.

Pages

Showing posts with label WESTERN SCHOOL. Show all posts
Showing posts with label WESTERN SCHOOL. Show all posts

Tuesday, September 17, 2019

வெஸ்டர்ன் ஆங்கில நர்சரி பள்ளித்தாளாளர் ஹாஜி M.M.S தாஜுதீன் கெளரவிப்பு!

அதிராம்பட்டினம், செப்.17
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் வெற்றிலைக்காரத் தெருவில் அமைந்துள்ள வெஸ்டர்ன் ஆங்கில நர்சரி பள்ளியை கடந்த 30 ஆண்டுகளாக நடத்தி வருபவர் ஹாஜி எம்.எம்.எஸ் தாஜுதீன். இவரது, கல்விச்சேவையை பாராட்டி தமிழ்நாடு பிரைமரி, நர்சரி மெட்ரிக். மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் சார்பில், தஞ்சையில் நடைபெற்ற வருவாய் மாவட்ட மாநாட்டில் 'கல்விச்செம்மல்' விருது வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.


Saturday, April 21, 2018

வெஸ்டர்ன் ஆங்கில நர்சரி பள்ளி 28-வது ஆண்டு விழா நிகழ்ச்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்-21
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் வெற்றிலைக்காரத் தெருவில் அமைந்துள்ள வெஸ்டர்ன் ஆங்கில நர்சரி பள்ளி 28-வது ஆண்டு விழா நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, பள்ளித் தாளாளர் ஹாஜி எம்.எம்.எஸ் தாஜுதீன் தலைமை
வகித்தார். பள்ளி அரபிக் ஆசிரியர் மவ்லவி. எம்.எப் சேக்தாவூது மிஸ்பாஹி முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர் ஏ.மகபூப் அலி, காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் செய்யது அகமது கபீர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்கள்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அதிரை நியூஸ் ஆசிரியர் எம்.நிஜாமுதீன், லயன்ஸ் எம்.ஏ அப்துல் ஜலீல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் வகுப்பளவில் முதல் தரம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயங்கள் மற்று பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும்  பள்ளியளவில் நடந்த பல்வேறு போட்டிகளில் வென்ற மொத்தம் 140 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை அறிவுத்திறன் நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தினர்.

முன்னதாக பள்ளி ஆசிரியை ஜெயசித்ரா வரவேற்றுப் பேசினார். பள்ளி தலைமை ஆசிரியை தனலட்சுமி பள்ளி ஆண்டறிக்கையுடன் நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து வழங்கினார். விழா முடிவில் பள்ளி ஆசிரியை அகிலா நன்றி கூறினார். இவ்விழாவில் பள்ளி ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Thursday, April 13, 2017

வெஸ்டர்ன் ஆங்கில நர்சரி பள்ளி 27ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஏப்-13
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் வெற்றிலைக்காரத் தெருவில் அமைந்துள்ள வெஸ்டர்ன் ஆங்கில நர்சரி பள்ளி 27 ஆம்  ஆண்டு விழா நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளித் தாளாளர் ஹாஜி எம்.எம்.எஸ் தாஜுதீன் தலைமை
வகித்தார். சமூக ஆர்வலர் கே.கே ஹாஜா நஜ்முதீன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக காதிர் முகைதீன் கல்லூரி பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர் மேஜர் எஸ்.பி கணபதி, கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியை மை. பரீதா பேகம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்கள்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அதிரை நியூஸ் ஆசிரியர் எம்.நிஜாமுதீன், எம்.எம்.எஸ் ஜவஹர் அலி ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் வகுப்பளவில் முதல் தரம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயங்கள் மற்று பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் மதுக்கூரில் நடைபெற்ற இஸ்லாமிய மார்க்க அறிவுத்திறன் போட்டியில் பள்ளி சார்பில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை அறிவுத்திறன் நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தினர்.

முன்னதாக பள்ளி ஆசிரியை ஜெயசித்ரா வரவேற்று பேசினார். பள்ளி தலைமை ஆசிரியை தனலட்சுமி பள்ளி ஆண்டறிக்கையுடன் நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து வழங்கினார். விழா முடிவில் பள்ளி ஆசிரியை அகிலா நன்றி கூறினார். இவ்விழாவில் பள்ளி ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 
 
 

Sunday, March 30, 2014

வெஸ்டர்ன் ஆங்கில நர்சரி பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி !

அதிரை கீழத்தெருவில் அமைந்துள்ள வெஸ்டர்ன் ஆங்கில நர்சரி பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி இன்று மாலை சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் ஹாஜி M.M.S. தாஜுதீன் அவர்கள் தலைமை வகிக்க, சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் முஹம்மது அப்துல் காதர், காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் மேஜர் முனைவர் கணபதி, பள்ளியின் முன்னாள் மாணவர் அல்அமீன், ஆதம் நகர் ஜமாத் துணைத்தலைவர் வாப்பு மரைக்காயர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுக்கூரில் நடைபெற்ற மார்க்க அறிவுத்திறன் போட்டியில் பள்ளியின் சார்பில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்சிகள் நடைபெற்றன.

முன்னதாக பள்ளியின் ஆசிரியை பள்ளி நிகழ்த்திய சாதனையை ஆண்டறிக்கையாக வாசித்தார். இறுதியில் பள்ளியின் தலைமை ஆசிரியை நன்றியுரையுடன் நிகழ்சிகள் அனைத்தும் இனிதே நிறைவுற்றது.


Sunday, January 27, 2013

அதிரை வெஸ்டர்ன் ஆங்கில நர்சரி பள்ளியில் குடியரசு தின விழா !

இந்திய குடியரசு பெற்று 63 ஆண்டுகள் கழிந்து 64 வது ஆண்டை நோக்கிச் செல்லும் இந்த தினத்தில் இன்று காலை அதிரை கீழத்தெருவில் அமைந்துள்ள வெஸ்டர்ன் ஆங்கில நர்சரி பள்ளியில் குடியரசு தின கொடி ஏற்றும் விழா சிறப்பாக நடைபெற்றது.

பள்ளியின் தாலாளர் ஹாஜி ஜனாப் M.M.S. தாஜுதீன் அவர்கள் கொடியேற்றி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நன்றி : அஜ்மல்கான் 
[ Adirai Sports Club ]