.

Pages

Showing posts with label IHWVO. Show all posts
Showing posts with label IHWVO. Show all posts

Friday, December 11, 2020

சேவையாளர்களுக்கு IHWVO விருது!

சென்னை, டிச.12
இந்தியன் ஹுமன் வெல்பர்ஸ் & விஜிலன்ஸ் ஆர்கனைசேசன் (IHWVO) அமைப்பின் சார்பில், உலக மனித உரிமை தின விழா, சேவையாளர்களுக்கு விருது வழங்கும் விழா உள்பட முப்பெரும் விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில், அவ்வமைப்பின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எம்.அப்துல் ஜலீல், அவ்வமைப்பின் தஞ்சை மாவட்டத் தலைவர் எம்.சாகுல் ஹமீது, சாரா எம்.அகமது ஆகியோருக்கு சேவை விருது வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், அவ்வமைப்பின் உறுப்பினர்கள் பிரின்ஸ் ராவூத்தர், ஏ.முகமது ஆரிப், காதர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Sunday, October 25, 2020

அதிராம்பட்டினத்தில் IHWVO அமைப்பின் ஆலோசனைக்கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.25
இந்தியன் ஹுமன் வெல்பர்ஸ் & விஜிலன்ஸ் ஆர்கனைசேசன் (IHWVO) அமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் அதிராம்பட்டினம் சாரா திருமண மஹாலில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அவ்வமைப்பின் மாவட்டத் தலைவர் எம்.சாகுல் ஹமீது தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் சாரா எம்.அகமது முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், IHWVO அமைப்பின் அதிராம்பட்டினம் பேரூர் சேர்மனாக எம்.அப்துல் ஜலீல் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவ்வமைப்பின் சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் ஏ.முனாப் சிறப்புரை வழங்கினார். அமைப்பில் புதிதாக இணைந்த 16 பேருக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டன.

முன்னதாக, அவ்வமைப்பின் அதிராம்பட்டினம் பேரூர் சேர்மன் எம்.அப்துல் ஜலீல் வரவேற்றுப் பேசினார். நிறைவில், அவ்வமைப்பின் நிர்வாக அலுவலர் பிரின்ஸ் முகமது ராவூத்தர் நன்றி கூறினார். இக்கூட்டத்தில், அவ்வமைப்பினர் பலர் கலந்துகொண்டனர்.