.

Pages

Showing posts with label ECA. Show all posts
Showing posts with label ECA. Show all posts

Wednesday, August 15, 2018

ECA சிபிஎஸ்இ பள்ளியில் சுதந்திர தின விழாக் கொண்டாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக. 15
அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் அமைந்துள்ள ஈஸ்ட் கோஸ்ட் அகெதெமி (ECA) சிபிஎஸ்இ பள்ளியில், 72-வது இந்திய சுதந்திர தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு பள்ளி இயக்குநர் டி.வி ரேவதி தலைமை வகித்து, இந்திய தேசியக் கொடி ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார். விழாவையொட்டி மாணவர்களின் பல்சுவை நிகழ்ச்சி மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில், மாணவர்களின் பல்வேறு படைப்புகள் இடம்பெற்றன. இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
 
 
 
 
 
 

Thursday, July 13, 2017

அதிரை ECA சிபிஎஸ்இ பள்ளி: சிறப்புப் பார்வை (வீடியோ)


அதிராம்பட்டினம், ஜூலை 13
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையையொட்டி ஏரிப்புறக்கரை கிராம ஊராட்சி பகுதியில், அதிராம்பட்டினம் கல்வி அறக்கட்டளையின், 'ஈஸ்ட் கோஸ்ட் அகதெமி' சிபிஎஸ்இ கல்விக்கூடம் கடந்த ஜூன் 28ந் தேதி புதிதாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இக்கல்வி நிறுவனத்தின் நோக்கம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி, பள்ளித்தாளாளர் ஹாஜி எம்.எஸ் தாஜுதீன் தலைமையில் அதிராம்பட்டினம் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கல்வி நிறுவனத்தின் நோக்கம், நவீன கட்டமைப்பு வசதி, பள்ளி நிர்வாகத்தின் எதிர்பார்ப்பு உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கும் வகையில் சுமார் 6.48 நிமிடங்கள் ஓடக்கூடிய காணொளி தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வீடியோவைக் காண:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Monday, July 10, 2017

அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் 'ஈஸ்ட் கோஸ்ட் அகதெமி' கல்வி நிறுவன அறிமுக நிகழ்ச்சி ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஜூலை 10
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையையொட்டி ஏரிப்புறக்கரை கிராம ஊராட்சி பகுதியில், அதிராம்பட்டினம் கல்வி அறக்கட்டளையின், 'ஈஸ்ட் கோஸ்ட் அகதெமி' சிபிஎஸ்இ கல்விக்கூடம் கடந்த ஜூன் 28ந் தேதி புதிதாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இக்கல்வி நிறுவனத்தின் நோக்கம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி அதிராம்பட்டினம் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கல்வி நிறுவனத்தின் அறிமுக நிகழ்ச்சி அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளித்தாளாளர் ஹாஜி எம்.எஸ் தாஜுதீன் தலைமை வகித்து அறிமுக உரை நிகழ்த்தினார். அதிரை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர் பர்கத், செயலாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

'ஈஸ்ட் கோஸ்ட் அகதெமி' சிபிஎஸ்இ பள்ளி இயக்குனர் டி.வி ரேவதி கலந்துகொண்டு கல்வி நிறுவனத்தின் நோக்கம் மற்றும் அதன் செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

அதிரை பைத்துல்மால் துணைத் தலைவர்கள் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன். வழக்குரைஞர் அப்துல் முனாப், அப்துல் மாலிக் மற்றும் நாவலர் நூர் முஹம்மது, மவ்லவி அப்துல் காதர், ரியாத் கிளை நிர்வாகி அப்துல் ஜலீல், சமூக ஆர்வலர் பேராசிரியர் காதர் உள்ளிட்ட பலர் கருத்துரைகள் வழங்கினார்கள். மேலும் கூட்டத்தில் கல்வி நிறுவனத்தின் நோக்கம் மற்றும் நவீன கட்டமைப்பு வசதி குறித்து பவர் பாயிண்ட் ஒளித்திரை மூலம் விளக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள், உறுப்பினர்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 

Friday, July 7, 2017

கடற்கரைத்தெருவில் 'ஈஸ்ட் கோஸ்ட் அகதெமி' கல்வி நிறுவன அறிமுக நிகழ்ச்சி ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஜூலை 07
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையையொட்டி ஏரிப்புறக்கரை கிராம ஊராட்சி பகுதியில், அதிராம்பட்டினம் கல்வி அறக்கட்டளையின், 'ஈஸ்ட் கோஸ்ட் அகதெமி' சிபிஎஸ்இ கல்விக்கூடம் கடந்த ஜூன் 28ந் தேதி புதிதாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இக்கல்வி நிறுவனத்தின் நோக்கம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி அதிராம்பட்டினம் அனைத்து பகுதிகளிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, கல்வி நிறுவனத்தின் அறிமுக நிகழ்ச்சி கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளித்தாளாளர் ஹாஜி எம்.எஸ் தாஜுதீன் தலைமை வகித்து பேசினார். கடற்கரைத்தெரு ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இதில், பேராசிரியர் எம்.ஏ முஹம்மது அப்துல் காதர், கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி தலைமை இமாம் எம்.ஜி சஃபியுல்லாஹ் அன்வாரி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். மேலும், கல்வி நிறுவனத்தின் நோக்கம் மற்றும் நவீன கட்டமைப்பு வசதி குறித்து பேராசிரியர் இத்ரீஸ், பவர் பாயிண்ட் ஒளித்திரை மூலம் விளக்கிப் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், கடற்கரைத்தெரு ஜமாத் நிர்வாகிகள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.