கு பெற தேவையான அணைத்து பயிற்சிகளோடு சேர்த்து நேர்மையான இறையச்சமுள்ள காவல் அதிகாரிகளாக செயல் படுவதற்கு தேவையான இஸ்லாமிய தர்பியத் பயிற்சிகளையும் நமது சமுதாய இளைஞர்களுக்கு இலவசமாக வழங்க ILMI முன்வந்துள்ளது .அதற்காக சென்னை, கோவை, திருச்சி நெல்லை ஆகிய 4 நகரங்களில் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது. சுமார் 1000 முஸ்லிம் இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து குறைந்தது 100 பேரை வெற்றி பெற வைப்பது எங்கள் இலக்காகும் .

இந்த இலக்கை இலகுவாக அடைய பள்ளிவாசல் முதவல்லிகள், கண்ணியத்திற்குரிய இமாம்கள், சமுதாய அக்கறையுள்ளவர்கள் அனைவரும் துஆ செய்வதுடன் இந்த அவசர செய்தியை முஸ்லிம் இளைஞர்களுக்கு தெரிவித்து அவர்களை ஊக்கமூட்டி உடனடியாக பதிவு செய்ய வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மிகக் குறுகிய கால அவகாசமே உள்ளது என்பதை நினைவுறுத்துகிறோம். அல்லாஹ் நமது முயற்சிகளை இக்ஹ்லாசான முயற்சியாக்கி வெற்றியை தருவானாக ஆமீன்.

மேலும் விவரங்களுக்கு: www.ilmi.co., Ph: 8122185932.

Saturday, July 5, 2014

அதிரை ILMI நிர்வாகிகள் IAS தேர்வில் வெற்றிபெற்ற அஸ்ரப் உடன் சந்திப்பு !

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பிற்கினிய சகோதரர்களே,

நம் நாட்டில் கல்வி மற்றும் அரசுத்துறை வேலைவாய்ப்புகளில் இஸ்லாமியர்களின் நிலை நாட்டின் மொத்த மக்கள் தொகை விகிதாச்சாரப்படி மிகவும் பின் தங்கியுள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை. தமிழகத்திலிருந்து கடந்த 18 ஆண்டுகளில் இது வரை ஒரு முஸ்லிம் கூட இந்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற தேர்வுகளில் வெற்றிப்பெற்று ஆட்சிப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது மிகவும் வேதனைக்குரிய விடயம். அந்த அளவுக்கு மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைய (UPSC) வேலைவாய்ப்புகளில் நமது சமுதாயம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.

மத்திய அரசு நியமித்த குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டாலும் நம் சமுதாய மாணவர்களுக்கு விழிப்புணர்வும் போட்டியிடும் தன்மையும் குறைவாகவே உள்ளது என்றால் அது மிகையல்ல. மேலும் சில மாநிலங்களில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகின்றபோதிலும் நம் சமுதாய மாணவர்களின் சேர்க்கை விகிதம் விகிதாச்சாரப்படி ஒதுக்கப்பட்ட இடங்களை கூட நிரப்ப முடியாத நிலையில்தான் உள்ளது.

இந்த சூழ்நிலையில், ஒட்டுமொத்த இந்தியாவின் கணக்கெடுப்பின் அடிப்படையில் பார்த்தால் அதிரையில் நிலை இன்னும் மோசம் என்ற நிலையிலேயே உள்ளது.  உதாரணத்திற்கு சுதந்திர இந்தியாவில் இதுவரை நமதூரை சார்ந்த நம் சமுதாயத்தவர் ஒருவர் கூட இந்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற ( UPSC Exam ) தேர்வுகளில் வெற்றிபெற்றதாகவோ அல்லது பங்கேற்றதாகவோ அறியப்பட்டதில்லை.

நம் நாட்டில் நாம் விரும்புகின்ற நேர்மையான ஆட்சி நிலைநாட்டப்படவேண்டுமென்றால் நம் சமுதாயத்தினர் உயர் அரசுப்பதவிகளில் செயலாற்றவேண்டும், அப்படி செயல்படுபவர்கள் பெயரளவில் மட்டும் முஸ்லிமாக இல்லாமல் நல்ல உள்ளச்சமுடையவர்களாகவும், சமுதாயத்தின்பால் அக்கறையுள்ளவராகவும், இஸ்லாம் கற்றுத்தந்த நெறிமுறைகளை பின்பற்றுபவராக இருந்தால் மட்டுமே நமது அந்த உயரிய நோக்கம் சாத்தியப்படும்.

இதனடிப்படையில், சென்னை மக்கா மஸ்ஜிதில் இயங்கி வரும் அழகிய கடன் அறக்கட்டளை சார்பில் செயல்பட்டுவரும் ஐ.ஏ.எஸ் அகாடெமி மேற்கண்ட நமது நோக்கத்தின் அடிப்படையில் இயங்கி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

சில மாதங்களாகவே, மௌலவி சம்சுதீன் காஷிமி அவர்களை அதிரையை சார்ந்த சில தன்னார்வ சகோதரர்கள் சந்தித்து அதிரை இஸ்லாமியர்களின் கல்வி மற்றும் அரசுத்துறை சார்ந்த போட்டித்தேர்வுகளில் பங்கு பெற வைப்பதற்கான திட்டங்கள் பற்றி கலந்தாலோசித்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 22.06.2014 ஞாயிற்றுக்கிழமை கீழக்கரையில் நடைபெற்ற ILMIயின் புதிய திட்ட துவக்க விழா மற்றும் கலந்தாய்வுக்கூட்டத்தில் நமதூரைசார்ந்த சில சகோதரர்கள் கலந்துகொண்டு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் பெற்றுக்கொண்டனர்.

மேலும் அழகிய கடன் அறக்கட்டளை ஐ.ஏ.எஸ். அகாடெமியில் பயின்று முதல் முயற்ச்சியிலேயே மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) மூலம் நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்று கடந்த 20 ஆண்டுகால நம் சமுதாயத்தின் ஏக்கத்தை போக்கி அவர்களது அகாடெமியின் முதலாவது மாணவராக வெற்றி பெற்ற சகோ. அஷ்ரப் அவர்களையும் அவர்களின் தந்தையையும் சந்தித்து ஆலோசிக்கப்பட்டது.

சந்திப்பின் முடிவில் இருவரும் நம் சமுதாய மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் வழங்கிய ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் கீழே காணவும்.


குறிப்பு:
சகோ. அஷ்ரப் அவர்களோடு இறுதித்தேர்வில் பங்கு பெற்ற மூன்று நபர்களில் அதிரையை சார்ந்த சகோ. மீரா சாஹிபும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஷா அல்லாஹ் அவரும் வருகிற தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெற்று அதிரையின் முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இறைவனிடம் பிரார்த்திப்போம்.

- ஆஷிக் அஹமது
அதிரை பொறுப்பாளர் - ILMI