.

Pages

Showing posts with label KMC. Show all posts
Showing posts with label KMC. Show all posts

Wednesday, August 12, 2020

காதிர் முகைதீன் கல்லூரி ரெட் ரிப்பன் கிளப் சார்பில் சர்வதேச இளைஞர் தின நிகழ்ச்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.12
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி ரெட் ரிப்பன் கிளப் சார்பில், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் அறிவுறுத்தலின் பேரில், சர்வதேச இளைஞர் தின நிகழ்ச்சி புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் புதன்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்வில், கரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டன. மேலும், கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசூரக் குடிநீர் ஆகியன வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், காதிர் முகைதீன் கல்லூரி ரெட் ரிப்பன் கிளப் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கே.முத்துக்குமரவேல், பேராசிரியர்கள் ஜெ.விஜயவேல், எஸ்.அன்பழகன், புதுக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.வெங்கடாசலம், ஊராட்சி கவுன்சிலர் எஸ்.மனோகரன் உள்ளிட்ட பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்துகொண்டனர்.
 

Tuesday, March 10, 2020

காதிர் முகைதீன் கல்லூரியில் உலக மகளிர் தின விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் 10
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி தமிழ்த்துறை சார்பில், உலக மகளிர் தின விழா கல்லூரி அரங்கில் (08-03-2020) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரி துணை முதல்வர் மேஜர் எஸ்.கணபதி, தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் ஏ.கலீல் ரஹ்மான், கல்லூரி கலைப்புல முதன்மையர் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், பொருளாதாரத்துறை பேராசிரியை என்.சித்ரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருச்சி காவேரி மகளிர் கல்லூரிப் பேராசிரியை எம்.ஆசியதாரா சிறப்புரை வழங்கினார்.

முன்னதாக, தமிழ்த்துறை பேராசிரியை எஸ்.சாபிரா பேகம் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் பேராசிரியை டி.ஆர் நிவேதா தொகுத்தளித்தார். நிறைவில், பேராசிரியை எம்.விஜயாள் நன்றி கூறினார்.தில், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 

Sunday, March 8, 2020

காதிர் முகைதீன் கல்லூரியில் தொழில் கல்வி பயிற்சி நிறைவு விழா மற்றும் கருத்தரங்கம்!

அதிராம்பட்டினம், மார்ச்.08
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி வேதியியல் துறை சார்பில், தொழில் கல்வி பயிற்சி நிறைவு விழா மற்றும் கருத்தரங்கம் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரி துணை முதல்வர் என்.எம் முகமது பாருக் முன்னிலை வகித்தார்.

பேராசிரியர் எம். பிரேம் நவாஸ், தொழில் கல்வியின் அவசியம் பற்றி சிறப்புரை நிகழ்த்தினார். தஞ்சாவூர் சாஸ்திர பல்கலைக்கழகப் பேராசிரியர் சக்திவேல் காந்தி, 'நானோ வேதியியல் மற்றும் அதன் பயன்பாடுகள்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். பின்னர், பயிற்சியில் பங்குபெற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

முன்னதாக, துறைத்தலைவர் பேராசிரியர் பி. முகமது சிராஜுதீன் வரவேற்றார். நிகழ்ச்சியினை, பேராசிரியர் ஞா.அ செய்யது தமீம் தொகுத்தளித்தார். நிறைவில், பேராசிரியர் கே. முகமது பைசல் நன்றி கூறினார். இதில், கல்லூரிப் பேராசிரியர்கள், இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி வேதியியல் துறை மாணவர்கள் கலந்துகொண்டனர்.
 

Friday, March 6, 2020

காதிர் முகைதீன் கல்லூரியில் வளாக நேர்காணல் முகாம் (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச்.06
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில், முதுகலை மற்றும் இளங்கலை இறுதியாண்டு மாணவர்களுக்கான வளாக நேர்காணல் முகாம் கல்லூரி அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில், சென்னை அல்கான்ஸ் டெக்னாலஜி நிறுவனத்தின் அலுவலர் பணியிடங்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. நேர்காணலை அந்நிறுவன எச்.ஆர் மேலாளர்கள் சத்திய மூர்த்தி, மரினா ஆகியோர் நடத்தினார். இதில், கல்லூரி இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவ, மாணவிகள் 350 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முதல் சுற்றில் 85 மாணவர்கள் குழு முறையில் பங்கேற்றனர். இதில், 23 மாணவர்கள் நேர்முகத்தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முகாம் ஏற்பாட்டினை, கல்லூரி தொழில் வழிகாட்டி மற்றும் வேலை வாய்ப்பு மைய அமைப்பாளரும், கணினி அறிவியல் துறைத்தலைவருமாகிய பேராசிரியர் டாக்டர் ஏ.சேக் அப்துல் காதர் செய்திருந்தார்.
 

Thursday, March 5, 2020

காதிர் முகைதீன் கல்லூரி 65-வது ஆண்டு விளையாட்டு விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் 05
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி 65-வது ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

விழாவில், கல்லூரிச்செயலர் எஸ்.ஜெ அபுல்ஹசன் தலைமை ஏற்று இந்திய தேசியக் கொடி ஏற்றினார். அதிராம்பட்டினம் காவல்நிலைய ஆய்வாளர் ஜெயமோகன் போட்டியை தொடங்கி வைத்து மாணவர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் எம்.ஆர் ரகுநாதன் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் வரவேற்றுப் பேசினார். கல்லூரி உடற்கல்வி இயக்குநர் கே.முருகானந்தம் ஆண்டறிக்கை வாசித்து முடிவில் நன்றி கூறினார். இவ்விழாவில், கல்லூரி ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், அலுவலக, ஆய்வகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.