.

Pages

Showing posts with label ADIRAI NEWS EDUCATION AWARD. Show all posts
Showing posts with label ADIRAI NEWS EDUCATION AWARD. Show all posts

Friday, June 10, 2016

அதிரை நியூஸ் கல்வி மற்றும் சாதனையாளர்கள் விருது விழா- காணொளி [ PART 4 ] !

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பள்ளிகளில் நடப்பாண்டில் SSLC, +2 அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, முதல் 3 இடங்களை பெற்றுள்ள மாணவ மாணவிகள், பள்ளி அளவில் முதல் 3 இடங்கள் பிடித்துள்ள மாணவ, மாணவிகள், கல்விச்சேவையில் சிறந்து விளங்கும் ஆசிரியை ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்கள் ஆகியோரின் சாதனைகளை ஊக்கப்படுத்தும் விதமாக 'அதிரை நியூஸ் கல்வி விருது - சாதனையாளர்கள் விருது 2016' விழா கடந்த [ 03-06-2016 ] அன்று வெள்ளிக்கிழமை மாலை அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

பல்வேறு தரப்பினரின் ஏகோபித்த ஆதரவையும், வரவேற்பையும் பெற்ற இந்த நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பின் நான்காம் பாகத்தை அதிரை நியூஸ் வாசகர்களுக்கு வழங்குகின்றோம்.

அதிரை நியூஸ் கல்வி மற்றும் சாதனையாளர்கள் விருது விழா- காணொளி [ PART 3 ] !

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பள்ளிகளில் நடப்பாண்டில் SSLC, +2 அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, முதல் 3 இடங்களை பெற்றுள்ள மாணவ மாணவிகள், பள்ளி அளவில் முதல் 3 இடங்கள் பிடித்துள்ள மாணவ, மாணவிகள், கல்விச்சேவையில் சிறந்து விளங்கும் ஆசிரியை ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்கள் ஆகியோரின் சாதனைகளை ஊக்கப்படுத்தும் விதமாக 'அதிரை நியூஸ் கல்வி விருது - சாதனையாளர்கள் விருது 2016' விழா கடந்த [ 03-06-2016 ] அன்று வெள்ளிக்கிழமை மாலை அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

பல்வேறு தரப்பினரின் ஏகோபித்த ஆதரவையும், வரவேற்பையும் பெற்ற இந்த நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பின் மூன்றாம் பாகத்தை அதிரை நியூஸ் வாசகர்களுக்கு வழங்குகின்றோம்.

Wednesday, June 8, 2016

அதிரை நியூஸ் கல்வி மற்றும் சாதனையாளர்கள் விருது விழா- காணொளி [ PART 2 ] !

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பள்ளிகளில் நடப்பாண்டில் SSLC, +2 அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, முதல் 3 இடங்களை பெற்றுள்ள மாணவ மாணவிகள், பள்ளி அளவில் முதல் 3 இடங்கள் பிடித்துள்ள மாணவ, மாணவிகள், கல்விச்சேவையில் சிறந்து விளங்கும் ஆசிரியை ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்கள் ஆகியோரின் சாதனைகளை ஊக்கப்படுத்தும் விதமாக 'அதிரை நியூஸ் கல்வி விருது - சாதனையாளர்கள் விருது 2016' விழா கடந்த [ 03-06-2016 ] அன்று வெள்ளிக்கிழமை மாலை அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

பல்வேறு தரப்பினரின் ஏகோபித்த ஆதரவையும், வரவேற்பையும் பெற்ற இந்த நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பின் இரண்டாம் பாகத்தை அதிரை நியூஸ் வாசகர்களுக்கு வழங்குகின்றோம்.

அதிரை நியூஸின் நன்றி அறிவிப்பு !

அன்பானவர்களே!

அதிரை நியூஸ் இணைய தளம் முன்னெடுத்துள்ள அதிரை சமூக நல அறக்கட்டளையின் சார்பாக,  கல்வி மற்றும் பல்வேறு துறைகளில் தங்களை சாதனையாளர்களாக நிலை நிறுத்தியவர்களுக்கு அங்கீகாரம் அளித்து   விருதுகள்  வழங்கும் விழா கடந்த  03-06-2016  வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் அதிரை இ.சி. ஆர் சாலையில் அமைந்துள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

புனித ரமலான் மாதம் நெருங்கி வந்த காரணத்தால் அதற்கு முன்பே இந்த விருதுகள் வழங்கும் விழாவை நடத்தி விடவேண்டும் என்ற நெருக்கடியான காலச்சூழலில், பள்ளித் தேர்வு முடிவுகள் வெளியான பின்  மிகவும் குறைந்த நாட்களே இடையில் இருந்ததால் அதிரை சமூக நல அறக்கட்டளை மற்றும் அதிரை நியூசின் அனைத்து குழுக்களும் விரைவு படுத்தப்பட்டு விழாவுக்கான செயல்பாடுகள் முடுக்கிவிடப்பட்டன.

அல்லாஹ்வின் பெரும் கருணையாலும் அனைவரின் உள்ளம் நிறைந்த ஒத்துழைப்பாலும் இந்த விழா  வெற்றிகரமாகவும் சிறப்பாகவும்   நடைபெற்றது. இது ஒரு கை ஓசை அல்ல; பல கைகள் இணைந்து இந்த நினைவில் நிற்கும் விழாவை நிகழ்த்திக் காட்டின.

அதிரை சமூக நல அறக்கட்டளையின் சார்பாகவும், அதிரை நியூஸ் வலைதளத்தின் சார்பாகவும் இந்த விழாவை வெற்றிகரமாக நடத்த பல்வேறு வகைகளிலும் பேருதவி புரிந்த அனைவருக்கும் ஜசாக்கல்லாஹ் ஹைரன் என்று நன்றி  சொல்லும் கடப்பாட்டில் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.

அழகான  குரலில் திருமறை வசனத்தை ( கிராத் ) ஓதி சன்மார்க்க மக்களின் நெஞ்சையும் கவர்ந்த இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் முஹம்மது ஃபாதில் அவர்களுக்கு எங்களது நன்றியுடன் நல் வாழ்த்துக்களையும் தொடக்கமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்ந்து அதிரையின் அறிவொளியின் அடையாளமாகத் திகழும் கணினி தமிழ் அறிஞர் ஜமீல் எம் ஸாலிஹ் வரவேற்புரை ஆற்றினார்கள். அதைத்தொடர்ந்து அதிரை சமூக நல அறக்கட்டளையின் செயல்திட்டங்கள் பற்றிய அறிமுக உரையை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின்  தலைமை ஆசிரியர் சகோதரர் மகபூப் அலி அவர்கள் ஆற்றினார்கள். இவ்விரு நல்ல நெஞ்சங்களுக்கும் அதிரை நியூஸ் மற்றும் அதிரை சமூக நல அறக்கட்டளை தனது நன்றியை  தெரிவித்துக் கொள்கிறது.

பல்வேறு கல்வியாளர்களும் சாதனையாளர்களும் பங்கேற்கும் இந்த கவின்மிகு நிகழ்ச்சிக்கு ஒரு பொருத்தம்வாய்ந்த தலைமையாக அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின்  ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அனைவரின் மரியாதைக்குரிய எஸ் கே எம் ஹாஜா முகைதீன் அவர்கள்  தலைமை வகித்து நிகழ்ச்சிகளை நடத்தித் தந்தார்கள். நாம் அவர்களை அணுகிக் கேட்ட உடனே சம்மதித்து மிகச் சிறப்பாக  நிகழ்ச்சிகளை நடத்தித்தந்த  எங்களின் அன்புக்குரிய அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நிகழ்ச்சித் தொகுப்பாளராக நமது அன்புக்கு உரிய பேராசிரியர் செய்யது அஹமது கபீர் அவர்கள்  சம்மதித்து இருந்தாலும் சில தவிர்க்க இயலாத சொந்தக் காரணங்களால் சென்னையில் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இருந்தாலும் விழாவுக்கான ஏற்பாடுகளின் அன்றாட நிலைகளை அக்கறையுடன் விசாரித்தறிந்து கொண்டதுடன் தேவையான ஆலோசனைகளையும் வழங்கி வந்தார்கள். பேராசிரியர் செய்யது அஹமது கபீர் அவர்கள் ஊரில் இல்லாத நிலையில் அவரது தமிழாசான் என்கிற நிலையில் அந்தப் பொறுப்பை தானாக முன்வந்து ஏற்றுக் கொண்டு தனக்கே உரிய அழகு தமிழில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய  நற்றமிழ் நாவலர் பேராசிரியர் எம் ஏ . முஹம்மது அப்துல் காதர் அவர்களுக்கு எங்களது அன்பு கலந்த நன்றியை உரித்தாக்குகிறோம். அதிரை சமூக நல அறக்கட்டளை மற்றும் அதிரை நியூசின் வளர்ச்சியில் பேராசிரியருக்கு இருக்கும் அக்கறையின் அடையாளமாகவே இதனை நாம் கண்டோம் என்பதை பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறோம்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி தாளாளர் டாக்டர் எம்.எம் சாகுல்ஹமீது அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள். ஒரு தகுதிவாய்ந்த பெருமகனான அவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் முயல்,  ஆமை போன்ற கதைகளை எல்லாம் எளிமையாக சொல்லி இனிய உரை ஆற்றி தங்களது அன்புக்கரங்களால் பரிசுகளையும் வழங்கித்தந்த தன்மைக்காக நாம் என்றென்றும் அவர்களுக்கு நன்றி செலுத்துகிறோம்.

விழாவின் இன்னொரு சிறப்பம்சமாக  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலை கழகப்  பதிவாளர் டாக்டர் செ. சுப்பிரமணியன் அவர்கள் தனது மனைவியுடன் வந்து கலந்து கொண்டு ஆற்றொழுக்கான  சிறந்த ஒரு சொற்பொழிவையும் நிகழ்த்தினார்கள். அதிரை சமூக நல அறக்கட்டளையின் குறிக்கோள்களை மகிழ்வுடன் குறிப்பிட்டு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்கள். ஒரு பெரும்பொறுப்பில் இருக்கும் இத்தகைய தகைமை சான்றோர் நமது விழாவில் கலந்து கொண்டது அதிரைக்கு பெருமை சேர்த்ததாகும். தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலை கழகப்  பதிவாளர் டாக்டர் செ. சுப்பிரமணியன் அவர்களுக்கு நாம் நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதிராம்பட்டினம்,  மற்றும் சுற்றுப்புற பகுதிகளின் கல்வி நிறுவனங்களில் நடப்பாண்டில் SSLC, +2 அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, முதல் 3 இடங்களை பெற்றுள்ள மாணவ மாணவிகள், பள்ளி அளவில் முதல் இடங்களை பிடித்துள்ள மாணவ, மாணவிகள் கல்விச்சேவையில் சிறந்து விளங்கும் ஆசிரியை ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு சிறப்பு விருந்தினர்களுடன் இணைந்து இன்னும் சிறப்பு சேர்க்கும் வகையில் தங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கிக்கொண்டு வருகை தந்த தமிழக காவல்துறையின் மதுவிலக்குப் அமல் பிரிவு மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பி. சேகர், ராஜாமடம் அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரி புல முதல்வர் முனைவர் இளங்கோவன், காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் முனைவர் உதுமான் முகையதீன் ஆகியோர் பரிசுகள் மற்றும் சாதனை விருதுகள் வழங்கி கெளரவித்தனர். இத்தகைய பெருமகன்களின் வருகை நம்மை மிகவும் மகிழ்ச்செய்ததுடன் நமது நெஞ்சார்ந்த நன்றியையும் இவர்களுக்கு அன்புடன் சமர்ப்பிக்கவும் பெரும் கடமைப்பட்டு இருக்கிறோம்.

கல்வி மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் இந்த விழாவில் வருகை தந்து கலந்து கொண்டதுடன் தங்களின் அன்புக்கரங்களால் இரண்டு மாணவச் செல்வங்களுக்கு மடிக்கணினி வழங்கிய தொழில் அதிபர் பழஞ்சூர் K செல்வம் அவர்களுக்கும், பதினைந்து மாணவ சாதனையாளர்களுக்கு ரூ. 1000/- வீதம்  தனது கரங்களால் வழங்கிய அல்நூர் ஹஜ் சர்வீஸ் நிறுவனர் அல்ஹாஜ். M.S. முகமது அலி அவர்களுக்கும் அதிரை சமூக நல அறக்கட்டளை மற்றும் அதிரை நியூஸ் தனது அன்பான நன்றியை தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறது.

நலிவுற்ற குடும்பத்துக்கு  தையல் மிஷின் வழங்கி உதவிய முத்துப் பேட்டை அல்மஹா கல்வி அறக்கட்டளையின் நிறுவனர்  டாக்டர் எஸ். எம். ஹைதர் அலி அவர்களுக்கும் நாம் நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விழா குறுகிய காலத்தில் சிறப்பாக நடைபெற தொடக்கம் முதல் எங்களுடன் அனைத்துக் காரியங்களிலும் உறுதுணையாக  இருந்து உதவிய  தம்பி அதிரை மைதீன் அவர்களுக்கும், இணைய தள ஊடகமான அதிரை நியூசுக்கு அச்சு ஊடகங்களின் அரவணைப்பு  அளவிட முடியாமல் இருந்தது. அந்த வகையில் தினகரன் நிருபர் திரு. செல்வகுமார், தினமலர் நிருபர் திரு. சிவா, நிருபர் ஜகுபர் அலி, நிருபர் கண்ணன், நிருபர் பார்த்திபன் ஆகியோர் இந்த விழாவின் வெற்றியின் ஒவ்வொரு அணுவிலும் இருக்கிறார்கள் என்பதை மனமார தெரிவித்து அவர்களுக்கு நன்றி செலுத்துகிறோம்.

இந்த விழா இனிதே நிகழ்வுற ஒத்துழைப்பு நல்கிய நல்ல இதயங்களான ஜபருல்லாஹ், ராஃபியா காக்கா, கே.எம்.ஏ ஜமால் முஹம்மது, நாவலர் நூர் முஹம்மது, திருப்பூர் மு.செ.மு. சபீர் அஹமது, ஷப்னம் மினி டவர்ஸ் அதிபர் கவிஞர் சபீர், எழுத்தாளர் இக்பால்- எம்- ஸாலிஹ், கவிஞர் - எழுத்தாளர் அதிரை மெய்சா, அப்துல் ஜலீல், மான் சேக் ஆகியோருக்கும் நன்றி.

இந்த விழா சிறப்புற நடைபெற,  சாரா திருமண மண்டபத்தை நமக்குத் தந்து உதவிய  அதன் உரிமையாளர் லயன் அஹமது , தன்னுடைய அருமையான ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கிய அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் அவர்களுக்கும், விழா சிறக்க களத்தில் நின்று பணியாற்றிய ஆசிரியர்கள் அஜ்முதீன், சகாபுதீன், நியாஸ் அஹமது, பசூல்கான், நிஜாமுதீன் ( கள்ளுகொல்லை ), எஸ்.ஏ இத்ரீஸ் அஹமது, நவாஸ், இப்ராஹீம் அலி, அஃப்ரீத், நிஜாம், அஜார் ஆகியோருக்கும், விழாவின் நிறைவாக நன்றி உரை ஆற்றிய அபுல் ஹசன் சாதலி, விழா நிகழ்வுகளை படம்பிடித்து காணொளியாக பதிவு செய்த தம்பி கமாலுத்தீன், நண்பர் மீடியா மேஜிக்  நிஜாம். விழாவின் ஒவ்வொரு பகுதிகளையும் புகைப்படங்கள் எடுத்து தந்து உதவிய சூப்பர் ஸ்டுடியோ அப்துல் ரஹ்மான்,  சிறப்பான முறையில் ஒலி ஒளி அமைத்து தந்தவர்களுக்கும், இந்த நிகழ்ச்சியை அனைவரிடத்திலும் எடுத்துச்செல்லும் விதமாக ஃப்ளக்ஸ் பேனர்கள், துண்டு பிரசுரங்கள், வால் போஸ்டர் ஆகியவற்றின் மூலம் விளம்பர உதவிகள் செய்த வர்த்தக உரிமையாளர்கள் மற்றும் தங்களின் உணர்வாலும் உழைப்பாலும் இந்த நிகழ்வை வெற்றிகரமாக்கிட உதவிய ஒவ்வொரு நல்ல நெஞ்சங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை நெகிழ்வுடனும் அன்புடனும் சமர்ப்பித்துக் கொள்கிறோம்.

நமது அழைப்பை ஏற்று வருகை தந்து சிறப்பித்த அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள், வாசகர்கள், சமூக ஆர்வலர்கள், அதிரை நியூசின் பங்களிப்பாளர்கள், பதிவர்கள், சக வலைதளங்களில் இருந்தும் வருகை புரிந்த நண்பர்கள், வாழ்த்து தெரிவித்த நல்ல இதயங்கள், பல்வேறு பள்ளிகள் இருந்தும்  வருகை தந்து சிறப்பித்த ஆசிரிய ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் மற்றும் விருதுகளைப் பெற்றுக் கொள்ள வருகை தந்த சாதனையாளர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி செலுத்துகிறோம்.

அதிரை நகரின் பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் திரண்டு வந்து நிகழ்ச்சிகளின் தொடக்கம் முதல் நிறைவு வரை அமர்ந்திருந்து பரிசுகளும் விருதுகளும் பெற்றவர்களை உற்சாகமூட்டிப் பாராட்டிய காட்சிகளை நாங்கள் மறக்கவே இயலாது.

மேலும் உள்ளூரிலிருந்தும் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் இந்த நிகழ்ச்சியின் பதிவுகளைப் பார்த்தும் வீடியோ பதிவுகளைக் கேட்டும் பாராட்டிய அன்பான நண்பர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களின் இந்தப் பாராட்டுக்கள் எங்களை இன்னும் அதிகம் இந்த தன்னலமற்ற சேவையில் ஈடுபடுத்திக் கொள்ள தூண்டுகோலாக அமையும் என்பதை அறிவிப்பதில் ஆனந்தமடைகிறோம்.

இறைவன் நாடினால் எதிர்வரும் ஆண்டுகளில் சிறப்பாக இந்த விழா நடைபெற அனைத்து நல்ல இதயங்களின் இறைஞ்சல்களையும் வேண்டி நிற்கிறோம். மீண்டும் அனைவருக்கும் நன்றி !

Tuesday, June 7, 2016

அதிரை நியூஸ் கல்வி மற்றும் சாதனையாளர்கள் விருது விழா [ காணொளி ] !

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பள்ளிகளில் நடப்பாண்டில் SSLC, +2 அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, முதல் 3 இடங்களை பெற்றுள்ள மாணவ மாணவிகள், பள்ளி அளவில் முதல் 3 இடங்கள் பிடித்துள்ள மாணவ, மாணவிகள், கல்விச்சேவையில் சிறந்து விளங்கும் ஆசிரியை ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்கள் ஆகியோரின் சாதனைகளை ஊக்கப்படுத்தும் விதமாக 'அதிரை நியூஸ் கல்வி விருது - சாதனையாளர்கள் விருது 2016' விழா கடந்த [ 03-06-2016 ] அன்று வெள்ளிக்கிழமை மாலை அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

பல்வேறு தரப்பினரின் ஏகோபித்த ஆதரவையும், வரவேற்பையும் பெற்ற இந்த நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பின் முதல் பாகத்தை அதிரை நியூஸ் வாசகர்களுக்கு வழங்குகின்றோம்.

Monday, June 6, 2016

பேச இயலாத – காது கேளாதோர் சமூக நல அறக்கட்டளைக்கு சிறந்த சேவை அமைப்பு விருது !

அதிராம்பட்டினம், ஜூன் 06
அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்கள் இனங்காணப்பட்டு அவர்களின் பணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக 'அதிரை நியூஸ் கல்வி - சாதனையாளர்கள் விருது 2016' வழங்கும் விழா நேற்று முன்தினம் அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

அதிராம்பட்டினம் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத – காது  கேளாதோர் சமூக நல அறக்கட்டளை அமைப்பிற்கு  சிறந்த சேவை அமைப்பு விருது வழங்கப்பட்டது. விருதினை விருதினை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் வழங்கி பாராட்டு தெரிவித்தார். விருதினை பேச இயலாத – காது கேளாதோர் சமூக நல அறக்கட்டளை பொறுப்பாளர்கள் சாகுல் ஹமீது, சிராஜுதீன், ஜெஹபர் சாதிக், ஹாஜா செரிப், உமர் தம்பி ஆகியோர் இணைந்து பெற்றனர்.

அதிராம்பட்டினத்தில் வாழும் பேச இயலாத – காது  கேளாதோர் இணைந்து சமூக நல அறக்கட்டளை துவக்கி கடந்த 6 ஆண்டுகளாக சிறப்பாக நடத்தி வருகின்றனர். இதில் மாதாந்தோறும் கூட்டங்கள் நடத்தி உறுப்பினர்களின் கோரிக்கைகள் கேட்டறிவது. அரசின் உதவிகளை பெற்றக்கொடுப்பது. ஏழை உறுப்பினர்களுக்கு கடனுதவி அளிப்பது. பண்டிகை காலங்களில் உறுப்பினர்களுக்கு வேஷ்டி, கைலிகள் வழங்குவது. ஆண்டுதோறும் ஆண்டு விழா கூட்டங்கள் நடத்தி உறுப்பினர்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்வது, ஆண்டு தோறும் மதநல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி நடத்துவது உள்ளிட்ட பணிகளை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.  

அதிரை பைத்துல்மால் – ரியாத் கிளைக்கு சிறந்த சமூக சேவை அமைப்புக்கான விருது !

அதிராம்பட்டினம், ஜூன் 06
அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்கள் இனங்காணப்பட்டு அவர்களின் பணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக 'அதிரை நியூஸ் கல்வி - சாதனையாளர்கள் விருது 2016' வழங்கும் விழா நேற்று முன்தினம் அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

விழாவில் சிறந்த சமூக சேவை அமைப்புக்கான விருது அதிரை பைத்துல்மால் – ரியாத் கிளைக்கு வழங்கப்பட்டது. விருதினை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் வழங்கி பாராட்டு தெரிவித்தார். விருதினை சவூதி ரியாத் கிளை சார்பில் நிஜாம் முஹம்மது பெற்றார்.

நமது பகுதியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகத்திற்கு உதவும் நோக்கில் கடந்த 20 ஆண்டுகளாக அதிரையில் செயல்பட்டு வரும் அதிரை பைத்துல்மால் நிறுவனம் வட்டியில்லா கடன்கள் – வாழ்வாதார உதவிகள் – மாதந்திர பென்ஷன் உதவித்திட்டம், கல்வி உதவிகள், நலத்திட்ட உதவிகள் - ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்டவற்றை தொய்வில்லாமல் வழங்கி வருகிறது. ரியாத் வாழ் அதிரையர்கள் அதிரை பைத்துல்மாலுடன் இணைந்து பொதுநல சேவையை சிறப்பாக செய்து வருகின்றனர். மாதந்தோறும் கூட்டங்கள் நடத்தி பொதுமக்கள் பயனுறும் வகையில் பல திட்டங்கள் தீட்டுவது. ஏழைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதில் கூடுதல் கவனம் செலுத்தி வருவது, நலிவடைந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக இந்த விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த 'இரத்த தான சேவை' விருது பெற்ற நிருபர் ஏ. சாகுல் ஹமீது

அதிராம்பட்டினம், ஜூன் 06
அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்கள் இனங்காணப்பட்டு அவர்களின் பணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக 'அதிரை நியூஸ் கல்வி - சாதனையாளர்கள் விருது 2016' வழங்கும் விழா நேற்று முன்தினம் அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

விழாவில் சிறந்த இரத்ததான சேவை  விருது நிருபர் A.சாகுல் ஹமீது அவர்களுக்கு வழங்கப்பட்டது. விருதினை அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. உதுமான் முகையதீன் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
  
ஏ. சாகுல் ஹமீது அவர்கள் 'மணிச்சுடர்' பத்திரிகையின் அதிராம்பட்டினம் பகுதி நிருபர்.  கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து இரத்த தானம் செய்து வருகிறார். இதுவரையில் 29 தடவை இரத்தம் வழங்கி மொத்தம் 10 லிட்டர் 150 மில்லி கிராம் இரத்தம் வழங்கி சாதனை புரிந்துள்ளார்.  இவருடைய குருதிக்கொடை சேவையை பாராட்டி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த திரு. பாஸ்கரன் அவர்கள், தஞ்சை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தேசிய தன்னார்வ இரத்ததான விழாவில் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் இ. அஹமது எம்பி, பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அப்துல் ரஹ்மான் எம்பி, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. என்.ஆர். ரெங்கராஜன் எம்எல்ஏ ஆகியோரிடம் பாராட்டுதலை பெற்றுள்ளார். மேலும் இவரது சேவையினை பாராட்டி பல்வேறு தொண்டு நிறுவனங்கள் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கெளரவித்துள்ளனர்.

'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' விருது பெற்ற A.J. அப்துல் லத்திப் !

அதிராம்பட்டினம், ஜூன் 06
அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்கள் இனங்காணப்பட்டு அவர்களின் பணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக 'அதிரை நியூஸ் கல்வி - சாதனையாளர்கள் விருது 2016' வழங்கும் விழா நேற்று முன்தினம் அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

விழாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது A.J. அப்துல் லத்திப் அவர்களுக்கு வழங்கப்பட்டது. விருதினை தஞ்சாவூர் தமிழ் பல்கலை கழக பதிவாளர் முனைவர் செ. சுப்பிரமணியன் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை உள்ளிட்டவற்றை வலியுறுத்தி மரக்கன்றுகள் நடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மேலும் மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளில்  பல நூறு மரக்கன்றுகளை நட்டுள்ளார். கருவேல மரங்கள் அழிப்பு, வடிகால் வாய்க்கால் சுத்தம் செய்தல், தூய்மை பணி உள்ளிற்றவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

சிறந்த 'இரத்ததான சேவை' விருது பெற்ற கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் ( CBD ) !

அதிராம்பட்டினம், ஜூன் 06
அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்கள் இனங்காணப்பட்டு அவர்களின் பணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக 'அதிரை நியூஸ் கல்வி - சாதனையாளர்கள் விருது 2016' வழங்கும் விழா நேற்று முன்தினம் அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

விழாவில் சிறந்த இரத்ததான சேவை விருது கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் ( CBD  ) அமைப்பிற்கு வழங்கப்பட்டது. விருதினை காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. உதுமான் முகையதீன் வழங்கி பாராட்டு தெரிவித்தார். கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் ( CBD ) அமைப்பின் தஞ்சை மாவட்ட செயலாளர் காலித் அஹமது, மாவட்ட நிர்வாகிகள் கலிபா, ராஜிக் அஹமது ஆகியோர் இணைந்து பெற்றனர்.

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ்' அமைப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகிறது. இதன் உறுப்பினர்களாக கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர் பலர் உள்ளனர். இந்த அமைப்பின் மூலம் இரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு சாதி மதம் இனம் பாகுபாடின்றி, நேரம் காலம் பார்க்காமல் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று வழங்கி வருகின்றனர். இந்த பணிக்காக எவ்வித கட்டணமும் நோயாளிகளிடமிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெறுவதில்லை. இந்த அமைப்பின் உறுப்பினர்கள் முகநூல், வாட்ஸ்அப் ஆகிய சமூக தளங்களில் தனிக்குழு அமைத்து இரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு உடனடியாக உதவி வருகின்றனர்.  அவசர சிகிச்சைக்காக இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு சென்று இரத்த தானம் செய்துள்ளனர். மேலும் மருத்துவமனையில் தங்கிருந்து சிகிச்சை பெரும் நீண்ட கால நோயாளிகளுக்கு நேரில் சென்று இரத்த தானம் வழங்கி வருகின்றனர். இதுவரையில் 600க்கும் மேற்பட்ட யூனிட் இரத்த தானம் செய்துள்ளனர். மேலும் இரத்தம் தானம் - மரம் வளர்ப்பு - கருவேல மரங்கள் அழிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி பேரணிகள், வெள்ளத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு உதவுதல், சாலை விபத்து முதலுதவி ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் எதிர்வரும் ஜூன் 18 ந்தேதி உத்திரபிரேதேசத்தில் இயங்கிவரும் ஹுயூமன் ஹெல்த் பவுண்டேஷன் மற்றும் பெடேரேஷன் இரத்த தான அமைப்பின் மூலம் சிறந்த சேவைக்கான விருதிணை பெற இருக்கிறது என்பதனை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.

சிறந்த 'தொழில் முனைவோர்' விருது பெற்ற M.S முஹம்மது அலி !

அதிராம்பட்டினம், ஜூன் 06
அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்கள் இனங்காணப்பட்டு அவர்களின் பணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக 'அதிரை நியூஸ் கல்வி - சாதனையாளர்கள் விருது 2016' வழங்கும் விழா 03-06-2016 வெள்ளிக்கிழமை மாலை அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

விழாவில் சிறந்த தொழில் முனைவோருக்கான விருது அல்-நூர் ஹஜ் சர்வீஸ் இந்தியா பி(லிட் ) மற்றும் ரிச்-வே கார்டன் ரெஸ்டாரண்ட் நிறுவனர் M.S முஹம்மது அலி அவர்களுக்கு வழங்கப்பட்டது. விருதினை தஞ்சாவூர் தமிழ் பல்கலை கழக பதிவாளர் முனைவர் செ. சுப்பிரமணியன் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

உழைப்பே உய்ர்வென்ற தாரக மந்திரத்தின் வாழும் உதாரணம், ஒற்றை நாணயத்தை மூலதனமாக்கி கோடீஸ்வரராகும் கதைகளப் போலல்லாமல் உழைப்பையும் உண்மையையும் இறை நம்பிக்கையையும் மட்டுமே மூலதனமாக்கி உயர்ந்தவர் நம்மூர் கடற்கரைத்தெருவைச் சேர்ந்த முஹமது சாலிஹ் அவர்களின் புதல்வர் முகமது அலி அவர்கள்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தில் பிறந்து சிறு வயதிலேயே ஊர் விட்டு ஊர் சென்று உழைக்கத் துவங்கியவர் ஓய்வென்ற சொல்லுக்கு அர்த்தம் அறியாதவர். அன்று துவங்கிய ஓட்டம் தொடர் ஓட்டமாகவே தொடர்கிறது.

அதிரையின் எழுதப்படாத விதியாகிய திரைகடலோடி திரவியம் தேடும் பாரம்பர்யம் இவரை நம் புனிதத் தளமாம் மக்கா நகரில் கொண்டு போய்ச்சேர்க்க அங்கு இவர் தமது கடும் வேலைகளுக்கு இடையே தன்னார்வத் தொண்டாகத் துவங்கியதுதான் ஹாஜிகளுக்கான சேவை.
அதுவே இவர் மனதில் ஆழமாகக் குடிகொண்டதால் ஊருக்கு வந்து அல்நூர் ஹஜ் சர்வீஸ் என்று ஹாஜிகளுக்கான ஹஜ் மற்றும் உம்ரா சேவையை அங்கீகாரத்தோடு செய்யத் துவங்கி இன்று தமிழ்நாட்டின் தலையாய ஹஜ் சேவை நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

நமதூருக்கு லேண்ட் மார்க்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற நோக்கத்திலும் தூய்மையான குடிநீர் கிடைக்க வேண்டும் என்ற ஆர்வத்திலும் ஒலிம்பிக் வாட்டர் கம்பெனியைத் துவங்கி நடத்தி வருகிறார்.

தொடர்ந்து நம் சுற்றுவட்டரத்தில் எங்குமே அமையப்பெறாத மிகப் பிரமாண்டமான ரிச்வே கார்டன் ரெஸ்டொரெண்டையும் கதிஜா மஹாலையும் துவங்கி நம்மூரை பிரபல்யப்படுத்திவரும் முஹமது அலி அவர்கள் தம் தொழிகளில் லாப நோக்கைவிட சேவை மனப்பாண்மையும் ஊருக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்கிற நன்நோக்கும் இருப்பதை இவரை அறிந்தவர்கள் நன்கு உணர்வர்.  மேலும் சமூகத்திற்கும் எளியோருக்கும் சேவை நிறுவனங்ககளுக்கும் சப்தமின்றி உதவி வரும் சகோதரர் முஹமது அலி அவர்களை இவ்வருடத்திற்கான தொழில் முனைவோரில் சிறந்தவராக அறிவிப்பதில் அதிரை நியூஸ் பெருமிதம் கொள்வதோடு முஹமது அலி அவர்களின் தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறது.

சிறந்த விளையாட்டு வீரர் விருது பெற்ற A. ஆஷிப் அஹமது !

அதிராம்பட்டினம், ஜூன் 06
அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்கள் இனங்காணப்பட்டு அவர்களின் பணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக 'அதிரை நியூஸ் கல்வி - சாதனையாளர்கள் விருது 2016' வழங்கும் விழா 03-06-2016 வெள்ளிக்கிழமை மாலை அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

விழாவில் சிறந்த விளையாட்டு வீரர் விருது காதிர் முகைதீன் கல்லூரி மாணவர் A. ஆஷிப் அஹமது அவர்களுக்கு வழங்கப்பட்டது. விருதினை
காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் அவர்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மாணவர். வாலிபால் போட்டியில் மாநிலம், மாவட்டம் மற்றும் வட்டார அளவில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு சாம்பியன் பட்டங்களை தொடர்ந்து பெற்று வருகிறார். குறிப்பாக ஆந்திர மாநிலம் திருப்பதி, விசாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் நடந்த போட்டிகளில் தனது அணிக்காக சிறப்பாக ஆடி சாம்பியன் பட்டங்களை பெற்றுக்கொடுத்தது. ஹைதராபாத்தில் நடந்த All India Invitation match மற்றும் beach volleyball போட்டிகளில் கலந்துகொண்டு தலா இரு முறை மாநில அளவில் சாம்பியன் பட்டங்களை பெற்றது. மாநில அளவில் நடந்த CM Trophy வாலிபால் போட்டிகளில் கலந்துகொண்டு இரு முறை சாம்பியன் பட்டங்களை பெற்றுள்ளார். 

சிறந்த பயிற்சியாளர் விருது பெற்ற M.R.N அன்வர் !

அதிராம்பட்டினம், ஜூன் 06
அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்கள் இனங்காணப்பட்டு அவர்களின் பணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக 'அதிரை நியூஸ் கல்வி - சாதனையாளர்கள் விருது 2016' வழங்கும் விழா 03-06-2016 வெள்ளிக்கிழமை மாலை அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

கால்பந்தாட்டம் மற்றும் பேட் மிட்டான் விளையாட்டு போட்டிகளின் பயிற்சியாளர் எம்.ஆர்.என் அன்வர் அவர்களுக்கு சிறந்த பயிற்சியாளர் விருது வழங்கப்பட்டது. விருதினை காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ உதுமான் முகையதீன் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

கால்பந்தாட்டம் மற்றும் பேட் மிட்டன் ஆகிய விளையாட்டுகளின் பயிற்சியாளராக உள்ளார். பேட் மிட்டன் விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து பல வீரர்கள் உருவாக காரணமாக இருந்து வருகிறார். அதிரையில் தினமும் காலை மணி முதல் மணி வரை கால்பந்தாட்ட வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கி வருகிறார். இவர் அளித்துள்ள சிறப்பான பயிற்சி மூலம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த பல்வேறு கால்பந்தாட்ட அணிகள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வெற்றி வாகை சூடி ஊருக்கு பெருமை தேடி வருகின்றனர். மேலும் மலேசியாவில் வாழ்ந்த போது சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் நடந்த பல்வேறு கால்பந்தாட்ட போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்கள்,.கேடயப்பரிசுகள் பெற்றுள்ளார். 

சிறந்த கவிஞர் விருது பெற்ற 'கவியன்பன்' கலாம் !

அதிராம்பட்டினம், ஜூன் 06
அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்கள் இனங்காணப்பட்டு அவர்களின் பணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக 'அதிரை நியூஸ் கல்வி - சாதனையாளர்கள் விருது 2016' வழங்கும் விழா 03-06-2016 வெள்ளிக்கிழமை மாலை அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

விழாவில் அதிராம்பட்டினம் கவிஞர் கவியன்பன் கலாம் அவர்களுக்கு சிறந்த கவிஞருக்கான விருது வழங்கப்பட்டது. சிறந்த கவிஞர் விருதினை திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி தாளாளர் முனைவர் எம்.எம் சாகுல் ஹமீது அவர்கள் கவியன்பன் கலாம் அவர்களின் புதல்வர் தாரிக் அவர்களிடம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

“கலாமின் கவிதைகள்” என்னும் பெயரில் இணையதளம் துவங்கி, அதில் பல்வேறு தலைப்புகளில் 200 க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார். இலங்கையில் இயங்கும் பன்னாட்டு இலக்கிய அமைப்பான “தடாகம் கலை , இலக்கிய அமைப்பு” நடத்திய உலகளாவியக் கவிதைப் போட்டியில் முதற்பரிசு மற்றும் “கவியருவி” என்னும் பட்டமும் பெற்றுள்ளார். அமீரகத்திலிருந்து வெளியாகும் “தினத்தந்தி “ நாளிதழில் வெள்ளி தோறும் என் கவிதைகள் வெளியாகின்றன.

துபையில் இயங்கும் வானலை வளர்தமிழ் மற்றும் இலக்கிய அமைப்புகள் நடத்தும் கவியரங்குகளில் கவியரங்கத் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார். மேலும் முகநூல் வழியாக , கவிதை கற்றுகொள்ள விரும்புவோர்க்கு: ஹைக்கூ (துளிப்பா), புதுக்கவிதை, மரபுப்பா இலக்கணம்/விதிகளைப் பயிற்று வருகிறார்.  இவரது கவிதைகள் அதிரை நியூஸ், அதிரை நிருபர், உள்ளிட்ட இணையதளங்களில் வெளியாகி இருக்கின்றன. இவர் எழுதிய கவிதைகள் அனைத்தையும் தொகுத்து கலாமின் பேசும் கவிதைகள்” என்று தலைப்பிட்டு வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். 

'சிறந்த எழுத்தாளர்' விருது பெற்ற கல்லூரி முதல்வர் இப்ராஹீம் அன்சாரி !

அதிராம்பட்டினம், ஜூன் 06
அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்கள் இனங்காணப்பட்டு அவர்களின் பணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக 'அதிரை நியூஸ் கல்வி - சாதனையாளர்கள் விருது 2016' வழங்கும் விழா 03-06-2016 வெள்ளிக்கிழமை மாலை அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

விழாவில் அல் மஹா அரபிக் கல்லூரி முதல்வர் இப்ராஹீம் அன்சாரி அவர்களுக்கு சிறந்த எழுத்தாளர் விருது வழங்கப்பட்டது. சிறந்த எழுத்தாளர் விருதினை திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி தாளாளர் முனைவர் எம்.எம் சாகுல் ஹமீது அவர்கள் பேராசிரியர் M.A முஹம்மது அப்துல் காதர் அவர்களிடம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

மாணவப்பருவத்திலேயே கட்டுரைப் போட்டிகளில் பரிசுகள் வாங்கியவர். கல்கத்தா தமிழ்ச் சங்கம் நடத்திய  பாரதி இதயம் என்ற தலைப்பிலான கட்டுரைப்போட்டியில் முதல் பரிசு பெற்றவர்.

மஸ்கட், குவைத், துபாய் போன்ற அரபு நாடுகளில் நிதித்துறையில் கணக்காளராகவும் ஆண்டுகள் மனித வள மேம்பாட்டுத்துறையிலும் பல ஆண்டுகள் நிர்வாகப் பொறுப்பு வகித்த அனுபவம் மிக்கவர். ஆப்ரிக்கா உட்பட்ட பல நாடுகளுக்கு நிறுவன வேலைகளாக சென்று வந்தவர். 
அதிரை நிருபர், அதிரை நியூஸ் போன்ற  அதிரையின் வலைதளங்களில் பல்வேறு தலைப்புகளில் அரசியல் , பொருளாதார, சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல கட்டுரைகளையும் தொடர்களையும் எழுதியவர். பேராசிரியர் அப்துல் காதர்  அவர்களுடன் இணைந்து மீத்தேன் வாயுத் திட்டம் பற்றிய ஆபத்துக்களை அதிரை நியூசில் ஐந்துவாரங்கள்  தொடராக எழுதியவர். இவரது கட்டுரைகளை நீடுர், கடைய நல்லூர், பரங்கிப் பேட்டை, திருப்பந்துருத்தி, இளையாங்குடி  ஆகிய  ஊர்களில் இயங்கும் வலைதளங்கள் வெளியிட்டு இருக்கின்றன. 

மனுநீதி மனித குலத்துக்கு நீதியா? மற்றும் மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு ஆகிய நூல்களை எழுதி இருக்கிறார். மேலும் இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் என்ற நூலை வெளியிட இருக்கிறார். பாலஸ்தீன வரலாறு, அழைப்புப்பணி, மதமாற்றமல்ல   போன்ற நூல்களையும்  தொடர்ந்து வெளியிட இருக்கிறார். 

Sunday, June 5, 2016

'சிறந்த பேச்சாளர்' விருது பெற்ற பேராசிரியர் M.A முஹம்மது அப்துல் காதர் !

அதிராம்பட்டினம், ஜூன் 05
அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்கள் இனங்காணப்பட்டு அவர்களின் பணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக 'அதிரை நியூஸ் கல்வி - சாதனையாளர்கள் விருது 2016' வழங்கும் விழா நேற்று முன்தினம் அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

விழாவில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் M.A முஹம்மது அப்துல் காதர், MA., M.Phil, CJMC., அவர்களுக்கு சிறந்த பேச்சாளர் விருது வழங்கப்பட்டது. சிறந்த பேச்சாளர் விருதினை திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி தாளாளர் முனைவர் எம்.எம் சாகுல் ஹமீது அவர்கள் பேராசிரியர் M.A முஹம்மது அப்துல் காதர் அவர்களிடம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் முதல்வர். பள்ளி மாணவப் பருவத்தில் இருந்து முதுகலை பயிலும் கல்லூரி வாழ்க்கையில் 100 க்கும் அதிகமான பேச்சுப்போட்டிகளில் பங்கேற்றுப் பரிசு பெற்றுள்ளார்.

காதிர் முகைதீன் கல்லூரியில் பயின்ற காலத்தில் அனைத்துக்கல்லூரி பேச்சுப்போட்டிகளில் பங்கேற்று பல முதல்ப்பரிசுக் கோப்பைகளைப் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்தது.

படிப்பை முடித்து காதிர் முகைதீன் கல்லூரியில் தமிழ்த்துறையில் பணியாற்ற தொடங்கிய காலம் முதற்கொண்டு ஓய்வு பெரும் காலம் வரை 36 ஆண்டுகள் பல நூறு மான்வகளைப் பேச்சாளர்களாகவும், கவிஞர்களாகவும், எழுத்தாளர்களாகவும் உருவாக்கி உள்ளார். இதே காலகட்டத்தில் பல வானொலி நிகழ்ச்சிகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று உள்ளார். இதில் விசுவின் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று உலக அளவில் தொலைக்காட்சி நண்பர்களின் கவனத்தை ஈர்த்து உள்ளார்.

மாணவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றிய காலம் முதல் இப்பொழுது வரை சென்ற 50 ஆண்டுகளில் 4000 க்கும் அதிகமான இலக்கியம், ஆன்மிகம் மற்றும் சமுதாயம் சார்ந்த பல்வேறு மேடைகளில் பேசி இருக்கிறார்.

சொற்பொழிவுகாக இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா, குவைத், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு பல முறை சென்று வந்துள்ளார்.

'தமிழ் இலக்கியம்' விருது பெற்ற கவிஞர் மு. முஹம்மது தாஹா !

அதிராம்பட்டினம், ஜூன் 05
அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்கள் இனங்காணப்பட்டு அவர்களின் பணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக 'அதிரை நியூஸ் கல்வி - சாதனையாளர்கள் விருது 2016' வழங்கும் விழா நேற்று முன்தினம் அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

விழாவில் கவிஞர் மு. முஹம்மது தாஹா அவர்களுக்கு தமிழ் இலக்கியம் விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

உயர்நிலைப்பள்ளியின் ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை ஆசிரியர். தமிழ் மொழி மீது அதிக ஆர்வம் கொண்டவர். இலக்கண, இலக்கியங்களை முறையாக கற்றுக்கொண்டவர். கல்லூரியில் படிக்கும் காலத்தில் கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, கவிதை போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளை பெற்று உள்ளார். இலக்கியம், ஆன்மிகம் மற்றும் சமுதாயம் சார்ந்த பல்வேறு தலைப்புகளில் 100 புத்தகங்கள் எழுதியுள்ளார்.  சமய நல்லிணக்க அடிப்படையில் பல்வேறு ஊர்களில் பல கவியரங்க நிகழ்ச்சிகளில் கவிதை வாசித்துள்ளார். பள்ளிகளில் பல இலக்கிய சொற்பொழிவு ஆற்றியுள்ளார். மேலும் திருச்சி வானொலியில் பலமுறை சொற்பொழிவு ஆற்றியுள்ளார். இவர் எழுதிய பல்வேறு நூல்களை பல்கலைகழக மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளனர். இவர் எழுதிய அறிவுத்திரட்டு என்ற நூல் தமிழ் பல்கலைக் கழக நீதி நூல் பிரிவில் இடம்பெற்றுள்ளது. இவர் எழுதிய பல கட்டுரைகள், கவிதைகள் பல்வேறு வார இதழ், மாத இதழ்களில் பிரசுரமாகியுள்ளது. கவிதை செம்மல், சவ்வாது புலவர், தமிழ் இலக்கிய மாமணி, தமிழ் மாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

தமிழ் இலக்கியம் விருதினை திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி தாளாளர் முனைவர் எம்.எம் சாகுல் ஹமீது அவர்கள் கவிஞர் மு. முஹம்மது தாஹா அவர்களிடம் வழங்கி பாராட்டு தெரிவித்தார். 

காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களுக்கு சிறந்த கல்வி நிறுவன விருது !

அதிராம்பட்டினம், ஜூன் 05
அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்கள் இனங்காணப்பட்டு அவர்களின் பணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக 'அதிரை நியூஸ் கல்வி - சாதனையாளர்கள் விருது 2016' வழங்கும் விழா நேற்று முன்தினம் அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

விழாவில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்கள் சிறந்த கல்வி நிறுவனம் விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கபபட்டது.

தஞ்சவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் புகழ்பெற்ற வணிகரும், நிலக்கிழாரும், அறிவுள்ளம் படைத்த பெருந்தகையுமான, மறைந்த ஹாஜி ஜனாப் எம்.கே.என்.காதிர் முகைதீன் மரைக்காயர் அவர்கள் 1900 ஆம் ஆண்டு தனது நன்செய், புன்செய் நிலங்களை அறத்திற்காக வழங்கி எம்.கே.என்.மதரஸா என்ற அறநிலையத்தை தோற்றுவித்தார்கள். அன்னாரைப் பின்பற்றி அன்னாரின் உடன்பிறப்புகளான சகோதரர்கள்,

1) நெய்னா முகம்மது லெப்பை மரைக்காயர், 2)  எம்.கே.என்.அகமது தம்பி மரைக்காயர், 3) ஹாஜி எம்.கே.என்.சேக் சலாத் லெப்பை மரைக்காயர் ஆகியோரும் தங்கள் நன்செய்,புன்செய் நிலங்களை நன்கொடையாக வழங்கி உதவினார்கள்.

இந்த அறநிலைய நிர்வாகத்தின் கீழ் காலஞ்சென்ற தாளாளர் அதிரை கல்வித்தந்தை ஹாஜி  எஸ்.எம்.எஸ். சேக் ஜலாலுதீன் அவர்கள் தன்னுடைய சீரிய முயற்சியால் காதிர் முகைதீன் பள்ளி துவங்கப்பட்டது.

1) முதலில் 25.06.1949 இல் நடுநிலைப்பள்ளியாக (6 முதல் 8 ஆம் வகுப்பு வரை) இருபாலர்களுக்கும் மறைந்தமர்ஹூம் காயிதே மில்லத் ஜனாப். முகம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது.

2) பிறகு 1950 ஜூன் மாதம் முதல் உயர் நிலைப்பள்ளியாக (6 முதல் 11 ஆம் வகுப்பு வரை) முன்னேறியது.

3) பின்பு 01.07.1978 முதல் இன்று வரை அரசு உதவிப்பெறும் மேல் நிலைப்பள்ளியாக (12 ஆம் வகுப்பு வரை) வளர்ந்ததுள்ளது.  

கல்வியில் பின்தங்கிய அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம மக்களுக்கு சாதி மத வேறுபாடு இன்றி கல்வி அளித்து இப்பள்ளி வைர விழாக் கண்டுள்ளது. தற்போது காலச்சூழ்நிலையை கருத்தில் கொண்டு இருபாலர் பள்ளியாக இருந்த இப்பள்ளியிலிருந்து பெண்களை பிரித்து பெண்களுக்கென்று தனியொரு மேல்நிலைப் பள்ளியை துவக்கி, இப்பள்ளி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக மாற்றம் செய்யப்பட்டு கல்விப்பணி செய்து வருகிறது.

இத்துடன் இவ்வறநிலையத்தின் ஆதரவில் செயல்பட்டு வரும் இப்பள்ளியின் உடன்பிறந்த கல்வி நிறுவனங்கள்,

சலாஹிய்யா அரபிக் கல்லூரி, காதிர் முகைதீன் கல்லூரி, காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி என தனது கல்விச்சேவையை அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது.

விருதினை திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி தாளாளர் முனைவர் எம்.எம் சாகுல் ஹமீது அவர்கள் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏ. மஹ்பூப் அலி அவர்களிடம் வழங்கி பாராட்டு தெரிவித்தார். 

இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி முதல்வருக்கு 'கல்விச்சேவை' விருது !

அதிராம்பட்டினம், ஜூன் 05
அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்கள் இனங்காணப்பட்டு அவர்களின் பணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக 'அதிரை நியூஸ் கல்வி - சாதனையாளர்கள் விருது 2016' வழங்கும் விழா நேற்று முன்தினம் அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

விழாவில் அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி முதல்வர் S. ஆப்தாப் பேகம் MA., B.Ed., M.Phil., அவர்களுக்கு 'கல்விச்சேவை' விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் 36 ஆண்டுகளாக ஆசிரியப் பணி. பள்ளியின் தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு. ஆங்கிலப் பாடபிரிவில் தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி. மாணவிகளை அதிக மதிப்பெண்கள் பெற கூடுதல் கவனம் செலுத்தி வருவது. பெற்றோர் – ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடத்தி நிறை – குறைகளை கேட்டறிதல். மாணவ, மாணவிகளின் ஒழுக்கங்களில் கூடுதல் கவனம் செலுத்துதல். பள்ளி வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டி வருவது உள்ளிட்ட பணிகளுக்காக இந்த விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விருதினை தஞ்சாவூர் தமிழ் பல்கலை கழக பதிவாளர் முனைவர் செ. சுப்பிரமணியன் வழங்கி பாராட்டு தெரிவித்தார். அருகில் காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் முனைவர் உதுமான் முகையதீன் உள்ளார்.

கல்வி சேவை விருது பெற்ற S. ஆப்தாப் பேகம் அவர்களை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

திருமதி ஆஷா அவர்களுக்கு 'நல்லாசிரியர்' விருது !

அதிராம்பட்டினம், ஜூன் 05
அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்கள் இனங்காணப்பட்டு அவர்களின் பணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக 'அதிரை நியூஸ் கல்வி - சாதனையாளர்கள் விருது 2016' வழங்கும் விழா நேற்று முன்தினம் அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

இதில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் இடை நிலை ஆசிரியர் திருமதி K. ஆஷா அவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 29 ஆண்டுகளாக ஆசிரியப்பணி. மாணவர்களின் ஒழுக்கம், நேரந்தவறாமை, சீருடை அணிந்துவருதல், சுத்தம் ஆகியவற்றில் தனிக்கவனம் செலுத்தி வருவது. குறிப்பாக மாற்றுத்திறனாளி மாணவர்களின் படிப்பில் தனிக்கவனம் செலுத்துதல். இவர்களுக்கு கல்வி உதவித்தொகை, அடையாள அட்டை பெற ஏற்பாடு செய்து கொடுத்தல். மாணவர்களுக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டால் உடனடி முதலுதவி செய்தல். பெற்றோர்களை வரவழைத்து மாணவர்களின் நிறை – குறைகளை எடுத்துச்சொல்தல் உள்ளிட்ட பணிகளுக்காக இந்த விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விருதினை தஞ்சாவூர் தமிழ் பல்கலை கழக பதிவாளர் முனைவர் செ. சுப்பிரமணியன் வழங்கி பாராட்டு தெரிவித்தார். அருகில் காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் முனைவர் உதுமான் முகையதீன் உள்ளார்.

நல்லாசிரியர் விருது பெற்ற திருமதி K. ஆஷா அவர்களை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.