.

Pages

Showing posts with label OXFORD SCHOOL. Show all posts
Showing posts with label OXFORD SCHOOL. Show all posts

Sunday, August 16, 2020

ஆக்ஸ்போர்ட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா!

அதிராம்பட்டினம், ஆக.15
இந்தியாவின் 74 வது சுதந்திர தின விழா, அதிராம்பட்டினம் அருகே உள்ள, புதுக்கோட்டை உள்ளூர், ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின கொடி ஏற்றும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, பள்ளித் தாளாளர் என். உதயகுமார் தலைமை வகித்து, இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.

நிகழ்வில், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டன.
 

Friday, July 10, 2020

மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வாழ்வூதியம் வழங்கக்கோரி தனியார் பள்ளி ஆசிரியர்கள் பட்டினிப்போராட்டம் (படங்கள், வீடியோ)

அதிராம்பட்டினம், ஜூலை 10
கரோனா ஊரடங்கால், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வாழ்வூதியம் வழங்கக்கோரி தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளி சங்கம் சார்பில், தமிழகம் முழுவதும் பட்டினிப்போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை நடத்த அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக். மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க பட்டுக்கோட்டை கல்வி மாவட்டச் செயலாளர் என்.உதயகுமார் தலைமையில், அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர், ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சமூக இடைவெளியுடன் பட்டினிப்போராட்டம் நடைபெற்றது.

இதில், பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டு, மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வாழ்வூதியம் வழங்க வேண்டும், எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் 3 ஆண்டுகள் தொடர் அங்கீகாரம் வழங்க வேண்டும், நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும், தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு வலியுறுத்தினர்.

இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக். மேல்நிலை பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க பட்டுக்கோட்டை கல்வி மாவட்டச் செயலாளர் என்.உதயகுமார் கூறியது; (காணொளி இணைப்பு)

 
 
 

Monday, February 17, 2020

ஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளி மாணவர்களின் ஒரு நாள் கல்விச் சுற்றுலா (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.17
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் புதுக்கோட்டை உள்ளூர், ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஒரு நாள் கல்வி விழிப்புணர்வு சுற்றுலா சென்று வந்தனர்.

சுற்றுலா தலங்களின் முக்கியத்துவம், வரலாறு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளித் தாளாளர் என். உதயகுமார் தலைமையில், மாணவர்கள் ~ ஆசிரியர்கள் உள்ளிட்ட 80 பேர் தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டார சுற்றுலாப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்குள்ள அரண்மனை, பூங்கா, மியூசியம், சரஸ்வதி மஹால் நூலகம், பெரிய கோவில், வடுவூர் பறவைகள் சரணாலயம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தளங்களை கண்டு மகிழ்ந்தனர்.

Friday, February 7, 2020

ஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளி 22-வது ஆண்டு விழா நிகழ்ச்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.07
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், புதுக்கோட்டை உள்ளூர், ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 22-வது ஆண்டு விழா நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் பேரூர் மன்ற முன்னாள் துணைத்தலைவர் இராம.குணசேகரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக, பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் ஆர்.ஜெயபால், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக். மேல்நிலை பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில துணைச்செயலாளர் ஜி.ஆர் ஸ்ரீதர், காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் எஸ்.பி கணபதி, பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் ஆகியோர் கலந்துகொண்டு ஆண்டு விழா உரை நிகழ்த்தினர். இதில், கல்வியின் அவசியம், அதன் பயன்பாடு குறித்தும், மாணவ, மாணவிகளின் நல்லொழுக்கம் ஆகியவை பற்றி விளக்கிப் பேசினார்.

பட்டுக்கோட்டை நியூ ஆக்ஸ்போர்டு நர்சரி பள்ளி முதல்வர் யு. அபிராமி ஆண்டறிக்கை வாசித்தார். இதில், மாணவிகள் - ஆசிரியைகள் - பள்ளி  நிகழ்த்திய பல்வேறு சாதனைகளைப் பட்டியலிட்டார். மேலும், பள்ளி சார்பில் நடத்தப்பட்ட சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைப் பட்டியலிட்டு பேசினார்.

விழாவில் கல்வியில், விளையாட்டில் சாதனை நிகழ்த்திய பள்ளி மாணவ மாணவிகளுக்கு விருதுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பல்வேறுப் பாடப்பிரிவுகளில் சாதனை நிகழ்த்திய பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தினர்.

முன்னதாக, பள்ளி முதுகலை ஆசிரியர்  யு.பாலாஜி வரவேற்றுப் பேசினார்.
நிகழ்ச்சிகள் அனைத்தையும் பள்ளி முதுகலை ஆசிரியை உஷா தொகுத்தளித்தார். நிறைவில், பள்ளி முதுகலை ஆசிரியை உச்சையினி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை, பள்ளித் தாளாளர் என் உதயகுமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

விழாவில், ஊராட்சி மன்றத்தலைவர்கள் ஆர்.எஸ் வெங்கடாசலம், எஸ்.எஸ் ராமச்சந்திரன், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் எம்.அப்துல் ஜலீல், எம்.நிஜாமுதீன், எம்.முகமது அபூபக்கர், செல்வகுமார், சிவா மற்றும் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.