.

Pages

Showing posts with label AMS. Show all posts
Showing posts with label AMS. Show all posts

Monday, August 3, 2020

AMS அமைப்பின் 10 அம்ச கோரிக்கை தொடர்பாக துறை அலுவலரின் பதில்!

அதிராம்பட்டினம், ஆக.03
அதிரை மேம்ட்பாடு சங்கம் அமைப்பின் சார்பில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி, அதிராம்பட்டினத்தில் பாதாள சாக்கடைத் திட்டம், அதிராம்பட்டினம் குடிநீர் தேவையை போக்க பம்பிங் (இறைவை) நீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தவும், 110/11 KVA துணை மின் நிலையப் பணியை தொடங்கவும், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேர சேவையை தொடங்கவும், அதிராம்பட்டினத்தில் தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவை, அதிராம்பட்டினத்தில் தீயணைப்பு நிலையம், அதிராம்பட்டினத்தை புதிய தாலுகாவாக தரம் உயர்த்தி அறிவிப்பது என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை கடந்த 22.01.2020 அன்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழக மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரை, அதிரை மேம்பாட்டுச் சங்கமம் அமைப்பின் தலைவர் எம்.எஸ். எம் யூசுப், செயலாளர் ஏ.ஜெ அஸ்ரப் அலி ஆகியோர் சார்பில், மனு அளிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், இந்த கோரிக்கைகள் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில், அதிராம்பட்டினத்தில் பாதாள சாக்கடைத் திட்டம் தொடங்குவதற்கு கடந்த 2011 ல் அன்று கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதிகளில் நீர்நிலைகளுக்கு பம்பிங் லைன் மூலம் தண்ணீர் ஏற்றுவதற்கு பொதுப்பணித்துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மு.மாஹின் அபுபக்கர், அதிரை மேம்பாட்டு சங்கமம் அமைப்பிற்கு கடந்த 20-07-2020 அன்று அனுப்பிய பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Monday, May 18, 2020

அதிராம்பட்டினத்தில் AMS சார்பில், தலா ரூ. ஆயிரம் மதிப்பிலான மளிகைப் பொருட்கள் 150 குடும்பங்களுக்கு வழங்கல்!

அதிராம்பட்டினம், மே.18
அதிரை மேம்பாட்டுச் சங்கமம் சார்பில், வெளி மாநிலத் தொழிலாளர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் உள்பட 150 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ. ஆயிரம் மதிப்பிலான ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசின் ஊரடங்கு உத்தரவை அடுத்து, அதிராம்பட்டினத்தில் வேலையின்றி வீட்டில் முடங்கிக் கிடக்கும் ஏழைத் தொழிலாளர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் வெளி மாநிலத் தொழிலாளர்கள் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ. ஆயிரம் மதிப்பிலான, ஒரு மாதத்திற்கு தேவைப்படும் மளிகைப் பொருட்களுக்கான டோக்கன் வழங்கப்பட்டன. பயனாளிகள் அனைவரும் அங்கீகரிக்கப்பட்ட மளிகைக்கடையில் டோக்கனை கொடுத்து மளிகைப்பொருட்களை இலவசமாக பெற்றுச்சென்றனர்.

மேலும், தேவையுடைய பயனாளிகள் அதிகமாக இருப்பதால், இவர்களுக்கு உதவ எண்ணுவோர் கீழ்காணும் அலைப்பேசி எண்ணில் அதிரை மேம்பாட்டுச் சங்கமம் அமைப்பின் நிர்வாகிகளைத் நேரடியாகத் தொடர்பு கொண்டு உதவலாம்.

எல்.எம்.எஸ் முகமது யூசுப் (9940 851581) 
ஜெ.எம் சம்சுதீன் (97890 55567)
ஏ.ஜெ அஸ்ரப் அலி (98402 07778)
 

Thursday, January 23, 2020

அதிராம்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க அமைச்சரிடம் AMS கோரிக்கை!

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் அமைத்துதரவும், 110/11 KVA துணை மின் நிலையப் பணியை தொடங்கவும், அதிராம்பட்டினத்தை புதிய சட்டமன்ற தொகுதியாக அறிவிக்கவும், அதிராம்பட்டினத்தில் குடிநீர் தேவையை போக்க பம்பிங் (இறைவை) நீர் திட்டத்தை செயல்படுத்தவும், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில்  24 மணி நேர சேவை, அதிராம்பட்டினத்தில் தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டம், அதிராம்பட்டினத்தில் பாதாள சாக்கடைத் திட்டம், அதிராம்பட்டினத்தில் தீயணைப்பு நிலையம், அதிராம்பட்டினத்தை புதிய தாலுகாவாக தரம் உயர்த்தி அறிவிக்கவும், அதிராம்பட்டினம் ~ மகிழங்கோட்டை கிராம இணைப்புச் சாலை சீரமைக்கவும், அதிராம்பட்டினத்தில் இருந்து மன்னார்குடி, சென்னை, மதுரைக்கு அரசுப் பேருந்து இயக்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரை அதிரை மேம்பாட்டுச் சங்கமம் அமைப்பின் செயலாளர் ஏ.எல் அஸ்ரப் அலி சந்தித்து மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் டி.ஜெயக்குமார் அந்தந்த துறைகளுக்கு அனுப்பிவைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகக் கூறினாராம். அப்போது, அமைச்சர் டி.ஜெயக்குமாருக்கு பன்னாட்டு தொழில் அதிபர் அப்துல் மஜீது பதுருதீன் நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

அதிரை மேம்பாட்டுச் சங்கமம் அமைப்பின் செயலாளர் ஏ.எல் அஸ்ரப் அலி அளித்த மனுவில் கூறியிருப்பது;
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஆறுமுகக் கிட்டங்கித் தெரு, தரகர் தெரு, ஏரிப்புறக்கரை, மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் வாழும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நாட்டுப் படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் இந்த பகுதியில் பிடிக்கப்படும் மீன், இறால், நண்டு மற்றும் உற்பத்தி செய்யப்படும் கருவாடு, உப்பு போன்ற கடல் சார்ந்த பொருட்கள் அதிகளவில் இங்கு இருந்த துறைமுகத்திலிருந்து கப்பல் மூலமும், ரயில், லாரி மூலமும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி வந்தது. காலப்போக்கில் துறைமுகம் மூடப்பட்டதால் இப்பகுதியில் நடந்து வந்த வர்த்தகம் வெகுவாக குறைந்தன.  

மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படவும். மீன்களை ஏற்றுமதி செய்ய வழி செய்யும் வகையிலும், அரசுக்கான வருவாய் கணிசமான அளவில் பெருகும் என்பதாலும். துறைமுகம் அமைந்துள்ள பகுதியில் வேலை வாய்ப்பு ஏற்படவும், அதிராம்பட்டினம் துறைமுகம் இருந்த அதே பகுதியில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கு அரசு ஆவணம் செய்ய வேண்டும்.

இதனால், மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு தேவையான உபகரணங்களை இலகுவாக ஏற்றுவதற்கும், பிடித்து வரப்பட்ட மீன்களை இலகுவாக கையாள்வதற்கும், மீன்களை சுகாதாரமான முறையில் விற்பனை செய்வதற்கும் வழி வகை ஏற்படும். என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
10 அம்ச கோரிக்கை மனுவில் கூறியிருப்பது;
 
 
 

Thursday, October 31, 2019

அதிரையில் அதிகரித்து வரும் நாய் தொல்லையை கட்டுப்படுத்தக்கோரி AMS மனு!

அதிராம்பட்டினம், அக்.31
அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் அதிகரித்துவரும் நாய்களை கட்டுப்படுத்தக் கோரி அதிரை மேம்பாடு சங்கமம் (AMS) சார்பில், இன்று காலை வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் அதிகரித்து வரும் நாய்களை கட்டுப்படுத்தக்கோரி, அதிரை மேம்பாடு சங்கமம் சார்பில், டி.அப்துல் ஜப்பார் அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசனிடம் கோரிக்கை மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

கோரிக்கை மனுவில் கூறியிருப்பது;

Monday, September 30, 2019

அதிரையில் நவீன முறையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றக் கோரி, எம்.எல்.ஏ சி.வி சேகரிடம் AMS நிர்வாகிகள் மனு!

அதிராம்பட்டினம், செப்.30
அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் சுகாதார சீர்கேட்டை தவிர்க்க நவீன முறையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்தக் கோரியும், பாதாள சாக்கடைத்திட்டம் நிறைவேற்றக் கோரியும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ விடம் அதிரை மேம்பாடு சங்கமம் சார்பில் அதன் தலைவர் எம்.எஸ்.எம் முகமது யூசுப், ஏ.ஜெ அஸ்ரப் அலி ஆகியோர் இன்று திங்கட்கிழமை காலை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.  அப்போது, அதிராம்பட்டினம் பேரூராட்சி முன்னாள் துணை சேர்மன் ஏ.பிச்சை, அதிராம்பட்டினம் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் எம்.ஏ முகமது தமீம், முத்துக்கருப்பன், சங்கர், அன்வர் ஆகியோர் உடனிருந்தனர்.

அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பது:
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிராம்பட்டினம் தேர்வு நிலைப் பேரூராட்சி  21 வார்டுகளில், சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், தினமும் 10 டன் குப்பை  வரை சேகரமாகிறது. இவற்றை, பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள், சுய உதவிக்குழுவினர் என சுமார் 60 பேர் வரை அப்புறப்படுத்தி வருகின்றனர். குடியிருப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இப்பகுதியில் துப்புரவு பணியாளர்கள் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளது. மேலும், அதிராம்பட்டினம் பகுதிகளில் அன்றாடம் சேகரமாகும் குப்பைகளை இருப்பு வைக்கும் கிடங்கில் போதுமான இட வசதி இல்லை. இதனால், அதிராம்பட்டினம் பிரதான சாலைகளில் தேங்கும் குப்பைகளை ஏற்றிச்சென்று கிடங்கில் கொட்டுவதில் சுணக்கம் ஏற்படுகிறது. சாலைகளில் சிதறிக்கிடக்கும் குப்பைக் கழிவுகளை ஆடு, மாடு, நாய்கள் கிளறுவதன் மூலம் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு, அதிராம்பட்டினம் பகுதியில் 500 க்கும் மேற்பட்டோர் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொண்டனர். இதில், சிலர் தீவிர சிகிச்சையும் எடுத்துக்கொண்டனர்.

எனவே, குப்பைக் கிடங்கை போதுமான இட வசதியில் விரிவாக்கம் செய்தோ அல்லது மாற்று இடத்தில் குப்பை கிடங்கு அமைத்து தர வேண்டும்,  அதிராம்பட்டினம் பேரூர் பகுதி துப்புரவுப் பணிக்கான ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் அன்றாடம் சேகரமாகும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து நவீன முறையிலான மாற்றுத் திட்டம் மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டுமெனவும், இத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு, மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிரை பேரூர் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக உள்ளாத குறிப்பிட்டு இருந்தனர்.

அதிராம்பட்டினத்தில் பாதாள சாக்கடைத் திட்டம்:
அதிராம்பட்டினம் தேர்வுநிலை பேரூராட்சி 21 வார்டுகளை உள்ளடக்கியது. 12.80 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. இப்பகுதியில், தற்போது சுமார் 70 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். கடந்த 2011 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா, அதிராம்பட்டினம் பேரூராட்சியில் ரூ.23.73 கோடி மதிப்பீட்டில் புதிதாக பாதாள சாக்கடை திட்டத்தை அறிவித்து இருந்தார்.  இதன் பின்னர், சில பல காரணங்களால் மற்றொரு பகுதிக்கு இந்த திட்டம் கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்பட்டது. எனவே, அதிராம்பட்டினம் பேரூர் பகுதியில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் வருவாய் ஆகியவற்றை கருத்தில் கொண்டு  அம்மா அறிவித்த இந்த திட்டத்தை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டுமென மனுவில் கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ சி.வி சேகர் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
 
 

Thursday, September 13, 2018

அதிரையில் 3 அம்ச கோரிக்கையை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி பேரூராட்சி செயல் அலுவலருடன் நேரில் சந்திப்பு!

அதிராம்பட்டினம், செப்.13
அதிராம்பட்டினதில் சுகாதார சீர்கேட்டை தவிர்க்க நவீன முறையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, குப்பைக்கிடங்கை மாற்று இடத்தில் அமைப்பது அல்லது விரிவாக்கம் செய்வது உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை விரைந்து செயல்படுத்தக் கோரி அதிராம்பட்டினம் பேரூர் செயல் அலுவலருடன் சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.

அதிரை மேம்பாட்டுச் சங்கமம் சார்பில், கடந்த ஆக.20 ந் தேதி மாவட்ட ஆட்சியரக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் அவர்களிடம் இதுதொடர்பான கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, அதிராம்பட்டினம் பேரூர் செயல் அலுவலர் மற்றும் மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலகத்திலிருந்து கோரிக்கை தொடர்பான விளக்கக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதையடுத்து, அதிரை மேம்பாட்டுச் சங்கமம் அமைப்பின் தலைவர் எம்.எஸ்.எம் முகமது யூசுப் தலைமையில், பொருளாளர் ஏ.மகபூப் அலி, அவ்வமைப்பினர் எம்.நிஜாமுதீன், இம்தியாஸ் அகமது, ஏ.சாகுல் ஹமீது ஆகியோர் பேரூர் செயல் அலுவலர் எல்.ரமேஷ், சுகாதார ஆய்வாளர் கே. அன்பரசன் ஆகியோருடனான சந்திப்பு நிகழ்ச்சி புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இதில், அதிராம்பட்டினதில் சுகாதாரச் சீர்கேட்டை தவிர்க்க நவீன முறையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, குப்பை கிடங்கை மாற்று இடத்தில் அமைப்பது அல்லது விரிவாக்கம் செய்வது உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை விரைந்து செயல்படுத்தக் கோரிக்கை வைக்கப்பட்டது. அருகில், பேரூராட்சி துப்புரவு பணி கண்காணிப்பாளர் முத்துக்குமார் இருந்தார்.
 
 
 
 

Monday, September 10, 2018

அதிரை பேரூராட்சியில் 100% குடிநீர் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி 'அதிரை மேம்பாட்டுச் சங்கமம்' கோரிக்கை (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.10
அதிராம்பட்டினம் பேரூராட்சியில் 100% குடிநீர் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, அதிரை மேம்பாட்டுச் சங்கமம் சார்பில் மாவட்ட ஆட்சியரக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் மாதாந்திரக் கட்டணம், எதிர்வரும் அக்.1 ந் தேதி முதல் ரூ.50 லிருந்து ரூ.100 ஆகவும், குடிநீர் இணைப்புக் கட்டணம் ரூ.3 ஆயிரத்திலிருந்து, ரூ.7 ஆயிரமாகவும் 100% உயர்த்தப்படவுள்ளது.

இவ்வாறு திடீரென கட்டணங்கள் உயர்த்தப்படுவதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிக அளவில் அவதி அடைவர் எனக்கூறி, உயர்த்தப்பட்ட கட்டணத்தைத் திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி, அவ்வமைப்பின் தலைவர் எம்.எஸ்.எம் முகமது யூசுப் தலைமையில், அவ்வமைப்பினர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் அவர்களிடம் இன்று (செப்.10) திங்கட்கிழமை கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக அவ்வமைப்பினரிடம் உறுதி அளித்தாராம்.

இதில், அமைப்பின் பொருளாளர் ஏ.மகபூப் அலி, சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் ஏ.முனாப், எம்.எஸ்.எம். ராபியா, எம். நிஜாமுதீன், ஏ.சாகுல் ஹமீது, இம்தியாஸ் அகமது, எம்.இசட் பஷீர் அகமது, எம்.எஸ் முகைதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோரிகை மனுவில் கூறியிருப்பது;

Monday, August 20, 2018

அதிரையில் நவீன முறையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த 'அதிரை மேம்பாட்டுச் சங்கமம்' கோரிக்கை (படங்கள்)

தஞ்சாவூர், ஆக. 20
சுகாதார சீர்கேட்டை தவிர்க்க நவீன முறையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த அதிரை மேம்பாட்டுச் சங்கமம் ஆட்சியரகத்தில் கோரிக்கை வைத்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியின் சமூக மேம்பாடு, ஒற்றுமை, அடிப்படை கட்டமைப்பு வசதியில் தன்னிறைவு போன்ற திட்டங்களை பிரதான நோக்கமாகக் கொண்டு 'அதிரை மேம்பாட்டுச் சங்கமம்' என்ற அமைப்பு அண்மையில் தொடங்கப்பட்டது.

இவ்வமைப்பின் தலைவர் எம்.எஸ்.எம் முகமது யூசுப் தலைமையில், அவ்வமைப்பினர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் அவர்களிடம் இன்று (ஆக.20) திங்கட்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் அவர்கள், கும்பகோணம் நகராட்சியில், புதிய திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பாட்டில் உள்ளது போல், அதிராம்பட்டினம் பேரூர் பகுதியில் புதிய திட்டத்தை தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகக் கூறினார்.

இதன் பின்னர், மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குநர் விஸ்வநாதன் (பொறுப்பு) அவர்களின் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டன.

இதில், அமைப்பின் பொருளாளர் ஏ.மகபூப் அலி, சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் ஏ.முனாப், துணைச்செயலாளர் எல்.எம்.எஸ் முகமது யூசுப், எம். நிஜாமுதீன், ஒருங்கிணைப்பாளர் அகமது அமீன், கே.எம்.என் முகமது மாலிக், கே. சரபுதீன், முகமது அலியார், இம்தியாஸ் அகமது, பஷீர் அகமது, அகமது அனஸ், ரிஜ்வான், அபுல் ஹசன், முகமது இஸ்மாயில் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
 
கோரிக்கை மனுவில் கூறியிருப்பது;