.

Pages

Showing posts with label ADT. Show all posts
Showing posts with label ADT. Show all posts

Thursday, April 23, 2020

அதிராம்பட்டினம் அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை!

அதிராம்பட்டினம், ஏப்.23
அதிராம்பட்டினம் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில், மக்களின் அவசிய தேவைக்காக அனுமதித்த சிறப்பு கடை திறப்பு நேரத்தை நோன்புக் காலத்தில் மட்டும் அதிரை மக்கள் பயன்படுத்தக்கூடிய நேரமான பகல் 12 மணியிலிருந்து மாலை 6 மணிக்கு மாற்றி அறிவிக்கவும், அதிராம்பட்டினம் பகுதிக்கு பால் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்கள் தடையின்றி முழுமையாக கிடைக்கவும் கோரி மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பி வைத்தனர்.

மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி இருக்கும் கோரிக்கை மனுவில் கூறியிருப்பது;
அதிராம்பட்டினத்தைச் சுற்றியுள்ள கிராம மக்களிடம் ‘கொரோனா நோய் முஸ்லிம்களால் மட்டுமே பரவுகிறது’ என்ற தவறான எண்ணம் பரப்பப்பட்டதன் விளைவாக அதிராம்பட்டினத்திற்கு வரவேண்டிய பால், காய்கறி போன்ற அத்தியவாசிய பொருட்களை எடுத்துவர கிராமத்தினர் அனுமதிக்காததாலும் மததுவேஷத்துடன் கூடிய வெறுப்பு நடவடிக்கையில் சிலர் ஈடுபடுவதால் மதக்கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதாலும்,

அதிராம்பட்டினத்திற்குள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் வீட்டைச் சுற்றி 50  மீட்டர் அளவிற்குத் தடை செய்யப்படுவதால் அப்பாவி மக்கள் பலருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்பதாலும்,

எதிர் வரும் நோண்பு நாட்களில், அத்தியாவாசியப் பொருட்கள் வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட காலை 8 மணியிலிருந்து பகல் 2மணிவரை (6 மணி நேரம்) என்பதைப் பயன்படுத்த முடியாது என்பதாலும்,

அதிராம்பட்டினம் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஒன்றிணைந்து 20-04-2020 அன்று ஆலோசித்து எடுக்கப்பட்ட தீர்மானங்களைக் கோரிக்கைகளாக வைக்கிறோம்:

ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டப்பின், 06/04/2020 தேதியிட்ட ந.க.எண்-920/2020/அ2 வட்டார வளர்ச்சி அலுவலரின் உத்தரவிற்கு இணங்க, அதிராம்பட்டினம் பேரூராட்சியைத் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரும், ‘அதிராம்பட்டினத்தைச் சுற்றியுள்ள 10 கிராமங்களையும் தனிமைப்படுத்துதல் வேண்டும்’ என்ற தகவலுக்குப் பிறகு அதிராம்பட்டினம் முழுமையாகத் தனிமைப் படுத்தப்பட்டது. குழந்தைகளுக்கு தேவையான பசும்பால் உட்பட அத்தியவாசிய பொருட்களை அதிராம்பட்டினத்திற்கு அளித்துவந்த கிராம வியாபாரிகள் நிறுத்தப்பட்டனர்.

எனவே, அவசிய தேவை கருதி வட்டாட்சியரின் முறையான அனுமதியுடன் பழஞ்சூர், மன்னங்காடு, துவரங்குறிச்சி ஆகிய கிராமங்களிலிருந்து அதிரையைச் சார்ந்த தன்னார்வலர்கள் மூலம் தினசரி 600 லிட்டர் பால் எடுத்துவரப்பட்டு தேவைப்படுவோர்க்குப் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு எடுத்துவரும்போது அவ்வப்போது மழவேனிற்காடு என்ற கிராமத்தில் அமைக்கப்பட்ட செக் போஸ்டில் கிராம மக்கள்கூடி அதிராம்பட்டினத்திற்கு எடுத்துவரும் பாலைத் தடுக்கின்றனர். காவல்துறை தலையிட்டப்பின் அனுமதிப்பதும், பிறகு மீண்டும் தடுப்பதும் வழக்கமாகி வருகிறது. நேற்றும் இதுபோல் தடுக்கப்பட்டபோது, கலவரம் ஏற்படும் சூழல் உருவாகியது. எனவே அரசு இதைக் கவனத்தில் கொண்டு சுமூக சூழ்நிலையை உருவாக்கவேண்டும். தினமும் பசும்பால் அதிரைக்குக் கிடைத்திட அரசு ஆவன செய்தல் வேண்டும். வட்டாட்சியர் அனுமதித்த, அதிரையைச் சார்ந்த தன்னார்வலர்கள் மூலம் பசும்பாலை அதிரைக்குக் கொண்டுவந்துவிடவோ அரசே முன்னின்று பாலை எடுத்துவந்து அதிரைக்குத் தந்திடவோ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மழவேனிற்காடு செக் போஸ்டில் பக்குவமற்ற ஊர்க்காவல் படையைச் சார்ந்தவர்களைப் பணியமர்த்தாமல் காவல்துறையைச் சார்ந்தவர்களைப் பணியில் அமர்த்தவேண்டும்.

மேலும், மாளியக்காடு செக் போஸ்டில் பணியில் உள்ள பெண் காவலர் ஒருவர், அதிரைக்கு வரும் அத்தியவாசியப் பொருட்களை மத துவேஷத்துடன் தடுத்து வருகிறார். வட்டாட்சியர் அனுமதியோடு அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தபோதிலும், “முஸ்லிம்களை அனுமதிக்க முடியாது” என மத துவேஷத்துடன் பேசுகிறார். இவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுத்து தகுந்த அதிகாரியை அந்த செக் போஸ்டில் பணியமர்த்த வேண்டும்.

கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட இருவேறு எல்லைகளில் உள்ள இரு வீட்டாரை இணைந்தவாறு பாதையை அடைக்கும்போது நடுவில் மாட்டிக்கொள்ளும் சில அப்பாவிகளும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் அடைக்கப்படும் வேலியானது மிகவும் உறுதியானதாக இருப்பதால் மருத்துவ அவசத்திற்குக்கூட அப்பாதையைப் பயன்படுத்த முடியாதவாறு போடப்பட்டுள்ளது. மேலும் சிறப்புச் சலுகையாக அரசால் அனுமதிக்கப்பட்ட கடைகளும் இவர்களுக்கு மறுக்கப்படுகிறது. இதில் சலுகை காட்டப்பட வேண்டும் என கோரிக்கை வைகின்றோம்.

தொடர் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டபோதும் மக்களின் அவசியத் தேவையைக் கருத்தில் கொண்டு காலை 8 மணி முதல் 12 வரை மட்டும் சில நிபந்தைகளோடு சில கடைகள் இயங்க அரசு அனுமதித்துள்ளது. இது அவசிய விதிவிலக்கே. மக்களின் இயல்பான வாழ்க்கை சூழலை கருத்தில் கொண்டு இந்நேரம் அமைக்கப்பட்டுள்ளது. அதிரைக்கும் இந்த நேரம் பொருத்தமாகவே உள்ளது. ஆனால் எதிர்வரும் 25ஆம் தேதிக்குப் பிறகு நோன்பு ஆரம்பிக்க இருப்பதால், இயல்பான சூழ்நிலைக்கு மாற்றமாக அதிரை மக்களின் நிலை மாறிடும். பகல் பொழுதின் முக்கிய உணவுகளான காலை மற்றும் மதியம் உணவு தவிர்க்கப்பட்டு இரவு மற்றும் அதிகாலை 4 மணிக்கே உணவு தேவைப்படும். Peak Time எனச் சொல்லப்படக்கூடிய காலை பொழுதில் மக்கள் வெளியே வருவதும் நோன்புக் காலத்தில் இயல்பாகவே குறைந்திடும். எனவே மக்களின் அவசிய தேவைக்காக அனுமதித்த சிறப்பு கடை திறப்பு நேரத்தை நோன்புக் காலத்தில் மட்டும் அதிரை மக்கள் பயன்படுத்தக்கூடிய நேரமான பகல் 12 மணியிலிருந்து மாலை 6 மணிக்கு மாற்றித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Thursday, March 26, 2020

ஐவேளை ஜமாஅத் மற்றும் ஜுமுஆ தொழுகை குறித்து ADT அறிவிப்பு!

அதிராம்பட்டினம், மார்ச் 26
அதிரை தாரூத் தவ்ஹீத் அமைப்பின் சார்பில், கொரோனா வைரஸ் விழிப்புணர்வு மற்றும் இஹ்ஸான் பள்ளி (ஏ.எல் ஸ்கூல் பள்ளி, சிஎம்பி லேன்), ஃபாத்திமா பள்ளி (மேலத்தெரு சானவயல்) ஆகிய பள்ளிகளின் ஐவேளை ஜமாஅத் மற்றும் ஜுமுஆ தொழுகை குறித்து அறிக்கை இன்று (26-03-2020) வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது;

கொரோனா – அரசின் நடவடிக்கையும் நமது நிலையும்:
கூட்டம் கூட்டமாக கொல்லும் உயிர்கொல்லி நோயான கொரொனாவை தடுக்கும் முயற்சியில் இரண்டு மனி நேரத்திற்கு ஒருமுறை கையை கழுவுங்கள், மாஸ்க் அணியுங்கள் என்று பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. வரவேற்போம். செயல்படுவோம்.

முஸ்லிம்களான நமக்கு புதிதோ சிரமமானதோ அல்ல; நமக்கு வழமையானதே. சாப்பிடும்போது முன்னும் பின்னும் இரு முறை கையை கழுவுவதாகட்டும், மலம், சிறுநீர் கழித்தப்பின் இரண்டையும் சுத்தம் செய்வதோடு கையையும் சுத்தம் செய்வதாகட்டும், குளிப்பு கடமையான நிலையில் தேவையான ஒவ்வொரு செயலுக்கும் முன்பும் ஒழு செய்வதாகட்டும், ஐவேளை தொழுகைக்கான ஒழு செய்வதாக இருக்கட்டும்., இப்படி பல்வேறு தேவைக்காக நாம் கைகளை குறைந்தது இருபதுமுறை கழுவி வருகிறோம். நம்மிடம் கையை கழுவிக்கொள்ளுங்கள் என கூறினால் நமக்கு சிரமம் அல்லவே. ஆண்களைவிட பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவே. பெண்கள் முகத்தை மூடிக்கொள்ளுங்கள் என 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் சொல்லியதை இன்று அரசு சொல்கிறது.

கொரோனாவை தடுக்கும் அடுத்த முயற்சியாக இன்று லாக்டவுன் அறிவித்துள்ளது. ஒரு மாவட்டம் விட்டு அடுத்த மாவட்டம் போகக்கூடாது என அரசு கட்டளையிட்டுள்ளது. கொள்ளை நோய் ஒரு பகுதியில் இருந்தால் யாரும் அங்கு செல்லவேண்டாம். நீங்கள் இருக்கும் பகுதியில் அது பரவிவிட்டால் அதிலிருந்து தப்பியோடு முனைந்தவர்களாக வெளியேறாதீர்கள் என நபி ஸல் அவர்கள் கட்டளையிட்டார்கள்.(புகாரி 5728). ஆக, இஸ்லாம் சொன்னதைத்தான் இன்று அரசு செய்து வருகிறது.  நல்லவர்களுக்கு கொள்ளை நோய் அல்லாஹ்வின் ரஹ்மத். யார் அல்லாஹ்வின் விதியை ஏற்று அவனின் வெகுமதியை எதிர்பார்த்து உயிரை விட்டவர் ஷஹீத் உயிர்தியாகி ஆவார் என நபி ஸல் அவர்கள் கூறியுள்ளதால் (புகாரி 5734),  உயிருக்கு பயந்து ஊரைவிட்டு ஓடக்கூடாது. நமது ஊரில் பாதிப்பே இல்லை என்றாலும் அடுத்த ஊரில் இருக்கக்கூடும் என்பதால் நபியின் கட்டளைபடி பயனம் செல்லக்கூடாது. சுருக்கமாக சொன்னால் இந்தியர்களே முஸ்லிம்களின் வாழ்வியல் நெறியை போல் வாழுங்கள் என அரசு சொல்லுகிறது. எனவே முஸ்லிம்களே நாம் முஸிம்களாக வாழ்வோம்.

அரசு சொல்லுவதை ஏற்று நடக்கும் அதே நேரத்தில் இது நபியின் சுன்னா – வழிமுறை என்ற எண்ணமும் மனதில் கொண்டால், ஒவ்வொரு செயலுக்கும் நமக்கு நண்மையும் கூடிக்கொண்டு இருக்கும். வெளியூர் பயணம் செல்லாமல் காத்து இருக்கும் ஒவ்வொரு விநாடிக்கும் நண்மைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். இன்ஷா அல்லாஹ்.

இஸ்லாம், கொள்ளை நோயை கட்டுப்படுத்த உயிரையும் தியாகம் செய்திடும் அளவிற்கு பக்குவப்படுத்தியுள்ளது. எனவே அரசின் இச்செயலை அல்லது சிரமங்களை  வரவேற்போம், கட்டுப்படுவோம், செயல்படுத்துவோம்.

தொழுகை மற்றும் ஜுமுஆ பற்றிய நிலைபாடு:
கொரோனாவில் பாதித்த அனைவரும் உயிர் இழப்பர் என்பது கிடையாது. சிலருக்கோ தனக்கு கொரோனா வந்ததே தெரியாமல் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டும் இருப்பர். அவருக்கு எந்த அறிகுறியும் தெரிந்திருக்காது அவ்வளவு ஆரோக்கியம் அவருக்கு இருந்திருக்கும். ஆனால் அந்த இடைப்பட்ட காலத்தில் அவர் மூலமும் கொரோனோ மற்றவருக்கு பரவிடும்.
கொரோனா பரவுவதற்கு ஒரு வாய்ப்பாக தொழுகை இருந்திடக்கூடாது. மழைக்கே தொழுகையை வீட்டில் தொழுது கொள்ளுங்கள் (புகாரி 616) என்ற சலுகை இருக்கும்போது அந்த சலுகையை இந்த நேரத்தில் பயன்படுத்திடலாம். மட்டும் அல்லாமல் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை சப்பிட்டால் அதன் வாடை மற்றவருக்கு தொல்லை தரும் என்பதால் தொழுகைக்கு பள்ளிக்கு வராதீர்கள் என நபி தடுத்திருப்பதால் (முஸ்லிம் 976), கொரோனாவின் அறிகுறிகளான சாதாரன இருமல், காய்ச்சலாக இருந்தாலும் இச்சூழ்நிலையில் அது மற்றவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதால் இவர்கள் பள்ளிக்கு வருவதை அறவே தவிர்ந்திடுங்கள். உடல் ஆரோக்கியம் இருந்தாலும் அரசால் அடையாளப்படுத்தப்பட்ட வீட்டை சார்ந்தோரும் பள்ளிக்கு வருவதை தவிர்ந்திடுங்கள்.

மழையின் காரணமாக வீட்டில் தொழுங்கள் என்பது சலுகைதானே! அந்த சலுகையை நிராகரித்து பள்ளிக்கு வருவதே சிறப்பு என எண்ணாதீர்கள். பயணத் தொழுகையில் நான்கு ரக்காத்துகள் தொழ முடியும் என்றிருக்க இரண்டு இரக்காத்தான சலுகையையே செயல்படுத்துங்கள் இது அல்லாஹ்வின் கொடை என நபி ஸல் அவர்கள் சொல்லியுள்ளார்கள் (முஸ்லிம் 1222). மேலும் பயணத்தில் நோன்பு வைக்க முடியும் என்றாலும் நோன்பை விட்டுவிடுதல் என்ற சலுகையே அல்லாஹ்விடமிருந்து வந்தது அந்த சலுகையை பயன்படுத்துவதே நல்லது என நபி ஸல் அவர்கள் சொல்லியுள்ளார்கள் (முஸ்லிம் 2026). ஆக, சலுகைக்கே முன்னுரிமை கொடுக்கப்படல் வேண்டும் அதுவே சிறப்பு.

எனவே வீட்டில் தொழுவதற்கு முன்னுரிமை கொடுங்கள். ஊரடங்கு உத்தரவு இருப்பதால் கூட்டம் கூடி பள்ளி நிர்வாகத்திற்கு சங்கடம் தந்திடாமல் வீட்டிலேயே தொழுதிடுமாறு நிர்வாகத்தின் சார்பில் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

* பள்ளியில் வழக்கம்போல் பாங்கு சொல்லப்பட்டாலும் மக்கள் வீட்டிலேயே தொழுது கொள்ளுங்கள்.

* பள்ளியின் அருகில் இருப்பவர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். அரசால் அடையாளப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் அவரைச்சார்ந்தவர்கள் கூடாது.

* தொழுகை மிக விரைவாக முடிக்கப்பட்டு விடும்.

இஸ்லாத்தில் தொற்று நோய் உண்டா?
தொற்றுநோய் என்பது கிடையாது. பறவைகளைக்கொண்டு சகுனம் பார்ப்பதும் கிடையாது ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது. ஸஃபர் மாதம் பீடை என்பதும் கிடையாது. சிங்கத்திடமிருந்து நீ எப்படி வெருண்டோடுவாயோ அப்படி தொழுநோயாளியிடமிருந்து வெருண்டோடு. என நபி ஸல் அவர்கள் சொல்லியுள்ளார்கள். (புஹாரி 5707)

எனவே, இஸ்லாத்தில் தொற்றுநோய் கிடையாது. நோய் பரவுமா என்றால் அல்லாஹ்வின் நாட்டப்படி பரவும். கொள்ளை நோய் பரவி மக்கள் கூட்டம் கூட்டமாக இறந்ததை ஹதீஸ்களில் நாம் பார்க்க முடிகிறது. கொரோனா இருக்கும் நபரிடமிருந்து மற்றவருக்கு தொட்டாலோ பார்த்தாலோ சுவாசத்தாலோ அல்லது இவரின் இரத்தமே மற்றவருக்கு ஏற்றப்பட்டாலும் அல்லாஹ்வின் அருளால் இவரின் எதிர்ப்பு சக்தியைக்கொண்டு கொரோனா எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் போய்விடவும் அதேபோல் பாதிக்கப்பட்டவரை தொடாமல் இருந்தாலும் மற்றவருக்கும் அது பரவி உயிரையும் பரித்துவிடவும் வாய்ப்புள்ளது. எனவே கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டவர் இன்னொரு நபரால்தான் என முஸ்லிம் நினைக்கக்கூடாது மாறாக அல்லாஹ்வின் விதியின்படியே என நம்பவேண்டும் அதை ஏற்கவேண்டும் உயிர் பிரியும் என்றாலும்கூட உயிருக்கு பயந்து ஓடக்கூடாது என்பதே இஸ்லாம்.

தொற்று இல்லை என கூறிய  அதே நபி ஸல் அவர்கள் அதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் காட்டி தந்துள்ளார்கள். சிங்கத்திடமிருந்து நீ எப்படி வெருண்டோடுவாயோ அப்படி தொழுநோயாளியிடமிருந்து வெருண்டோடு என்றதன் மூலம் அவர்களிடமிருந்து நாம் கூடுமானவரை ஒதுங்கி இருக்கவேண்டும் என்றும், (வெருண்டோடுதல் என்ற உவமை சொல்லுக்கு துண்டை காணோம் துணியைக் காணோம் என ஓடுவது அல்ல தூரமாகுதல் என்பதை சுலபமாய் விளங்கிட முடியும்) கொள்ளை நோய் பாதிக்கப்பட்ட பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் அங்கிருந்து யாரும் வெளியேற வேண்டாம் என சொன்னதன் மூலம் தனிமை படுத்திடல் வேண்டும் என்பதையும், இஸ்லாத்தை ஏற்று பைஅத் செய்பவர்களிடம் கையை பிடித்து சத்தியப்பிரமானம் செய்யும் நபி ஸல் அவர்கள் தொழுநோயாளியிடம் கையை பிடித்து பைஅத் செய்யாததே அவர்களிடமிருந்து தனித்து இருக்க வேண்டும் என்பதும் நோய் பிடித்த ஒட்டகத்தை மற்ற ஒட்டகத்துடன் சேர்க்காதே என்பதிலிருந்தும் தனிமை படுத்துதல் வேண்டும் என்பதும் தெளிவாகிறது. மனிதரும் ஒட்டகமும் ஒன்றா என சிலர் சொல்லக்கூடும், நோயாளியை நேரில் நலம் விசாரிக்க சொன்ன அதே நபி ஸல் அவர்கள்தான் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு இடத்தில் இருக்கும்போது அவர்களை சந்திக்க வேண்டாம் என்றும் சொல்லியுள்ளார்கள்.

ஆக தொற்று நோய் உண்டா இல்லையா என விவாதித்துக்கொண்டும், கொரோனா பரவியதா பரப்பியதா என ஆய்வு செய்து கொண்டும் நேரத்தை வீணடிப்பதை விடவும் இது போன்ற சூழ்நிலையில் இஸ்லாம் எவ்வாறு எதிர் கொள்ள சொன்னது என்பதை அறிந்து அதுபோல் செயல்படுவோம்.

அதிரை தாருத் தவ்ஹீத்

Wednesday, November 27, 2019

அதிரையில் இஸ்லாமிய மார்க்க விளக்க சிறப்பு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம், நவ.27
அதிராம்பட்டினத்தில் எதிர்வரும் 29.11.2019 வெள்ளிக்கிழமை அன்று
கடையநல்லூர் தாருல் உலூம் அல் அதரி மதரஸாவின் பேராசிரியர்
மவ்லவி. S. யூசுப் ஃபைஜி அவர்கள், சி.எம்.பி லேன் A.L.மெட்ரிக் ஸ்கூல் பள்ளியில் பகல் 12.30 மணியளவில் ஜும்ஆ குத்பா மற்றும் அன்று மாலை மஃரிப் தொழுகைக்குப் பின் சரியாக 6.30 மணியளவில் பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மைய அரங்கில் 'குர்ஆன் யாருக்காக....?' என்ற தலைப்பிலும் சிறப்பு மார்க்க விளக்க சொற்பொழிவுகளை நிகழ்த்தவுள்ளார்.

குறிப்பு:
1. ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி இடவசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
2. நிகழ்ச்சிகள் அனைத்தும் குறிப்பிட்ட நேரத்தில் தாமதமின்றி துவங்கும் இன்ஷா அல்லாஹ்.
3. பிலால் நகரில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி இருப்பதாலும் சாலைகள் சேதமடைந்திருப்பதாலும் ECR சாலை வழியாக வருகை தருவதே சிறந்தது.


அனைவரையும் அன்போடு அழைக்கின்றது
அதிரை தாருத் தவ்ஹீத் - ADT

Saturday, November 2, 2019

அதிரை தாருத் தவ்ஹீத் சார்பில் நடந்த இஸ்லாமிய மார்க்க விளக்கக் கூட்டம்!

அதிராம்பட்டினம், நவ.02
அதிராம்பட்டினத்தில், அதிரை தாருத் தவ்ஹீத் சார்பில் நடந்த இஸ்லாமிய மார்க்க விளக்கக் கூட்டத்தில் மவ்லவி ஹுசைன் மன்பஈ அவர்கள் கலந்து கொண்டு இஸ்லாத்தின் பார்வையில் வெற்றியும், தோல்வியும் என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மைய அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், இரவும், பகலும் மாறி மாறி வருவது போல் மனிதர்களின் வாழ்விலும் வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வருகின்றன, இவை உண்மையான வெற்றி தோல்விகள் அல்ல மாறாக மறுமையில் தோல்வியுற்று நரகிற்கு செல்லாமல் வெற்றிபெற்று சொர்க்கத்திற்கு செல்வதே உண்மையான வெற்றி என்றும், இத்தகைய மறுமை வெற்றிக்காக ஸஹாபாக்கள் எனப்படும் நபித்தோழர்கள் தங்களுடைய உயிர், உடமைகள், சொத்துக்கள் போன்றவைகளை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற்று வெற்றிபெற எவ்வாறெல்லாம் தியாகம் செய்தார்கள் என உருக்கமாக எடுத்துரைத்தார்.

அதிரை தாருத் தவ்ஹீத் ஏற்பாட்டின் கீழ் நடைபெற்ற இந்த ஆன்மீக நிகழ்வில் ஆண்களும், பெண்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். முன்னதாக, மவ்லவி ஹுசைன் மன்பஈ அவர்கள் மஸ்ஜித் இஹ்சானில் நடைபெற்ற வெள்ளிக்கிழமை ஜூம்ஆவில் நாமும், சமூகக் கடமையும் என்ற தலைப்பில் குத்பா பேருரை நிகழ்த்தினார்.

Thursday, October 31, 2019

அதிரையில் இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி: பங்கேற்க அழைப்பு!

மவ்லவி ஹுசைன் மன்பஈ
அதிராம்பட்டினம், அக்.31
அதிரையில் ADT சார்பில், நாளை (நவ.01) வெள்ளிக்கிழமை நடைபெறும் மவ்லவி. ஹுசைன் மன்பஈ அவர்களின் இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.

அதிராம்பட்டினத்தில் நாளை 01.11.2019 - வெள்ளிக்கிழமை அன்று மவ்லவி. ஹுசைன் மன்பஈ அவர்கள் கீழ்க்காணும் மார்க்க விளக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

1. சி.எம்.பி லேன் ஏ.எல்.ஸ்கூல் பள்ளிவாசலில் (மஸ்ஜித் இஹ்சான்) ஜும்ஆ குத்பா உரை.

தலைப்பு: 
நாமும் சமூகக் கடமையும்

பள்ளியில் பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.

ஜும்ஆ பாங்கு மிகச்சரியாக 12.30 மணிக்கு எனவே அதானுக்கு முன்பே அனைவரும் மஸ்ஜிதிற்குள் வந்து அமரவும்.

2. ஜும்ஆ தொழுகைக்குப் பின் உடன் ஏ.எல். மஸ்ஜிதில் மவ்லவி. ஹுசைன் மன்பஈ அவர்களுடன் ஆண்களுக்கான சிறப்பு கலந்துரையாடல்

3. மாலை 6 மணியளவில் பிலால் நகர் மர்கஸில் ஆண்கள் மற்றும் பெண்களுக்குமான சிறப்பு மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி.

தலைப்பு: 
இஸ்லாத்தின் பார்வையில் வெற்றியும் தோல்வியும்

கவனிக்கவும்...
பிலால் நகரில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி இருப்பதாலும் சாலைகள் சேதமடைந்திருப்பதாலும் ECR சாலை வழியாக வருகை தருவதே சிறந்தது.

அனைவரும் வருகை தாரீர் என அன்போடு அழைக்கிறது

அதிரை தாருத் தவ்ஹீத் - ADT
அதிராம்பட்டினம்

Monday, October 7, 2019

அதிரையில் நடைபெற்ற இஸ்லாமிய மார்க்க விளக்கக் கூட்டம்!

அதிராம்பட்டினம், அக்.07
அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் சார்பாக பிலால் நகரில் செயல்படும் இஸ்லாமிய பயிற்சி மைய அரங்கில் இஸ்லாமிய மார்க்க விளக்கக்கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில், இஸ்லாமிய மார்க்க அறிஞர் மதுரை அப்பாஸ் அலி கலந்து கொண்டு "நெருங்கி வரும் மரணம்" எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

ஆண்களும், பெண்களும் பேரார்வத்துடன் கலந்து கொண்ட இந்நிகழ்வில் 'மரணம் மனிதனுக்கு ஏற்படுத்தும் படிப்பினைகள், இறையச்சம், பேராசையற்ற வாழ்வு, பேண வேண்டிய சமூக நல்லுறவு' என பல்வேறு நன்மைகளையும் எடுத்துக்கூறி நல்லுபதேசம் செய்தார்.

அதிரை தாருத் தவ்ஹீத் செயலாளர் ஜமீல். எம். ஸாலிஹ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அதன் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

Sunday, September 1, 2019

பிலால் நகரில் ADT சார்பில் நடைபெற்ற இஸ்லாமிய மார்க்க விளக்கக் கூட்டம்!

அதிராம்பட்டினம், செப்.01
அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் சார்பில், அதிரை பிலால் நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய பயிற்சி மைய அரங்கில் ஆண்களுக்கான முதலாவது மார்க்க விளக்கக் கூட்டம் இனிதே நடந்தேறியது.

இந்த மார்க்க விளக்க கூட்டத்தில் சென்னையிலிருந்து வருகை தந்திருந்த மவ்லவி. ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி அவர்கள் கலந்து கொண்டு 'நெறியான வாழ்விற்கு வழி எது?' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஒவ்வொருவரும் இறையச்சத்துடன் இஸ்லாமியர்களாக, பிற மக்களுக்கு வாழ்வின் முன்னுதாரணமாக வாழ வேண்டிய அவசியம் குறித்தும், சமூக வலைத்தளங்களில் இளைஞர்களிடையே காணப்படும் அவசரப்போக்குகள் குறித்தும் அதனால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்தும் எச்சரிக்கப்பட்டன.

ஆண்களுக்கான இதுபோன்ற பயனுள்ள சிறப்பு மார்க்க விளக்க நிகழ்ச்சிகளை பிலால் நகர் மர்கஸில் மாதம் ஒருமுறை தொடர்ந்து நடத்திட அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதிரை அமீன்

Friday, August 30, 2019

பிலால் நகரில் ADT சார்பில் இஸ்லாமிய மார்க்க விளக்க சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம், ஆக. 30
அதிரை தாருத் தவ்ஹீத் (ADT) அமைப்பின் ஏற்பாட்டின் பேரில் ஆண்களுக்கான மார்க்க விளக்கக் கூட்டம் நாளை (31.08.2019) சனிக்கிழமை மாலை மஃரிப் தொழுகை முடிந்தவுடன் பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மைய அரங்கத்தில் நடைபெற உள்ளது.

சிறப்புரை நிகழ்த்துபவர்:
மவ்லவி. ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி அவர்கள்

தலைப்பு:
நெறியுடன் வாழ வழி என்ன?

நிகழ்ச்சியின் இறுதியில் பேசப்படும் தலைப்பை ஒட்டி எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும்.

பைக் பார்க்கிங் இட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைவரையும் வருக மார்க்க விளக்கம் பெறுக என அன்போடு அழைக்கிறது.

அதிரை தாருத் தவ்ஹீத் - ADT

Sunday, May 5, 2019

அதிரையில் இருவேறு இடங்களில் புனிதமிகு ரமலான் மாத சிறப்புச் சொற்பொழிவு தொடர் நிகழ்ச்சி!

மவ்லவி ஹுசைன் மன்பஈ
அதிராம்பட்டினம், மே 05
அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் (ADT) சார்பில் புனிதமிகு ரமலானையொட்டி இஸ்லாமிய மார்க்க சிறப்புச் சொற்பொழிவு தொடர் நிகழ்ச்சி, எதிர்வரும் ரமலான் பிறை 1 முதல், பிறை 20 வரை நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பின் பேரில் மவ்லவி ஹுசைன் மன்பஈ கலந்துகொண்டு தொடர் சொற்பொழிவு ஆற்ற உள்ளார்.

ஆண்களுக்கு... (பெண்களுக்கு தனியிட வசதியுடன்)
தினமும் இரவு 10 மணி முதல், இரவு 11.30 மணி வரை அதிராம்பட்டினம் நடுத்தெரு ஈபிஎம்எஸ் பள்ளி அருகிலும்...

பெண்களுக்கு.. (வாகன வசதியுடன் கூடிய)
அதிராம்பட்டினம், பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் தினமும் காலை 11 மணி முதல்  பகல் 12 மணி வரை நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சிகளில், அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 

Tuesday, April 23, 2019

அதிரையில் அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி பட்டமளிப்பு!

ஏ.எல் மெட்ரிக். பள்ளி
அதிராம்பட்டினம், ஏப். 23
அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரியின் பட்டமளிப்பு விழா சிஎம்பி லேன் ஏஎல் மெட்ரிக். பள்ளி வளாகத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.

கிராஅத்தை அடுத்து, தலைமை ஆசிரியை பஷீரா ஆண்டறிக்கை வாசித்தார். இந்நிகழ்வில், 11 ஆலிமாக்கள், 22 இல்லத்தரசியர் பட்டம் பெற்றனர்.

சிறப்பு அழைப்பாளராக காமிலா (A-Z) முஹைதீன் கலந்துகொண்டு, இறைவனையும் இறைத்தூதரையும் இறைமார்க்கத்தையும் தெரிந்துகொள்வதற்கு மார்க்க அறிவு என்பது எவ்வளவு கட்டாயமானது எனும் கருவில் உள்ளத்தில் உறைப்பது போன்ற சிறப்பான உரையொன்றை நிகழ்த்தினார்.

பட்டம் பெற்ற மணவியர், அகீதா எனும் கொள்கை விளக்கம் பற்றியும் புகழ்பெற்ற இமாம்களைப் பெற்ற அன்னையரின் தியாக வாழ்க்கை குறித்தும் ஈமான் எனும் இறைநம்பிக்கை, அறிவுக்கு ஒத்துவரவேண்டும் என்று நிபந்தனை வைப்பது மிகவும் ஆபத்தானது என்பது குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தனர்.

இறுதியாக, ஸவ்தா அஹ்மது ஹாஜா, தற்கால இளம் பெண்கள்  பலரின் வாழ்க்கை சீரழிந்து போவதற்கு, மார்க்கக் கல்வி இல்லாமையே காரணம் எனும் கருத்தோடு, அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி, மாணவிகளை எவ்வாறெல்லாம் செம்மைப்படுத்துகிறது என்று விளக்கமாக நிறைவுரையாற்றினார். துஆவோடும் மன நிறைவோடும் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது.

செய்தி வெளியீடு: அதிரை தாருத் தவ்ஹீத்

Saturday, April 13, 2019

பிலால் நகர் இஸ்லாமிய மையத்தில் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு தொடக்கம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.13
அதிரை தாரூத் தவ்ஹீதிற்கு (ADT) சொந்தமான பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் (ITC) கஜா புயல் மீள்கட்டமைப்புக்கு பின் முதலாவது பெண்கள் பயான் நிகழ்ச்சி இன்று மாலை 5 மணி முதல் மஃரிப் வரை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மவ்லவி. ஹுசைன் மன்பஈ கலந்து கொண்டு "உள நோய்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். நீண்ட இடைவெளிக்குப் பின் பயான் நடைபெற்ற நிலையிலும் வழமைபோல் பெண்கள் பெருவாரியான அளவில் திரண்டு வந்திருந்தனர். ஆண்களுக்கு வெளியே தனியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதுகுறித்து அவ்வமைப்பின் நிர்வாகிகள் கூறியது;
'இஸ்லாமிய பயிற்சி மையத்தின் மீள்கட்டமைப்பிற்காக பொருளாதார ரீதியாகவும், உடல் உழைப்புக்கள் மூலமும், அல்லாஹ்விடம் பிரார்த்தித்தும் உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதுடன் அனைவருக்காகவும் ஏகன் அல்லாஹ்விடம் இறைஞ்சுகின்றோம்.

இன்ஷா அல்லாஹ் நாளை முதல் வழமைபோல் மாலை 5 மணிமுதல் பெண் குழந்தைகளுக்கான குர்ஆன் மக்தப் மதரஸா துவங்குவதுடன் புதிய மாணவிகள் சேர்க்கையும் நடைபெறும்' என்றனர்.
 
 
 
 
 
 

Friday, April 12, 2019

புனரமைப்புக்கு பின் பிலால் நகர் இஸ்லாமியப் பயிற்சி மையத்தில் பிரச்சாரப் பணிகள் மீண்டும் தொடக்கம்!

அதிராம்பட்டினம், ஏப்.12
கஜா புயலுக்கு பின் சேதமடைந்த அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் ஒரு அங்கமாகிய பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையம் புதிதாக புனரமைக்கப்பட்டு, இன்று (12.04.2019) வெள்ளிக்கிழமை முதல் மார்க்க பிராச்சாரப் பணிகள் மீண்டும் தொடங்க உள்ளது.

இதுகுறித்து அவ்வமைப்பின் நிர்வாகிகள் கூறியது;
'அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் அங்கம் பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் இன்று (12.04.2019) வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் பெண்கள் பயான் ஆரம்பமாக உள்ளது, சனிக்கிழமை முதல் பெண்கள், குழந்தைகளுக்கான குர்ஆன் மக்தப் மற்றும் தீனியாத் வகுப்புகளும் தொடங்கப்பட உள்ளன.

இன்று வெள்ளிக்கிழமை ALM மஸ்ஜிதில் ஜும்ஆ உரையை தொடர்ந்து அஸருக்குப் பின் பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில், மார்க்க பிரச்சாரகர் மவ்லவி. ஹுசைன் மன்பஈ உரையற்றுகின்றார். ஆண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.
 
 
 
 

Friday, February 15, 2019

அதிரையில் இன்று (பிப்.15) இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம், பிப்.15
அதிரை தாருத் தவ்ஹீத் (ADT) அமைப்பின் சார்பில், இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி இன்று (பிப்.15) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி யளவில் அதிராம்பட்டினம். ஏ.எல். ஜும்ஆ மஸ்ஜித் (ஏ.எல். மெட்ரிக் பள்ளிக்கூடம்) வளாகத்தில் நடைபெற உள்ளது.

இதில், சிறப்பு அழைப்பாளர் மவ்லவி. ஹுஸைன் மன்பஈ கலந்துகொண்டு
"போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள்" என்ற தலைப்பில், இஸ்லாமிய மார்க்கச் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.

ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி இடவசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு பயனடைய அதிரை தாருத் தவ்ஹீத் (ADT)அமைப்பின் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 
நிஜாம் 9597841980
அமீன் 9789350331

Friday, February 1, 2019

அதிரையில் நாளை (பிப்.02) மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம், பிப்.01
அதிரை தாருத் தவ்ஹீத் (ADT) அமைப்பின் சார்பில், இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி நாளை (பிப்.02) சனிக்கிழமை மாலை 4.30 மணி முதல் இஷா வரை அதிராம்பட்டினம். ஏ.எல். ஜும்ஆ மஸ்ஜித் ( ஏ.எல். மெட்ரிக் பள்ளிக்கூடம்) வளாகத்தில் நடைபெற உள்ளது.

இதில், சிறப்பு அழைப்பாளர் மவ்லவி. யூசுப் பைஜி, 'தமிழக தர்ஜுமாக்களில் காணப்படும் வழிகெட்ட கொள்கைகள்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்.

குறிப்பு: உரையின் இறுதியில் தலைப்பை ஒட்டி எழுப்பப்படும் கேள்விகளுக்கு அந்தந்த தர்ஜுமா மொழிபெயர்ப்புக்களிலிருந்தே ஆதாரம் காட்டி விளக்கம் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மவ்லவி. முஹம்மது நாசர், 'இஸ்லாமிய மார்க்கத்தின்பால் அழைப்பது யார் யார் மீது கடமை?' என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்.

ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி இடவசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு பயனடைய அதிரை தாருத் தவ்ஹீத் (ADT)அமைப்பின் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 
நிஜாம் 9597841980
அமீன் 9789350331

Friday, January 25, 2019

அதிரையில் 'எங்கே செல்கிறது இளைய சமுதாயம்?' சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம், ஜன.25
அதிரையில் இன்று (25.01.2019) வெள்ளிக்கிழமை மாலை (சுமார் 6 மணியளவில்) மஃரிப் தொழுகையை தொடர்ந்து சி.எம்.பி லேன் ஏ.எல். பள்ளி (A L School - CMP Lane) மஸ்ஜிதில் "எங்கே செல்கிறது இளைய சமுதாயம்" என்ற தலைப்பில் மவ்லவி. ஹுஸைன் மன்பஈ கலந்துகொண்டு இஸ்லாமிய மார்க்கச் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.

ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி இடவசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாய்ப்புள்ளோர் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அதிரை தாருத் தவ்ஹீத் (ADT) அமைப்பின் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.

Sunday, May 13, 2018

அதிரையில் இருவேறு இடங்களில் புனிதமிகு ரமலான் மாத சிறப்புச் சொற்பொழிவு தொடர் நிகழ்ச்சி!

மவ்லவி ஹுசைன் மன்பஈ
அதிராம்பட்டினம், மே 13
அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் (ADT) சார்பில் புனிதமிகு ரமலானையொட்டி இஸ்லாமிய மார்க்க சிறப்புச் சொற்பொழிவு தொடர் நிகழ்ச்சி, எதிர்வரும் ரமலான் பிறை 3 முதல், பிறை 20 வரை நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பின் பேரில் மவ்லவி ஹுசைன் மன்பஈ கலந்துகொண்டு தொடர் சொற்பொழிவு ஆற்ற உள்ளார்.

ஆண்களுக்கு... (பெண்களுக்கு தனியிட வசதியுடன்)
தினமும் இரவு 10 மணி முதல், இரவு 11.30 மணி வரை அதிராம்பட்டினம் நடுத்தெரு ஈபிஎம்எஸ் பள்ளி அருகிலும்...

பெண்களுக்கு.. (வாகன வசதியுடன் கூடிய)
அதிராம்பட்டினம், பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் தினமும் காலை 11 மணி முதல்  பகல் 12 மணி வரை நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சிகளில், அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Friday, April 13, 2018

ADT இஸ்லாமிய மார்க்க விளக்கக் கூட்டத்தில் மவ்லவி அப்பாஸ் அலி பங்கேற்பு!

அதிராம்பட்டினம், ஏப்.13
அதிரை தாருத் தவ்ஹீத் (ADT) சார்பில், அவ்வமைப்பின், பிலால் நகர் இஸ்லாமியப் பயிற்சி மையத்தில், இஸ்லாமிய மார்க்க விளக்கக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அவ்வமைப்பின் செயலர் ஜமீல் எம்.சாலிகு தலைமை வகித்தார். பொருளாளர் எஸ்.நிஜாமுதீன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்களாக இஸ்லாமிய மார்க்க பிரசாரகர்கள் மதுரை மவ்லவி அப்பாஸ் அலி கலந்துகொண்டு 'முபாஹலா ஒரு பார்வை' (இறைவனின் சாபம் கோருதல்) என்ற தலைப்பிலும், மேலப்பாளையம் மவ்லவி. ஹுசைன் மன்பஈ கலந்துகொண்டு, 'மனித அறிவு மார்க்கம் ஆகுமா?' என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

கூட்டத்தில், மவ்லவி அப்பாஸ் அலி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உடனான இஸ்லாமிய மார்க்க கொள்கை தொடர்பான விவாத அழைப்பின் அறிவிப்பை வெளியிட்டார்.

கூட்டத்தில், அதிரை அகமது ஹாஜா, செய்யது முகமது புஹாரி, பி.ஜமாலுதீன், அப்துல் ரஹ்மான், எஸ்.சகாபுதீன், எம்.ஆர் கமாலுதீன், சாந்தா சாகுல் ஹமீது உட்பட 150 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
 
 

Saturday, January 13, 2018

அதிரையில் மவ்லவி அப்பாஸ் அலி பங்கேற்கும் இஸ்லாமிய மார்க்க விளக்க அமர்வு!

அதிராம்பட்டினம், ஜன. 13
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் இன்று சனிக்கிழமை மாலை மவ்லவி அப்பாஸ் அலி அவர்கள் கலந்து கொண்டு மார்க்க விளக்கவுரை நிகழ்த்தும் சிறப்பு அமர்வு சிஎம்பி லேன் பகுதியில் அமைந்துள்ள ALM பள்ளிக்கூட வளாகத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதில் சிறப்பு மார்க்க விளக்க நிகழ்ச்சியையும் அதனைத் தொடர்ந்து தலைப்பை ஒட்டி நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சியை வழங்க உள்ளார்.

அஸர் தொழுகையை தொடர்ந்து உடன் துவங்கவுள்ள இந்த சிறப்பு மார்க்க விளக்க வகுப்பில் வாய்ப்புள்ள அனைவரும் கலந்து கொண்டு சமீபத்தில் பாண்டிச்சேரியில் மறுக்கப்பட்ட ஸஹீஹான ஹதீஸ் குறித்து குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தெளிவு பெற்றுச் செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி ஏற்பாடு
அதிரை தாருத் தவ்ஹீத்

தகவல்: அதிரை அமீன்

Saturday, November 11, 2017

அதிரையில் இஸ்லாமிய மார்க்க விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ.11
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் அதிரை தாருத் தவ்ஹீத் ( ADT ) அமைப்பின் சார்பில் இஸ்லாமிய மார்க்க விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் தக்வா பள்ளிவாசல் அருகில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு அவ்வமைப்பின் செயலர் ஜமீல் முகமது சாலிகு தலைமை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட
மவ்லவி ஹுசைன் மன்பஈ 'நபித்தோழர்கள்' என்ற தலைப்பில் இஸ்லாமிய மார்க்க விளக்கவுரை நிகழ்த்தினார்.

தொடக்கத்தில், அதிரை அகமது ஹாஜா வரவேற்றுப் பேசினார். முடிவில் அவ்வமைப்பின் பொருளாளர் மீடியா மேஜிக் நிஜாமுதீன்
நன்றி கூறினார். இக்கூட்டத்தில், கமாலுதீன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 

Wednesday, June 7, 2017

அதிரையில் இருவேறு இடங்களில் புனிதமிகு ரமலான் மாத சிறப்பு சொற்பொழிவு தொடர் நிகழ்ச்சி !

அதிராம்பட்டினம், ஜூன் 07
அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் சார்பில் புனிதமிகு ரமலானையொட்டி இஸ்லாமிய மார்க்க சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த மே 27 ந் தேதி தொடங்கி, தினமும் இரவு 10 மணி முதல் 11.30 மணி வரை அதிராம்பட்டினம் நடுத்தெரு ஈபிஎம்எஸ் பள்ளி அருகில் நடைபெற்று வருகிறது.

அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் செயலர் ஜமீல் எம்.சாலிகு தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில், மவ்லவி ஹுசைன் மன்பஈ கலந்துகொண்டு உரை நிகழ்த்தி வருகிறார். இதில் பெண்கள் உட்பட 300 க்கும் அதிகமானோர் கலந்துகொண்டு வருகின்றனர்.

மேலும், பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த மே 28 ந் தேதி தொடங்கி, பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் தினமும் காலை 11 மணி முதல்  பகல் 12 மணி வரை நடைபெறுகிறது. மவ்லவி ஹுசைன் மன்பஈ கலந்துகொண்டு உரை நிகழ்த்தி வருகிறார். இதில் பெண்கள் 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு வருகின்றனர்.