.

Pages

Showing posts with label BRILLIANT SCHOOL. Show all posts
Showing posts with label BRILLIANT SCHOOL. Show all posts

Saturday, October 17, 2020

பிரிலியன்ட் சிபிஎஸ்இ பள்ளி நீட் தேர்வு பயிற்சி மைய மாணவர்கள் தேர்ச்சி விவரம்!

அதிராம்பட்டினம், அக்.17
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று (அக்.17) வெளியிடப்பட்டன.

இதுகுறித்து, அதிராம்பட்டினம் அடுத்து பிரிலியன்ட் சிபிஎஸ்இ பள்ளி நீட் நுழைவுத் தேர்வு பயிற்சி மைய இயக்குநர் வீ.சுப்ரமணியன் கூறியது;
பிரிலியன்ட் சிபிஎஸ்இ பள்ளி, ராஜஸ்தான் கோட்டா கேரியர் பாயிண்ட் நீட் நுழைவுத் தேர்வு பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்திய பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் எஸ்.திவ்யா, ஐ.தனுஷ் முறையே 588,587 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அரசு ஒதுக்கீட்டிலும், என்.விக்னேஷ், எஸ்.மணிகண்டன் ஆகியோர் முறையே 480, 476 மதிப்பெண்கள் பெற்று மாநில அரசு ஒதுக்கீட்டிலும், சிறப்பு ஒதுக்கீட்டில் 4 மாணவர்கள் தேர்ச்சி பெற்று மொத்தம் 8 மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேர உள்ளார்கள் என்றார்.

Thursday, September 17, 2020

ஜேஇஇ மெயின் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவருக்கு பாராட்டு!

அதிராம்பட்டினம், செப்.17
அதிராம்பட்டினம் அடுத்த புதுக்கோட்டை உள்ளூரில் இயங்கி வரும் பிரிலியன்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர் நிதீஷ் ஜேஇஇ மெயின் தேர்வில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளார்.

இதையடுத்து, வெற்றி பெற்ற மாணவன் நிதிசை பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலசந்தர், பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் எஸ்.புகழேந்தி கணேஷ் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்வில், பள்ளித்தாளாளர் வீ.சுப்ரமணியன், முதல்வர் ஆர்.ரெஜிஸ் ராஜன், மேலாளர் எஸ்.சுப்பையன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Sunday, September 13, 2020

பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் நீட் தேர்வு (படங்கள்)


அதிராம்பட்டினம், செப்.13
பட்டுக்கோட்டை அடுத்த புதுக்கோட்டை உள்ளூரில் இயங்கி வரும் பிரிலியன்ட் சிபிஎஸ்இ பள்ளியில் தேசிய தேர்வு முகமை நடத்தும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

தேர்வு மையத்தினை பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலசந்தர், காவல்துறை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ்,  வட்டாட்சியர் தர்ணிகா வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், திருமதி பொய்யாமொழி, மாவட்ட கல்வி அலுவலர் ராமசுப்பு ஆகியோர் பார்வையிட்டனர்.

காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காவல்துறையினர் முகாமிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பாதுகாப்பை உறுதி செய்தனர் தேர்வுக்கு வந்த மாணவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்தனர். புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடாசலம் மற்றும் பட்டுகோட்டை வட்டார சுகாதார ஆய்வாளர்  அண்ணாதுரை வழிகாட்டுதலின்படி மருத்துவ பணியாளர்கள் சுகாதார பணிகளை மேற்கொண்டனர். இத்தேர்வினை பள்ளி முதல்வர் ரெஜிஸ் ராஜன், தலைமை ஆசிரியை சாண்ட்ரா தேசிய தேர்வு முகமை வழிகாட்டுதல்படி நடத்தினார்கள்.


பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி நீட் தேர்வு மையத்தில், முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு (படங்கள்)


அதிராம்பட்டினம், செப்.13-
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள, புதுக்கோட்டை உள்ளுர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில், நீட் தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்து, பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலசந்தர் சனிக்கிழமை மாலை ஆய்வு நடத்தினார். 

பட்டுக்கோட்டை பகுதியில் முதன் முறையாக நீட் தேர்வு எழுதும் மையமாக,  புதுக்கோட்டை உள்ளுர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்பள்ளியில் 540 மாணவ, மாணவிகள் (செப்.13) ஞாயிற்றுக்கிழமை, தேர்வு எழுத உள்ளனர். 

மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. தேர்வு மையத்தில் காலை 11 மணி முதல் மதியம் 1.30 வரை தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர். மாலை 5 மணிக்கு தேர்வு முடிந்து, 5.30 க்கு தேர்வர்கள் வெளியே வருமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சனிக்கிழமை மாலை, தேர்வு மையத்தில் பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலசந்தர் ஆய்வு செய்தார். அப்போது, அங்கிருந்து அலுவலர்களிடம், தேர்வு மையத்தில் கிருமிநாசினி, கை கழுவும் வசதி ஏற்படுத்த வேண்டும். தேர்வர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தும், முகக்கவசம் அணிந்தும் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும். தேர்வர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரவேண்டும்" என அறிவுறுத்தினார். 

ஆய்வின் போது, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சு.தரணிகா, பட்டுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். 





Sunday, August 16, 2020

பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் சுதந்திர தின விழா!

அதிராம்பட்டினம், ஆக.15
இந்தியாவின் 74 வது சுதந்திர தின விழா, அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளுர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் சுதந்திர தின கொடி ஏற்றும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, பள்ளித் தாளாளர் வீ.சுப்பிரமணியன் தலைமை வகித்து, இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.

நிகழ்வில், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டன.

நிகழ்வையொட்டி, வாகன ஓட்டிகள் உள்பட பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டன.
 
 
 
 
 

Tuesday, July 14, 2020

+2 பொதுத்தேர்வில் பிரிலியண்ட் CBSE பள்ளி 100 சதவீத தேர்ச்சி!

அதிராம்பட்டினம், ஜூலை 14
+2 பொதுத்தேர்வில் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று, பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 470 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்துள்ளது.

பன்னிரண்டாவது வகுப்பு சி.பி.எஸ்.இ மத்திய அரசு பொதுத்தேர்வில்
அதிராம்பட்டினம் அடுத்த புதுக்கோட்டை உள்ளுர் கிராமத்தில் இயங்கி வரும் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்திலேயே 470 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்துள்ளது
 
பள்ளி மாணவர்கள் ஏ. நௌஃபல் பித்ரத், எம்.முகுந்தன், ஆர்.கோகுல் அஜெய் தலா 470, 458, 449 மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.

தேர்வில் வெற்றி பெற்ற மாணவரகள், பயிற்றுவித்த ஆசிரியர்கள் உள்ளிட்டோரை பள்ளித்தாளாளர் வீ. சுப்ரமணியன், முதல்வர் ஆர்.ரஜீஸ், மேலாளர் எஸ். சுப்பையன் மற்றும் தலைமை ஆசிரியை வி.சாண்ட்ரா ஆகியோர் பாராட்டினர்.

Sunday, June 21, 2020

உலக யோகா தினம்: பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவன் சாதனை!

பட்டுக்கோட்டை, ஜூன் 21
உலக யோகா தினத்தை முன்னிட்டு உலகில் மிக குறைந்த  வயதுள்ள 10 வயது யோக குருவும் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியின் 5 ம் வகுப்பு மாணவன் பாலயோகி திருப்புகழ் 7 விதமான யோகாசனங்களை கண்களை  கட்டிக்கொண்டே கர்நாடக இசை பாடங்களை கீ போர்டில் வாசித்து உலக சாதனை நிகழ்த்தி நோபல் உலக ரெகார்ட்ஸ்ல் இடம் பெற்றார்.

கரோனா பாதிப்பிலிருந்து மீளவும், மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்கு சமர்பிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவனாந்த பாரம்பரிய யோகா நிலையத்தின் குரு அருணகிரி செய்திருந்தார்.

நிகழ்வில், பிரிலியண்ட் பள்ளித் தாளாளர் வீ. சுப்ரமணியன், பாரதிய ஜனதாவின் மாநில ஊடகப் பிரிவு துணைச்செயலாளர் தாமரை வெங்கடேசன், பிரம்மா குமரி சபையின் உமா மகேஸ்வரி ஐஒபி மேலாளர் கெளரி சங்கர், சென்னை மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை டாக்டர் குணவதி, தஞ்சை மாவட்ட ஆதிபராசக்தி மன்ற செயலர் முத்துவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 
 

Tuesday, April 28, 2020

சேமிப்பு பணத்தில் 25 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய பள்ளி மாணவர்கள்!

அதிராம்பட்டினம், ஏப்.28
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசின் ஊரடங்கு உத்தரவை அடுத்து, அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர்  பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவன் மனோஜ், 7 ஆம் வகுப்பு மாணவி மதுவர்ஷினி. அண்ணன், தங்கையான இவர்கள் இருவரும் தாங்கள் உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தில், தூய்மைப் பணியாளர்கள் உட்பட வருமானத்திற்கு வழி இல்லாமல் வீடுகளில் முடங்கி கிடக்கும் 25 ஏழை குடும்பங்களுக்கு, தலா 5 கிலோ அரிசி, காய்கறிகள் அடங்கிய நிவாரணப்பொருட்களை, முள்ளூர் பட்டிக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.வெங்கடேஸ்வரன் தலைமையில், தனது பெற்றோர்கள் இரா.தர்மதுரை, த.அமிர்தஜோதி ஆகியோர் முன்னிலையில் வழங்கினர். பள்ளி மாணவர்களின் இக்சேவையை, பள்ளித்தாளாளர் வீ.சுப்ரமணியன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், கிராம பொதுமக்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Friday, April 3, 2020

பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் கற்பித்தல் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.03
கரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான மாணவர்கள் வீட்டில் டிவி பார்ப்பது, செல்போன் பயன்படுத்துவது என பொழுதை கழித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர்  பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி LKG முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பித்தல் தொடங்கி உள்ளது. இதில், மும்பையிலிருந்து LEAD SCHOOL கல்வி நிறுவன பயிற்றுநர்கள் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் ஓய்வில் இருக்கும் மாணவர்கள் பயனுள்ள வகையில் பொழுதை கழிக்க வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு, தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், விடுமுறைக்கு பின், பள்ளி தொடங்கியதும் அனைத்து மாணவர்களுக்கும் மீண்டும் பாடங்கள் நடத்தப்படும் என பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, தஞ்சாவூர் மாவட்டத்திலேயே ஆன்லைன் மூலம் பாடம் கற்பிப்பதை தொடங்கி இருக்கும் முதல் கல்வி நிறுவனம் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.
 

Tuesday, February 4, 2020

பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி 7-வது ஆண்டு விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.04
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர்  பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி 7-வது ஆண்டு விழா பள்ளி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளித் தாளாளர் வீ. சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.  ஏ.மலைஅய்யன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சி.வி சேகர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, கல்வியில், விளையாட்டில் சாதனை நிகழ்த்திய மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள், கேடயப்பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர் ஜெ. சுல்தானா பர்வீன், 'Lead School' எஸ்.சுமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு கல்வியின் அவசியம் குறித்து விளக்கிப்பேசினர்.

பட்டுக்கோட்டை கேரியர் பாயிண்ட் பயிற்றுநர் அக்ஷய் செளத்ரி மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கான NEET / IIT-JEE தேர்வு குறித்து மாணவர்கள் - பெற்றோர்களுக்கு விளக்கிப்பேசினார்.

விழாவில், மனோரா பாலிடெக்னிக் கல்லூரி சேர்மன் எஸ்.எம் முகமது முகைதீன், மருத்துவர் எம்.செல்லப்பன், பட்டுக்கோட்டை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் பி.சுப்பிரமணியன், ஆர்.எம்.எஸ் கெளதம தேவர், மனோகரன். எம்.கணேஷன், எம்.எஸ் பாலசுப்பிரமணியன், ராஜேஷ்வரி மனோகரன், கே.பழனிதுரை, ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஜெயசுந்தரி வெங்கடாசலம், எஸ்.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில், பள்ளிக் குழந்தைகள் பங்குபெற்ற பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

முன்னதாக, பள்ளி முதல்வர் என். ரகுபதி பள்ளி ஆண்டறிக்கையை வாசித்தார். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் நடப்பு கல்வியாண்டில் ஆற்றிய சாதனைகள் மற்றும் பள்ளியில் நடந்த முக்கிய நிகழ்வுகளைப் பட்டியலிட்டு பேசினார். விழா ஏற்பாட்டினை பள்ளி மேலாளார் எஸ்.சுப்பையன் செய்தார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 

Saturday, December 21, 2019

பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கண்காட்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.21
அதிராம்பட்டினம் அடுத்த புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தாளாளர் வீ. சுப்பிரமணியன் தலைமை வகித்து வரவேற்றுப் பேசினார். அறிவியல் கண்காட்சியை தோப்புத்துறை அரசினர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் புயல். குமார் தொடங்கி வைத்துப் பேசினார். கண்காட்சியில் வைத்திருந்த கண்டுபிடிப்புகளை பெற்றோர்கள் பார்வையிட்டு மாணவ, மாணவிகளை பாராட்டினர்.

கண்காட்சி ஏற்பட்டினை பள்ளி முதல்வர் என். ரகுபதி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். நிறைவில், பள்ளி மேலாளர் எஸ்.சுப்பையன் நன்றி கூறினார்.