அதிராம்பட்டினம், ஜூலை, 17
சமூக அமைதியை குலைப்பவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு அதிராம்பட்டினம் கிளை சார்பில், கையில் பதாகை ஏந்தி போராட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
அவ்வமைப்பின், கிளைத்தலைவர் பீர் முகமது தலைமை வகித்தார். இதில், அவ்வமைப்பினர் கலந்துகொண்டு, 'நபிகளாரை கேவலப்படுத்தி சித்திரம் வரைந்த கார்டூனிஸ்ட் வர்மாவை குண்டர் சட்டத்தில் சிறையில் தள்ளு' என்கிற வாசகம் அடங்கிய பதாகையை கையில் ஏந்தி சமூக இடைவெளியை கடைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.