.

Pages

Showing posts with label PFI. Show all posts
Showing posts with label PFI. Show all posts

Thursday, December 3, 2020

அதிராம்பட்டினத்தில் கொட்டும் மழையில் PFI அமைப்பினர் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.03
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில தலைமை அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்தியதைக் கண்டித்து அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் ஹாஜா அலாவுதீன் தலைமை வகித்தார். அவ்வமைப்பின், மாவட்டச் செயலாளர் மர்சூக் அகமது வரவேற்றுப் பேசினார். எஸ்டிபிஐ கட்சி மாநிலச் செயலாளர் அபுபக்கர் சித்திக் கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில், அவவமைப்பினர் பலர் கலந்துகொண்டு, மத்திய பஜக அரசு மற்றும் அமலாக்கத்துறையை கண்டித்து முழக்கமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என்.முகமது புஹாரி, எஸ்டிபிஐ கட்சி திருவாரூர் மாவட்டத் தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


Friday, October 9, 2020

உ.பி அரசைக் கண்டித்து அதிராம்பட்டினத்தில் PFI அமைப்பினர் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.09
உ.பி அரசைக் கண்டித்து, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில், அதிராம்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆர்பாட்டத்திற்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டங்களின் தலைவர் ஏ.ஹாஜா அலாவுதீன் தலைமை வகித்தார். இதில், அவ்வமைப்பின் திருச்சி மண்டல செயற்குழு உறுப்பினர் இசட். முகமது தம்பி, எஸ்டிபிஐ கட்சி மாநிலச் செயலாளர் அபூபக்கர் சித்திக் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

ஆர்பாட்டத்தில், பெண்கள் உள்பட அவ்வமைப்பினர் திரளாகக் கலந்துகொண்டு, ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை, படுகொலையைக் கண்டித்தும், பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் மீது அவதூறுகளை பரப்பும் உ.பி அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.


Friday, October 2, 2020

அதிராம்பட்டினத்தில் PFI அமைப்பினர் கைகளில் பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.02
பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில், கையில் பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் அதிராம்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, அவ்வமைப்பின் அதிராம்பட்டினம் ஏரியா தலைவர் எஸ்.முகமது ஜாவித் தலைமை வகித்தார். இதில், அவ்வமைப்பினர் அதிராம்பட்டினம் பெரிய ஜும்மா பள்ளிவாசல், புதுமனைத்தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல், கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் ஆகிய 3 இடங்களின் நுழைவாயில் முன்பாக, கையில் பதாகைகளை ஏந்தியவாறு கண்டன முழக்கமிட்டனர். முன்னதாக, எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என்.முகமது புஹாரி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் இசட். முகமது தம்பி, ராஜிக் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.


Thursday, September 10, 2020

அதிராம்பட்டினத்தில் PFI புதிய அலுவலகம் திறப்பு: ஜமாத்தார்கள், அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பு (படங்கள்)


அதிராம்பட்டினம், செப்.10
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் புதிய அலுவலகம் திறப்பு விழா அதிராம்பட்டினத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.


நிகழ்வுக்கு, அவ்வமைப்பின் அதிராம்பட்டினம் ஏரியா தலைவர் எஸ்.முகமது ஜாவித் தலைமை வகித்தார். நிகழ்வை, தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி. இப்ராஹீம் கிராத் ஓதி தொடங்கி வைத்தார். 

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு தலைவர் எம்.எஸ்.எம் அபூபக்கர் அலுவலகத்தை திறந்து வைத்தார். அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டங்களின் தலைவர் ஏ.ஹாஜா அலாவுதீன் அவ்வமைப்பின் கொடி ஏற்றிவைத்து கொள்கை முழக்கமிட்டார். 

நிகழ்வில், சிறப்பு அழைப்பாளர்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் திருச்சி மண்டல செயலாளர் எஸ்.ரஷீத் அகமது பங்கேற்று பிஎப்ஐ அமைப்பு ஆற்றி வரும் சமூக நலப்பணிகள் பற்றி விளக்கிப்பேசினர். எஸ்டிபிஐ கட்சி மாநிலச் செயலாளர் ஏ.அபூபக்கர் சித்திக் வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்வில், சிறப்பு அழைப்பின் பேரில் அதிராம்பட்டினம் ஜமாத் நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட அவ்வமைப்பினர் பலர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

முன்னதாக, அவ்வமைப்பின் தகவல் தொடர்பு அலுவலர் இசட்.முகமது தம்பி வரவேற்றுப் பேசினார். நிறைவில், அவ்வமைப்பின் யுனிட் தலைவர் நவாஸ் நன்றி கூறினார்.

Monday, June 29, 2020

பட்டுக்கோட்டை சப் கலெக்டருக்கு PFI மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்து!

பட்டுக்கோட்டை, ஜூன் 29
பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் ஏ.ஆர் கிளாஸ்டன் புஷ்பராஜ், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை இணைச் செயலாளராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டங்களின் தலைவர் ஏ.ஹாஜா அலாவுதீன், அவ்வமைப்பின் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வழக்குரைஞர் இசட். முகமது தம்பி ஆகியோர் இன்று திங்கட்கிழமை நேரில் சந்தித்து இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்துனர்.

அப்போது, தமிழ்மாமணி அதிரை அஹ்மத் எழுதிய 'நபி வரலாறு' நூலை அன்பளிப்பாக வழங்கினர். 

Saturday, June 20, 2020

பட்டுக்கோட்டை டிஎஸ்பி யுடன் PFI மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு!

பட்டுக்கோட்டை, ஜூன் 20
பட்டுக்கோட்டையில் புதிய டிஎஸ்பியாக எஸ்.புகழேந்தி கணேஷ் கடந்த ஜூன் 1ந் தேதி பொறுப்பேற்றார்.

இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றிருக்கும் டிஎஸ்பி எஸ்.புகழேந்தி கணேஷை, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டங்களின் தலைவர் ஏ.ஹாஜா அலாவுதீன் வெள்ளிக்கிழமை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு ஆற்றிவரும் பணிகள் குறித்த கையேட்டினை, அவ்வமைப்பின் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வழக்குரைஞர் இசட். முகமது தம்பி வழங்கினார். அப்போது, பட்டுக்கோட்டை யூனிட் தலைவர் ஏ.டி அப்துல்லா உடனிருந்தார்.