.

Pages

Showing posts with label BLOOD DONARS. Show all posts
Showing posts with label BLOOD DONARS. Show all posts

Wednesday, February 10, 2016

உயிர்காக்க உதவிய இரத்த கொடையாளிகள் !

கடந்த 6-02-2016 அன்று தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் உயிர் காக்கும் சிகிச்சைக்காக அதிரையை சேர்ந்த முகம்மது மரியம் என்பவருக்கு காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஜியாவுதீன் அவர்களால் A+ ரத்தமும்,
பட்டுக்கோட்டை பாலகிருஷ்ணன் மருத்துவமனைக்கு பிரசவத்திற்கு ஜெயந்தி என்ற பெண்னுக்கு வைஜெயந்தி என்ற சகோதரி 0+ ரத்தமும் தானமாக வழங்கி உதவினார்கள்.

இன்று 10.02.16 அதிகாலை தஞ்சாவூர் மீனாட்சி மருத்துமனையில் நடைபெறவுள்ள காரைக்காலை சேர்ந்த மூன்று வயதை கொண்ட கனிஸ்கா என்ற சிறுமிக்கு இருதய அறுவைச்சிகிச்சைகாக A1+ ரத்தம் மூன்று யூனிட் அவசரமாக தேவைபட்டதால் வழக்கறிஞர் நிஜாம் மற்றும் தஞ்சையை சேர்ந்த சூர்யா மற்றும் ராஜ்கமல் ஆகியோர் இரத்த தானம் தந்து சிறுமியின் உயிர் காக்க உதவினார்கள்.

நேற்று 09.02.16 புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 7 வயது சிறுவன் தஞ்சை ஹம்தான் என்பவறுக்கு 2 யூனிட் இரத்தம் காளி இரத்த வங்கியில் தானமாக கொடுக்கப்பட்டது. இவற்றை அதிரை அன்வர், எம்.பி ரபி ஆகியோர் வழங்கி உதவினார்கள்.

இதுகுறித்து காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் செய்யது அஹமது கபீர் நம்மிடம் கூறுகையில்...
'இரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு சாதி மதம் இனம் பாகுபாடின்றி, நேரம் காலம் பார்க்காமல் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்காக எவ்வித கட்டணமும் நோயாளிகளிடமிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெறுவதில்லை. நான் அழைத்தவுடன் மகிழ்ச்சியாக வந்த காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஜியாவுதீன், சகோதரி வைஜெயந்தி, வழக்கறிஞர் அதிரை நிஜாம் மற்றும் தஞ்சையை சேர்ந்த சூர்யா மற்றும் ராஜ்கமல் தம்பிகள் அதிரை அன்வர் மற்றும் M.P ரபி ஆகியோருக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். சிகிச்சைபெரும் அனைவரும் பூரண குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன்' என்றார்.