அதிராம்பட்டினம், செப்.23
அதிராம்பட்டினம் பகுதி பொதுமக்களிடம் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த, மெட்ரிக். பள்ளி நிர்வாகிகள் சார்பில், மாவட்ட பொது சுகாதாரத்துறையிடம் கோரிக்கை விடுக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தனர்.
தமிழகத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொண்டை அடைப்பான் நோய் அறிகுறி இருப்பது தெரியவந்ததை அடுத்து, இதற்கான தடுப்பூசி தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது.
அதன்படி, மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பில், அரசு மருத்துவர்கள் மூலம் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள மெட்ரிக். பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இன்று (செப்.23) திங்கட்கிழமை தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
தடுப்பூசி குறித்து தவறான வதந்தி பரவியதால், மெட்ரிக். பள்ளிகளுக்கு வந்திருந்த மருத்துவக் குழுவினரிடம், தடுப்பூசிப் போட வேண்டாம் என பெற்றோர் குரல் எழுப்பினர். இதையடுத்து, மருத்துவக் குழுவினர் மாணவர்களுக்கு தடுப்பூசி போடாமல் பள்ளியை விட்டு வெளியேறினர்.
இந்நிலையில், அதிராம்பட்டினம் மெட்ரிக். பள்ளிகளின் நிர்வாகிகள் சார்பில், அதிராம்பட்டினம் பகுதி பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்தை போக்கி, தடுப்பூசியின் அவசியம் குறித்து எடுத்துரைத்து, அவர்களுக்கு தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தக்கோரி மாவட்ட பொது சுகாதாரத்துறையிடம் மனு அளிக்க இருப்பதாக மெட்ரிக். பள்ளி நிர்வாகிகள் எம்.எஸ் முகமது ஆஜம், எம். முகமது இம்தியாஸ், ஜெ. அமீன் நவாஸ்கான், பாக்கர் ஹாஜியார். எஸ்.முகமது சலீம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.