A.L மஸ்ஜிதில் இனி ஐவேளை தொழுகை நடைபெறும் என்று ஜும்மா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற மசூராவில் முடிவு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்,
சி.எம்.பி லைனில் ALM SCHOOLல் வாரந்தொரும் ஜும்மா தொழுகையும், பள்ளிக்கூட நேரங்களில் லுஹர் மற்றும் அசர் தொழுகை வலமையாக நடைபெற்று வந்தன, இதனிடையில் ஐவேளை தொழுவப்படாத இடத்தில் ஜும்மா தொழுகலாமா / எற்றுக்கொள்ளப்படுமா என்றொரு கேள்வி தொழவருபவர்கள் மத்தியில் எழுந்தது பள்ளி நிர்வாகத்தை அனுகி கேட்டப்பொழுது இப்பள்ளி முறையாக வக்ஃப் செய்யப்பட்டதாகவும், ஐவேளை தொழுக இமாமை நியமிக்க முயற்ச்சித்து வருவதாகவும் அவர் தரப்பில் கூறப்பட்டது, மேலும் அவர் கூறியதாவது தொடர்ந்து ஐவேளை நடைபெற பொறுப்புதாரிகளை நியமித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை ஒன்றை வைத்தார் அதன் அடிப்படையில் ஒரு குழுவொன்றை நியமிக்கப்பட்டது.
ஜனாப்.அப்துல் ரஜாக்
ஜனாப்.ஆதம் செய்யது
ஜனாப்.அஹமத் ஹாஜா
ஜனாப்.ஹனீபா
ஜனாப்.முகைதீன்
ஜனாப்.நீஜாமுதீன்
ஜனாப்.கமாலுதீன்
ஜனாப்.இம்ரான்
ஆகிய இவர்கள் செயல்படுவர் என்று முடிவு செய்யப்பட்டன, மற்றும் A.L மஸ்ஜித் ஒட்டிய முஹல்லாவில் குடியிருப்பவர்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
செய்தி மற்றும் புகைப்படங்கள் : இர்ஃபான் ( அதிரை தென்றல் )


This comment has been removed by the author.
ReplyDeleteகாதிர் முகைதின் மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி இவைகளில் ஜும்மா தொழுகை நடத்தவில்லை.
ReplyDeleteபள்ளிகூடங்கள் தோறும் ஜும்மா தொழுகை நடத்தலாமோ ?
எந்த மதரசாவில் அனுமதி தருகிறார்கள் ?
விபரம் தெரிந்தால் பலவூர்களில் இந்தமாதறி பள்ளிக்கு பள்ளி ஜும்மா தொழுகை நடத்தலாம்.